இங்கு குறிப்பிட்டது போல சில மொழி பெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு மென்பொருட்கள் இருந்தாலும் இணையத்தில் எளிதாக அவ்வசதியைத் தரும் சில கருவிகளும் உள்ளன். மொழியை எழுதப் பயன்படும்ஒலிபெயர்ப்புக் கருவிகள் முன்னெல்லாம் தனியான ஒருப் பக்கத்தில் இருக்கும் அங்கு சென்று தட்டச்சிட்டு பிரதியெடுத்து வந்தோம் ஆனால் சில கட்ஜெட்களும் கூகுளின் உட்பொதிக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டினாலும் வேண்டியப் பக்கத்தில் ஒலிபெயர்ப்பு வசதியை கொண்டுவரலாம்.அதற்கு மேல் bookmarklet எனப்படும் ஸ்கிரிப்ட்டை பிரவுசரில் பதிக்கும் முறையும் உள்ளது. ஒருதளத்தை எப்படி புக்மார்க் செய்கிறோமோ அதுபோல ஸ்க்ரிப்ட்டை சேமிக்கும் முறை. கீழ் கண்ட சுட்டிகளை drag செய்து உங்கள் பிரவுசரில் விடலாம் அல்லது Favoritesல் சேமித்தும் கொள்ளலாம். இவற்றை உலாவியில் பதிக்க எளிய வழி drag செய்து விடுவது . மவுசை இடது சொடுக்கி சொடுக்கியவாறே இழுத்துக் கொண்டு போய் உங்கள் பிரவுசரில் உள்ள தூள் பாரில் விட்டால் போதும் மேலும் விளக்கமாக கூகுளும் சொல்லியுள்ளது இங்கு

http://t13n.googlecode.com/svn/trunk...s/help_ta.html
இது கூகிள் வழங்கியுள்ள புக்மார்க்லெட்
அதுபோக tavultesoft.com வழங்கியுள்ள புக்மார்க்லெட்களும் உள்ளது அவற்றை உங்கள் பிரவுசரில் பதித்துக் கொள்ள இங்கு செல்லவும்.