தேங்கியூ, தேங்கியூ தேங்கியூ என்று நீங்கள் எழுதிக் கொடுத்தவொன்றை மங்கியூ, மங்கியூ, மங்கியூ என்று யாராவது எழுதினால் கோபம் வருகிறதா? அதேப் போல பல ஆயிரம் வார்த்தைகளுக்கு நடுவே சில இடங்களில் எழுத்தை மாற்றி எழுதி உங்கள் எழுத்தில் கலப்படம் செய்தால் கோபம் வருகிறதா? பத்திரிக்கைக்கு அனுப்பிய படைப்புகளில் கத்திரிக் கோல் விழுந்த இடங்களை கண்டுபிடிக்க வேண்டுமா? ஒரே அறிக்கையை ஒவ்வொரு தேர்தலிலும் வருகிறதாவென ஒப்பிட வேண்டுமா?
இதற்கொல்லாம் உதவ வாக்கிய ஒப்பீட்டுச் செயலி அறிமுகமாகியுள்ளது. {தமிழ் என்றில்லை மற்ற மொழிகளுக்கும் இது பயன்படுத்தலாம்.}


பொதுவாக ஒரு குறிப்பிட்ட வரிகள் அல்லது குறிப்பிட்ட வாக்கியங்கள் மற்ற ஒரு கட்டுரையில் உள்ளதா என்று பார்க்க எளிதாக ctrl+F செய்து பார்த்துவிடலாம். ஆனால் இரண்டு ஒரே மாதிரியான கட்டுரைகளில் இடையில் விடுபட்ட அல்லது சொருகப்பட்ட விஷயங்களைக் கண்டுபிடிக்க அந்தக் கட்டுரை முழுவதையும் படிக்க வேண்டும். எளிதில் கண்டுபிடிக்க இந்த செயலி உதவும், ஒவ்வொரு வார்த்தையாக சோதித்து விடுபட்ட வார்த்தையைக் காட்டிக் கொடுக்கும்

வாக்கிய ஒப்பீடு

செயலியில் உள்ள இரண்டு பெட்டியில் இரண்டு வாக்கியங்களைக் கொடுத்தால் ஒப்பிட்டு மாறுபட்ட வார்த்தைகளை இரண்டு வாக்கியங்களிருந்தும் சிவப்பு வண்ணத்தில் காட்டும். நடை முறைப் பயன்பாடு அதிகம் இல்லைதான் அதே வேளையில் யாரும் தேவைப்படாது என்றும் இல்லைதான். பயன்படுமானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிழைகளிருந்தால் சுட்டிக் காட்டுங்கள் களையப்படும்.

Source:எதிர்நீச்சல்