Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 68

Thread: தமிழகத்தின் இந்த வருட டாப் 10

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர்
    Join Date
    06 Apr 2003
    Posts
    1,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    0
    Uploads
    0

    தமிழகத்தின் இந்த வருட டாப் 10

    [b]தமிழகத்தின் டாப்டென் பட்டியல்

    (இது சும்மா 'வெளையாட்டுக்கு' ...சீரியஸான டாப் 10 பிறகு தரப்படும்.தமிழ் மன்ற மக்கள்
    தங்கள் வசதிக்கேற்ப வரிசைப்படுத்தி கொள்ளலாம்)



    [b][size=18]1. புள்ளி ராஜா

    சாதாரணமாக டிவி விளம்பரங்களில் தோன்றி பின் சடாரென இந்திய விலைவாசி போல்
    உயர்ந்து அனைவரையும் கவர்ந்தவர்.ஒரு பத்திரிகை விடாமல் வரிந்து கட்டிக் கொண்டு இவரைப் பற்றி பத்திரிகையும்,டிவியும் இன்னபிற மீடியாக்களும் தந்த விளம்பரத்தில் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி விட்டு டாப் டென்னின் முதலுக்கு வந்து விட்டவர்..தற்போது இந்த விளம்பரத்தை நிறுத்தச் சொல்லி அரசு வழக்கு போட்டிருக்கிறது.இது இன்னும் அவரை புகழின்(?!!!) உச்சிக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

    மும்பை போன்ற இடங்களில் 'பீர் பாஷாவுக்கு எயிட்ஸ் வருமா...? 'என்றும் தெலுங்கு,ஆந்திர பிரதேசங்களில் பெத்த ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா( வாசகம் சரியாக நினைவில்லை)
    என்று எல்லா இடங்களிலும் வந்தாலும் 'வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்' தந்த புகழ்
    போல் ஏதும் இல்லை என்பதால் இங்கும் அவர் முதலிடம்.

    தவிர அடுத்து விளம்பரத்தில் இதை முன்னோடியாக கொண்டு 'அரிப்பு குமார்'என்று
    ஒரு விளம்பரம் வந்து தலையை பிய்த்து கொள்ள வைப்பதால் (அரிப்பால் அல்ல), இனி
    மெட்ராஸ் ஐ பற்றி வரப்போகும் 'கமா ராணிக்கு கண்வலி வருமா...?( நன்றி :விகடன்) என்ற
    விளம்பரத்துக்கும் இனி பிற்காலங்களில் வரப்போகும் விளம்பரங்களுக்கும் முன் மாதிரியாக
    இருப்பதால் இந்த பட்டியலில் முதலிடம் பார்க்கிறார்.[/color]


    [b]2. மன்மத ராசா

    'ரெண்டு கிலோ எலும்பும் - ரெண்டரை மீட்டர் தோலும் ' என உவமானிக்கப்பட்ட தனுஷ்க்கு
    நிரந்தர அடையாளம். அமைதியாக அம்முக்குளி போல் தோற்றமுடன் தினம் வரும்
    பக்கத்து வீட்டுப் பெண் திடீரென பேயாட்டம் போட்டால் எப்படியிருக்கும் என்பதை காட்டிய
    சாயாசிங்குக்கு ஒரு அடையாளம். எல்லாவற்றிற்கும் மேலாக லஷ்மண் சுருதியில் கே.பி.
    சுந்தரம்பாள்,மால்குடி சுபா,இன்னபிற கடாமுடா குரல்களை கரைத்து குடித்த
    மாலதி பாடிய 'பக்தி பரவச' பாடல் . அந்த குழுவின் நிறுவனர் லஷ்மண் அவர்களின் மனைவி.
    டிவி சீரியல் இசை அமைப்பாளர் தினா என எல்லோரையும் ஒரே நேரத்தில் தூக்கி விட்ட
    பாடல் ( ஆராரோ ஆரிரோ பாடினாலும் அழுகையை நிப்பாட்டாத பய இந்த பாட்டு போட்டா
    என்னா துள்ளு துள்ளுறான்...- ஒரு இடத்தில் கேட்டது). இன்னும் இடைவிடாது எல்லா
    இடங்களிலும் கேட்டு கொண்டிருக்கும் பாடல்.



    [b]3. சூதாடி சித்தன்

    அண்ணாமலை சீரியலின் அத்தியாவசிய கேரக்டர்....சடாரென வந்து ஏதாவது சொல்லி விட்டுப்
    போவார். என்ன சொல்கிறார் என்று அவருக்கும் தெரியாது...கேட்கும் நமக்கும் தெரியாது.
    நிறைய வீடுகளில் பேய் பூச்சாண்டி இது எல்லாவற்றிகும் உதாரணம் காட்டப்பட்டு குழந்தை
    களுக்கு சோறூட்ட பெற்றொர் எடுத்துக் கொள்ள உதவும் உதாரணப்புருஷன் என்பதால் இந்த
    டாப் டென்னில் இடம் பெறுகிறார்.



    [b]4. சுடுகாட்டு சித்தன்.

    முன்னவர் பேசியே கொல்வார்.இவர் பேசாமலே வந்து கொல்வார்.தமிழ் சினிமாவில் கமல
    ஹாசனுக்கு பிறகு மேக்கப்பிலிருந்து ஒரு நுண்ணிய பர்பெக்ஷன் என்று சொல்வார்களே
    அது வரை தீவிரமாக ரிஸ்க் எடுத்து செய்பவர். இந்த பிதாமகனுக்கான முன்னோட்டம்
    பற்றி தீபாவளியன்று பார்த்ததில் இவரின் உழைப்பு மற்றும் தொழில்பக்தி நன்றாகவே
    தெரியவந்தது. பிதாமகனின் இறுதிக் கட்டத்தில் வில்லனை கொல்ல துரத்திக் கொண்டு
    ஓடும்போது ஒரு மாட்டுக்கு வைக்கும் தண்ணீர்த் தொட்டியில் உள்ள நீரை அருந்தி
    விட்டு ஓடுவார். ஆச்சரியம் -இது பாலா சொல்லாத சீனாம். எனவே இது போல் பல
    காட்சிகளில் அதிக ரிஸ்கில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதற்காக சித்தனும்
    இங்கு சேர்கிறார்.



    [b]5. (வீணாப் போன) பாய்ஸ்

    சங்கர் படம் அல்ல, பொதுவாக தமிழ்த் திரையுலகம் குறி வைத்திருக்கும் இளவட்டங்கள்.
    துள்ளுவதே இளமை வெற்றிக்கு பிறகு பாய்ஸ்,குறும்பு...(இன்னும் இதே போன்ற கதை
    அமைப்பில் 7 படங்கள் தணிகைக்காகக் காத்திருக்கிறதாம்- கஷ்டம்டா சாமி...).ஆனால்
    தமிழ் சினிமாவில் இது போன்ற கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்ததற்காக எல்லோரும்
    கஸ்தூரி ராஜா மேல் பாய்கிறார்கள்.நமக்கென்னவோ கொஞ்சம் தள்ளிப் பின் சென்று
    பார்த்தால் அலைகள் ஓய்வதில்லை படத்திலிருந்தே பாரதிராஜா ஆரம்பித்து விட்டது...
    அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேற்றமடைந்துள்ளது எனத் தோன்றுகிறது..
    தமிழ் சினிமாவை நாளை காப்பாற்ற போகும் என்று திரையுலகம் முழுமையாக இவர்களை
    நம்பியிருப்பதால் இவர்களும் இந்த வரிசையில் இடம் பெறுகிறார்கள்.



    [b]6. இடி ராணி - தடை ராணி

    சீரணி அரங்கத்தை இடித்தது,குயின் மேரீஸை இடிக்க முயன்று முடியாமல் போனது
    இன்னும் பல கட்டடங்களை இடிக்க திட்டமிட்டுச் சாதனை புரிந்தமைக்கு இவர்
    டாப்டென் வரிசையில் சேர்கிறார்.புரட்சிகர சட்டங்களை அறிமுகப்படுத்தியதில்
    குறிப்பிடத்தக்கது ஆடு கோழி பலியிட சட்டம் கொண்டு வந்தது...சுடலை சாமிகளும்
    அய்யனார் ,கருப்ப சாமிகளின் ஏகோபித்த சாபம் இவர் மேல் இருந்தாலும் அவ்வப்போது
    யாகம் செய்து எல்லாவற்றிலிருந்தும் தப்பித்து கொள்ளும் திட்டத்திற்காகவும் தமிழக
    முதல்வர் நமது டாப்டென்னில் சேர்கிறார். அரசாங்கத்தின் நான்காம் தூணான
    பத்திரிகையாளர்களையே கைது செய்ய உத்தரவிட்டதின் மூலம் மிகப்பெரும் புரட்சி
    செய்து அப்பெயரை நிரந்தரமாக வைத்துகொண்டதாலும் இந்த இடம் அவருக்கு...



    [b]7. உலகம் சுற்றும் வாலிபன் - வாஜ்பாய்

    திறமையான பிரதமர் - யார் எந்த நேரத்தில் என்ன பிரச்னை செய்தாலும் மிகச் சரியாய்
    அதை முன் கூட்டியே ஊகித்து அப்போது வெளிநாட்டில் இருக்குமாறு திட்டமிடும்
    அவரின் திறமையே திறமை. 'எல்லாம் நான் ஊர் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று
    அங்கிருந்தபடியே அறிக்கை விட்டு விட்டு எல்லா பிரச்னைகளும் செத்து சுண்ணாம்பான
    பிறகு ஊர் வந்து அரசியல் கூட்டங்களில் பச்ச பிள்ளை மாதிரி சிரிக்கும் அந்த
    திறமைக்காகவே இந்த டாப் டென்னில் சேர்த்து கொள்ளப்படுகிறார். மதவாதம் பூசப்பட்ட
    கட்சியில் மிதவாத முகத்துடன் வளைய வந்து கூட்டணிக்கட்சிகளை அணைத்து
    கொண்டு செல்லும் பங்குக்கு நல்ல மேய்ப்பாளர் (Good Sheperd) என்ற பட்டமும்
    பெறுகிறார்.



    8.நலிவடைந்த நடிகைகள்

    அழகும் இளமையும் இருக்கும்வரை சினிமா, அதற்குப்பின் உபதொழில் என்று செவ்வனே
    வாழ்ந்து வந்தவர்கள் மீது எவர் கண் பட்டதோ தெரியவில்லை...இந்த வருடம் நிறைய
    கைதுகள். சின்னத்திரையிலிருந்து தொடங்கி 70 மிமீ வரை மாட்டிய அனைவரும் இந்த
    பட்டியலில் இடம்பெறுகிறார்கள். எல்லாம் அரசியல்தான் என்று நம்பத்தகுந்த
    (அவர்களுக்கு ) வட்டாரங்கள் சொன்னாலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பிழந்து
    கொண்டிருக்கும் மற்ற நடிகைகளுக்கு புளி கரைத்துக் கொண்டிருப்பதால் பேசாமல்
    தமிழ் திரையுலகம் விட்டு வெளியே போய்கொண்டிருக்கும் அவர்கள் மீது கவன ஈர்ப்பு
    தீர்மானம் கொண்டு வர இந்த டாப்டென்னில் சேர்க்கப்படுகிறார்கள்.



    [b]9. பண்பலை வானொலி

    தொடக்கத்தில் நல்ல ஆதரவு இருக்குமா எனச் சந்தேகப்பட்டு இப்போது மூலைக்கு மூலை
    எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டேயிருங்க
    என எல்லோரையும் தம் பக்கம் இழுத்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பதால்
    இது தானாகவே டாப் டென்னில் சேர்கிறது.கோயம்பத்தூரிலிருந்து கொட்டாம்பட்டி வரை
    எல்லா மக்களையும் அடைந்து பயன் தரக் கூடிய நிலையில் இருப்பதால் இதுவும் இங்கு
    சேர்கிறது.


    [b]10. சிம்ரன்

    விஐபி படத்தில் அறிமுகமாகி நியூ படத்துடன் திரைக்கு குட்பை சொல்லும் சிம்ரன் நம்
    பட்டியலில் இறுதி இடத்தைப் பெறுகிறார். சினிமாத் திரை ரசிகர்களிலிருந்து தமிழ் மன்ற
    இளசு வரை எல்லாராலும் விரும்பப்பட்டவர். ஆட்டக்காரருடன் கூடி வாழ ஆசைப்பட்டார்.
    விதி ஆளவந்தான் மூலம் பிரித்தது...பஞ்ச தந்திர நாயகனும் பை சொல்லி விடவே
    தீபக்குடன் ஐக்கியமாகி கல்யாணம் முடித்து இந்த வருடத்துடன் செல்லும் சிம்ரனுக்கு நன்றி
    சொல்லும் விதத்தில் கதம்ப மன்றம் அவரையும் இந்த டாப்டென் பட்டியலில் சேர்க்கிறது.
    Last edited by நிரன்; 18-01-2009 at 01:43 PM.
    இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
    ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....
    - அன்புடன் லாவண்யா

  2. #2
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    லாவண்யா அவர்களே ...
    நன்றாக இருக்கிறது
    டிவி யில் வரும் டாப் -10 போல இந்த
    ஜாலியான டாப் - 10 நன்றாக இருக்கிறது ...
    சிமரனை கடைசி இடத்தில் சேர்த்ததில்
    கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் ..
    டாப் -10 ல் சேர்த்துவிட்டதற்காய் சிறப்பு நன்றிகள் .. :wink:
    Last edited by நிரன்; 18-01-2009 at 01:43 PM.

  3. #3
    அனைவரின் நண்பர்
    Join Date
    06 Apr 2003
    Posts
    1,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    0
    Uploads
    0
    சிமரனை கடைசி இடத்தில் சேர்த்ததில்
    கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் ..
    ஐயோ முத்து நீங்களுமா...?
    Last edited by நிரன்; 18-01-2009 at 01:44 PM.
    இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
    ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....
    - அன்புடன் லாவண்யா

  4. #4
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    சிமரனை கடைசி இடத்தில் சேர்த்ததில்
    கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் ..
    ஐயோ முத்து நீங்களுமா...?
    சும்மா ..சும்மா ...
    உங்கள் டாப் - 10 மாதிரி :wink:
    Last edited by நிரன்; 18-01-2009 at 01:44 PM.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    சரியான தேர்வுகள். நானும் வேற எதாவது விட்டு போயிருக்கிறதா என்று பார்த்தேன். சான்ஸே கிடைக்கலை..
    பார்த்து பார்த்து செதுக்கிய சிலை மாதிரி ரொம்ப யோசித்து எழுதியுருக்கிறார்.
    இதில் வைகோ(பொடா), உயிர்த்தெழுந்த சினிமா, ரேஷன் கடை - கள்ளுகடை, ஜெயமோகன்-கலைஞர்
    போன்ற சமாச்சாரங்கள் இதில் வரவில்லையென்றாலும் ஒரு தேர்ந்த பத்திரிக்கை எழுத்தாளர் போலதான் இருந்தது.
    Last edited by நிரன்; 18-01-2009 at 01:44 PM.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    17,750
    Downloads
    10
    Uploads
    0
    ஆமாங்க மதன் நானும் அதையேத்தான் சொல்லலாம் என நினைத்தேன்.

    லாவண்யா வாரப் பத்திரிகை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். வேறு

    எழுத்தாளர்கள் கூட தேவைப்படாது. சுவாரசியமாக விசயங்களைச் சொல்லும்

    திறமையுடன் இருக்கிறார்.-அன்புடன் அண்ணா.
    Last edited by நிரன்; 18-01-2009 at 01:44 PM.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    சரியா சொன்னிங்க..
    இந்த மன்றத்திலேயே அவர் ஆரம்பிக்கட்டும்..
    வார வாரம் நாம வாசகர் கடிதம் எழுதலாம்.
    Last edited by நிரன்; 18-01-2009 at 01:44 PM.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    அருமை லாவ்ஸ் . டாப் நயன் ஆக பண்ணியிருக்கலாமோ என்று எனக்கு தோன்றுகிறது
    அன்புடன்
    மணியா
    Last edited by நிரன்; 18-01-2009 at 01:45 PM.

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    புள்ளிராஜாவுக்கு 1-வது இடம்...
    சிம்ரனுக்கு 10-வது இடம்...

    சரி..சரி... 1 பெருசா.. 10 பெருசா?!!!


    கலக்கல் பதிவுகள்.. தொடர்ந்து எழுதுங்கள் அக்கா!!
    Last edited by நிரன்; 18-01-2009 at 01:45 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    3,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    இதுக்கு எல்லாம் காரணமான நம் சராசரி குடிமகன் தான் டாப் 1ல் இருக்கனும்...அதை விட்டுடீங்க லாவண்யா.......அவன் இல்லை என்றால் டாப் 10ஆவது 20ஆவது...கலக்குங்க லாவண்யா..நீங்க கலக்கிட்டே இருங்க....
    Last edited by நிரன்; 18-01-2009 at 01:45 PM.

  11. #11
    Anonymous
    விருந்தினர்
    நச்-னு சொன்னீங்க பப்பி!!
    Last edited by நிரன்; 18-01-2009 at 01:45 PM.

  12. #12
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    நச்-னு சொன்னீங்க பப்பி!!
    ஹலோ .. யாருங்க .. இது ..
    மறைஞ்சிருந்து குரல் கொடுப்பது ..
    ஒரு வேளை இதுதான் பிண்ணனிக்குரலோ.. ? :wink:
    Last edited by நிரன்; 18-01-2009 at 01:46 PM.

Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •