Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 26

Thread: வெப்கேமிரா வைத்திருக்கின்றீர்களா? எச்சரிக்கை

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3

    வெப்கேமிரா வைத்திருக்கின்றீர்களா? எச்சரிக்கை







    வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?
    எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.
    தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.
    யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?
    எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?
    பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்? அது எப்படி சாத்தியமாயிற்று?
    புனேயில் உள்ள Asian School of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
    ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.

    செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா. ஆம் நம்புங்கள் அவள் அறையில் உடைமாற்றுவதையும் அவளின் அந்தரங்கங்களையும் படம்பிடித்தது அந்த வெப்கேமிராதான்.
    மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள். ஆனால் அவளுக்குத் தெரியாமலையே கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் / புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.
    உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர். இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.
    இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான் அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.
    கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.
    'தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்
    தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. இதனால் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.
    இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.
    ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். தங்களது அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள். இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள்.
    அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள். இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

    நன்றி : zeyaan.blogspot.com



    Last edited by நாஞ்சில் த.க.ஜெய்; 21-07-2011 at 01:20 PM.
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    இதுக்கு தமிழில் ஒரு பழமொழி இருக்கே..

    சொந்த செலவில சூனியம் வச்சிக்கிறதுன்னு...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    எச்சரிக்கை
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  4. #4
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    இப்படியுமா நடக்கிறது.!!!!
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  5. #5
    புதியவர்
    Join Date
    11 Dec 2010
    Location
    நாகர்கோயில்
    Age
    52
    Posts
    7
    Post Thanks / Like
    iCash Credits
    10,509
    Downloads
    0
    Uploads
    0

    Exclamation ஆ...எச்சரிகை....

    காமிராவுடன் இணையத் தொடர்பு வைத்திருப்போருக்கு ஜெய்யின் அபாய எச்சரிக்கை மிக நல்ல தகவல்.
    vasishta

  6. #6
    புதியவர்
    Join Date
    19 May 2007
    Location
    South Tamil Nadu
    Posts
    7
    Post Thanks / Like
    iCash Credits
    8,990
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல விழிப்புணர்வான எச்சரிக்கை செய்தியை சொல்லி எங்களை உஷார் படுத்தியுள்ளீர்கள். நன்றி நண்பரே. எனது கணினியிலும் அடிக்கடி சில வலை தளங்களை திறக்கும் போது ட்ரேஜன் ஹார்ஸ் உள்ளது எனது மஞ்சள் கலரில் ஒரு செய்தி வரும். என்னிடம் ஆண்டி வைரஸ் இருப்பதால் அந்த செய்தி வந்து என்னை எச்சரிக்கிறது என் நினைக்கிறேன்.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    தொழில்நுட்பம் வளர வளர தொல்லைகளும் வளரும் என்பதற்கு இதுவே சாட்சி.

    இந்த தகவலை இங்கே பகிர்ந்து எச்சரிக்கை செய்தவருக்கும், அதை மேலேழுப்பியவர்களுக்கும் மிக்க நன்றி.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2009
    Location
    மலேசியா
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    33,728
    Downloads
    1
    Uploads
    0
    நல்ல தகவல், கவனம் சகோதரர்களே!!!!

  9. #9
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2011
    Location
    லண்டன்
    Posts
    36
    Post Thanks / Like
    iCash Credits
    12,391
    Downloads
    12
    Uploads
    0
    கணினியை அணைக்கும் பொது வெப் காமையும் அணைப்பது அவசியம்

  10. #10
    புதியவர்
    Join Date
    07 Feb 2006
    Location
    Bangalore
    Posts
    6
    Post Thanks / Like
    iCash Credits
    12,225
    Downloads
    23
    Uploads
    0
    Very useful info thanks for th esame

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    Exclamation வலைதள புகைப்பட கருவி

    மிகவும் உபயோகமுள்ள செய்தி. கணினியை தினமும் உபயோகப்படுத்தினாலும் அதிலுள்ள சில நுண்ணிய விபரங்கள் பற்றி நாம் அறிந்துகொள்வதில்லை. அறியப்படுதியதற்கு நன்றி

  12. #12
    இனியவர் பண்பட்டவர் வெற்றி's Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    இரும்பூர்
    Posts
    701
    Post Thanks / Like
    iCash Credits
    12,009
    Downloads
    33
    Uploads
    2
    அதென்னமோ சரி தான்..
    ஆனால் இன்றைய சமுக வலை தளங்களில் பெரும் பாலும் ஆண்/பெண் இருவருமே தாமரை அண்ணா சொன்ன மாதிரி சொ.சி.சு.வைத்துக்கொண்டு அதில் பெருமை பட்டுவேறு தொலைக்கிறார்கள்
    ஜெயிப்பது நிஜம்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •