Results 1 to 11 of 11

Thread: கடற் புயலில்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0

    கடற் புயலில்

    ( பிஏர் லொத்தி - 1850 / 1923 - எழுதிய என் சகோதரன் ஈவ் என்னும் பிரஞ்சு புதினத்தில் ஒரு பகுதியை மொழிபெயர்த்துள்ளேன் )

    இரு நாளாகவே கடலில் ஒரு பேரிரைச்சல், வரவிருக்கும் ஆபத்தை அறிவித்தபடி எங்களைச் சுற்றி முழங்கியது . கன்னங்கரேல் என்றிருந்த வானில் மேகங்கள் பயங்கரக் காற்றால் அலைக்கழிக்கப்பட்டு அங்கு மிங்கும் ஓடின .

    அந்தப் பெரிய ஓசை வரவரக் கனங்கூடிச் செறிவு பெற்றதாயும் தொய்வு அற்றதாயும் மாறிற்று ; இயற்கையின் சீற்றத்தில் மூர்க்கம் அதிகமானது போல் தோன்றிற்று .

    வெண்ணிற மேற்பரப்பும் பென்னம் பெரிய சுருள் வடிவுங்கொண்ட நீர்த் திரள்கள் ஒன்றை யொன்று விரட்டிக்கொண்டு வருவது போல் வந்து எங்கள் கப்பலின் ஓட்டத்தைத் தடுத்தன . அதன்மீது பலங்கொண்ட மட்டும் மோதின : பயங்கர உலுக்கல்கள் , சத்தங்கள் !

    சில சமயம் கப்பல் , கடலின்மேல் கோபங்கொண்டாற் போல் , முன் பகுதியை உயர்த்தியபடி நீரின்மேல் ஏறியது ; பின்பு தலை தூக்கிய அதே நிலையில் தாழ்ந்து , இரு பக்கமும் எழும்பிய நீர்ச் சுவர்களின் இடையில் உருவான ஒரு விதப் பள்ளத்தாக்கின் அடிப் பாகத்தைத் தொட்டது . மேலே வளைந்து ஒன்று சேரப்போகிற அந்தப் பச்சை நிறச் சுவர்களின் நடுவிலிருந்து வேக வேகமாகக் கப்பலை ஓட்டித் தப்ப வேண்டியிருந்தது .

    சில்லென்ற மழை தன் நீண்ட வெண்ணிற அம்புகளால் ஆகாயத்தில் கோடு வரைந்தபடி இறங்கி , வாரால் அடித்தாற் போலத் தாக்கி , சுரீர் வலியை ஏற்படுத்திற்று .

    உயரே பாய்மரங்களில் ஏறிப் பாய்களைச் சுருக்கும் முயற்சியில் பலர் முனைந்தனர் . எப் பாடு பட்டாவது காற்றை எதிர்த்து முன்னேற வேண்டியிருந்தது . காற்றில் அடித்துச் செல்லாமல் இருக்க அழுத்தமாக நிற்பதும் , பேயாட்டம் ஆடி வழுக்கும் ஈரக் கம்புகளைப் பற்றிக் கொள்வதுமே பெரும் பாடாக இருக்கையில் , காயமுற்று முனகுகிற ஒரு பெரிய பறவையின் சிறகுகள் கடைசித் தடய் அடித்துக்கொள்வது மாதிரி திடீர் திடீர் எனவும் ஒழுங்கு இல்லாமலும் ஆடிக்கொண்டிருந்த கொமபுகளின்மேல் அந்தரத்தில் தொற்றிக்கொண்டு வேலை செய்வதென்றால் ?

    இரண்டு மணி நேரம் பாடுபட்டும் பணி முடியவில்லை . அவர்களை இறங்கச் சொன்னோம், குளிரால் குறைவாய்ப் பாதிக்கப்பட்ட மாற்று ஆட்களை அனுப்பலாம் என்னும் முடிவோடு .

    அவர்கள் இறங்கினார்கள் , வெளிறிப் போய் , தொப்பலாய் நனைந்து , மார்பிலும் முதுகிலும் நீர்த் தாரைகள் ஒழுக , கைகள் ரத்த விளாறாய் , நகங்கள் தேய்ந்து , பற்கள் கிடுகிடுக்க !
    \
    இரு நாள் : நீரில் வாழ்ந்தோம் , பேருக்குச் சாப்பிட்டோம் ; லேசாய்க் கண்ணயர்ந்தோம் . தெம்பு குறைந்துகொண்டே வந்தது . இந்த நீண்ட காத்திருப்பும் ஈரம் மற்றும் குளிர் காரணமாய்த் தொடர்ச்சியான களைப்புந்தான் கடல் பயணத்தின் மெய்யான பயங்கரம். .தாக்கு பிடிக்காத பரிதாபத்துக்கு உரியவர்கள் பற்பல இரவும் பகலும் நனைந்து , அழுக்கேறி , வியர்வையும் உப்பும் கலந்த பிசுபிசுப்புக் கலவையால் மூடப்பட்டுக் கிடந்துதான் இறுதி மூச்சை விடுவார்கள் .

    சத்தம் பெரிதாகிக்கொண்டே தான் வந்தது ; நாங்களும் அலை அலையாய்த் தாவிக்கொண்டிருந்தோம் . வெள்ளை நுரை போர்த்த கடலைத் தவிர எல்லாம் இருண்டது ; குளிர் மாலைப் பொழுது கவிந்தது ; வானை மறைத்திருந்த கரு மேகங்களான திரைகளின் பின்னால் கதிரவன் மறைந்தான் ; அவன் எங்களைக் கை விட்டமையால் இனி எல்லவற்றையும் இருட்டில் சமாளித்தாக வேண்டும் .

    என் தம்பி மாற்று ஆட்களுள் ஒருவனாய் மேலே ஏறினான் . நான் அண்ணந்து பார்த்தபோது அந்தரத்தில் பணியாற்றிய அந்த மனிதத் திராட்சைக் கொத்து சிற்சில சமயம் மட்டுமே க்ண்ணுக்குப் புலப்பட்டது .

    திடீரென்று ஒரு பயங்கர உலுக்கல் : அந்தக் கொத்து சடாரென அறுந்து வேறு வ டிவங்கொண்டது . அதிலிருந்து இரண்டு உடல்கள் நீங்கிக் கைகளை அகலமாய் விரித்தபடி, உறுமிக்கொண்டிருந்த அலைகளில் விழுந்தன ; இன்னோர் உடம்பு கப்பலின் மேல்தளத்தில் சப்பையாய் வீழ்ந்தது , கத்தாமல் கொள்ளாமல் , உயிரற்றது போல் .

    கேப்டன் அலறினார் :;

    " வாட்ட சாட்டமான கெர்பூல் கடலிலே , மற்றவன் யார் ?"

    தாக்குப் பிடித்தவர்கள் கயிறுகளைக் கெட்டியாய்ப் பற்றிக்கொண்டு இருந்தமையால் அந்தரத்தில் ஒரு கணம் ஊசலாடிவிட்டு மீண்டும் ஏறினார்கள் , விறு விறு என்று , குரங்குகள் மாதிரி .

    அவர்களுள் தம்பியை அடையாளம் கண்டேன் ; எனக்குப் போன உயிர் திரும்பி வந்தது .

    கடலில் விழுந்தவர்களுக்காக மிதவைகளைப் போட்டோம் . என்ன பயன் ? அவர்கள் தென்படாமல் இருப்பதே நல்லது என்று கருதினோம் ; ஏனென்றால் காப்பாற்றுவதற்காகக் கப்பலை நிறுத்த இயலாத சூழ்நிலையில் அவர்களைக் கை கழுவி விட்டுப் போவதற்குக் கருங்கல் நெஞ்சமல்லவா தேவைப்படும் ?

    எல்லாப் பெயர்களையும் கூப்பிட்டுப் பார்த்ததில் கடலோடு போன இரண்டாம் தொழிலாளி யார் என்பது தெரிந்தது : அவர் ஒரு சாதுவான கற்றுக் குட்டி ; அவருடைய விதவைத் தாயார், பிரான்சை விட்டுக் கப்பல் புறப்பட்டபோது , கேப்டனிடம் பரிந்துரை செய்து வேலையில் சேர்த்திருந்தார் .

    தளத்தில் விழுந்து கிடந்தவரை மருந்தகத்துக்குத் தூக்கிச் சென்றோம் .

    அங்கே இரண்டடி உயரத்துக்குத் தண்ணீர் : பாட்டிலகள் உடைந்து சிந்திச் சிதறிய எல்லா மருந்துகளும் ஒன்றாய்க் கல்ந்த நெடி : . படுத்து அமைதியாகச் சாவதற்கும் இடமில்லை ; இறக்கப் போகிறவருக்குக் கூட , கடல் கருணை காட்டாமல் அவரை உலுக்கி அலைக்கழித்தது . அவரது தொண்டையிலிருந்து ஒரு வித ஒலி வெளிவந்து இரைச்சல்களில் கரைந்து போயிற்று .

    அவர் விரைவிலேயே இறந்து போனார் . அமைதிச் சூழ்நிலையில் அவரைப் பிழைக்க வைத்திருக்ககூடும் .

    ----------------------------------------------------------------------------------------------------

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    கடற்பயனத்தின் கடினம் கண்முன்னால்

    மிகவும் சுவாரசியமாய் ரசிக்க வைத்த நிகழ்வு

    மொழிபெயர்ப்பு பிரமாதம்

    முடிவு மட்டும்தான் முழுமையடையவில்லை என்பதைபோன்று ஒரு தோற்றம்

    மிக்க நன்றி ஐயா
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by Nivas.T View Post
    கடற்பயனத்தின் கடினம் கண்முன்னால்

    மிகவும் சுவாரசியமாய் ரசிக்க வைத்த நிகழ்வு

    மொழிபெயர்ப்பு பிரமாதம்

    முடிவு மட்டும்தான் முழுமையடையவில்லை என்பதைபோன்று ஒரு தோற்றம்

    மிக்க நன்றி ஐயா
    பாராட்டுக்கு மிகுந்த நன்றி . புதினத்தின் ஒரு சிறு பகுதியாகையால் முழுமை இல்லாதது போல் தோன்றுகிறது .

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    கடின கடற் பயணத்தினை கண்முன் காட்டும் இந்த மொழிபெயர்ப்பு ..பயணம் எதற்க்காக ? என்று தெளிவுரையுடன் இருந்திருந்தால் இந்த புதினம் இன்னும் சுவையாய் இருந்திருக்கும் ...தொடருங்கள் ஐயா....
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    இருபுறமும் உயர்ந்தெழுந்த நீர்ச்சுவர், வெண்ணிற அம்புகளாய்த் தாக்கிய மழைநீரின் சுரீரென்ற வார் விளாசல், காயமுற்று முனகுகிற பறவையின் சிறகுகள் போல் படபடவென்று அடித்துக்கொள்ளும் பாய்மரக் கொம்புகள், அந்தரத்தில் பணியாற்றிய மனிதத் திராட்சைக் கொத்து போன்ற வரிகளில் தென்படும் அநாயாச எழுத்துவன்மையும், அத்தனைப் பேரழிவை எதிர்நோக்கும் சமயத்திலும் தம்பியின் மீதான பாசம் வெளிப்படுதலும், விதவைத் தாயாருக்கு ஒரே பிடிப்பான மகன் கைநழுவிப் போன துயரைச் சொல்லாமல் சொன்ன விதமும், மருந்துகளின் தயவின்மையால் அடிபட்டவர், பரிதாபகரமாய் உயிரிழக்க நேரிட்ட கொடுமையையும் சுருங்கச் சொல்லி நெஞ்சம் நெகிழச்செய்த நேர்த்தியும் பாராட்டுதற்குரியன.

    அலைக்கழிக்கப்படும் கப்பலில் நாமும் இருப்பதைப் போல் ஒரு நிலைகொள்ளா நிலையையும் அடுத்து என்ன செய்வது என்ற பதைபதைப்பையும் மனத்தில் உருவாக்கிய அச்சமூட்டும் வர்ணனைகளும் அவற்றை அப்படியே இயல்புமாறாமல் உணர்த்திய அற்புத மொழிபெயர்ப்பும் கண்டு வியக்கிறேன். மனமார்ந்த பாராட்டுகள்.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    கடின கடற் பயணத்தினை கண்முன் காட்டும் இந்த மொழிபெயர்ப்பு ..பயணம் எதற்க்காக ? என்று தெளிவுரையுடன் இருந்திருந்தால் இந்த புதினம் இன்னும் சுவையாய் இருந்திருக்கும் ...தொடருங்கள் ஐயா....
    முழு விவரங்களை எழுதினால் நீண்டுகொண்டே போகும் . பாராட்டியதற்கு மிக்க நன்றி .

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    .

    அலைக்கழிக்கப்படும் கப்பலில் நாமும் இருப்பதைப் போல் ஒரு நிலைகொள்ளா நிலையையும் அடுத்து என்ன செய்வது என்ற பதைபதைப்பையும் மனத்தில் உருவாக்கிய அச்சமூட்டும் வர்ணனைகளும் அவற்றை அப்படியே இயல்புமாறாமல் உணர்த்திய அற்புத மொழிபெயர்ப்பும் கண்டு வியக்கிறேன். மனமார்ந்த பாராட்டுகள்.

    விரிவான மற்றும் சுவையான விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றி .

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    கடல் புறாவை வாசித்தபோது சந்தித்த கடற்பயண அனுபவம், இப்பகுதியை வாசிக்கையிலும் ஏற்பட்டது.
    கணினித் திரையிற் தெரிந்த எழுத்துக்கள் காட்சியாகி, கடலிற் தடுமாறும் நிலையில் நம்மை வைக்கும் எழுத்தும் மொழிபெயர்ப்பும் அற்புதம்.

    எல்லோர் போலவே,
    முன்னென்ன நிகழ்ந்திருக்கும் பின்னென்ன நிகழ்ந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுவதைத் தடுக்க முடியவில்லை.

    பிரெஞ்சு எழுத்துக்களை மொழிமாற்றும் உங்கள் தமிழுக்குத் தலைவணங்குகின்றேன்.
    இல்லாவிட்டால், இதையெல்லாம் நாம் எப்போதுதான் படிப்பது...

    நன்றி ஐயா...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #9
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    ஒரு பயண போராட்டத்தின் நெருக்கடியான தருணம். வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் ஊசலாடும் நிகழ்வு. மொழிபெயர்ப்பு உடனிருந்ததைப் போலவே உணர வைத்தது.
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    கடல் புறாவை வாசித்தபோது சந்தித்த கடற்பயண அனுபவம், இப்பகுதியை வாசிக்கையிலும் ஏற்பட்டது.
    கணினித் திரையிற் தெரிந்த எழுத்துக்கள் காட்சியாகி, கடலிற் தடுமாறும் நிலையில் நம்மை வைக்கும் எழுத்தும் மொழிபெயர்ப்பும் அற்புதம்.

    எல்லோர் போலவே,
    முன்னென்ன நிகழ்ந்திருக்கும் பின்னென்ன நிகழ்ந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுவதைத் தடுக்க முடியவில்லை.

    பிரெஞ்சு எழுத்துக்களை மொழிமாற்றும் உங்கள் தமிழுக்குத் தலைவணங்குகின்றேன்.
    இல்லாவிட்டால், இதையெல்லாம் நாம் எப்போதுதான் படிப்பது...

    நன்றி ஐயா...
    நன்கு சுவைத்துப் படித்திருக்கிறீர்கள் . உங்கள் வாசிப்பு அனுபவத்தை எடுத்துரைத்ததற்கும் என் மொழி பெயர்ப்பைப் பாராட்டியதற்கும் மிகுந்த நன்றி .

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by த.ஜார்ஜ் View Post
    ஒரு பயண போராட்டத்தின் நெருக்கடியான தருணம். வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் ஊசலாடும் நிகழ்வு. மொழிபெயர்ப்பு உடனிருந்ததைப் போலவே உணர வைத்தது.
    பாராட்டுக்கு மிக்க நன்றி.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •