Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: அமெரிக்க அழிகின்றது..

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் dhilipramki's Avatar
    Join Date
    18 Dec 2010
    Location
    தஞ்சாவூர்
    Posts
    252
    Post Thanks / Like
    iCash Credits
    11,642
    Downloads
    0
    Uploads
    0

    Question அமெரிக்க அழிகின்றது..

    அமெரிக்க அழிகின்றது..
    லகத்தையே ஆட்டி படைக்க வேண்டும், அனைத்து நாடுகளும் தங்கள் கைவசம் இருக்க வேண்டும், பிரச்சனைகளை தீர்ப்பது போல் நாட்டாமை செய்து பிழைக்க வேண்டும்...இதற்கெல்லாம் பணம் செலவு செய்ய வேண்டும். கொஞ்சநஞ்சம் இல்லை கோடிகணக்கில்....
    இவைகளுக்கு பணத்தை வாரியிறைத்து, தம் மக்கள் நலத்தை பாராமல், தம் பொருளாதார விதத்தை மாற்றாமல் விட்டுவிட்டத்தின் விளைவுகள், இன்று வால் ஸ்ட்ரீட்டில் இருந்தது ஆரம்பித்த போராட்டம், நாளை டைம் ஸ்கொயர் வரை விரிவடையும், என்று போராட்ட குழுவினர் அறிவித்தனர்.

    வேலையில்ல திண்டாட்டம் உறவாகும் என்று பல முறை பொருளாதார வல்லுனுர்கள் அறிவித்தும் இன்று இந்த நிலை. உலகின் முன்னேறிய நாடு என்று கூறிகொண்ட அமெரிக்க இன்று தம் வாழ்க்கை வேலையில்லாமல் வீழ்ந்து கிடக்கிறது என்று கதறும் நிலை.
    இது வரையில் நியூயார்க் காவல்துறை 70 பேரை கைது செய்து உள்ளது.
    குதிரை காவல் படையினர், போராட்ட குழுவை விரட்டியத்தில் ஒரு பெண் கீழே விழுந்து காயமடைந்தார். இந்த போராட்டத்தில் மேலும் 5000 பேர் கலந்து கொள்கின்றனர்.
    அமெரிக்க அரசாங்கம் இந்த போராட்டத்தினை தம் புதிய பொருளாதார கொள்கையைக் கொண்டு, வேலை இல்லாத இளையதலைமுறையினருக்கு நன் முறையில் மாற்றம் விளைவித்து, தம் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவேண்டும் என்பது சர்வதேச பொருளாதார நிபுணர்களின் பார்வை.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் seguwera's Avatar
    Join Date
    05 Jan 2011
    Location
    Kumbakonam
    Age
    47
    Posts
    196
    Post Thanks / Like
    iCash Credits
    15,484
    Downloads
    16
    Uploads
    0
    எத்தனை காலம்தான் அடுத்த நாட்டின் வளங்களை அழித்து அமெரிக்கா குளிர் காய முடியும். காற்று திசை மாறினால் குளிர் காய அவர்கள் பற்ற வைத்த நெருப்பே அவர்களை சுடும் .
    சேகுவேரா
    கொடுங்கூற்றுக்கிரையெனப் பின்மாயும் பல
    வேடிக்கை மனிதரைப்போல் நான்
    வீழ்வேன் என்று நினைத்தாயோ? ---(பாரதி)


  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் jaffer's Avatar
    Join Date
    11 May 2011
    Location
    பாலைவன சோலை
    Posts
    139
    Post Thanks / Like
    iCash Credits
    9,454
    Downloads
    0
    Uploads
    0
    விதை விதைத்தவன் வினை அறுப்பான்



    பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். (பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்)

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,961
    Downloads
    6
    Uploads
    0
    தன்னை உலக போலீஸ்காரனாக நினைத்துக்கொண்டு அந்த நாடு செயல்பட்டதன் விளைவை இன்று எதிர்கொள்கிறது.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் dhilipramki's Avatar
    Join Date
    18 Dec 2010
    Location
    தஞ்சாவூர்
    Posts
    252
    Post Thanks / Like
    iCash Credits
    11,642
    Downloads
    0
    Uploads
    0
    கேபிடளிசிம் பொருளாதார கொள்கை கொண்ட நாடுகள் விரைவில் அடிவாங்கும் என்று கூறிய பொழுது, "இல்லை, அது நடக்கவே நடக்காது" என்று கூறிய தென் அமெரிக்கா, லத்தின் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள், இன்று பொது மக்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த முடியாமல் திணறுகிறது.

  6. #6
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அமெரிக்கா வளர்கிறதோ இல்லையோ அது அந்த மக்களின் மீது விழும் அடியிலும் வளர்ந்துவரும் நாடுகளுக்கு தான் பாரிய இழப்பு. இதை நினைத்து நீங்கள் தான் வருந்தவேண்டும். காரணம்....
    அமெரிக்காவில் முதலிட்டிருப்போரில் பலர் இந்தியர்கள் தான். அவர்களது பங்கு சந்தை சரிந்தால் அந்த நஷ்டத்தை பகிரப்போவது நீங்கள் என்பதை மறந்து கொண்டாடுகிறீர்கள். உதாரணமாக அம்பானி அங்கே விட்டதை இந்தியாவில் பிடிக்க நினைத்தால் உங்கள் வாழ்க்கை செலவு தானாக உயரும். எப்படியும் அம்பானி கவிழப்போவதில்லை. கவிழ்வது உங்கள் நாட்டு பொருளாதாரம் தான்....
    ----------
    மற்ற நாடுகளில் நடந்த போராட்டத்தை போல் கட்டுப்படுத்த முடியாததற்கு காரணம் வளர்ந்த நாடுகளில் உள்ள சட்டதிட்டங்கள். நினைத்தாற்போல் இந்தியா இலங்கை போல் துப்பாக்கியை நீட்ட முடியாது.... அண்மையில் ஐக்கிய இராச்சியத்தில் நடந்தது போன்ற விடையம் ஏன் பிரான்ஸ் இல் நடத்த முடியவில்லை.??? அந்த நாட்டு சட்டம் அப்படி? அரசுக்கு எதிராக நினைத்தாலே போட்டுத்தள்ளிவிடுவார்கள்.

    லிபியாவில் நடந்தது போல் ஏன் பஹரெய்ன் இல் நடக்கவில்லை. அங்கும் தான் மக்கள் எழுச்சி போராட்டம் நடத்தினார்கள். பஹரெய்ன் கத்தார் ஐக்கிய அரபு இராச்சியம் போன்றவற்றின் இராணுவமே அமெரிக்கா தான். அவற்றிற்கு சம்பளம் கொடுப்பது அந்த நாடுகள்.

    ஆகவே எப்படிப்பார்த்தாலும் நஷ்டம் என்று வந்தால் தலையை பிய்த்துக்கொள்ளப்போவது இந்தியாவும் சீனாவும் தான். தலைக்கு மேல் வெள்ளம் என்றால் அமெரிக்கா தனது பணத்தை மிதக்கவிட்டு தனது பெறுமானத்தை குறைத்துவிடும். அமெரிக்கப்பணத்தை வைத்திருக்கும் இந்த இருநாடுகளும் என்ன செய்துவிடமுடியும்????
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #7
    புதியவர்
    Join Date
    30 Sep 2011
    Location
    chennai-triplicane
    Posts
    31
    Post Thanks / Like
    iCash Credits
    9,625
    Downloads
    0
    Uploads
    0
    .........வாழ்க பாரதம்

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    அருமையான விளக்கம் அன்பு ... நான் படித்தவுடன் எழுத நினைத்ததை ஒரு வரி விடாமல் மேற்கோள் இட்டு காட்டி உள்ளீர்கள்.பகிர்வுக்கு நன்றி நண்பர்களே
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  9. #9
    புதியவர்
    Join Date
    14 Nov 2010
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    9,023
    Downloads
    0
    Uploads
    0

    பொருளாதாரம் விஞ்ஞானம் அல்ல!

    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    அமெரிக்கா வளர்கிறதோ இல்லையோ அது அந்த மக்களின் மீது விழும் அடியிலும் வளர்ந்துவரும் நாடுகளுக்கு தான் பாரிய இழப்பு. இதை நினைத்து நீங்கள் தான் வருந்தவேண்டும். காரணம்....

    ஆகவே எப்படிப்பார்த்தாலும் நஷ்டம் என்று வந்தால் தலையை பிய்த்துக்கொள்ளப்போவது இந்தியாவும் சீனாவும் தான். தலைக்கு மேல் வெள்ளம் என்றால் அமெரிக்கா தனது பணத்தை மிதக்கவிட்டு தனது பெறுமானத்தை குறைத்துவிடும். அமெரிக்கப்பணத்தை வைத்திருக்கும் இந்த இருநாடுகளும் என்ன செய்துவிடமுடியும்????
    அன்பு கோபப்பட்டு சபிக்கிறார். அவர் வீட்டுப் பொருளாதாரம் அமெரிக்கா சார்ந்தது என்பது காரணமாக இருக்கலாம். ஆனால் அன்பு அல்லது அவரது தாத்தா சாபம் பலிக்க செய்யும் மாந்திரீகம் இல்லை பொருளாதாரம். விஞ்ஞானம் மாதிரி துல்லிய கணிப்பு இதில் இல்லை. நிகழ்ந்ததையும் நிகழ்வதையும் பதிவு செய்வது மட்டும்தான் பொருளாதாரம் என்ற பாடம். அமெரிக்கா என்ற நாடு இல்லாத காலத்திலேயே இந்தியா செழுமையான பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்தது என்றாலும் அமெரிக்கா வீழ்ந்து விட்டது என்று கூறுவதும் தவறு

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by Vijisri View Post
    அன்பு கோபப்பட்டு சபிக்கிறார். அவர் வீட்டுப் பொருளாதாரம் அமெரிக்கா சார்ந்தது என்பது காரணமாக இருக்கலாம். ஆனால் அன்பு அல்லது அவரது தாத்தா சாபம் பலிக்க செய்யும் மாந்திரீகம் இல்லை பொருளாதாரம். விஞ்ஞானம் மாதிரி துல்லிய கணிப்பு இதில் இல்லை. நிகழ்ந்ததையும் நிகழ்வதையும் பதிவு செய்வது மட்டும்தான் பொருளாதாரம் என்ற பாடம். அமெரிக்கா என்ற நாடு இல்லாத காலத்திலேயே இந்தியா செழுமையான பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்தது என்றாலும் அமெரிக்கா வீழ்ந்து விட்டது என்று கூறுவதும் தவறு
    அமெரிக்காவின் வீழ்ச்சி என்பது மறைமுக இந்திய பொருளாதார வீழ்ச்சிதான். அன்பு சொல்வதுபோல் அவர்கள் நட்டு மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டது. அவர்கள் வேலைக்காக போராடுவது அடிப்படை வசதியை இன்னும் இன்னும் பெருக்கிக் கொள்ளவே, அதற்க்கு பெயர்தான் வளர்ந்த நாடுகள் என்று சொல்வோம். இங்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றவே வழி இல்லை.

    எப்படி இருக்கும்? நாம் பல் தேய்க்கும் பர்ப்பசையிலிருந்து விமானம் வரை எதுவும் நமது தயாரிப்பில்லை. நம் நாட்டு மக்கள் முதலீடுகள் எழுபது சதவிகிதம் அந்நிய நட்டு பொருள்கள் மீதுதான். பிறகு அங்கு வீழ்ந்தால் இங்கு மறைமுக வீழ்ச்சி கண்டிப்பாக இருந்துதானே ஆகவேண்டும் .
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  11. #11
    புதியவர்
    Join Date
    14 Nov 2010
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    9,023
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by Nivas.T View Post
    பிறகு அங்கு வீழ்ந்தால் இங்கு மறைமுக வீழ்ச்சி கண்டிப்பாக இருந்துதானே ஆகவேண்டும் .
    பொருளாதார கோட்பாடுகளால் அவ்வாரு எதையும் அனுமானித்து கூற முடியாது. காலம்தான் பதில் சொல்லும். நம் திண்மையில் நம்பிக்கை வைத்து பயமில்லாமல் முயற்சிப்பது மட்டுமே நலம் பயக்கும்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    எங்கோ தேள் கொட்டினால் எங்கோ நெறி கட்டும் என்ற நிலைப்பாடு பொருளாதாரத்திலும் பொருந்தும்.

    யதார்த்தம் பொதிந்த எதுவும் பொய்த்ததில்லை...

    அதிகளவு அன்பும் அதிகளவு நம்பிக்கையும் அழிவைத் தரவல்லன.. சிந்திப்போம்!!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •