Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: அன்ரொயிட்டில் தமிழ் மொழி

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24

    அன்ரொயிட்டில் தமிழ் மொழி

    அப்பிள் நிறுவனம் ஐபோன் மூலம் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கூகிள் அன்ரொயிட் மென்பொருளை வெளியிட்டது. உடனே கடுப்பாகிப் போனார் ஸ்டீவி ஜொப்ஸ். கூகிள் தமது பிரதான உற்பத்திப் பொருளைக் குறி வைப்பதாகக் கூறி கூச்சலிட்டார். கூகிள் நடத்துனர் சபையிலிருந்தும் வெளியேறினார். கூகிள் அப்பிள் மைக்ரோசாப்டிற்கு எதிராக செயற்பட்ட காலம் போய் கூகிளும் அப்பிளும் மோதத் தொடங்கியது இந்த நிகழ்வின் பின்னர்தான்.

    மற்றைய பல கைபேசி இயங்கு தளங்கள் போல அன்ரொயிட்டிற்கு இது வரை இயல்பிருப்பான தமிழ் ஆதரவு இல்லை. ஆனால் பிந்தைய ஐ.ஓஸ் இயங்கு தளங்களில் தமிழ் ஆதரவு இருக்கின்றமை குறிப்பிடத் தக்கது. நீண்டகாலமாக இந்திய மொழி ஆர்வலர்கள் பல்வேறு வழு அறிக்கைகள் கூச்சல்கள் இட்டாலும் கூகிள் அசண்டை பண்ணவே இல்லை. வழு அறிக்கையில் உள்ள பின்னூட்டங்கள் நிறைந்து கொண்டே செல்கின்றன ஆனால் கூகிள் இது பற்றி அவ்வளவாக அக்கறைப் படுவதாகத் தெரியவில்லை.

    அந்திரொயிட் இயங்கு தளம் ஒரு திறந்த மூல மென்பொருள். வேறு நிறுவனங்கள் இந்த மென் பொருளை எடுத்து தமது தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. குறிப்பாக சாம்சுங், எச்.டி.சி, சொனி எரிக்சன், எல்.ஜி, மோட்டராலா போன்ற நிறுவனங்கள் இந்த அன்ரொயிட் மென்பொருளை எடுத்து தமது கைத் தொலைபேசிகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து கைபேசிகளில் நிறுவி விற்கின்றார்கள். தற்போது மோட்டரோலா நிறுவனத்தை கூகிள் தாமே வாங்கிவிட்டமை குறிப்பிடத்தக்கது. ஒரு கைத் தொலைபேசி நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அன்ரொயின் மென்பொருள் மீது கூகிள் எத்தனை நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

    இதுவரை அன்ரொயிட்டில் தமிழ் ஆதரவை ஏற்படுத்த இரண்டு படிமுறை கொண்ட ஒரு செயலைச் செய்ய வேண்டியிருக்கின்றது.

    1. தொலைபேசியை ரூட் செய்வது.
    2. தமிழ் எழுத்துருவை /system/fonts கோப்பினுள் இடுவது


    மேலே குறிப்பிட்ட செயற்பாடு இலகுவாக கடைநிலைப் பயனர்களால் செய்ய முடிவதில்லை. தொலைபேசியில் இந்த தமிழ் எழுத்துருவை நிறுவ முயன்று தமது தொலைபேசிகளின் மென்பொருளை நாசமாக்கியவர்களும் உண்டு.

    சரி அனைத்தையும் தாண்டி சிறப்பாக தமிழ் எழுத்துருவை நிறுவி விட்டாலும் தமிழ் எழுத்துக்கள் சிதைந்து காணப்படும். சில பல வருடங்களிற்கு முன்னால் பயர்பொக்சில் சிதைந்த எழுத்துக்களைப் பார்த்த ஞாபகம் இருக்கின்றதா?? அதே நிலைதான் இங்கேயும். எழுத்துரு இருந்தாலும் கூகிள் அன்ரொயிட் இயங்கு தளத்திற்கு தமிழ் எழுத்துக்களை ரென்டரிங் செய்யத் தெரியாது.

    கூகிளின் அன்ரொயிட் தொலைபேசியில் ஹார்வ்பஸ் எனும் ரென்டரிங் இயந்திரம் பாவிக்கப்படுகின்றது. புதிய பதிப்புகளில் இந்திய மொழிகள் பயன்பட்டாலும் அன்ரொயிடில் ஏன் இன்னமும் இது செயற்படவில்லை என்று தெரியவில்லை.



    வாசிக்கவே இத்தனை திண்டாட்டம் என்றால் தமிழில் தட்டச்சிட எத்தனை திண்டாட்டமாக இருக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம். அதுதான் இல்லை. ஜெகதீசனின் தமிழ் விசை செயலி மூலம் தமிழில் தட்டச்சிடலாம். தட்டச்சிடும் எழுத்துக்கள் பெட்டி பெட்டியாகத் தெரிந்தாலும் ஒரு முன்னோட்டப் பெட்டியில் தமிழ் எழுத்துக்களை அழகாகக் காட்டுகின்றார்கள்.

    அண்மையில் நான் Samsung Galaxy Ace எனும் சாம்சுங் இரக அன்ரொயிட் தொலைபேசியை வாங்கிக் கொண்டேன். இந்த தொலைபேசியில் இயல்பிருப்பாக அன்ரொயிட் பதிப்பு 2.2 நிறுவப்பட்டுள்ளது. வழமை போல தமிழ் ஆதரவு இல்லை. தமிழ் தளங்களை வாசிக்க ஒபேரா மினியைப் பயன்படுத்தினேன். செட் உலாவியும் சில காரணங்களால் சரிவரச் செயற்படவில்லை. என்ன கொடுமை சரவணா என்று இருந்த போது அன்ரொயிட் 2.3.4 க்கான பதிப்பு தரமுயர்த்தல் மென்பொருளை சாம்சுங் வெளியிட்டது. எனது தொலைபேசிக்கான இந்த மென்பொருளை நிறுவி உலாவியில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்த்தால் ஒரே ஆச்சர்யம்.



    ஆமாம் 2.3.4 பதிப்பை நிறுவிய பின்னர் இயல்பிருப்பு தமிழ் ஆதரவு இருந்தது. இனி தமிழ் மொழியில் செயலிகளை நேரடியாக தயாரிக்கலாம். TSCII, பாமினி எழுத்துருக்களைப் பயன்படுத்தி சுத்தி மூக்கத் தொட வேண்டிய தேவை இல்லை.


    Samsung Galaxy வகைத் தொலைபேசிகளில் இந்திய மொழி ஆதரவு இப்போது கிடைப்பதாகத் தெரிகின்றது. தமிழ் எழுத்துரு இருப்பதுடன் தமிழை சிதைக்காமல் அழகாகக் காட்டுகின்றது.

    நிற்க, இந்த இயல்பிருப்பு தமிழ் ஆதரவு சில (கவனிக்கவும்: சில மட்டுமே) சாம்சுங், சொனி எரிக்சன், எல்.ஜி தொலைபேசிகளிலேயே அவதானிக்கப்பட்டுள்ளது. முன்பே குறிப்பிட்டபடி அன்ரொயிட் திறந்த மூலம் மென்பொருள் என்பதால், அன்ரொயிட் மூலத்தை எடுத்து இந்த நிறுவனங்கள் இந்திய மொழிகளிற்கான ஆதரவை வழங்கி உள்ளன.

    சாம்சுங்கால் செய்ய முடியுமென்றால் கூகிளால் நிச்சயமாக ஒரு இன்ஜினியரை அமர்த்தி ஒரு மாதத்திற்குள் இந்த வேலையைச் செய்து முடிக்க முடியும். இந்திய மொழிகள் மீதான குறிப்பாக பிராந்திய மொழிகள் மீதான வழமையான அசண்டையீனத்தையே இது காட்டுகின்றது.

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    ஒரு சந்தேகம். இவர்கள் அண்மையில் தமிழ் எழுத்துரு படிக்கும் படி விட்டுள்ளார்களா அல்லது ஒருங்குக்குறியை படிக்கும் படி விட்டுள்ளார்களா???
    நண்பர் ஒருவர் சாம்சங் கலக்சி அண்மையில் வாங்கியிருந்தார். தமிழுக்குத்தான் பிரச்சனை என்றால் அரபிக் ஹிந்தி போன்ற எந்த எழுத்துருவும் படிக்க இயலவில்லை. எல்லாமே செவ்வகமாகத்தான் வந்தது...

    அனநேகமாக இதுக்குப்பதில் இன்னும் 6 மாசத்துக்குப்பிறகு தான் வரும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    ஒரு சந்தேகம். இவர்கள் அண்மையில் தமிழ் எழுத்துரு படிக்கும் படி விட்டுள்ளார்களா அல்லது ஒருங்குக்குறியை படிக்கும் படி விட்டுள்ளார்களா???
    நண்பர் ஒருவர் சாம்சங் கலக்சி அண்மையில் வாங்கியிருந்தார். தமிழுக்குத்தான் பிரச்சனை என்றால் அரபிக் ஹிந்தி போன்ற எந்த எழுத்துருவும் படிக்க இயலவில்லை. எல்லாமே செவ்வகமாகத்தான் வந்தது...

    அனநேகமாக இதுக்குப்பதில் இன்னும் 6 மாசத்துக்குப்பிறகு தான் வரும்.
    இதோ உடனடியாகவே பதில்

    கலக்சி தொலைபேசிகளில் ஒருங்குறி தமிழ் எழுத்துக்களைச் சேர்த்துள்ளார்கள். அதாவது 2.3.4 பதிப்பிற்கு தரமுயர்த்திய பின்னரே இந்தப் பயன் கிடைத்தது.

    2.3.4 முந்திய பதிப்புகளில் தமிழ், ஹிந்தி பெட்டிதான். ஆனால் அரபி எழுத்துக்கள் தெரிந்தன. அரபி வாசிக்கத் தெரியாததால் அது சரியாகக் காட்டியதா இல்லையா என்று தெரியவில்லை.

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    விளக்கத்துக்கு நன்றி மயூ

    அரபி எழுத்து பெட்டி பெட்டியாக இருக்காது தெரியுமோ..............

    கொழும்பில் மழை பெய்யுதோ???
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    விளக்கத்துக்கு நன்றி மயூ

    அரபி எழுத்து பெட்டி பெட்டியாக இருக்காது தெரியுமோ..............

    கொழும்பில் மழை பெய்யுதோ???
    ஆமாம் அரபி எழுத்துக்கள் காட்டபட்டன. ஆனால் அது சரியாக ரென்டரிங் செய்யப்பட்டதா என்பதில் எனக்கு சந்தேகம்.

    ஹி..ஹி.. கடும் வெயில் சாரே

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    02 Feb 2007
    Posts
    447
    Post Thanks / Like
    iCash Credits
    29,838
    Downloads
    149
    Uploads
    5

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    02 Feb 2007
    Posts
    447
    Post Thanks / Like
    iCash Credits
    29,838
    Downloads
    149
    Uploads
    5

    agathiya tamil typing keyboard for android phone


  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    02 Feb 2007
    Posts
    447
    Post Thanks / Like
    iCash Credits
    29,838
    Downloads
    149
    Uploads
    5

    TAMIL TYPING KEYBOARD SETTINGS

    Last edited by drjperumal; 19-07-2016 at 01:18 PM. Reason: ..

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    02 Feb 2007
    Posts
    447
    Post Thanks / Like
    iCash Credits
    29,838
    Downloads
    149
    Uploads
    5
    Last edited by drjperumal; 19-07-2016 at 01:18 PM. Reason: ....

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    02 Feb 2007
    Posts
    447
    Post Thanks / Like
    iCash Credits
    29,838
    Downloads
    149
    Uploads
    5

    AGATHIYA TAMIL TYPING KEYBOARD



    TAMIL KEYBOARD INPUT METHOD FOR TAMIL LANGUAGE TO TYPE TAMIL FAST AND EASY
    AFTER INSTALLATION PLEASE FOLLOW BELOW SETTINGS TO TYPE TAMIL WITH THIS KEYBOARD AND MAKE TAMIL AS DEFAULT INPUT METHOD.

    ANDROID V 2.2 - TAMIL TYPING KEYBOARD SETTINGS (TAMIL TYPING SETTINGS TO TYPE TAMIL)
    Settings - Locale and Text - TAMIL 26 / Agathiya Tamil typing Keyboard
    Long press in text box and select input method and then TAMIL 26 / Agathiya Tamil typing Keyboard

    ANDROID V 3.0 - TAMIL TYPING KEYBOARD SETTINGS (TAMIL TYPING SETTINGS TO TYPE TAMIL)
    Settings-Language and input-Configure input methods- TAMIL 26 / Agathiya Tamil typing Keyboard - Back - Current input - Agathiya Tamil typing Keyboard

    ANDROID V 4.0 AND ABOVE- TAMIL TYPING KEYBOARD SETTINGS (TAMIL TYPING SETTINGS TO TYPE TAMIL) Settings - Language and input - TAMIL 26 / Agathiya Tamil typing Keyboard- Select Default - TAMIL 26 / Agathiya Tamil typing Keyboard.

    You can use AGATHIYA TAMIL TYPING KEYBOARD to type SMS, Whatsapp, Google search and everywhere directly in Tamil. No need to copy paste.

    It follows TAMIL-26 typing method which is one of a fastest method of Tamil typing. And presently agathiya is the only one app available to enable Tamil 26 typing method to your android mobile.

    CLICK BELOW AND WATCH THIS VIDEO FOR HOW TO TYPE WITH THIS APP


    https://www.youtube.com/watch?v=jd8lY1Qc1Kc


    You can follow the same Layout for Type Tamil in PC/LAPTOP (Tamil 26 Typing Method For PC)

    https://www.youtube.com/watch?v=6a_S8lMUvxw

  11. #11
    புதியவர்
    Join Date
    01 Feb 2014
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    491
    Downloads
    0
    Uploads
    0
    இப்பொழுது அநேக கைப்பேசிகளில் தமிழில் தட்டச்சு செய்வது ஒன்றும் சிரமமான விசயம் அல்ல என்பதை அனைவரும் அறிவோம். நான் என் ஆண்ட்ராய்ட் கைப்பேசியில் பயன்படுத்துவது "செல்லினம்" என்ற இலவச மென்பொருள் தான். மற்ற எல்லா தமிழ் விசைப் பலகைகளை விட மிகவும் சுலபமாக உள்ளது. நண்பர்கள் முயற்சித்துப் பாருங்கள்.

  12. #12
    புதியவர் பண்பட்டவர் தமிழ்ச்சூரியன்'s Avatar
    Join Date
    17 Sep 2007
    Posts
    44
    Post Thanks / Like
    iCash Credits
    50,335
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by ராம் View Post
    இப்பொழுது அநேக கைப்பேசிகளில் தமிழில் தட்டச்சு செய்வது ஒன்றும் சிரமமான விசயம் அல்ல என்பதை அனைவரும் அறிவோம். நான் என் ஆண்ட்ராய்ட் கைப்பேசியில் பயன்படுத்துவது "செல்லினம்" என்ற இலவச மென்பொருள் தான். மற்ற எல்லா தமிழ் விசைப் பலகைகளை விட மிகவும் சுலபமாக உள்ளது. நண்பர்கள் முயற்சித்துப் பாருங்கள்.
    நானும் ராம் அவர்களின் கருத்தோடு ஒத்துப்போகிறேன். செல்லினத்தையே நானும் உபயோகப்படுத்துகிறேன். மிகவும் அருமையாக உள்ளது. எவ்விதமான குளறுபடிகளும் இல்லை.
    வணக்கங்களுடன்
    தமிழ்ச்சூரியன்

    "தமிழுக்கு நிகர் தமிழே"

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •