Results 1 to 3 of 3

Thread: இரு சூரியன்களுடன் ஒரு கோள்- விண்வெளி அதிசயம்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0

    Lightbulb இரு சூரியன்களுடன் ஒரு கோள்- விண்வெளி அதிசயம்

    ஒரு இனிய காலைப் பொழுதில் வானத்தை அண்ணாந்து பார்க்கும் போது, இரண்டு சூரியன்களை பார்த்தால் எப்படி இருக்கும்?

    சற்று கற்பனை செய்து பாருங்கள்!!


    உண்மையில் அப்படி இரு சூரியன்கள் தெரியும் ஒரு கோள் இருக்கிறது.. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

    ஒரு கற்பனை உண்மையாகிறது!!



    அமெரிக்காவில் உள்ள நாசா ஆராய்ச்சி நிறுவனத்தால் "உயிர் வாழ தகுதியான கோள்கள் தேடல்" என்ற ஆய்வுக்காக கெப்லர் (Kepler) என்ற விண்கலன் செலுத்தப்பட்டுள்ளது. அந்த கெப்லர் விண்கலம் கண்டறிந்த ஒரு அதிசயத்தக்க உண்மை தான் இந்த கோள்!!


    கெப்லர் 16 B என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோள், அருகருகில் இருக்கும் இரு சூரியன்களைச் சுற்றி வருகிறது.
    பாறைகளாலும், வாயுக்களாலும் நிரம்பியுள்ள அந்த கோள் கிட்டத்தட்ட சனிக்கிரகத்தின் அளவில் உள்ளது. அது இரு சூரியன்களையும் 10.4 கோடி கி.மீ தூரத்தில் இருந்து கொண்டு சுற்றுகிறது!! (நம் வெள்ளி கிரகத்தின் தூரம்)


    கெப்லர் 16 B சுற்றி வரும் சூரியன்கள் நம் பகலவனின் அளவில் இல்லை. ஒரு சூரியன் சூரியனில் 20% எடையிலும், பெரிதொன்று 69% எடையிலும் உள்ளன.
    கெப்லர் 16 B அவை இரண்டையும் ஒரு முறை சுற்ற 229 நாட்கள் ஆகிறது!!


    அது மட்டுமல்ல, அவை ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கே வரும் போது, கிரகணங்கள் ஏற்படுகிறன.
    பெரிய சூரியன் சிறியதை மறைப்பதால் ஒன்று, சிறியது பெரியதனை மறைக்க முயல்வதால் ஒன்று, மற்றும் வெளிப்புற பொருட்களால் ஏற்படுவது ஒன்று!!





    என்ன இப்போதே அங்கு சென்று இரு சூரியன்களை கண்டு களிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா?
    ஆனால், அது அவ்வளவு எளிதல்ல!!





    கெப்லர் 16 B நம் பூமியில் இருந்து சுமார் 200 ஒளிஆண்டுகள் தொலைவில் உள்ளது (2 சங்கம் கி.மீ அதாவது, 200 கோடி கோடி கி.மீ!!).

    மேலும், அந்த சூரியன்கள் மிகவும் வெப்பம் குறைவாய் உள்ளதால், அங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பு இல்லையாம். எனவே, உயிர் வாழ முடியாத பூமி அது!!

    எனினும், அதன் இயக்கத்தைப் பார்த்து மகிழ காணொளி இதோ:
    [media]http://www.youtube.com/watch?v=8thxKnSVswM&feature=player_embedded[/media]

    ஆதாரம்: தி சன் , பிசி மேக் , பிபிசி

    பி. கு:
    1977 இல் வெளிவந்த "ஸ்டார் வார்ஸ்" (Star Wars) கதையில் இரு சூரியன்களைச் சுற்றும் டேட்டூஇன் (Tatooine) என்ற கிரகம் வரும்.. இப்படி உண்மையில் ஒரு கிரகம் இருப்பதனை அறிந்து தான் ஜார்ஜ் லூகாஸ் (ஸ்டார் வார்ஸ் எழுத்தாளர் ) எழுதி இருப்பாரோ?

    என் வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!!

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    வியக்க தக்க அதிசயம் தான்.

    ஒரு சூரியனின் வெப்பத்தையே தாங்க முடியலையே இதுல 2 சூரியனா? அப்படினு தான் யோசித்தேன். ஆனால் இதனைப்போல் சக்தி இல்லை போல் இருக்கிறது.

    பகிர்வுக்கு நன்றி
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    இது ஆதிகாலத்திலேயிருந்து இருந்திருக்கிறது, நாமதான் இப்போ இதைப் பற்றி தெரிந்திருக்கிறோம்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •