Results 1 to 9 of 9

Thread: எடுக்கப்பட்டது

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0

    எடுக்கப்பட்டது

    போஸ்ட் டிலீட் எப்படி செய்வது?
    Last edited by KAMAKSHE; 04-09-2019 at 02:03 AM.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0

    கொடுத்து வச்சிருக்கணும்

    Quote Originally Posted by KAMAKSHE View Post
    சிறு கதை

    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    ‘ஆத்துக்காரர் கூட சிலசமயம் சிலருக்கு நன்னா அமைஞ்சுடலாம். ஆனா இந்த சென்னைல ஆட்டோக்காரன் நன்னா அமையறது ஈஸியே இல்ல. அதுக்கு கொடுத்துன்னா வச்சிருக்கணும்.’

    அன்னிக்கு சடால்னு என்னமோ அப்படித்தான் தோணித்து.

    அதுவும் என் ராசி பாருங்கோ. எப்பப்பாத்தாலும் எனக்குன்னு வந்து வாய்ப்பான் ஒரு ஆட்டோக்காரன். பிடி சண்டை போடுவோம்.

    அப்பா படுத்த படுக்கை. வீல் சேர், கம்மோடு, இத்யாதிகள் எல்லாம் உடனே வாங்கியாகணும்னு ஒரு நிலமை. மழை வேற கொட்றது. லோலோன்னு ஆட்டோல சுத்த வேண்டியிருந்தது. அங்க கொஞ்சம் வெயிட்டிங், இங்க கொஞ்சம் வெயிட்டிங். நான் வாங்கின சாமானை ஆட்டோல தூக்கி வைக்க ஹெல்ப் வேற வேணும். திடும்னு நெனச்சுண்டு, தி.நகர்க்கு வேற போகச் சொன்னேன். நடுவுல என் பேரனையும் பிக்கப் பண்ணி டிராப் பண்ணவேண்டி இருந்தது.

    கொண்டுவிட, கூட்டிண்டுபோக அவருக்கு எங்க நேரம்? நேரம் இருந்தாலும் மனசு இருந்தா தேவலையே?

    அதனால எங்க போணும்னாலும் ஆட்டோவத்தான் கண்கண்ட தெய்வமா நம்பிண்டிருந்தேன். சமயத்துல நல்லதா கடைக்கும். அன்னிக்கு நல்ல வேளை நல்ல ஆட்டோவா கெடச்சது. இதுவே எப்போதும் எனக்குன்னு ஆப்பட்ற ஆட்டோவா இருந்திருந்தா என்ன ஆயிருக்கும் தெரியுமா? இதோ இப்படித்தான் நடந்திருக்கும் சண்டை...

    “ஏம்பா மவுண்ட்ரோட் போணும். 2,3 கடைக்கு போணும்பா.”

    “வெயிட்டிங்லாம் முடியாதுமா. வேண்ணா டிராப் பண்றேன். 150 ரூபா குடு”.

    “என்னப்பா இத்தனை கிட்ட இருக்கு 60 தரேன். டிராப் மட்டும் பண்ண 150 எல்லாம் முடியாது.”

    “மழை பெய்யுது. பெட்ரோல் வெலை ரொம்ப ஏறிப்போச்சு.”.

    “நன்னாருக்குப்பா! பலே! என்ன கால்குலேஷன்! அடுத்த 5 வருஷத்துல இனிமே ஏறப்போற பெட்ரோல் வெலைக்கும் சேத்துன்னா நீ கேக்கற. அட ‘டிஸ்கவுண்டிங்’லாம் ஒனக்கு நன்னா தெரியறது! நீ என்ன இதுக்கு முன்னால ஏதாவது பேங்க்குல வேலை செஞ்சியா?’

    “நீங்கல்லாம் ஹார்லிக்ஸ் குடிக்கறவங்க. நாங்க என்ன 3 ரூபா டீ தானே. அதான் தெம்பா இஷ்டத்துக்கு பேசறீங்க”.

    “என்னப்பா யாரு தெம்பா பேசறா.. நீயா? இல்ல நானா? எனக்கு சக்கரையில்லாத வெறும் தண்ணி காபிதான். (இவன்....வேற தண்ணில இருக்கானோ?) இதெல்லம் எதுக்கு உன்னண்ட சொல்லிண்டு? நீ கெளம்பு. நா வேற ஆட்டோ பாத்துக்கறேன்.

    “110 குடு. டிராப் ஒண்டி பண்றேன்”

    “75 தரேன். ஆனா வெயிட் பண்ணனும். 2 கடை போகணும். இல்ல 2ஆவது கடையிலாவது டிராப் பண்ணுவியா?”

    “ரொம்ப வெயிட்டிங் போட்றுவீங்க. என்ன ஒரு 5 நிமிஷம் ஆவுமா?”

    “15 நிமிஷமாகலாம்”

    “இப்படிதான் மொதல்ல 15 நிமிஷம்பீங்க. அன்னிக்கு ஒரு அம்மா ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸுக்குள்ள போச்சு...போச்சு...வரவேல்ல. லாங்லேருந்து வேற வந்தோம். எனக்கு நஷ்டந்தான் அன்னிக்கு”

    “எம்பா நான் கடைக்குள்ள போய் ஆட்டோ டயத்தையே நெனச்சிண்டிருந்தா, கையும் ஓடாது. காலும் ஓடாது. வேலையை எங்கேருந்து மடமன்னு முடிக்கறது?”

    “ஏம்மா நீங்க பொடவைக் கடைக்கு போவீங்க. நேரந்தெரியாம செலெக்ட் பண்ணுவீங்க. ஆனா நாங்க கேக்கக் கூடாது”.

    “ஆமா நீ எப்படி கேக்கலாம்?. எம்புருஷன் கேட்டாலும் எனக்குப் பிடிக்காது. ஆனா நான் பொடவக் கடைக்கு போகலப்பா. அது தெரியாம ஏதோ பேசிண்டு”.

    மச்சினன்..ஓர்ப்பொடி சண்டை மாதிரி போயிண்டே இருக்கும்.

    “எவ்ளோ தருவேன்ற?”

    “நான் வேற ஆட்டோ பாத்துக்கறேன். கெளம்பு”

    “இதப்பாரும்மா வெயிட் பண்ணி கூட்டிட்டு வறேன். 300 ரூபா தா?”.

    “உன் இன்ஃப்ளேஷன் ரேட்டு எனக்கு ஒத்துவரல. நீ போப்பா. கெளம்புன்னேன்”

    “எதுக்கெல்லாமோ செலவழிப்பாங்க. ஆட்டோக்கு குடுக்க மனசு வராது” இதை முணுமுணுத்துண்டே ஸ்பீடா போயிட்டான்.

    நல்ல வேளை! அன்னிக்கு கெடச்சது நான் நெனச்ச மாதிரியான ஆட்டோ இல்ல. நா இருந்த டென்ஷனுக்கும், அவசரத்துக்கும், அலைச்சலுக்கும் அந்த மழைக்கும், ஆட்டோ நெஜம்மாவே அமைஞ்சதுன்னுதான் சொல்லணும்.

    அட அட.. அடா..கல்யாண வீட்ல அழைக்கறமாதிரி வாங்க வாங்கன்னு சொல்லி ஆட்டோல ஏத்தினான். வேணுங்கற கடைக்கு போங்கன்னான். அரை மணிக்கும் மேல பொறுமையா காத்திருந்தான். மழை கொட்டு கொட்டுனு கொட்டித்து. சாமானை தூக்கி வண்டில ஏத்தினான். அப்பறம் வேற வேற வேலை. இங்க அங்கன்னு சுத்தல். வீடு வந்து சேந்தோம். காசு அவன் எத்தனை கேட்டான்னு நெனைக்கிறீங்க?

    “நீங்க கொடுக்கறதைக் குடுங்கம்மா” ன்னான்.

    “எம்பா இப்படி இருந்தா எப்படி பொழைப்பே?”
    “ஒடம்பு சரியில்லாதவங்களுக்கு மழையில வந்து வீல் சேரெல்லாம் வாங்கறீங்க. குடுங்கம்மா”.

    “என்ன 180 தரட்டுமா?” ன்னேன்.

    “200 குடுங்க” ன்னான். கொடுத்தேன். இவன் 300 கேட்டாலும் தாரளமா கொடுத்திருப்பேன். என்ன பணிவு? என்ன நல்ல சுபாவம்? வீட்டு வராண்டாவுல சாமானை இறக்கி வைத்தான். உள்ள எட்டிப் பாக்கறேன். அம்மா எனக்காக காத்துண்டு நிக்கறா.

    “வரேம்மா”ன்னு சொல்லிட்டு ஆட்டோக்காரன் போயிட்டான். இருட்டிடுத்து. என் வீட்டு வாசல்லேயே அவனுக்கு அடுத்த சவாரி கிடைத்தது. அந்தப் பொண்ணும் அதிஷ்டக்காரிதான். ‘ஆத்துக்காரர் கூட சிலருக்கு நன்னா அமைஞ்சுடுவா. ஆனா நம்ம ஊர்ல ஆட்டோக்காரன் நன்னா அமைய கொடுத்துதான் வச்சிருக்கணும்.’ என்ன சரிதானே நாஞ்சொல்றது?


    எழுத்து
    காமாக்ஷி
    மன்றத்துல மக்கள் படிக்கவும் கொடுத்து வச்சிருக்கணும்
    Last edited by KAMAKSHE; 13-12-2011 at 03:06 PM.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் dhilipramki's Avatar
    Join Date
    18 Dec 2010
    Location
    தஞ்சாவூர்
    Posts
    252
    Post Thanks / Like
    iCash Credits
    11,642
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான பழமைமிக்க, சிறப்பு வாய்ந்த செந்தமிழில் உங்கள் கதையினை அமைத்து இருக்கலாமே. படிக்கவாது எளிமையாக இருந்திருக்கும். நன்றி.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    இதை படித்தவுடன் எனக்கும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு முறை திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் இருந்து திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷன் போக 300 ருபாய் வாங்கினான் அந்த ஆட்டோகாரன். நானும் என் கணவரும் அது வரை அந்த ஊருக்கு போனது இல்லை. அதனால் அங்குள்ள நிலவரம் தெரியாமல் கொடுத்துவிட்டோம். மீண்டும் திரும்பி வரும்போது ஒரு ஆட்டோக்காரன் வெறும் 60 ருபாய் மட்டுமே கேட்டார் எங்கள் இருவருக்கும் ஆச்சரியம். சரி என்று ஏர்போர்ட்டில் இறங்கியதும் அந்த ஆட்டோக்காரர் ஒரு 10 ருபாய் சேர்த்து தர முடியுமா சார் என்றார். என் கணவரும் சந்தோஷமாய் 20 ருபாய் கொடுத்தார். ஆட்டோக்காரருக்கு அவர் கேட்டதை விட அதிகம் கிடைத்த மகிழ்ச்சி. எங்களுக்கு நம்மை ஏமாற்ற நினைக்காமல் கேட்டு வாங்குகிறாரே என்ற மகிழ்ச்சி.

    இந்த கதை படித்தவுடன் அந்த ஆட்டோ டிரைவர் நினைவு தான் வருகிறது.

    கதைக்கு அளவான அழகான எழுத்துகள்.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மறக்கமுடியாத ஆட்டோ அனுபவங்கள் இல்லாத சென்னைவாசிகளே இருக்கமுடியாது என்று நினைக்கிறேன். சின்ன சம்பவத்தையும் சுவையாகச் சொல்லிய விதம் அருமை. வயசான அம்மாள் ஒருத்தியின் வாய்மொழியாகக் கேட்பதுபோல் கதையை அமைத்தது சிறப்பு. ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு வித்தியாசமோ, புது யுத்தியோ புகுத்தும் உங்கள் திறனை மிகவும் பாராட்டுகிறேன், காமாக்ஷி. தொடர்ந்து எழுதுங்க.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    இனி யாரும் யார் வீட்டுக்கும் ஆட்டோ அனுப்ப முடியாது

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by dhilipramki View Post
    அருமையான பழமைமிக்க, சிறப்பு வாய்ந்த செந்தமிழில் உங்கள் கதையினை அமைத்து இருக்கலாமே. படிக்கவாது எளிமையாக இருந்திருக்கும். நன்றி.
    தாங்கள் பொறுமைகூர்ந்து படித்தமைக்கு நன்றிகள்

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by sarcharan View Post
    இனி யாரும் யார் வீட்டுக்கும் ஆட்டோ அனுப்ப முடியாது
    தாங்கள் பொறுமைகூர்ந்து படித்தமைக்கு நன்றிகள்

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    மறக்கமுடியாத ஆட்டோ அனுபவங்கள் இல்லாத சென்னைவாசிகளே இருக்கமுடியாது என்று நினைக்கிறேன். சின்ன சம்பவத்தையும் சுவையாகச் சொல்லிய விதம் அருமை. வயசான அம்மாள் ஒருத்தியின் வாய்மொழியாகக் கேட்பதுபோல் கதையை அமைத்தது சிறப்பு. ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு வித்தியாசமோ, புது யுத்தியோ புகுத்தும் உங்கள் திறனை மிகவும் பாராட்டுகிறேன், காமாக்ஷி. தொடர்ந்து எழுதுங்க.
    தங்கள் ஊக்கம் என்னை உற்சாகப் படுத்துகிறது. நன்றிகள் கீதம்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •