Results 1 to 8 of 8

Thread: யாதுமாகிறாய்..

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0

    யாதுமாகிறாய்..

    யாதுமாகிறாய்..

    மண்ணில் பயிரை ஊன்றும் வேராய்..
    எனது இலக்கினில் ஊன்றச் செய்கிறாய்!
    ஊட்டத்தை உறிந்துத் தரும் வேர்ப்போல
    நல்லவற்றை எனக்காய் பகிர்கிறாய்..

    இலை, பூ, கனியைத் தாங்கும் தண்டாய்
    எனைத் தாங்குகிறாய்.!என் இன்பதுன்பம்,
    கோபம் எல்லாம் சேர்த்து..! நிலமேல்
    மட்டுமிருக்கும் தண்டு..இது நியதி !

    உணவை சேமிக்க இயல்பை மீறி
    நிலத்தடி நீளும் சில தண்டுப்போல்...
    நீயுமுன் இயல்பை மீறி அன்பாகிறாய்..
    என் வெறுப்பினை மறந்து...!

    தாயாய் முழுத் தருவிற்கும் உணவிடும்
    இலைகளைப் போல் என்
    தேவைகளை யெல்லாந் தருவாய்

    அழகைக் கொடுத்து உருவம் சிதைத்து
    கனியை உருவாக்கும் மலர்ப்போல்
    எனக்காய் கொஞ்சம் சிதைந்து
    என்னை இனியளாய் உருவாக்குகிறாய்...

    விதையைப் பாதுகாக்கும் கனிப் போல்
    எனைப் பாதுகாக்கிறாய்...
    என்னை விருட்சமாக்க
    நீ யாதுமாகிறாய்...
    LIVE WHEN YOU ARE ALIVE !

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    தாவர உவமைகளோடு இணை/இறை/தாய் பற்றிய கவிதை நன்று..

    கவிதையை அங்கிங்கு கொஞ்சம் தட்டலாம், உரைநடை குறுக்கீடு இருக்கிறது..

    தாவரங்களை ஒப்பிடுகையில் வார்த்தை செலவு அதிகமானதே அதன் காரணம்...

    //என்னை விருட்சமாக்க
    நீ யாதுமாகிறாய்...
    //

    இந்த வரி அபாரம், யாதுமாகிறாய் என்று சொல்வது எதையும் செய்ய தயாராக இருக்கிறாய் என்பதையும் சொல்கிறது..

    வாழ்த்துக்கள்........ தொடர்ந்து படையுங்கள்..
    அன்புடன் ஆதி



  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    வாழ்த்துகள் ..தாவரங்களை உவமையாக கொண்டு கவிதை கூறும் நற்கருத்து அருமை ...இதன் கவிதை நடை யில் மாற்றம் சிறிது தேவை என்பது என் கருத்து ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மொத்தத்தில் நீ ஒரு மரம் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்.

    ரசிக்கத்தக்க அன்பின் வெளிப்பாடும், பொருத்தமான உவமைகளும் நன்றாக உள்ளன. பாராட்டுகள் மின்மினி.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0

    நன்றி

    பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் மிக்க நன்றி
    LIVE WHEN YOU ARE ALIVE !

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    கவிதை சிறப்பு

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    நான் இலை.. நீ கிளை..
    நீ விழ வேண்டாம்..
    நான் விழுவேன்..!!

    - பாடல் வரிகளை நினைவூட்டியது உங்கள் கவிதை மின்மினி.

    விளம்பர பலகைகளை ஆணியடித்து மாட்டி துன்புறுத்தினும் அமைதியாய் தாங்கும் மரம் போல் அமைதியாய் இருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களோ??

    வாழ்த்துகள் மின்மினி.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    நன்று

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •