" போன்ல யாருங்க?" ஜானகி, தன் கணவன் சீதாராமனைப் பார்த்துக் கேட்டாள்.

" உன்னோட அப்பாதான் பேசுனாரு!"

" என்னவாம்?"

" உன்னையும் என்னையும் இந்த தீபாவளிக்கு வரச்சொல்லி உங்க அப்பா கூப்பிட்டிருக்காரு!"

" நீங்க என்ன சொன்னீங்க?"

" யோசிச்சு சொல்றேன்னு சொன்னேன்"

" இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்கு? ரெண்டு பேரும் வர்றோம்னு சொல்லவேண்டியதுதானே?"

" அதுக்கில்ல ஜானு! இந்த தீபாவளிக்கு நம்ம பொண்ணு மாப்பிள்ளைய அழைக்கலாம்னு நினச்சுகிட்டு இருந்தேன். அதான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டேன்."

மீண்டும் செல்போன் ஒலித்தது. சீதாராமன் போனை எடுத்தார்.

"ஹலோ!"

" நான் தான் பேசறேன் மாப்பிள்ளை!"

" சொல்லுங்க மாமா!"

" இந்த தீபாவளிக்கு நீங்க ரெண்டு பேரும் வரவேண்டாம் மாப்பிள்ளை!"

" ஏன் மாமா?"

" சொல்றதுக்கே கொஞ்சம் சங்கடமா இருக்கு மாப்பிள்ள!"

" சும்மா சொல்லுங்க மாமா!"

" அது ஒன்னுமில்ல மாப்பிள்ள! இந்த தீபாவளிக்கு வரச்சொல்லி எங்க ரெண்டு பேரையும் என் மாமனார் கூப்பிட்டிருக்கார். அதான்!"