Results 1 to 11 of 11

Thread: எப்போதும் காதல்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர்
    Join Date
    06 Apr 2003
    Posts
    1,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    0
    Uploads
    0

    எப்போதும் காதல்

    நன்றி விகடன்
    நகம் கடித்துக் காத்திருக்கும்
    தெருமுனையில்
    எதிர்வரும் பெண்களிடமெல்லாம்
    உன் சாயல்...
    பொழுதை இருட்ட வைத்து
    கடைசியாக நீ வருவாய்
    புன்னகையுடனும் எனக்கான
    ரகசிய முத்தங்களுடனும்.....
    காத்திருப்பின் வலியுடன்
    சுகமானதுதான காதல்
    எப்போதும்.......

    நான்காய் மடித்து
    நீ தரும் கடிதங்களில்
    பூசு மஞ்சள் படர்ந்த வாசனை
    ஒளித்த இடம் கேட்பேன்
    பொய் கோபத்துடன்
    கைகள் ஓங்குவாய்
    உன் கடிதத்தை வாசிக்க வேண்டாம்
    சுவாசிக்க வேண்டும் என்பேன்
    செல்லமாகக் குட்டுவாய்
    இனிமையானதுதான் காதல்
    எப்போதும்.....

    வீட்டில் யாருக்கும் தெரியாமல்
    நள்ளிரவில் கண் விழித்து
    உனக்கு கடிதம் எழுத
    விருப்பம் என்றேன்
    தீர்ந்த மைப்புட்டியில்
    இரண்டு மின்மினிகளை அடைத்து
    மேசை விளக்கென
    பரிசளித்தாய்...
    கவிதையானதுதான் காதல்
    எப்போதும்......

    முதல் முத்தம் புறங்கையில்
    இரண்டாவது பேர் &லவ்லி
    மணக்கும் கன்னத்தில்
    மங்கிய இரவில்
    பூங்காவில் தற்செயலாய் நீ
    நிமிர்ந்த கணத்தில்
    மூன்றாவது
    முத்தத்தை விடவும்
    இனிமையானது
    பின் நிகழும் மௌனம்
    அவஸ்தையானதுதான் காதல்
    எப்போதும்......

    மஞ்சள் தாவணி என்றால்
    நாளைக்கு கோயிலுக்கு வா..
    நீல நிற சுடிதார் எனில்
    கடிதம் கொடுத்தனுப்பு...
    இளம் பச்சை என்றால்
    வீட்டில் யாருமில்லை
    தொலை பேசியில் பேசு
    சங்கேதங்களால் ஆனதுதான் காதல்
    எப்போதும்

    அம்மாவிடம் கோவிலுக்கு
    அப்பாவிடம் கம்ப்யூட்டர் வகுப்பு
    அண்ணனிடம் தோழி வீட்டுக்கு
    அகாலத்தில் நாம் சந்திக்க
    உன்னிடம் ஆயிரம் பொய்கள்...
    உண்மை ஒரு நாள் எதிரியாய்
    வரும்வரை எனக்கும் உண்டு
    சில உபாயங்கள்....
    பொய்களால் ஆனதுதான் காதல்
    எப்போதும்.....

    கண்காணிக்கப்படும்
    காதல் நாட்களில்
    நள்ளிரவின் இருளுக்குள்
    தொலைபேசியின் இருமுனைகளிலும்
    குரல் இல்லாது
    வெகு நேரம் மௌனமாய்
    அழுதிருக்கிறோம் நினைவிருக்கிறதா?
    சோகமானதுதான் காதல்
    எப்போதும்...

    முத்தம் கேட்டால்
    காகிதத்தில் முத்தமிட்டு
    கடிதம் தருவாய்...
    சிறுதுயில் கொள்ள
    உன் மடி கேட்டால்
    நீண்ட கனவுகள் தருவாய்
    உடனிருக்கும் வாழ்க்கை கேட்டால்
    முழுவாழ்க்கைக்குமான
    நினைவுகள் தருவாய்...
    ஏமாற்றமானதுதான் காதல்
    எப்போதும்.....
    Last edited by நிரன்; 06-01-2009 at 03:38 PM.
    இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
    ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....
    - அன்புடன் லாவண்யா

  2. #2
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    துப்பவும் மனசில்லாமல்
    விழுங்கவும் முடியாமல்
    சூயிங்கம்மைப்போலவே...
    காதல்!


    அதுதான் காதல்..
    வாழ்த்துக்கள் லாவண்யா அவர்களே..
    Last edited by நிரன்; 06-01-2009 at 03:47 PM.

  3. #3
    புதியவர்
    Join Date
    04 Apr 2003
    Posts
    48
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    சுகமான சுமைதான் காதல்.....

    விஷ்ணு
    Last edited by நிரன்; 06-01-2009 at 03:48 PM.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    காதலுக்குப் பல வடிவங்கள். எல்லாமே சுகம்தான்.
    Last edited by நிரன்; 06-01-2009 at 03:49 PM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    நல்லதொரு கவிதையை வழங்கிய லாவண்யாவிற்கு நன்றி.


    (விகடனுக்கு நன்றி சொல்லொம்போதே அதை எழுதியவர் பெயரையும் வெளியிட்டிருந்தால் நன்றாக இருக்கும்!!)
    Last edited by நிரன்; 06-01-2009 at 03:51 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    படைத்த செழியனுக்கும்
    படித்து ரசித்து பதித்த தோழிக்கும்

    பாராட்டுகள்... நன்றிகள்......
    Last edited by நிரன்; 06-01-2009 at 03:52 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    இளம் புயல்
    Join Date
    01 Apr 2003
    Posts
    267
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான நெடுங்கவிதை.... படைத்தவர்க்கும் படித்து ரசித்து வழங்கிய
    சகோதரிக்கும் வாழ்த்துக்கள்
    Last edited by நிரன்; 06-01-2009 at 03:53 PM.

  8. #8
    இளம் புயல்
    Join Date
    07 Apr 2003
    Location
    SanDiego, California
    Posts
    375
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    காதல் சுகமானது
    ஆனால் அது சுலபமானது அல்ல!

    சாதாரண செயல்கள் இங்கே
    சிறப்பாக சொல்லப்பட்டிருப்பது அருமை!
    Last edited by நிரன்; 06-01-2009 at 03:57 PM.

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    பிரபாவின் கோணம் அருமை!!
    Last edited by நிரன்; 06-01-2009 at 03:58 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    3,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    படித்தது தான்....நல்ல கவிதை....லாவ்-க்கு நன்றி
    Last edited by நிரன்; 06-01-2009 at 04:00 PM.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    காதலின் பல்வேறு நிலைபாடுகளை எடுத்துச் சொல்லும் கவிதை அருமை...... லாவ், நன்றி....... எடுத்துக் கொடுத்த பப்பிக்கும் தான்.........
    Last edited by நிரன்; 06-01-2009 at 04:01 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •