Results 1 to 8 of 8

Thread: அவஸ்தை - சிறுகதை

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    09 Dec 2011
    Location
    Chennai
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    10,401
    Downloads
    76
    Uploads
    0

    அவஸ்தை - சிறுகதை

    அசோக், கடந்த ஒரு வாராமாய் முயற்சி செய்கிறான், அவனால் முடியவில்லை, எதுக்காக இப்படி நடந்து கொள்கிறாள் என்றே தெரியவில்லை, இன்றைக்கு எப்படியாவது அவளை சமாதானம் செய்து கடந்த ஒரு வார கால ஆசையை பூர்த்தி செய்திட வேண்டுமென மனதில் வைராக்கிரமாய் இருந்தான்.


    அன்று வெள்ளிக்கிழமை, அலுவலக வேலையும் அவ்வளவாக இல்லை, எப்பொழுது வீடு சேரலாம், இரவு எப்பொழுது வருமென்று மிக ஆவலாய் எதிர் நோக்கி காத்துக்கொண்டிருந்தான்.


    இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு, படுக்கையறை போய் படுத்துக் கொண்டான், அவன் எதிர்பார்த்த நேரமும் நெருங்கியது. பிரியா கிச்சனில் பாத்திரங்களை கழுவி வைக்கும் சத்தம் கேட்டது. பாக்கெட்டை தடவி பார்த்துக் கொண்டு, அது இருப்பதை உறுதி படுத்திக் கொண்டான்.


    பிரியா, வேலை எல்லாம் முடித்து, சேலையை அவிழ்த்து, நைட்டிக்கு மாறியிருந்தாள். சேலையை விட இது தான் வசதியானது, மனதிற்குள் நினைத்துக்கொண்டான். வந்தவள் அவனுக்கு முதுகை காட்டியபடி படுத்துக்கொண்டாள்.


    அவளுக்கு அவன் மீது இன்னும் கோவம் இருப்பதை உணர்ந்து கொண்டான்.


    'பிரி, கொஞ்சம் திரும்பேன்' அவனுக்கு மூடு வரும் சமயம் அப்படி தான் அழைப்பான்.


    'எவ்வளவு ஆசையாய் இருக்கேன், கொஞ்சம் கருணை காட்டக் கூடாதா'.


    'வேண்டாங்க, ஏற்கனவே என்னால் வலி தாங்க முடியவில்லை, அதுவும் மனிதபிமானம் இல்லாம அழுத்தறீங்க, ரொம்ப மோசம் நீங்க'


    'இன்னிக்கு அப்படி எல்லாம் ஆகாது, பாரு இந்த லோஷன மேல தடவிக்கிட்டா, வழு வழுப்ப போய்டும் வலியே தெரியாது' என்றபடி பாக்கெட்டில் கையை விட்டான்


    'முடியவே முடியாது, என்னால வலி தாங்க முடியலன்னு சொன்னா விடுங்களேன்'


    'எனக்கு மட்டும் ஆசை இருக்காதா' கெஞ்சினான்.


    'அதுக்கு நான் என பண்ணமுடியும், என்னாலாதான் கொஞ்சம் கூட வலியை பொறுத்துக்க முடியாதுன்னு உங்களுக்கே தெரியுமே'


    'அதுக்காக நான் என்னோட ஆசையை எப்படி அடக்கி வைக்க முடியும்,
    எல்லாம் போகப் போக சரியாகிவிடும், கொஞ்சம் பொறுத்துக்கோ, வலிக்காம நான் பார்த்துக்கிறேன், நாளைக்கு லீவு தானே மெதுவா எழுந்தா போதும்'


    முடிந்தவரை சமாதானம் படுத்த பகீரத பிராயத்தனம் செய்தான்.


    'அதெல்லாம் முடியாது, இப்படியே இருந்தீங்க, நான் வெளியே போய் படுத்துக்குவேன்'


    என்ன பெண் இவள், கல்யாணமாகி ஒரு மாதம் தான் இருக்கு, அதற்குள் சலித்து கொள்கிறாளே, ஆரம்பத்தில் எல்லாம் அவன் இழுத்த இழுப்புக்கு எல்லாவற்றுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தாள், என்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவே பயப்படுவாள், என்னமாய் பேசுகிறாள் மனதில் நினைத்துக் கொண்டான்.


    சரி கொஞ்சம் நேரம் போகட்டும், மெதுவாக காரியத்தை முடித்துவிடலாம் என்று அப்போதைக்கு விட்டு விட்டான்.


    சிறிது நேரத்திற்கு பிறகு, அவள் குறட்டை விடும் சத்தம் கேட்டது. மெதுவாக எழுந்து, அவள் மேல் இருந்த போர்வையை விளக்கி, அவள் கால் மேல் இருந்த நைட்டியை மெதுவாக மேலே அகற்றி, கை விரலால் அவள் கால் விரலை தொட்டான் அவ்வளவு தான்....


    'வீல்' என்று அவள் போட்ட சத்தம், அந்த அபார்ட்மென்ட்டையே ஒரு உலுககி எடுத்து விட்டது.


    'ச்சே' என்ன பெண் இவள், கடந்த வாரம் கால் தடுக்கி, லூசாக இருந்த மெட்டியை தொலைத்து விட்டாள், அதனால் ஆசை ஆசையாய் புதிதாய் ஒரு தங்க மெட்டியை வாங்கி, எப்ப்டியாவது அவள் கால் விரலில் மாட்ட அவன் படும் அவஸ்தை இன்னும் எவ்வளவு நாளைக்கு தொடருமோ, ஆண்டவனை வேண்டியபடி கட்டிலில் படுத்து உறங்கினான்.
    நான் ஒரு மென்பொறியாளன், எனக்கு தமிழ் மீது தீராத காதல், நிறைய கவிதைகள் எழுதுவேன்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சிறுகதை என்றாலும் நல்ல திருப்பம் கொடுத்து மனதைத் தொடும்வகையில் எழுதியுள்ளீர்கள். தங்கத்தில் மெட்டி செய்து போடும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாதே!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #3
    புதியவர்
    Join Date
    09 Dec 2011
    Location
    Chennai
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    10,401
    Downloads
    76
    Uploads
    0
    இப்பொழுது வழக்கம் மாறி வருகிறது.
    நான் ஒரு மென்பொறியாளன், எனக்கு தமிழ் மீது தீராத காதல், நிறைய கவிதைகள் எழுதுவேன்.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    குமுதத்தில் வரும் ஒரு பக்க ட்விஸ்ட் கதையை நினைவு படுத்தினாலும் முடிவு அந்த அளவுக்கு சிறப்பாக மற்றும் ஒத்து கொள்ள கூடிய அளவுக்கு இல்லை நண்பரே!

    தங்களின் கதைக்கு எனது பாராட்டுக்கள்

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஸ்வரன்'s Avatar
    Join Date
    07 Feb 2012
    Location
    Chennai, India
    Posts
    158
    Post Thanks / Like
    iCash Credits
    14,317
    Downloads
    1
    Uploads
    0
    சின்ன ட்விஸ்டோடு கூடிய கதை நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    முடிவில் நிச்சயம் இப்படியான ஏதோ திருப்பம் இருக்குமென்பதை முதலிலேயே ஊகிக்க முடிந்தது.

    இப்படியான எழுத்துக்கள் அனைத்து வாசகர்களையும் கவர்ந்திடுமா, ரசிப்பார்களா என்பது எனக்குக் குழப்பமான ஒன்று.
    இக்குழப்பம்,
    பற்றத் தொடங்கிய அக்னி - அவள் ஒரு மோகனம் இதனை எழுதிய காலத்திலிருந்தே இருந்தது.

    விளிம்புநிலையா விரும்பாநிலையா என்பது புரியாத நிலை.

    இக்குழப்பநிலையாலேயே, இதுபோன்றெழுதுவதை இயலுமானவரை தவிர்த்திட முயற்சிசெய்தும் செய்துகொண்டும் இருக்கின்றேன்.

    இதனைத் தவிர்த்துப் படைப்பு என்று மட்டும் பார்த்தால்,
    சொல்லிய விதம் சிறப்பாக அமைந்திருந்தது.

    என் குழப்பநிலைக்கு பதிவர்கள் பதிவுகளில் விளக்கம் வரும் என்றெதிர்பார்க்கின்றேன்.

    உங்கள் படைப்புக்கள் தொடர்ந்தும் வரட்டும் நண்பரே...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கடைசியில் காட்டும் திருப்பம் வேண்டி...கதை நகர்ந்திருந்தாலும்...பண்பட்டவர் பகுதி கதையோ என எண்ன வைத்து....பலரும் படிக்கும்படியான கதை வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல திருப்பதொடு முடியும் கதை...பாராட்டுகிறேன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •