Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: iPhone 4S - உலகின் முன்னணி அலைப்பேசி.

  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் dhilipramki's Avatar
    Join Date
    18 Dec 2010
    Location
    தஞ்சாவூர்
    Posts
    252
    Post Thanks / Like
    iCash Credits
    11,642
    Downloads
    0
    Uploads
    0

    Exclamation iPhone 4S - உலகின் முன்னணி அலைப்பேசி.

    iPhone 4S - உலகின் முன்னணி அலைப்பேசி.

    லக அளவில் மக்கள் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பில் உயர்ந்து விட்டனர், ஆனால் நம் மக்களை வந்தடைய சில காலம் பிடிக்கும். ஆப்பிள் நிறுவனம் iPhone 4S-யை சமிப்பத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால், iPhone 4S முன்பு வெளியிட்ட iPhone 4G-யை ஒத்து, அதே வெளித்தோற்றத்தை கொண்டுள்ளது.

    iPhone 4S உருவத்தில் ஒத்து இருந்தாலும், அதனின் இயங்கு வேகம் 4G-யை விட அதிகம். ஒளிப்படக்கருவியும் சற்றே நிலை உயர்த்த பட்டது, மற்றும் மின்கல திறனும் அதிகப் படுத்தப்பட்டுள்ளது.

    இதன் விலையை இப்பொழுது அதிகப்பட்சம் $399 என்று நிர்னைத்து உள்ளனர். ஆனால், இதற்கு வரும் விருப்பத் தராதரத்தை வைத்து விலை மேலும் ஒரு நிலையை அடையும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கியமான கட்டம் இது, ஏனென்றால் சாம்சங் நிறுவனத்தின் தில்லுமுல்லு வேலையால், பலத்த அடிவாங்கும் நிலையில் இருப்பதால்.

    விரைவில் நம் மக்களும், இது போன்ற சாதனங்களை பயன்படுத்தி வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அறிவியலின் வாயிலாக உலகை அறியவார்கள். அறிவோம். நன்றி மீண்டும் ஒரு கட்டுரையில் சந்திப்போம்.
    Last edited by dhilipramki; 05-10-2011 at 02:47 PM. Reason: spelling correction

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,961
    Downloads
    6
    Uploads
    0
    ஏணுங்க, அப்பா நம்ம ஊர் விலைக்கு கிட்டத்தட்ட ரூ 20000 ஆகுங்களா? கொஞ்சம் கொரையட்டும் பார்க்கலாம். தகவலுக்கு நன்றி

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் dhilipramki's Avatar
    Join Date
    18 Dec 2010
    Location
    தஞ்சாவூர்
    Posts
    252
    Post Thanks / Like
    iCash Credits
    11,642
    Downloads
    0
    Uploads
    0
    ஆப்பிள் உற்பத்தி பொருள் என்றும் விலை குறைந்து நான் பார்த்தது இல்லை !!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    ஐபோஃன் ஐந்தை வெளிவிடுவார்கள் என்று நினைத்திருந்த நமக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்.

    ஐபோஃன் ஐந்தில் பல புதிய விஷயங்கள் உள்ளனவாம். நாம் வைபைஃய் மூலமாகவே இன்னொருவருக்கு குறுஞ்செய்தி அனுப்ப முடியுமாம். அவர்களும் வைபைஃய் மூலமாகவே பெறமுடியுமாம். இதனால் இத்தனை குறுஞ்செய்திதான் மாதத்திற்கு அனுப்பமுடியும் என்ற தொலைபேசி இலாகாவின் கட்டுப்பாட்டை முறியடிக்கலாம்.

    அதுபோல் பாடல்கள், போஃட்டோக்கள் ஆகியவற்றை க்ளெட் சர்வர் மூலம் இன்னொரு இடத்தில் வைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறதாம். அதனால் இத்தனை ஜிபி இடம் இருக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்படவேண்டியதில்லை. எவ்வளவு பாட்டுகள் வேன்டுமானாலும் நாம் சேமித்து வைத்துக்கொள்ளமுடியும். ஆனால் இது எப்படி சாத்தியம் என்றுதான் தெரியவில்லை. இதை கேட்க வைபைஃய் அல்லது திரீஜீ அலைக்கற்றையை உபயோகிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட நிலையில் நாமே ராகா டாட் காம் மூலம் கேட்டுக்கொள்ளலாமே. கொஞ்சம் புரியவில்லை. ஆனால் நம்முடைய கம்பெனி சம்பந்தமான விஷயங்களை மற்றவர்களுக்கு எளிதாக மின்னஞ்சல் செய்யமுடியும் என்று நினைக்கிறேன்.

    ஐபோஃன் ஐந்து வரட்டும், அதுவரை நம்மிடம் இருப்பதையே உபயோகிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by aren View Post
    ஐபோஃன் ஐந்தை வெளிவிடுவார்கள் என்று நினைத்திருந்த நமக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்.
    ஐபோஃன் ஐந்தில் பல புதிய விஷயங்கள் உள்ளனவாம். நாம் வைபைஃய் மூலமாகவே இன்னொருவருக்கு குறுஞ்செய்தி அனுப்ப முடியுமாம். அவர்களும் வைபைஃய் மூலமாகவே பெறமுடியுமாம். இதனால் இத்தனை குறுஞ்செய்திதான் மாதத்திற்கு அனுப்பமுடியும் என்ற தொலைபேசி இலாகாவின் கட்டுப்பாட்டை முறியடிக்கலாம்.
    இந்த செய்தி நானும் அறிந்தேன். ஆனால் உண்மையா என்று தெரியவில்லை.
    தவிர அந்த Home பொத்தானின் அளவை குறைத்தும் மேற்பகுதியின் அளவை குறைத்தும் திரையின் அளவை பெரிதாக்க உள்ளதாகவும் படித்தேன். ஆனால் எதுவும் அப்பிள் இணையத்தில் இல்லை. 4S நான் எதிர்பார்த்தது தான். (எல்லாம் கடுப்பின் பிரதிபலிப்புத்தான். பின்ன என்ன.. 1 வருசத்தில் அடுத்த போன் விட்டால் கடுப்பாகிடாது.. அதனால அலுவலகத்தில் 4s தான் வரும் என்று கடுப்பில் சொன்னது உண்மையாகிவிட்டது )

    ஆனால் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பில் மண்விழுந்ததன் பிரதிபலிப்பு நேற்றய அப்பிளின் பங்குகளின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாம்.

    Quote Originally Posted by aren View Post
    அதுபோல் பாடல்கள், போஃட்டோக்கள் ஆகியவற்றை க்ளெட் சர்வர் மூலம் இன்னொரு இடத்தில் வைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறதாம். அதனால் இத்தனை ஜிபி இடம் இருக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்படவேண்டியதில்லை. எவ்வளவு பாட்டுகள் வேன்டுமானாலும் நாம் சேமித்து வைத்துக்கொள்ளமுடியும். ஆனால் இது எப்படி சாத்தியம் என்றுதான் தெரியவில்லை. இதை கேட்க வைபைஃய் அல்லது திரீஜீ அலைக்கற்றையை உபயோகிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட நிலையில் நாமே ராகா டாட் காம் மூலம் கேட்டுக்கொள்ளலாமே. கொஞ்சம் புரியவில்லை. ஆனால் நம்முடைய கம்பெனி சம்பந்தமான விஷயங்களை மற்றவர்களுக்கு எளிதாக மின்னஞ்சல் செய்யமுடியும் என்று நினைக்கிறேன்.
    அண்ணா இது நமக்கும் வரும். இந்த சேவை IOS 5 ல் வரவுள்ளது. (அவுஸ்திரேலியாவில் இந்தமாத நடுப்பகுதி என சொல்லியுள்ளார்கள்)
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ம்ஹூம், ஒன்றை வாங்கி மூச்சி விடுவதற்குள் அடுத்தது வந்து வாங்கியதை பழையதாக ஆக்கி விடுமென்றுதான் நான் ஒன்றையுமே வாங்குவதில்லை....

    ஐபோஃனின் கடைசி மாடல் வரட்டும் வாங்குவோம் என இருக்கிறேன்
    .

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,961
    Downloads
    6
    Uploads
    0
    கடைசி மாடல் வரும் பொழுது நாம் இருப்போமா?

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் dhilipramki's Avatar
    Join Date
    18 Dec 2010
    Location
    தஞ்சாவூர்
    Posts
    252
    Post Thanks / Like
    iCash Credits
    11,642
    Downloads
    0
    Uploads
    0
    iPhone 4S வெளிவருவது குறித்து வருத்தம் ஏதும் இல்லை, ஏனென்றால் iPhone 3G வந்தவுடன் அடுத்தது 4 தான் என்று மக்கள் நினைத்தார்கள், ஆனால் iPhone 3Gs தான் அடுத்து வந்தது. அது போல முதல் வெளியிட்டின் சில குறைபாடை போக்கி அதன் மாடலை மாற்றாமல் வெளியிடுவதின் மூலம், லாபமே. இது அவர்களின் நிர்வாக தந்திரம். நான் சில நாள் முன்பே 3Gs வாங்கியது போல் இருந்தது, ஆனால் அதற்குள்ளும் 4S வருகிறது. ஆச்சரியம்.

  9. #9
    புதியவர்
    Join Date
    19 Apr 2011
    Posts
    4
    Post Thanks / Like
    iCash Credits
    8,993
    Downloads
    0
    Uploads
    0
    இந்த ஐ போன் எல்லாம் சும்மா ஒரு மாயை அதில் ஒன்றும் இல்லை, விலை மட்டும் 30000 ரூபாய். android கை பேசி 10000 முதல் கிடைகிறது. அதில் இல்லாததா.... உபயோகித்து பாருங்கள்

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் dhilipramki's Avatar
    Join Date
    18 Dec 2010
    Location
    தஞ்சாவூர்
    Posts
    252
    Post Thanks / Like
    iCash Credits
    11,642
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by demkae View Post
    இந்த ஐ போன் எல்லாம் சும்மா ஒரு மாயை அதில் ஒன்றும் இல்லை, விலை மட்டும் 30000 ரூபாய். android கை பேசி 10000 முதல் கிடைகிறது. அதில் இல்லாததா.... உபயோகித்து பாருங்கள்
    ஏன் iPhone மற்றவற்றில் இருந்து, முக்கியமாக android போன்களில் இருந்து வேறுபடுகிறது? என்று கீழ்காணும் இணைப்புச் சுட்டியின் வழியாக கூறப்பட்டுள்ளது.

    http://www.tamilmantram.com/vb/showt...675#post536675

    நன்றி.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,961
    Downloads
    6
    Uploads
    0
    நானும் இப்படித்தான் நம்பி ஏமாந்தேன்.இப்போதுதான் படித்தபின் விஷயமே புரிந்தது.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post

    அண்ணா இது நமக்கும் வரும். இந்த சேவை IOS 5 ல் வரவுள்ளது. (அவுஸ்திரேலியாவில் இந்தமாத நடுப்பகுதி என சொல்லியுள்ளார்கள்)
    நாங்க மேம்படுத்தியிட்டோம்ல....!

    அப்ப நீங்க?

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •