Results 1 to 12 of 12

Thread: தமிழ்ச்சொல் வளம்!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    19,034
    Downloads
    0
    Uploads
    0

    தமிழ்ச்சொல் வளம்!

    தமிழ்ச்சொல் வளம்!

    தொகுப்பு: மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்(சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்)


    இதழ் வகை:

    அல்லி - அகவிதழ்
    புல்லி - புறவிதழ்
    இதழ் - சிறியது
    மடல் - பெரியது


    பிஞ்சு வகை:

    பூம்பிஞ்சு - பூவோடு கூடிய இளம்பிஞ்சு
    பிஞ்சு - இளங்காய்
    வடு - மாம்பிஞ்சு
    மூசு - பலாப்பிஞ்சு
    கவ்வை - எள்பிஞ்சு
    குரும்பை - தென்னை, பனை முதலியவற்றின் இளம்பிஞ்சு
    முட்டுக்குரும்பை - சிறு குரும்பை
    இளநீர் - முற்றாத தேங்காய்
    நுழாய் - இளம்பாக்கு
    கருக்கல் - இளம்நெல்
    கச்சல் - வாழைப்பிஞ்சு


    (பல்வேறுநிலை) காய் வகை:

    பழக்காய் - பழுத்தற்கேற்ற முற்றிய காய்
    கடுக்காய் - முற்றிய பனங்காய்
    காலக்காய் அல்லது பருவக்காய் - உரியகாலத்திற் காய்ப்பது
    வம்பக்காய் - காலமல்லாக் காலத்திற் காய்ப்பது
    கருக்காய் - முற்றிய காய்


    முதிர்ச்சி வகைகள்:

    பழுத்தல் - மா, வாழை முதலியவற்றின் காய்முதிர்ச்சி
    முற்றல் - சுரை, புசணி முதலியவற்றின் காய்முதிர்ச்சி
    நெற்று - தேங்காய் பீர்க்கு முதலியவற்றின் காய்முதிர்ச்சி
    விளைச்சல் - நெல் சோளம் முதலியவற்றின் கதிர் முதிர்ச்சி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    17,030
    Downloads
    62
    Uploads
    3
    அரியனவற்றை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.
    கடுக்காய் என்று ஒரு கொட்டையும் இருக்கிறதல்லவா..?

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    24,051
    Downloads
    6
    Uploads
    0
    அறியாதன சில அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி

  4. #4
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2011
    Location
    லண்டன்
    Posts
    36
    Post Thanks / Like
    iCash Credits
    8,481
    Downloads
    12
    Uploads
    0
    தமிழின் சொல்வளம் ஆச்சரியபடவைக்கிறது

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    42,378
    Downloads
    290
    Uploads
    27
    அருமை. எனது தமிழாற்றலை புதுப்பித்துக்கொண்டேன். பல நன்றிகள் உங்களுக்கு !

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    41
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    65,965
    Downloads
    100
    Uploads
    0
    எந்தக் காலத்திலும் தமிழை முற்றும் தெரிந்தவர் என்று எவருமே இருந்திருக்கமாட்டரோ...

    அரிய பகிர்வுக்கு நன்றி...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் sures's Avatar
    Join Date
    18 Feb 2010
    Location
    நோர்வே
    Posts
    130
    Post Thanks / Like
    iCash Credits
    34,513
    Downloads
    45
    Uploads
    0
    நன்றி.
    தமிழில் பலவகைப்பட்ட சொற்கள் உள்ளன. ஆனால் அவற்றை பாவிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டு செல்கிறது.
    உங்கள்
    சுரேஷ்

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    55,959
    Downloads
    22
    Uploads
    0
    தமிழின் சிறப்பு மலைக்க வைக்கிறது.

    இன்னும், இன்னும் தொடருங்கள்.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    44
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    20,297
    Downloads
    2
    Uploads
    2
    பரிசளிக்கப்பட்ட போர்வையில் உள்ள கிழிசலை அரசனுக்கு குறிப்பால் உணர்த்தும் பொருட்டு "இந்தப் போர்வையில் அமைந்துள்ள வேலைப்பாடுகளில் கொடியிருக்கிறது, பூ இருக்கிறது, காய் இருக்கிறது, கனியிருக்கிறது, பிஞ்சும் இருக்கிறது" என ஒரு புலவன் தமிழின் சிறப்பின் மூலம் சுட்டிக் காட்டிய, இளவயதில் படித்த ஒரு கதை இந்தப் பதிவின் மூலம் ஞாபகம் வருகிறது. நன்றி குணமதி!
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    57
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    43,938
    Downloads
    7
    Uploads
    0
    சில அறிந்தவை. பல அறியாதது.பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  11. #11
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    67
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    11,422
    Downloads
    0
    Uploads
    0
    பல புதிய சொற்கள் தெரிந்துகொண்டேன்...நன்றி

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    07 Oct 2020
    Posts
    1,407
    Post Thanks / Like
    iCash Credits
    8,909
    Downloads
    0
    Uploads
    0

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •