பிரவுசரில் உலாவிக் கொண்டு இருக்கையில் புரியாத வார்த்தைகளுக்கு உடனே பதில் கிடைக்க வேண்டுமா? அதுவும் ஆங்கிலம் அல்லது தமிழ் வார்த்தைகளுக்கு உலவியிருந்து பதில் கிடைக்க வேண்டுமா? அப்படியென்றால் மேலே படியுங்கள் உங்களுக்காக கூகிள் குரோமின் புதிய நீட்சி...

ஆங்கில பிளாக்கோ அல்லது நாளிதழோ தமிழ் பிளாக்கோ நாளிதழோ இனி புரியாத வார்த்தைகளை பிரவுச்சரிலிருந்தே தேடலாம். முக்கியமாக எல்லா தளங்களிலும் பயன்படுத்தும் வகையிலான அகராதி நீட்சி. இதை குரோம் உலாவியில் பதித்துக் கொண்டால் வேண்டிய வார்த்தைகளுக்கு வேண்டிய முக்கிய அகராதிகள் மூலம் அர்த்தங்களும் விளக்கங்களும் பெறலாம்.
https://chrome.google.com/webstore/d...hcklkgih?hl=ta

வேண்டிய வார்த்தைகளை select செய்து வலது சொடுக்கிட்டால் எழு தமிழ் மற்றும் ஆங்கில அகராதிகள் காட்டப்படும் அதில் அதேனும் ஒன்றை தேர்வு செய்து பொருள் கொள்ளலாம்.

இதனை நிறுவுவது மிக சுலபம், குரோம் பிரவுசர் மூலம் இன்ஸ்டால் பட்டனை தட்டினால் மட்டும் போதும். இனி குரோமில் அகராதிகள் சேர்ந்துவிடும்