Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 16 of 16

Thread: அமெரிக்க அழிகின்றது..

                  
   
   
 1. #13
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  134,291
  Downloads
  161
  Uploads
  13
  Quote Originally Posted by Vijisri View Post
  அன்பு கோபப்பட்டு சபிக்கிறார். அவர் வீட்டுப் பொருளாதாரம் அமெரிக்கா சார்ந்தது என்பது காரணமாக இருக்கலாம். ஆனால் அன்பு அல்லது அவரது தாத்தா சாபம் பலிக்க செய்யும் மாந்திரீகம் இல்லை பொருளாதாரம். விஞ்ஞானம் மாதிரி துல்லிய கணிப்பு இதில் இல்லை. நிகழ்ந்ததையும் நிகழ்வதையும் பதிவு செய்வது மட்டும்தான் பொருளாதாரம் என்ற பாடம். அமெரிக்கா என்ற நாடு இல்லாத காலத்திலேயே இந்தியா செழுமையான பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்தது என்றாலும் அமெரிக்கா வீழ்ந்து விட்டது என்று கூறுவதும் தவறு

  Quote Originally Posted by Vijisri View Post
  பொருளாதார கோட்பாடுகளால் அவ்வாரு எதையும் அனுமானித்து கூற முடியாது. காலம்தான் பதில் சொல்லும். நம் திண்மையில் நம்பிக்கை வைத்து பயமில்லாமல் முயற்சிப்பது மட்டுமே நலம் பயக்கும்
  நான் சொல்லவந்ததில் என்ன தவறு என்பதை விடுத்து மந்திரீகம் அது இது என்கிறீர்களே.. நான் சொல்லவந்தது அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ந்தால் கவிழப்போவது இந்தியாவினதும் தான் என்று சொல்லவந்தேன்.
  முதலில் கூறியதும் தான். சில உதாரணங்கள்.
  அமெரிக்காவில் பணிபுரியும் அநேகர் இந்தியர்கள் தான். அதுவும் சாதாரண இந்தியர்களல்ல. அந்த அநேகரும் அளவுக்கதிகமான கல்வி மன்றும் அனுபவம் கொண்டவர்கள். அங்கு வேலையில்லாத்திண்டாட்டம் என்றால் அவர்கள் வரஇருப்பது இந்தியாவுக்குத்தான். வந்தால் வரட்டுமே நல்லது தானே என்று நீங்கள் சொல்வீர்கள்.
  இந்தியாவுக்கு அவர்கள் வருவதால் 2 தீமை. ஒன்று அமெரிக்கா மூலமான அமெரிக்க பணவருவாய் தடைப்படும். அன்னியச்செலாவாணி முடக்கப்படும். இந்திய பணத்தின் பெறுமானம் உலகசந்தையில் அமெரிக்கா டொலரின் பெறுமானத்துடன் ஒப்பிடும் போது குறையும். உலகசந்தையின் நடவெடிக்கை அமெரிக்க டொலரில் தான் உள்ளது. உங்கள் நாட்டில் உள்ள இறக்குமதியாளர்கள் தங்கள் இறக்குமதியை குறைப்பார்கள். இதனால் பொருட்களின் கிராக்கி அதிகரிக்கும். அந்த அமெரிக்க பணத்துக்குகும் கிராக்கிக்கும் ஈடுகொடுக்க பொருட்களின் விலை அதிகரிக்கும்..........................

  இரண்டாவது அவர்கள் அதிக கல்வித்தகமை மற்றும் அனுபவங்களுடன் வருவதால் இந்தியாவில் வேலைஇல்லாத்திண்டாட்டம் அதிகரிக்கும். ஐரோப்பா அமெரிக்கா யப்பான் அவுஸ்திரேலியாவில் தான் உள்ளூர் அனுபவத்திற்கு மதிப்பு. இலங்கை இந்தியா பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் வெளிநாட்டு அனுபவத்திற்கு தான் மதிப்பு. இந்த மனநிலை மாற்றப்பட்டால் பிரச்சனையில்லை. இது தான் நம்மவர்களின் பிரச்சனையே... உள்ளூரில் வேலைசெய்தவர்களின் பாடு திண்டாட்டமாகும். இது இப்படியே சங்கிலித்தொடராகும்.
  ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் என்பது ஒரு வட்டம் போன்றது என்பதை விளக்கி ஒரு சம்பவம் ஒன்றை தாமரை பதிவு ஒன்று பதிந்துள்ளார். அது என் கண்ணில் பட்டால் இங்கே தருகிறேன்.

  வளர்ந்தநாடுகளில் காலணிக்கு பூச்சு வாங்க காசு இல்லை என்று வருந்துவான். ஆனால் வளர்ந்துவரும் நாடுகளில் காலணிக்கே வக்கில்லை...

  இது தான் உண்மையும் யதார்த்தமும். இதை சொல்ல உங்களுக்கு காலம் தேவைப்படுகிறது... காலத்தின் மீது பழியை போட்டுவிட்டு போனால் போகட்டும் போடா என்று இருப்பவர்கள் தான் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு நாட்டையே கவிழ்ப்பவர்கள். இறுதியாக ஒரு வரி கூறினீர்களே அது உண்மை... முயற்சி செய்ய வேண்டும் என்று. காலம் பதில்சொல்லவேண்டும் என்று காத்திருப்பவர்கள் எவரும் முயற்சி செய்யமாட்டார்கள்....

  இன்னொன்று சொன்னீர்கள். என்ன ஒரு வாக்கு. அது என்னங்க. எதையும் அனுமானிக்க முடியாதா...? ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அது இது என்பதே அனுமானங்களும் எதிர்வுகூறலும் தான். அப்படி இல்லாவிட்டால் நிதி அமைச்சு எதற்கு. அரசு நிதி அறிக்கை எதற்கு. சிறந்த பொருளாதார வல்லுனரை பிரதம மந்திரியாக கொண்ட நாட்டில் இருந்துகொண்டு இப்படி கூறுகிறீர்கள். அது தான் வேடிக்கை....
  அமெரிக்கா அழிகிறது என்பதே ஒருவரது அனுமானமும் எதிர்வுகூறலும் தான். ஒரு நாட்டில் ஏற்படும் வன்முறை வேலையில்லா திண்டாட்டம் அதற்கு வழிவகுக்கும் என்று சொல்வது என்ன விஞ்ஞான விளக்கமா???
  --
  நீங்கள் சொன்னது போன்று அமெரிக்கா என்ற நாடு இல்லாத காலத்தில் எவனுங்க அமெரிக்காவுக்கு வேலைக்கு போயிருப்பான். அல்லது அமெரிக்காவில் முதலிட்டிருப்பான். ??? அப்படியான காலத்தில் பசுமையும் செழுமையுமாகத்தான் இருந்திருக்கும். தற்போதய இந்தியா அப்படி இல்லை. மக்கள் தொகை அதிகரிப்பு என்பது முதற்பிரச்சனை. 2வது அநேக இந்தியப்பணம் வெளிநாட்டில் தான் உள்ளது.

  ஒரு இந்தியன் $100.00 வைத்திருந்தால் (உதாரணத்திற்கு 1$=40.00 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள்.) இப்போது அவனிடம் உள்ள இந்திய ரூபாய் 4000.00. இதையே அமெரிக்க பொருளாதாரம் சரிந்து அவர்களது மதிப்பு வீழ்ந்து உங்களது உயர்ந்தால் 1$<40.00 எனற நிலை வரும். அந்த அமெரிக்கப்பணம் வைத்திருந்த இந்தியனின் பணம் <4000.00 என்று வரும்.

  உலக முதற்தர பணக்கார்கள் இந்தியாவில் உள்ளார்கள் என்பது போல் உலக முதற்தர ஏழைகள் எங்கு உள்ளார்கள் என்பதையும் அறிந்திருங்கள். (ஆபிரிக்காவில் என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விடாதீர்கள். இந்தியாவிலும் பல பல ஆபிரிக்க கிராமங்கள் உள்ளன)
  நிகழ்ந்ததை பதிவு செய்வது மட்டும் பொருளாதார பாடமன்று. அதை கொண்டு எதிர்வு கூறுவதும் தான். அதை சிறப்பாக செய்பவர் தான் சிறந்த பொருளாதாரவல்லுணர் என்று சொல்கிறோம். அப்படிப்பட்ட சிறந்தவர்களில் ஒருவர் தற்போதய இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்......
  ----------
  இன்னொருநாட்டில் தங்கியிருக்கவில்லை என்ற நிலை வரும் போது இதை மற்ற நாடுகளை பற்றி கவலைப்படத்தேவையில்லை. இல்லாதவரை எந்த நாட்டின் பொருளாதார மாற்றமும் மற்றநாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் நிகழ்ந்தது.

  அவுஸ்திரேலிய வர்த்தகப்புழக்கம் அவர்கள் தங்களது பணத்தில் தான் உள்ளது. அதாவது அவுஸ்திரேலிய டொலர். அண்மைய அமெரிக்க பொருளாதார சரிவினால் அவுத்திரேலியாவில் பணத்தின் பெறுமதி உலக சந்தையில் அதிகரித்துவிட்டது. 1 அவுத்திரேலிய டொலர் 1.15 அமெரிக்க டொலருச்கு சமானமாக வந்தது. (முன்பு 1 அவுஸ்திரேலிய டொலர் 0.77 - 0.80 ) இதனால் இறக்குமதியாளர்களுக்கு சந்தோசம். ஆனால் அநேகமாக ஏற்றுமதி தான் உள்ளது. அவுத்திரேலிய பணமதிப்பு அதிகரிந்ததால் ஏற்றுமதி குன்றி Bluescope steel என்ற ஒரு பாரிய இரும்பு வாணிப தொழிற்சாலையை மூடிவிட்டார்கள். பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்தார்கள். எனக்கு மட்டும் தெரிந்து ஏறத்தாள 25 இலங்கையர்களும் 7 இந்தியர்களும் இதில் அடக்கம். எனக்கு தெரியாதோர் எத்தனை பேர். அந்த 7 பேரின் மூலம் இந்தியா வரும் அன்னியப்பணம் இனி அவர்களுக்கு வேலைகிட்டும் வரை தடைப்படும். ..............................................................................

  சந்தேகம் என்றால் Bluescope steel என்று கூகிளில் தேடுங்கள். பல சுவாரசியமான விடையங்கள் கிட்டும்.
  ------------------
  அமெரிக்கா போன அனைத்து இந்தியனும் புத்திசாலி. ஆனால் மறுதலை உண்மை அல்ல. அது தான் கசப்பானது.
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

 2. #14
  புதியவர்
  Join Date
  14 Nov 2010
  Posts
  20
  Post Thanks / Like
  iCash Credits
  5,113
  Downloads
  0
  Uploads
  0
  Quote Originally Posted by அன்புரசிகன் View Post
  ஒன்று அமெரிக்கா மூலமான அமெரிக்க பணவருவாய் தடைப்படும். அன்னியச்செலாவாணி முடக்கப்படும். இந்திய பணத்தின் பெறுமானம் உலகசந்தையில் அமெரிக்கா டொலரின் பெறுமானத்துடன் ஒப்பிடும் போது குறையும். உலகசந்தையின் நடவெடிக்கை அமெரிக்க டொலரில் தான் உள்ளது. உங்கள் நாட்டில் உள்ள இறக்குமதியாளர்கள் தங்கள் இறக்குமதியை குறைப்பார்கள். இதனால் பொருட்களின் கிராக்கி அதிகரிக்கும். அந்த அமெரிக்க பணத்துக்குகும் கிராக்கிக்கும் ஈடுகொடுக்க பொருட்களின் விலை அதிகரிக்கும்..........................

  இரண்டாவது அவர்கள்
  அமெரிக்காவின் பொருளாதாரம் அழிந்து விட்டது என்ற நிலைப்பாட்டிற்கு பின் இதெல்லாம் எங்கே?

  விவாதிப்பதில் தவறு இல்லை. ஆனால் தங்கள் விவாதம்தான் பொருளாதாரக் கல்வியின் சாராம்சம் என்று கூறுவது தவறு. எங்கேயோ பட்டாம் பூச்சி இறக்கையை அடித்துக்கொண்டால் இந்துமஹா சமுத்திரத்தில் சுனாமி வரும் என்று விஞ்ஞனம் கூட ஒரு வாதம் சொல்கிறது. ஆனால் வாதம் எல்லாம் வேதம் ஆகாது!

 3. #15
  புதியவர்
  Join Date
  14 Nov 2010
  Posts
  20
  Post Thanks / Like
  iCash Credits
  5,113
  Downloads
  0
  Uploads
  0
  Quote Originally Posted by அமரன் View Post
  யதார்த்தம் பொதிந்த எதுவும் பொய்த்ததில்லை...
  நம் திறமையில் நம்பிக்கை வைப்பதில் யதார்த்தம் இல்லை என்பதை நானும் ஒத்துக்கொள்ள மாட்டேன்! இந்த நாடும் ஒத்துக்கொள்ளாது!! அமெரிக்காவும் ஒத்துக்கொள்ளாது

 4. #16
  புதியவர்
  Join Date
  14 Nov 2010
  Posts
  20
  Post Thanks / Like
  iCash Credits
  5,113
  Downloads
  0
  Uploads
  0
  Quote Originally Posted by Nivas.T View Post
  . நம் நாட்டு மக்கள் முதலீடுகள் எழுபது சதவிகிதம் அந்நிய நட்டு பொருள்கள் மீதுதான். .
  முதலீடு என்பதும் செலவீனம் என்பதும் பொருளாதார கல்வியில் வெவ்வேறு அர்த்தம் கொண்டவை

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •