Results 1 to 4 of 4

Thread: எப்படிச் சொலவது?

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    30 Sep 2011
    Location
    chennai-triplicane
    Posts
    31
    Post Thanks / Like
    iCash Credits
    9,625
    Downloads
    0
    Uploads
    0

    எப்படிச் சொலவது?



    என் காதலை உன்னிடம்
    எப்படிச் சொல்வது?

    காதலுடன் பேசக்
    காட்டாற்று வெள்ளமாய்க்
    கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
    கண்களைக் கண்டதும் கானலாகின.

    சொல்ல நினைத்துத் துடித்தவை
    சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.

    ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
    ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.

    கண்டவுடன்
    கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
    காண மனது துடித்தாலும்
    பண்பாடு தடுக்கிறது;
    என் பாடு சொல்ல வழியில்லையே?

    சொல் பெண்ணே!
    என் காதலை உன்னிடம்
    எப்படிச் சொலவது?

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் dhilipramki's Avatar
    Join Date
    18 Dec 2010
    Location
    தஞ்சாவூர்
    Posts
    252
    Post Thanks / Like
    iCash Credits
    11,642
    Downloads
    0
    Uploads
    0
    உள்ள வந்தவுடன் ஒரு அருமையான கவிதை வரிகளை இட்டு அசத்தி விட்டீர்கள். அருமை. இத்தனை வரிகளை சொல்லும் உங்களால் வெறும் மூன்று வார்த்தைகளை சொல்ல முடியலைய!

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,961
    Downloads
    6
    Uploads
    0
    கண்கள் ஆயிரம் மொழி பேசும் என்பார்களே! சரி மடல் தீட்டிவிடவேண்டியதுதானே.
    கவிதை அருமை.பகிர்வுக்கு நன்றி

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் jaffer's Avatar
    Join Date
    11 May 2011
    Location
    பாலைவன சோலை
    Posts
    139
    Post Thanks / Like
    iCash Credits
    9,454
    Downloads
    0
    Uploads
    0
    இளசு அது புதுசு, நேரம் வரும் சொல்லலாம் - நல்ல துடிப்பான கவிதை வாழ்த்துக்கள்



    பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். (பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்)

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •