Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: இத்தாலியில் ஓர் இரவு

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0

    இத்தாலியில் ஓர் இரவு

    ( போல் லூய் குரியே என்ற பிரஞ்சுக்காரர் - 18 ஆம் நூற்றாண்டு - எழுதிய சிறு கதை ; நான் மொழிபெயர்த்து ஏப்ரல் 94 மஞ்சரி இதழில் வெளிவந்தது )

    ஒரு தடவை நான் இத்தாலியின் மலைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தேன் . அது கொடியவர் வாழும் இடம் என்பதும் அவர்கள் யாரையும் நேசிப்பதில்லை என்பதும் என் நம்பிக்கை . சிறப்பாகப் பிரஞ்சுக்காரர்களை அவர்களுக்குத் துளியும் பிடிக்காது. இதற்கான காரணத்தைச் சொல்வதென்றால் மிக விரியும் . எங்களைப் பிறவிப் பகைவர்களாக அவர்கள் கருதுகிறார்கள் , அவர்களிடம் மாட்டிக்கொண்டால் எங்களுக்குப் பெருந்துன்பம் ஏற்படும் என்று சொல்வ்து போதும் .

    எனக்குத் துணை ஓர் இளைஞன் . ஆபத்து மிக்க மலைப் பதையில் எங்கள் குதிரைகள் நடக்கப் பெரிதும் இடர்ப்பட்டன . முன்னால் போய்க்கொண்டிருந்த என் கூட்டாளிக்கு வசதியாயும் குறுக்கு வழியாயும் தோன்றிய ஓர் ஒற்றையடிப் பாதை எங்களை எங்கோ இட்டுச் சென்றுவிட்டது.

    தவறு என்னுடையது தான் ; இருபது வயதுப் பையனை நான் நம்பினேனே ! காடுகளுக்கு இடையில் பகல் முழுதும் வழியைத் தேடினோம் ; தேடித் தேடியே மேன்மேலும் வழி தவறிப் போனோம் . இரவும் வந்துவிட்டது , நாங்கள் ஓர் இருண்ட வீட்டை அணுகியபோது .

    எங்களுக்குச் சந்தேகந்தான் ; வேறு வழி ? நுழைந்தோம் .

    அங்கே கரி தயாரிப்பவர்களின் குடும்பத்தினர் உண்டுகொண்டிருந்தனர் ; எங்களைக் கண்ட உடனே உண்ண அழைத்தனர் .

    என் இளம் கூட்டாளி உடனே ஒப்புக்கொண்டுவிட்டான் . நாங்கள் சாப்பிட்டோம் , குடித்தோம் . இல்லை , அவன் உண்டான் , குடித்தான் .

    நானோ அந்த இடத்தையும் வீட்டாரின் தோற்றத்தையும் ஆராய்ந்துகொண்டிருந்தேன் .

    அவர்கள் கரி தயாரிப்பவர்கள் போலத்தான் இருந்தார்கள் ; ஐயம் இல்லை ; ஆனால் அந்த வீடு ! அதை ஆயுதத் தொழிற்சாலை என்றே கூறலாம் ; எங்கே பார்த்தாலும் துப்பாக்கி , ரிவாலவர் வாள் , கத்தி , பிச்சுவா , இவை எல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. என்னையும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்தேன் .

    என் தோழனோ நேர் மாற்றம் : பேச்சும் சிரிப்பும் , அட்டகாசம் ! அந்தக் குடும்பத்தில் ஒட்டிக்கொண்டான் . அவன் மடத்தனமாய் ( இதை நான் எதிர்பார்த்திருக்க வேண்டும் ) நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்பதைச் சொன்னதோடு எங்கே போகிறோம் , நாங்கள் யார் என்பதையுங்கூட உளறிவிட்டான் .

    கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் : எங்களுடைய பிறவிப் பகைவரின் நடுவில் , தனியாய் , திக்குத் தெரியாத நிலையில் , மனித உதவி எதுவுங்கிட்ட இயலாத் தொலைவிலே !

    போதாக் குறைக்கு அவன் தன்னைப் பணக்காரன் போலக் காட்டிக்கொண்டு , உணவுக்கான தொகையைத் தருவதுடன் மறு நாள் வழிகாட்டியாய் வருவோர்க்கு விருப்பமான எதையும் கொடுப்பதாகவும் வாக்களித்தான் .

    இறுதியில் தன் கைப்பை பற்றிப் பேசத் தொடங்கி அதன்மீது மிக்க கவனம் செலுத்தும்படியும் தன் தலை மாட்டில் அதை வைக்குமாறும் கேட்டுக்கொண்டான் ! அதையே தலையணையாக வைத்துக்கொள்வானாம் !

    ஆ 1 இளைஞர்களே ! இளைஞர்களே ! உங்கள் இளமை எவ்வளவு பரிதாபத்துக்கு உரியது ! அவன் சொன்னதைக் கேட்டவர்கள் அந்தப் பையில் அரச முடியின் வைரங்களை நாங்கள் எடுத்து வந்திருக்கிறோம் என்றே நம்பியிருப்பார்கள் !.

    ஆனால் அந்தப் பையின்மீது அவன் அவ்வளவு அக்கறை செலுத்தியதற்கான காரணம் அதில் அவனுடைய காதலியின் கடிதங்கள் இருந்தமையே .

    உண்ட பின்பு வீட்டுக்காரர்கள் கீழறையில் படுத்தார்கள் ; நாங்கள் சாப்பிட்ட மாடி அறையில் ஒரு பரண் இருந்தது ; 7 அல்லது 8 அடி உயரத்தில் இடம் பெற்றிருந்த அதில் ஏணி மூலம் ஏற வேண்டும் . அது ஒரு வகைக் கூடு என்றே சொல்ல வேண்டும் ; கூரையைத் தாங்கும் சாத்துகளுக்கு அடியில் மண்டி போட்டு அதில் நுழைய வேண்டும் .. உணவுப் பொருள்கள் சேமித்து வைக்கப் பட்டிருந்த அந்த இடத்தில்தான் எங்கள் படுக்கை .

    என் தோழன் விலை மதிப்பற்ற தன் பையைத் தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கினான் . நானோ ? விழித்திருக்க முடிவு செய்து கொண்டு அவன் அருகில் அமர்ந்தேன் .

    இரவு அமைதியாய்க் கழிந்தது . என்னைப் பீடித்திருந்த அச்சம் நீங்கத் தொடங்கியது .

    பொழுது விடியப் போகிறது என்று எனக்குத் தோன்றிய நேரத்தில் வீட்டுக்காரரும் அவரது மனைவியும் தர்க்கம் செய்வதை உணர்ந்தேன் ; காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு கவனித்தேன்.

    கணவர் வினவியது தெளிவாய்க் காதில் விழுந்தது : " சரி , முடிவாய் என்னதான் சொல்கிறாய் ? இரண்டு உயிரையும் போக்கிட வேண்டுமா ? "

    "ஆமாம் " என்றார் மனைவி .

    பின்பு ஒன்றுமே கேட்கவில்லை .

    எனக்கு மூச்சு திணறியது ; உடல் முழுதும் சலவைக் கல் போல் குளிர்ந்தது ; நான் உயிரோடு இருந்தேனா , செத்துவிட்டேனா என்பது பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்காது .

    நிராயுத பாணியான நாங்கள் இருவர் ஏராள ஆயுதங்களைக் கொண்ட பத்துப் பதினைந்து பேரை எதிர்ப்பதா ? என் தோழனோ களைத்துப் போய்த் தூங்கிக்கொண்டிருந்தான் , பிணம் போல ! அவனைக் கூப்பிடுவதா , கூச்சலிடுவதா ? துணிச்சல் இல்லை . தனியாய்த் தப்பிப்பதா ? இயலாது : சன்னல் சிறியது ; கீழே இரண்டு நாய்கள் ஓநாய் மாதிரி ஊளையிட்டுக்கொண்டிருந்தன .

    கால் மணி நேரம் கால் யுகமாய்க் கழிந்த பின்பு , மாடிப் படியில் காலடியோசை கேட்டது ; அறைக் கதவின் விரிசல் வழியாய்ப் பார்த்தபோது வீட்டுக்காரர் தெரிந்தார் . ஒரு கையில் விளக்கு மறு கையில் பெரிய கத்தி .முன்னால் கணவரும் பின்னால் மனைவியுமாய் ஏறி வந்தனர் .

    அவர் கதவைத் திறந்தார் ; அறைக்குள் நுழைவதற்கு முனபு அவர் கீழே வைத்த விளக்கை மனைவி எடுத்துக்கொண்டார் . காலணிகளைக் கழற்றிவிட்டு அவர் நுழைந்தபோது வெளியே நின்ற மனைவி , கையால் விளக்கு வெளிச்சத்தை மறைத்துக்கொண்டு , மெல்லிய குரலில் , " மெதுவாய் , மெதுவாய்ப் போ " என்றார்.

    ஏணியை நெருங்கிய அவர் கத்தியை வாயில் கௌவியபடி ஏறி வந்தார்; கழுத்துப் பகுதியை நீட்டிக்கொண்டு படுத்திருந்த இளைஞனின் அருகில் வந்து , ஒரு கையால் கத்தியை எடுத்து , மறு கையால் , ... ஐயோ !

    சாத்தில் தொங்கிக்கொண்டிருந்த பன்றி இறைச்சியைப் பிடித்து ஒரு துண்டை அறுத்துக்கொண்டு இறங்கிப் போய்விட்டார் . கதவு மூடியது ; விளக்கும் போய்விட்டது .

    தனியாய் நான் சிந்தனையில் ஆழ்ந்தேன் .

    பொழுது புலர்ந்ததும் குடும்பத்தார் யாவரும் வந்து எங்களை அழைத்தனர்

    காலை உணவு மிகத் தூய்மையாய் , மிகச் சுவையாய் வழங்கப்பட்டது ; இரண்டு முழுச் சேவலையுங் கூடச் சமைத்து வைத்திருந்தனர் : ஒன்று உண்ணவாம் , மற்றது எடுத்துப் போகவாம் . அவற்றைப் பார்த்தபோது தான், " இரண்டு உயிரையும் போக்கிட வேண்டுமா ? " என்ற பயங்கரச் சொற்களின் பொருள் எனக்குப் புரிந்தது .

    --------------------------------------------------------------------------

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    வாவ்!!! கடைசிவரை என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே படித்தேன்.

    சிறுகதை என்பது இதுதானா? சொல்லவேண்டிய விஷயங்களை அருமையாகச் சொல்லி படிப்பவர்களை அப்படியே கதையில் ஆழ்த்திவிட்டது.

    இன்னும் நிறைய எழுதுங்கள்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    மிக பிரமாதம்
    நல்ல மொழி பெயர்ப்பு

    மிக்க நன்றி ஐயா
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    திகிலுக்கு பின்னால் என்னை ஒரு ச்சே போடவைத்தது

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    சாதரணமாய் தொடங்கிய கதை முடிவை நெருங்கையில் வயிற்றில் ஒரு பிசைவை ஏற்ப்படுத்தியது. இதற்க்கு மொழி பெயர்ப்பும் ஒரு முக்கிய காரணம்.
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    அருமையான மொழிபெயர்ப்பு ...வீட்டிற்க்கு உதவி கேட்டு வருபவன் எதிரியே என்றாலும் அவனை வரவேற்று உபசரிப்பது என்பது தமிழர் பண்பாடு ..அது போல் தமது வீடிற்கு வந்த விருந்தாளியை வரவேற்று தங்க இடம் கொடுத்து உணவும் அளித்து உபசரித்த அவர்களின் பண்பு போற்றத்தக்கது ..அதே நேரத்தில் எச்சரிக்கை உணர்வுடன் அவர்கள் மீதான பயம் கொண்ட அந்த பிரஞ்சு காரர் நிலை பரிதாபம் இறுதியில் உண்மைநிலை அறிந்து தன எண்ணத்தை மாற்றிகொண்டிருப்பார் என எண்ணுகிறேன்...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    திகிலும், மர்மமுமாய் இறுதிவரை கவனத்தைத் திசை திருப்பாது ஒரே நேர்கோட்டில் பயணிக்கவைத்தக் கதை. பிரமாதமான மொழிபெயர்ப்பு. நன்றியும் பாராட்டும்.

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அழகான கதை.. அற்புதமாய் மொழிபெயர்த்தமைக்கு நன்றி ஐயா..

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    வாவ்!!! கடைசிவரை என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே படித்தேன்.

    சிறுகதை என்பது இதுதானா? சொல்லவேண்டிய விஷயங்களை அருமையாகச் சொல்லி படிப்பவர்களை அப்படியே கதையில் ஆழ்த்திவிட்டது.

    இன்னும் நிறைய எழுதுங்கள்.
    பாராட்டுக்கு மிக்க நன்றி.

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by Nivas.T View Post
    மிக பிரமாதம்
    நல்ல மொழி பெயர்ப்பு

    மிக்க நன்றி ஐயா
    பாராட்டுக்கு மிக்க நன்றி.

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by sarcharan View Post
    திகிலுக்கு பின்னால் என்னை ஒரு ச்சே போடவைத்தது
    அச்சமூட்டி ஏமாற்றுவது கதைகளின் உத்திகளுள் ஒன்று . நீங்கள் நன்றாய் ஏமாறினீர்கள் என்பது தெரிகிறது . பின்னூட்டத்துக்கு நன்றி .

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by Ravee View Post
    சாதரணமாய் தொடங்கிய கதை முடிவை நெருங்கையில் வயிற்றில் ஒரு பிசைவை ஏற்ப்படுத்தியது. இதற்க்கு மொழி பெயர்ப்பும் ஒரு முக்கிய காரணம்.
    உங்கள் பாராட்டுக்கு மிகுந்த நன்றி.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •