Results 1 to 10 of 10

Thread: நிர்வாணமும் நீலவானமும்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    72
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    65,626
    Downloads
    16
    Uploads
    0

    நிர்வாணமும் நீலவானமும்

    அமாவாசை அன்றுதான் ஆடைதரிக்கிறது நிலவு
    முழுநிலவு அன்றுதான் நிர்வாணம் நிலவுக்கு
    ஆடைதரித்த நிலவு கண்ணுக்குத் தெரிவதில்லை
    நிர்வாண நிலவே நீள்விசும்புக்கு அழகாகும்.

    பகலெல்லாம் நிர்வாணமாயிருக்கும் வானம்
    இரவில் மட்டும்
    நட்டநடு நிசியில் மின்னும் நட்சத்திரம் பதித்த
    பட்டுக் கருநீலப் புடவை கட்டிப்
    பகட்டுடன் காட்சி அளிக்கிறது.

    காலை வேளையிலே பாடுகின்ற பூபாளம்
    நாள் என்னும் நங்கைக்கு நாமிட்ட ஆடை.
    பாவம் பாலைவனங்கள்!
    நிழல் என்னும் ஆடை இல்லாமல்
    நிர்வாணமாய் நிற்கின்றன.

    நீலவானம் கண்ணுக்கு அழகு
    நிர்வாணம் பாலுக்கு அழகு
    ஆம்
    ஆடை அணிந்த பாலை
    யாரும் விரும்புவது இல்லை.

    ஓடையிலே ஓடும் நீருக்குப் பூக்கள்
    ஆடை அணிவித்து அழகைக் கூட்டும்.
    சாலைகளின் ஆடை வாகனங்களின் அணிவகுப்பு
    வேலைநிறுத்தம் வந்தால் சாலைகளுக்கு நிர்வாணம்..

    ஆடையற்ற நிலை உடலுக்கு நிர்வாணம்
    அறிவற்ற நிலை மூளையின் நிர்வாணம்
    பசியற்ற நிலை வயிற்றின் நிர்வாணம்
    அமைதியற்ற நிலை மனத்தின் நிர்வாணம்
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,827
    Post Thanks / Like
    iCash Credits
    22,170
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    அமாவாசை அன்றுதான் ஆடைதரிக்கிறது நிலவு
    முழுநிலவு அன்றுதான் நிர்வாணம் நிலவுக்கு
    ஆடைதரித்த நிலவு கண்ணுக்குத் தெரிவதில்லை
    நிர்வாண நிலவே நீள்விசும்புக்கு அழகாகும்.

    பகலெல்லாம் நிர்வாணமாயிருக்கும் வானம்
    இரவில் மட்டும்
    நட்டநடு நிசியில் மின்னும் நட்சத்திரம் பதித்த
    பட்டுக் கருநீலப் புடவை கட்டிப்
    பகட்டுடன் காட்சி அளிக்கிறது.

    காலை வேளையிலே பாடுகின்ற பூபாளம்
    நாள் என்னும் நங்கைக்கு நாமிட்ட ஆடை.
    பாவம் பாலைவனங்கள்!
    நிழல் என்னும் ஆடை இல்லாமல்
    நிர்வாணமாய் நிற்கின்றன.

    நீலவானம் கண்ணுக்கு அழகு
    நிர்வாணம் பாலுக்கு அழகு
    ஆம்
    ஆடை அணிந்த பாலை
    யாரும் விரும்புவது இல்லை.

    ஓடையிலே ஓடும் நீருக்குப் பூக்கள்
    ஆடை அணிவித்து அழகைக் கூட்டும்.
    சாலைகளின் ஆடை வாகனங்களின் அணிவகுப்பு
    வேலைநிறுத்தம் வந்தால் சாலைகளுக்கு நிர்வாணம்..

    ஆடையற்ற நிலை உடலுக்கு நிர்வாணம்
    அறிவற்ற நிலை மூளையின் நிர்வாணம்
    பசியற்ற நிலை வயிற்றின் நிர்வாணம்
    அமைதியற்ற நிலை மனத்தின் நிர்வாணம்
    நிர்வாணம் எனக்கிங்கே தெரியவில்லை.
    இவை வெறும்
    ஆடை மாற்றும் சமாச்சாரங்களாகவே
    தெரிகின்றன.

    நீலமோ கருப்போ
    வெள்ளையோ இல்லையோ
    எதாவது ஓராடைக்குள்
    எல்லாமும் எப்பொழுதும் ஒளிந்து கொள்கின்றன

    நிழலோ ஒளியோ
    விடியலோ அந்தியோ
    எதோ ஒரு ஆடை

    ஆடைகளே நிர்வாணமாய்
    காணப்படுகின்றன.
    நிலத்தின் ஆடை
    நீர்
    சாலை
    மரம்
    நிழல்
    வெய்யில்
    காற்று
    இப்படி எல்லாமே தான்
    நிலமோ
    நெருப்பின் ஆடை
    நெருப்போ
    கருவின் ஆடை
    கருவோ
    சக்தியின் ஆடை
    சக்தியோ சிவத்தின் ஆடை
    சிவமோ
    உண்மையின் ஆடை
    உண்மையோ
    என்னத்தை தேடிக் கொண்டிருக்கிறோமோ
    அந்த ஏதோ ஒன்றின் ஆடை..

    உடலே ஆன்மாவின் உடையாகும்
    மூளையே அறிவின் உடையாகும்
    வயிறோ உணவின் உடையாகும்
    மனமோ நினைவின் உடையாகும்

    நிர்வாணம் காணத்
    தேடித் தேடி
    கண்டதென்னவோ
    ஆடைகள் தான்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    14,396
    Downloads
    47
    Uploads
    2
    முழுநிலவின் முழுமையான ஆடைதான்
    பெளர்ணமியும்
    அம்மாவசையும்
    மாறி மாறி உடுத்திக்கொள்ளும்
    காலம்தான்
    வளர்பிறையும்
    தேய்பிறையும்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    18,638
    Downloads
    25
    Uploads
    0

    Talking

    Quote Originally Posted by Nivas.T View Post
    முழுநிலவின் முழுமையான ஆடைதான்
    பெளர்ணமியும்
    அம்மாவசையும்
    மாறி மாறி உடுத்திக்கொள்ளும்
    காலம்தான்
    வளர்பிறையும்
    தேய்பிறையும்
    அப்போது நம் மக்கள் ரசிக்கும் காலம் எது வளர்பிறையா, தேய்பிறையா
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    14,396
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by Ravee View Post
    அப்போது நம் மக்கள் ரசிக்கும் காலம் எது வளர்பிறையா, தேய்பிறையா
    இரண்டுமே அழகுதான்

    எதவாக இருந்தாலும் நமக்கு ஓகே தான்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    72
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    65,626
    Downloads
    16
    Uploads
    0
    நிர்வாணத்திற்கு இரு பொருள் உண்டு.
    நிர்வாணம்= முத்தி நிலை
    நிர்வாணம்= அம்மணம்.
    மகான்கள் இறந்துவிட்டால் " நிர்வாணம் அடைந்தார் " என்கிறோம்.
    ஆடைகள் இல்லாது போனால் உடல் அம்மணமாகிறது.
    அறிவு இல்லாது போனால் மூளை அம்மணமாகிறது.
    நினைவுகள் இல்லாது போனால் மனம் அம்மணமாகிறது.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    72
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    65,626
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by Nivas.T View Post
    முழுநிலவின் முழுமையான ஆடைதான்
    பெளர்ணமியும்
    அம்மாவசையும்
    மாறி மாறி உடுத்திக்கொள்ளும்
    காலம்தான்
    வளர்பிறையும்
    தேய்பிறையும்

    அமாவாசை அன்று நிலவு கறுப்புப் புடவை கட்டிக் கொள்கிறாள்.
    பெளர்ணமி நிலவுக்கு வெண்புடவை கட்டி, நிலவை, விதவையாக்க நான் விரும்பவில்லை. எனவேதான் அதை நான் குறிப்பிடவில்லை.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,827
    Post Thanks / Like
    iCash Credits
    22,170
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    நிர்வாணத்திற்கு இரு பொருள் உண்டு.
    நிர்வாணம்= முத்தி நிலை
    நிர்வாணம்= அம்மணம்.
    மகான்கள் இறந்துவிட்டால் " நிர்வாணம் அடைந்தார் " என்கிறோம்.
    ஆடைகள் இல்லாது போனால் உடல் அம்மணமாகிறது.
    அறிவு இல்லாது போனால் மூளை அம்மணமாகிறது.
    நினைவுகள் இல்லாது போனால் மனம் அம்மணமாகிறது.
    எது எதற்கு ஆடை என்பதுதான் என் சந்தேகம்..

    மனதின் ஆடை நினைவா? நினைவின் ஆடை மனமா?
    மூளையின் ஆடை அறிவா? அறிவின் ஆடை மூளையா?

    உடல் உயிரின் ஆடை எனில்
    மனம் நினைவின் ஆடை
    மூளை அறிவின் ஆடை...


    ஆக ஆடைகளை மட்டுமே பார்த்துக் கொண்டு
    நிர்வாணம் கண்டேன் எனச் சொல்ல முடியுமா என்பதே என் சந்தேகம்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    72
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    65,626
    Downloads
    16
    Uploads
    0
    மனதின் ஆடை நினைவு.
    மூளையின் ஆடை அறிவு.
    ஆடைகளற்ற நிலையே நிர்வாணம். சில நிர்வாணங்களைப் பார்க்கமுடியும். சில நிர்வாணங்களை உணரத்தான் முடியும்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,827
    Post Thanks / Like
    iCash Credits
    22,170
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    மனதின் ஆடை நினைவு.
    மூளையின் ஆடை அறிவு.
    ஆடைகளற்ற நிலையே நிர்வாணம். சில நிர்வாணங்களைப் பார்க்கமுடியும். சில நிர்வாணங்களை உணரத்தான் முடியும்.
    எது ஆடை என்பதற்கு காரணம் சொல்ல முயற்சிக்கவில்லையே நீங்கள்.. காரண காரியங்களை ஆராயத்தானே

    மூளையின் ஆடை அறிவா
    அறிவின் ஆடை மூளையா என்று கேட்டேன்.

    ஆர்க்கிமிடீஸ் தத்துவம் ஒரு அறிவு. அதுதான் எத்தனை மூளை ஆடைகளை அணிந்து வாழ்கிறது, அதன் முதல் ஆடை ஆர்க்கிமிடீஸ் மூளை என்றாலும் அந்த தத்துவம் ஆர்க்கிமிடீஸ் பிறவாத பொழுதும் இருந்தது. இருந்த போதும் இருந்தது. போய்விட்ட போதும் இருக்கிறது.

    எனவே மூளைதான் அறிவின் ஆடையாகிறது. அறிவு மூளையை ஆடையாக அணிந்து கொள்கிறது.. பல மூளைகளை உடுத்து உரித்து உடுத்து உரித்து அறிவு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. சாக்ரடீஸின் மூளையும், ஷேக்ஸ்பியரின் மூளையும், ஆர்யபட்டரின் மூளையும், சாணக்கியரின் மூளையும் அறிவு புனைந்த ஆடைகளே... மூளைகள் புனைந்த ஆடைகள் அறிவு அல்ல, அதற்கு முன் அவ்வறிவு நிர்வாணமாக இருந்தது. எல்லோரும் மறந்து போனாலும் அவ்வறிவு நிர்வாணமாகிப் போய்விடும். அழியாது..

    அதே போல் நினைவுகள் மனங்களை ஆடையாகக் கொள்கின்றன, ஒரு மனதை நீங்கி இன்னொரு மனதையும் உடுத்திக் கொள்கின்றன. மூளையும் மனமும் கழற்றி வீசப்பட்டு அழிந்து போகின்றன. அறிவும் நினைவும் ஆடை மாற்றிக் கொள்கின்றன. உடுத்திக் கொள்ள எம்மனமும் இல்லா நினைவுகள் நிர்வாணமாகிப் போகின்றன. அழிவதில்லை.

    ஆத்மா உடலை உடையாகக் கொள்கிறது. அதுவும் அப்படித்தான் பல உடல்களை அணிந்து கழற்றி வீசி விடுகின்றன.

    மூளை அறிவை ஆடையாக அணிகிறது என்று பார்த்தால் மூளை அழிந்து விடுகிறது. அறிவு அழிவதில்லை. அறிவுதான் மூளை என்னும் உடையை மாற்றிக் கொள்கிறது,.

    மனம் நினைவை ஆடையாக அணிகிறது என்று பார்த்தாலும் நினைவுகள் மனம் விட்டு மனம் சேர்ந்து வாழ்கின்றன, மனம் அழிந்து விடுகிறது..

    மனதில் நினைவு
    மூளையில் அறிவு... இப்படித்தான் இருக்கிறதே தவிர அறிவில் மூளை, நினைவில் மனம் என்று இருப்பதில்லை.

    அறிவும் நினைவுமே நிர்வாணம் எய்த முடியும். ஏனென்றால் அவை ஆத்மாவுக்கு இணையானவை. மனமும் மூளையுமே உடைகளாக காலப் போக்கில் அழிந்து விடுகின்றன.

    கழற்றிப் போடப்பட்ட சட்டை
    நிர்வாணமாகக் கிடக்கிறது


    என்று புது கோணத்தில் கண்டாலும்.. சட்டை மீண்டும் ஆடையாகும். அதாவது என்னதான் மூளை அறிவை நீங்கினாலும் இன்னொரு அறிவு அதில் புகுந்து அணிந்து கொள்ளும். என்னதான் நினைவுகளை மனதிலிருந்து நீங்கினாலும் இன்னொரு நினைவு அந்த மனதை அணிந்து கொள்ளும். மனமும் மூளையும் இப்படி எதாவது ஒன்றினால் அணியப்படுகின்றன அல்லது அழிகின்றன.

    அறிவு நிர்வாணமாக இருக்க முடிகிறது. இதை யார் சொன்னார் என்பது மறந்து போனாலும் அந்த அறிவு இருக்கிறது. மூளை அப்படி அல்ல. அதற்கு உடையவர் என்ற ஒருவரின் பாற்பட்டே மூளை விளங்கி வருகிறது.

    அறிவால் மூளையை உதற முடியுமே தவிர மூளையால் அறிவை உதற முடியாது.. அறிவே மூளையை அடைகிறது. அறிவே மூளையை நீங்குகிறது.

    அறிவுதான் ஆடை என்பதற்கான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.. அந்த இரு வார்த்தைகளை மட்டுமல்ல.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •