Results 1 to 6 of 6

Thread: உயிரில்லா மெய்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1

    உயிரில்லா மெய்

    உயிரில்லா மெய்யாய்
    உணர்வின்றி தவித்திருக்க
    உயிர் தந்து, உளம் வென்றாய்.
    உணர்வதனைத் தந்து நீ
    உயிர்ப்பித்தாய் மெய்யை..

    உயிர்ப்பித்த மெய்யை
    உணவின்றி வாட்டி, உளம்
    வென்ற உணர்வைக் கொண்டே
    உயிர் துறக்கச் செய்வாயோ??

    அன்றி, உளம் மகிழ, என்
    உணர்வுக்கு உயிர் தந்து
    என் மெய்க்கு மெய்யான
    உயிர் தந்து, உயிர் மெய்யாய்
    உயிர்த்திருக்கச் செய்வாயோ??

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் jaffer's Avatar
    Join Date
    11 May 2011
    Location
    பாலைவன சோலை
    Posts
    139
    Post Thanks / Like
    iCash Credits
    9,454
    Downloads
    0
    Uploads
    0
    இக் கவியில் உட்குத்து (அரசியல்) இல்லையே!!??



    பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். (பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்)

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,961
    Downloads
    6
    Uploads
    0
    சான்வியின் கவிதைக்கு வாழ்த்து. ஆனால் எனக்கு கருத்து புரியவில்லை

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by jaffer View Post
    இக் கவியில் உட்குத்து (அரசியல்) இல்லையே!!??
    இல்லை.. இல்லை.. நிச்சயம் இல்லை. அரசியலுக்கும் எனக்கும் பல காத தூரம்

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    20,465
    Downloads
    8
    Uploads
    1
    வரவுக்கு மிக்க நன்றி சீனு.

    கவிதையின் கருத்து... உறவுகள் இல்லாது, இருந்த ஒரு பெண் / ஆண், அவர்களுக்கு புதிதாய் ஒரு உறவு கிடைக்க, ஆனந்தம் முதலில்.. பின்னர், அவர்களுக்கு இடையே ஏதோ பிரச்சனை, அதனால் என்னை மீண்டும் பழைய நிலைக்கே தள்ளி விடுவாயா??? இல்லை என் உயிருக்கு உயிராய் இருப்பாயா என கேட்பது போலே வரிகள்...

    உயிரோட்டம் இல்லாமல்
    உணர்வோட்டமும் இல்லாமல்
    உயிருள்ள ஜடமாய் வாழ்ந்திருந்தேன்

    எனக்கு உயிர் தந்து
    என் உணர்வை உயிர்பித்தாய்
    வென்றாய் என் மனதை

    வென்றவன், என் மனத்தைக் கொண்டவன்
    எனக்கு பாராமுகம் காட்டி
    என்னை உயிர்பித்த உணர்வை கொன்று
    மீண்டும் பழைய படி செய்துவிடுவாயா???

    இல்லை, என் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
    என் உடலுக்கு, நிஜமான உயிர் தந்து
    என்னை உயிர்ப்புடன் இருக்கச் செய்வாயா???

    என எழுதியுள்ளேன்.

    சான்வி


    உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் jaffer's Avatar
    Join Date
    11 May 2011
    Location
    பாலைவன சோலை
    Posts
    139
    Post Thanks / Like
    iCash Credits
    9,454
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சான்வி View Post
    வரவுக்கு மிக்க நன்றி சீனு.

    கவிதையின் கருத்து... உறவுகள் இல்லாது, இருந்த ஒரு பெண் / ஆண், அவர்களுக்கு புதிதாய் ஒரு உறவு கிடைக்க, ஆனந்தம் முதலில்.. பின்னர், அவர்களுக்கு இடையே ஏதோ பிரச்சனை, அதனால் என்னை மீண்டும் பழைய நிலைக்கே தள்ளி விடுவாயா??? இல்லை என் உயிருக்கு உயிராய் இருப்பாயா என கேட்பது போலே வரிகள்...
    இதை தான் கேட்டேன் உட்குத்து எதுவும் உண்டா என்று. நன்றி ( நேரத்துகேற்ற கவிதை தான் போங்க)



    பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். (பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்)

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •