Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 37 to 48 of 59

Thread: தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை– 25 : ருத்ராக்ஷப்பூனைக்கு...

                  
   
   
 1. #37
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  08 Nov 2010
  Location
  நாகர்கோயில்
  Posts
  1,859
  Post Thanks / Like
  iCash Credits
  38,955
  Downloads
  146
  Uploads
  3
  எனக்கு ஒரு சந்தேகம் உக்கரைனுக்கு கொடுக்க படவேண்டிய பாக்கி தொகையினை இன்னும் வழங்காத அரசு தற்போதுள்ள விலைவாசியில் பெட்ரோல் டீஸல் விலை உயர்ந்துள்ள நிலையில் கோதாவரி ஆற்றுபடுகையில் கச்சா எண்ணினை எடுக்க அனுமதி அளித்துள்ள அரசு அதனை எடுத்து விநியோகம் செய்யும் போது பெட்ரோல் மற்றும் அனைத்து விலைவாசியும் குறையுமே அதனை விடுத்து இது போன்று தனியார் துறைக்கு தரை வார்ப்பது சரியாகுமா? இது தனிப்பட்ட தனிநபரின் வளர்ச்சிக்கு மட்டுமல்லவா உதவும் இதனால் நாட்டின் வளம் எப்படி உயரும்...இந்த சந்தேகத்திற்கு பதில் கிடைக்குமா தோழர் பாரதி மற்றும் இன்னும்பூரான் ஐயா அவர்களே ....
  என்றும் அன்புடன்
  நாஞ்சில் த.க.ஜெய்

  ..................................................................................
  வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
  சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
  ...................................................................................

 2. #38
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  12 Jun 2011
  Posts
  250
  Post Thanks / Like
  iCash Credits
  9,313
  Downloads
  0
  Uploads
  0
  இந்த தொடரில் 14, 15, 16, 17வது கட்டுரைகளில் உங்கள் வினாக்களுக்கு விடை உள்ளன. அவற்றை, மன்றம் விரும்பினால், பதிவு செய்யும்படி திரு. பாரதியை வேண்டுகிறேன். தவணை முறையில் செய்யவும். ஒரேயடியாக போட்டால், யாரும் படிக்க மாட்டார்கள், அன்றொரு நாள் தொடரைப்போல!

  சுருங்கச்சொல்லின்:
  1. தவறுகளின் பரிமாணம், ஒரு தனியார் நிறுவனத்தை மட்டும் குரை சொல்லவில்லை. தனியார் நிறுவனங்கள் மூன்று + அரசு துறை + அமைச்சரகம்,
  2.நமது அரசியலமைப்பு சட்டம்: நீங்கள் எந்த ஷரத்தை குறிப்பிடுகிறீர்கள்?
  3. தணிக்கை துறையின் செயல்பாடுகள் நேர்மையான முறையில் இருப்பது வெள்ளிடை மலை. மாற்றுக்கருத்துக்கள் இருந்தால், கூறுங்கள். தெளிவு படுத்துகிறேன்.
  4. இரண்டாவது இடுகை கூறுவது சந்தேகமல்ல. நல்ல கருத்து. ஆடிட் அதை தான் சொல்லிற்று. ஆனால், இது எல்லாம் வரைவு ரிப்போர்ட். இறுதி ரிப்போர்ட் வந்த பறகு அதையும் அலசலாம்.
  5. திருப்தியா, நண்பரே?

 3. #39
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  08 Nov 2010
  Location
  நாகர்கோயில்
  Posts
  1,859
  Post Thanks / Like
  iCash Credits
  38,955
  Downloads
  146
  Uploads
  3
  2.நமது அரசியலமைப்பு சட்டம்: நீங்கள் எந்த ஷரத்தை குறிப்பிடுகிறீர்கள்?
  இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அரசு நெறிமுறை கோட்பாடு என்ற பிரிவின் சரத்து 36 முதல் 51 வரையிலான பிரிவில் இந்த வரையரைவருகிறது இதில் "ஒரு சிலரின் கைகளில் நாட்டின் செல்வவளம் குவியா வண்ணம் தவிர்த்தல்" என்றிருக்கிறது ...இது ஏதோ தவறுதலாக இடம்பெற்ற தகவமைப்பு போன்றே உள்ளது என்பது எண்ணம் ...
  3. தணிக்கை துறையின் செயல்பாடுகள் நேர்மையான முறையில் இருப்பது வெள்ளிடை மலை. மாற்றுக்கருத்துக்கள் இருந்தால், கூறுங்கள். தெளிவு படுத்துகிறேன்.
  இதில் எனக்கு தோன்றும் எண்ணம் என்னவென்றால் தணிக்கை துறையின் செயல்பாடுகள் மத்திய அரசின் நிர்பந்தத்தால் பாதிக்கபடுகிறது என்பதுதான் ..நான் எவ்வாறு அதனை கூறுகிறேன் என்றால் தற்போதுள்ள நிலையில் ஊடகத்தில் தணிக்கை துறையின் செயல்பாடுகள் அடிபடுவதற்கு காரணம் 2G ஸ்பெக்ட்ரம் மற்றும் சுரங்க வழக்கின் அரசிற்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொகை அதிகம் என்பதால் மட்டுமின்றி எதிர்கட்சியினர் நிர்பந்தத்தால் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது என்பதே என் எண்ணம் .. ஒரு நாளேடுகளில் கண்ட செய்திகளை கூறுகிறேன் இதில் தணிக்கை துறையின் பங்களிப்பு உண்டா என்பது தெரியவில்லை அதாவது இது தணிக்கை துறையின் கீழ்வருமா என்று தெரியவில்லை இருந்தாலும் தெளிவு படுத்துவதற்க்காக கேட்கிறேன் .. ஒரு நபர் வெளிநாடுகளில் ஏதேனும் பொருட்கள் வாங்கினால் அதற்க்கான வரிகளை அரசிற்கு கட்டவேண்டும் என்பது விதி இதில் வாங்கிய தொகையை விட அதிகம் வரி கட்ட வேண்டும் என்பதால் இது போன்ற நிலையில் வரிசலுகை என்ற பெயரில் கார்போரேட் நிறுவனங்களால் அரசிற்கு பெருமளவில் இழப்புகள் ஏற்படுகின்றன இதுபோன்ற வரிசலுகைகள் அளிப்பதன் மூலம் மாதம் நூறு கோடிகளுக்கு மேல் இழப்புகள் ஏற்படுகின்றன என்ற வகையில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன ..அப்படியிருக்க இது போன்ற நிகழ்வுகளில் தணிக்கை துறையின் பங்களிப்பு உண்டா என்பதே தெரியவில்லை அதாவது ஒரு வெளிப்படையான நிலை இல்லை ..இதனை அவசியம் தெளிவுபடுத்தவேண்டும் ஐயா...
  4. இரண்டாவது இடுகை கூறுவது சந்தேகமல்ல. நல்ல கருத்து. ஆடிட் அதை தான் சொல்லிற்று. ஆனால், இது எல்லாம் வரைவு ரிப்போர்ட். இறுதி ரிப்போர்ட் வந்த பறகு அதையும் அலசலாம்.
  நிச்சயமாக ஐயா...
  என்றும் அன்புடன்
  நாஞ்சில் த.க.ஜெய்

  ..................................................................................
  வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
  சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
  ...................................................................................

 4. #40
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  12 Jun 2011
  Posts
  250
  Post Thanks / Like
  iCash Credits
  9,313
  Downloads
  0
  Uploads
  0
  நான் தட்டச்சு செய்த நீண்ட பதில் காணாமல் போய்விட்டது. உங்களால் அதை புனருத்தாரணம் செய்ய முடியுமா?

 5. #41
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  12 Jun 2011
  Posts
  250
  Post Thanks / Like
  iCash Credits
  9,313
  Downloads
  0
  Uploads
  0
  நண்பர் நாஞ்சில்.த.க.ஜெய். கேட்ட கேள்விகள் முக்கியமானவை. சுருக்கமான பதில் இங்கே. மேலும் கேள்விகள் எழுந்தாலும், நல்லதே. தொடர்ந்து, ஒரு ஆக்கப்பூர்வமான விவாதம் வைத்துக்கொள்ளலாம்.
  நீங்கள் சொல்வது ஷரத்து 39 c, ‘that the operation of the economic system does not result in the concentration of wealth and means of production to the common detriment;’
  இதற்கு பின்னணியாக, நமது அரசியல் சாஸன விவாத அவையில் நடந்த பேச்சுக்களை அலசினால், இந்த ‘தர்மசாஸ்திர’ பகுதியின் உபயோகம் புரியலாம். 1950க்கு பிறகு, இன்று வரை நம் அரசியல் நிகழ்வுகள்/ விட்ட குறை/ தொட்ட குறை/ சொல்வதை செய்யாத/ செய்ததை சொல்லாத நடத்தைகளால், எனக்கு ஷரத்து 36-51 உள்ள பகுதி மேல் உள்ள மதிப்பு கணிசமாகக் குறைந்துவிட்டது. எனக்கு வருத்தம் தான், அது பற்றி. அடிப்படை உரிமைகளில் சேரவேண்டியவற்றை ‘ ஆஹா! ஊஹூ!’ என்று இங்கு செய்ய இயலாததை வெட்டிப் பேச்சாக பதிவு செய்ததாக, ஆகிவிட்டது. உதாரணம்: ஆரம்பக்கல்வி. மேலும் 39ஸி க்கு உதட்டளவு மரியாதை கூட கிடைக்கவில்லை. ஆனால், என் இடுகையில் நான் பேசிய விஷயம் வேறு. ஒரே கேள்வி, ‘ஒப்பந்ததின் படி நடந்ததா?’

  2.’தணிக்கை துறையின் செயல்பாடுகள் மத்திய அரசின் நிர்பந்தத்தால் பாதிக்கபடுகிறது என்பதுதான்..’

  ~ கவலையற்க. கடந்த 150 வருடங்களாக, இந்த பாதிப்பு/ தாக்கம் ஏற்பட்டதேயில்லை. நிர்பந்தங்களை புறக்கணிப்பது, தணிக்கைத்துறையில் அடித்தளம். ஏதாவது நிகழ்வு உங்கள் மனதில் இருந்தால் சொல்லுங்கள். பின்னணி விளக்குகிறேன்.

  ‘..எதிர்கட்சியினர் நிர்பந்தத்தால் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது என்பதே என் எண்ணம்..’
  ~ இது பின்விளைவு. கசிவுகளினால் ஏற்பட்டது. கசிவுக்கு தணிக்கைத்துறை காரணமில்லை. பின் வந்த தொடர் கட்டுரைகளில் விளக்கியுள்ள்ஏன். திரு பாரதியிடம், அவற்றை பதிவு செய்ய கேட்டுக்கொள்வோம்.
  வருவாய் துறையை தணிக்கை செய்யக்கூடாது என்பதில் மத்திய அரசு துடிப்பாக இருந்தது. ஆனால், கட்டாயப்படுத்தி, தணிக்கைத் தொடங்கி பல வருடங்கள் ஆயின. நீங்கள் சொன்ன வகையில் தவறுகள் நிகழ்ந்துள்ளன. தணிக்கைத்துறையும் பல்லாண்டு பல்லாண்டுகளாக சாற்றிய குற்றங்கள் பொது மன்றத்தில் உள்ளன. அரசு தான் அசமஞ்சம். எனினும், இன்று தணிக்கைத்துறையின் தொண்டுகளின் பலனாக, பல சீர்திருத்தங்கள் ஏற்பட்டுள்ளன.
  இது வெளிப்படையான நிலை ~50 வருடங்களாக, வருவாய் துறை வரை. மற்றபடி ~150 வருடங்களாக.
  தெளிவு கிடைத்ததா என்று தெரிவிக்கவும்.

 6. #42
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  08 Nov 2010
  Location
  நாகர்கோயில்
  Posts
  1,859
  Post Thanks / Like
  iCash Credits
  38,955
  Downloads
  146
  Uploads
  3
  என்னுடைய சந்தேகங்கள் தீரும் வகையில் பதிலளித்த இன்னும்பூரான் ஐயா அவர்களுக்கு என் நன்றி...இறுதியாக ஒரு கேள்வி கொஞ்சம் வில்லங்கமானது தவறிருந்தால் மன்னிக்கவும் .. இது போன்று தணிக்கை துறையின் மூலம் குற்றம் சாட்டப்படும் வழக்குகளில் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்படும் குற்றவாளிகள் நீண்ட விவாததிற்கு(மக்கள் மனதிலிருந்து மறந்து போகும் வரை ) பிறகு இறுதியில் குற்றம் நிருபிக்க படாமல் குற்றவாளிகள் தப்பிக்கும் நிலை வந்தால் தணிக்கை துறையின் செயல் பாடுகள் என்னவாக இருக்கும் ...அப்படி ஒரு நிலை ஏற்படும் போது அதற்காக செலவிடப்படும் வரி பணத்திற்கு தணிக்கை செய்வதற்கும் ஒரு தணிக்கை குழு அவசியபடுமே ...இவ்வாறு நிகழாமல் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்க பட்டு அவர்களுடைய சொத்துகள் பறிமுதல் செய்ய படுவது சாத்தியமா...மற்றசந்தேகங்களை தொடரினூடே தொடர்கிறேன் ..
  என்றும் அன்புடன்
  நாஞ்சில் த.க.ஜெய்

  ..................................................................................
  வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
  சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
  ...................................................................................

 7. #43
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  12 Jun 2011
  Posts
  250
  Post Thanks / Like
  iCash Credits
  9,313
  Downloads
  0
  Uploads
  0
  பாயிண்ட் மேட்,நண்பரே,
  1. 2ஜி ரிப்போர்ட் வந்த போது, திரு.கபில் சிபல். 'ஆடிட் ரிப்போர்ட் அடிப்படையில் ஒரு அமைச்சரும் ராஜிநாமா செய்ததாக வரலாறு இல்லை என்றார். உண்மை. அவர் மறந்தது: போஃபோர்ஸ் ஆடிட் ரிப்போர்ட் வந்த கையுடன், மக்களால், திரு. ராஜீவ் காந்தி நிராகரிக்கப்பட்டார். என்பது. கபில் சிபல் வாய்க்கு சர்க்கரை போடவேண்டும். அவர் தன் திருவாயை மூடவில்லை; இரண்டு பிரபலங்கள் சிறையில்; இரு அமைச்சர்கள் அவுட். ஒரு பாயிண்ட். ஆடிட்டர் ஜெனெரல் சூப்பர் பார்லிமெண்ட் அல்ல. எனவே இது வரை தப்பித்த குற்றவாளி அரசியலர்களை பற்றி அவர் தவறு ஒன்றுமில்லை. அதிகாரிகள் பலர் கடுமையாக தண்டிக்கப்பட்டு உள்ளனர். பலர் தப்பினர். மன்றம் வேறு. சொத்துக்கள் பறிமுதல் சாத்தியம். அதற்கு அரசின் மனோ திடம் வேண்டும். அந்த ஆளுமையை ஆடிட்டர் ஜெனெரலிடம் அரசியல் சாஸனம் கொடுக்கவில்லை. டா. அம்பேத்காருக்கு அது பிடிக்கவில்லை என்றால் மிகையல்ல. ஆனால், அவரும் தணிந்து போனார். இன்று அல்லாடுகிறோம்.

 8. #44
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  19,600
  Downloads
  62
  Uploads
  3
  ஜெய் அவர்களின் வினாக்களுக்கு விளக்கமாக விடை அளித்ததற்கு திரு.இன்னம்பூரான் அவர்களுக்கு மிக்க நன்றி.

  -----------------------------------------------------------------------
  தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை-14

  இன்னம்பூரான்


  முட்டுக் கட்டையைத் தட்டிப் பிடுங்கும் படலம்.

  சிறு வயதில் செவி வாய் செய்தி: சர்வாதிகாரியான ஹிட்லர், முதல் காரியமாக, ஆடிட்டர் ஜெனரலை டிஸ்மிஸ் செய்தாராம். ஆனால், அவருடன் பழகி வந்த இளவரசர் ஃப்ரெட்றிக் கிருஸ்டியன், அதிபர் மாளிகையின் கழிவறையை மாற்றி அமைக்க, அரசு பணத்தில் கை வைக்கக்கூடாது என்று ஆடிட்டர் ஜெனரல் சொன்னதாகவும், அவரும் கட்டுப்பட்டார் என்று எழுதியிருக்கிறார். அதை விடுவோம். ஒரு பேச்சுக்கு சொன்னேன். இந்தியாவில் ஒரு உதாரணம். மதராஸ் மாகாணத்தின் கவர்னரின் மனைவி லேடி வில்லிங்டன், விதியை மீறி, அவரின் பிரத்யேக ரயில் பெட்டியில் பயணித்தார். கணிசமான அபராதம் கட்ட வைத்தார், அவரின் விருந்தாளியாக வந்த ஆடிட்டர் ஜெனரல். இந்தியாவில் உள்ளதைப் போல், பாகிஸ்தானில் தணிக்கைத் துறைக்கு சுதந்திரம் கிடையாது என்பார்கள். ஆனால், அங்கு அவர் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுகிறார். சீனாவோ சர்வாதிகாரப் போக்குள்ள நாடு. அங்கு இன்றைய பேச்சு: ‘அந்த நாட்டின் பொது செல்வ நிலையின் 27 விழுக்காடு பஞ்சாயத்து, முனிசிபாலிடி போன்ற அரசு அமைப்புகளின் கடன் ($ 1.7. ட்ரிலியன்) என்று ஆடிட்டர் ஜெனரல் சொல்கிறார் என்பதே. தொழில் ரீதியாக, பல நாடுகளின் தணிக்கைத் துறைகளுடன் தொடர்பு இருந்ததால், இதை எல்லாம் எழுதுகிறேன். இன்று பெரிதும் பேசப்படும் ‘முட்டுக் கட்டையை தட்டிப் பிடுங்கும்’ விவகாரத்துக்கு, இது பீடிகை.

  போதாக்குறைக்கு, நமது தலைமைத் தணிக்கை அதிகாரி திரு. விநோத் ராய் அவர்கள் ஜூன் 25 அன்று சிம்லாவில் ஆற்றிய உரை, எரிகிற தீவட்டியில் எண்ணையை விட்டது போல அமைந்து விட்டது; ஒரு சுருக்கம்: இந்தியாவில் தற்காலம் நிலவி வரும் அரசியல் ஆளுமை, அறநெறி, நம்பிக்கைத் தளங்கள் ஆகியவை நேர்மையாக இயங்க, ஆவன செய்யவேண்டும்…இன்றைய உலகளாவிய சூழலில், பாமர இந்தியன் தான் மேடையில் இருக்கவேண்டும்…இன்றைய பிரச்சனைகள் புதியன இல்லை என்றாலும், பளிங்கு நீர் (என் உபமானம்) போல் பொது வாழ்வு இருக்கவேண்டும், தெளிவாக. ஊழலை ஒழித்து, அரசு உருப்படியாக தொண்டு செய்ய வேண்டும்…கடமையிலிருந்து அநேகர் கழண்டு விடுகிறார்கள்…’

  ஹூம்! உள்ளதை சொன்னால் உடம்பு எரியும்! அவருடைய கடமையை பார்ப்போம்.

  நம் அரசியல் சாஸனம் ஆடிட்டர் ஜெனரலின் கடமைகளைப் பட்டியலிடுகிறது: (1971ல் ஆடிட் சட்டம் இயற்றப்பட்டது).
  பாராளுமன்றம்/சட்டசபை ஒதுக்கிய தொகைகள் அந்த, அந்த பணிகளுக்கு மட்டும் செலவிடபட்டனவா?: ஆய்வு செய்க.
  கணக்கு வழக்கு எப்படி வழங்கப்படவேண்டும்?: கூறிடுக.
  மாநில தணிக்கை மேற்பார்வை.
  பொதுக் கணக்குக் குழுவின் நண்பராக, தத்துவப் போதகராக, மார்க்க பந்துவாக, தொண்டு செய்யவும்.
  தணிக்கை அறிக்கைகளை ஜனாதிபதி/கவர்னர் ஆகியோருக்கு அனுப்பவேண்டும். (அவர்கள் பாராளுமன்றத்துக்கு/சட்டசபைக்கு அனுப்புவார்கள்.)
  பாராளுமன்றத்தின் ஏஜெண்ட் அவர் என்க. அவரின் கடமை, பணி, பொறுப்பு அதை சார்ந்ததே.
  இத்தனை சுளுவான சமாச்சாரம் இல்லை, இது. ஆயுள் காப்பீட்டு கழகம், ரிசர்வ் வங்கி, தேசீய வங்கிகள் எல்லாம், சொக்கட்டான் காய் நகர்த்தும் மாதிரி, ஆடிட்டுக்கு வராமல் நழுவின. ஆயுள் காப்பீட்டு கழகம் தான் முதல் பலிகடா; உபயம்: சீ.டி.தேஷ்முக் – நிதி அமைச்சர்.
  நாடாளுமன்றத்திலேயே அவரைச் சாடியது, அக்காலத்து ஆடிட்டர் ஜெனரல், ஏ.கே. சந்தா. கெலித்தது, அமைச்சர். அதனால் தான் ‘வாரிண்டு போகணுமானால் வாரியம் ஆக்கு’ என்ற சொல வடை.
  இன்று நிலைமை படு மோசம். தோராயமாக, வருடா வருடம் 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவு, ஆடிட் செய்யப் படுவதில்லை. ஆகவே, சர்வ வல்லமை நாடாளுமன்றமும், இருண்ட காலத்தில்! 1971ம் வருட ஆடிட் சட்டத்தை, மீள் பார்வை செய்ய வேண்டும் என, கிட்டத தட்ட ஐம்பது வருடங்களுக்கு பிறகு ஆடிட்டர் ஜெனரல் மடலிட, அது ‘கிடப்’ஸில், இரு வருடங்களாக! அவர் கேட்கும் நியாயம்:

  இருபது வருடங்களுக்கு முன் வந்த தாராளமயக் கொள்கையை அவர் குறை கூறவில்லை. அதன் விளைவாக, தணிக்கையிலிருந்து தப்பித்தோடும் செலவுகளை பற்றி அவர் கவலை. விவரங்களும், ஆலோசனைகளும் அவர் கொடுத்தும், காஷ்ட மெளனம்.
  தணிக்கை வினாக்களுக்கு விடை அளிப்பதில் ஏகப்பட்ட தாமதம். தகவல் உரிமை சட்டம் போல, இங்கும் 30 நாட்கள் கெடு, சட்டப்படி விதிக்க வேண்டும் என்கிறார்.

  ஆடிட் ரிப்போர்ட்டுகளை மன்றத்தின் முன் வைப்பதில், அரசுகள் காட்டும் சுணக்கம் மிகவும் அதிகப்படி. வீராணம் ஆடிட் ரிப்போர்ட்டை அன்றைய தி.மு.க. அரசு தாமததித்ததை, இந்திரா காந்தி சென்னையிலேயே பழித்தார். ஆனால், டில்லி மெட்ரோ அறிக்கையை மத்திய அரசு ஒரு வருடம் தாக்கல் செய்யவில்லை. ஆடிட்டர் ஜெனரல், இந்த ‘சேம்ஸைட் கோல்’ விஷயத்தில் சட்டப் பூர்வமான தீர்வு கேட்கிறார்.

  அரசு செலவின் பன்முகம்: தனியாருடன் கூட்டு; பஞ்சாயத்து, மகளிர் மகளிர் இயக்கம் என்றெல்லாம் புதிய, புதிய வகைகளில் செலவு செய்யும், வடிகால் இல்லாத வாய்க்கால்கள்; தன்னார்வக் குழுக்களின் பங்கு இத்யாதி. இவற்றை முறையாக தணிக்கை செய்ய வேண்டிய சட்ட மாறுதல்கள்.

  இந்த கச்சா எண்ணைத் துறை ஆடிட், அரசு கேட்ட பின் 2006ல் தொடங்கி, பல இன்னல்களைக் கடந்து ஆகஸ்ட் 2010ல் ஒரு நிலைக்கு வந்ததாகத் தெரிகிறது. ஆனால், தனியார் ஒப்பந்தக்காரர்களும், மத்திய அரசும் செய்த இழுபறி…!

  ஆடிட்டர் ஜெனரல், பாவம், வாராவாரம் ரிமைண்டர் அனுப்பறார்.
  பார்க்கலாம்.

  தொடரும்....

  பின் குறிப்பு 1: “‘பரமபதசோபானப்படத்தில் பாம்பின் தலையில் கைவைத்து அதலபாதாளத்துக்கு வருவது போல, ரெலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பேனியின் பங்கு விலை 8 விழுக்காடு விழுந்து ரூ. 868.40 க்கு வந்து விட, ஆயிரக்கணக்கான ‘நம்பினோர் பாமரமக்கள்’ உள்பட எல்லாருக்கும் பட்டை நாமம்: ரூ. 24,750 கோடி. காரணம், இந்த வரைவு ஆடீட் ரிப்போர்ட் கசிவு. இதை எல்லாம் கணக்கிடுவது எப்படி சாமி?

  பி.கு.2: இந்த கட்டுரையில் தற்கால நிலைமை சுட்ட, நான் பயன்படுத்தியது, ஹிந்து இதழில் ஜூலை 24, 2011 அன்று வந்த கட்டுரை. காப்புரிமை & நன்றி: ஹிந்து:
  http://www.thehindu.com/todays-paper/article2130489.ece


  பி.கு.3: புது தில்லி, ஜூன் 27: நாடாளுமன்ற பொது கணக்கு குழு செவ்வாய்க்கிழமை கூடுகிறது. அதில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு புகார் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

 9. #45
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  08 Nov 2010
  Location
  நாகர்கோயில்
  Posts
  1,859
  Post Thanks / Like
  iCash Credits
  38,955
  Downloads
  146
  Uploads
  3
  இந்தியாவில் தற்காலம் நிலவி வரும் அரசியல் ஆளுமை, அறநெறி, நம்பிக்கைத் தளங்கள் ஆகியவை நேர்மையாக இயங்க, ஆவன செய்யவேண்டும்…இன்றைய உலகளாவிய சூழலில், பாமர இந்தியன் தான் மேடையில் இருக்கவேண்டும்…இன்றைய பிரச்சனைகள் புதியன இல்லை என்றாலும், பளிங்கு நீர் (என் உபமானம்) போல் பொது வாழ்வு இருக்கவேண்டும், தெளிவாக. ஊழலை ஒழித்து, அரசு உருப்படியாக தொண்டு செய்ய வேண்டும்…கடமையிலிருந்து அநேகர் கழண்டு விடுகிறார்கள்…’
  உண்மைதான் கூறி இருக்கிறார் இந்த உண்மையை கூறுவதற்கான அவரது மனோதைரியம் உண்மையில் பாராட்ட படவேண்டியது ...
  ‘வாரிண்டு போகணுமானால் வாரியம் ஆக்கு’ என்ற சொல வடை.
  பிரச்சனைன்னு வந்தா கமிட்டி போடு ன்னு எவ்வளவு தெளிவா கூறி இருக்காங்க பாருங்க ..
  ஆடிட் ரிப்போர்ட்டுகளை மன்றத்தின் முன் வைப்பதில், அரசுகள் காட்டும் சுணக்கம் மிகவும் அதிகப்படி. வீராணம் ஆடிட் ரிப்போர்ட்டை அன்றைய தி.மு.க. அரசு தாமததித்ததை, இந்திரா காந்தி சென்னையிலேயே பழித்தார். ஆனால், டில்லி மெட்ரோ அறிக்கையை மத்திய அரசு ஒரு வருடம் தாக்கல் செய்யவில்லை. ஆடிட்டர் ஜெனரல், இந்த ‘சேம்ஸைட் கோல்’ விஷயத்தில் சட்டப் பூர்வமான தீர்வு கேட்கிறார்.
  தமக்கு ஆதாயம் வரும் செயல் களில் மட்டும் செயல்பாட்டினை தீவிரபடுத்துவதில் இந்த அரசியல் வாதிகளை மிஞ்ச ஆளில்லை ..
  பரமபதசோபானப்படத்தில் பாம்பின் தலையில் கைவைத்து அதலபாதாளத்துக்கு வருவது போல, ரெலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பேனியின் பங்கு விலை 8 விழுக்காடு விழுந்து ரூ. 868.40 க்கு வந்து விட, ஆயிரக்கணக்கான ‘நம்பினோர் பாமரமக்கள்’ உள்பட எல்லாருக்கும் பட்டை நாமம்: ரூ. 24,750 கோடி. காரணம், இந்த வரைவு ஆடீட் ரிப்போர்ட் கசிவு. இதை எல்லாம் கணக்கிடுவது எப்படி சாமி?
  இது போன்ற ஊக வணிகத்திற்கு தடை விதிக்க வேண்டும் இதன் மூலம் தான் மக்கள் ஏமாறுவது தடுக்க படும் ..
  என்றும் அன்புடன்
  நாஞ்சில் த.க.ஜெய்

  ..................................................................................
  வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
  சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
  ...................................................................................

 10. #46
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  19,600
  Downloads
  62
  Uploads
  3
  தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை: 15

  இன்னம்பூரான்

  விநோத் ஸ்பீக்

  சாணக்யரின் ‘அர்த்த சாத்திரத்தில்’ உள்ள தணிக்கை அறிவுரைகளை ‘ஆசியன் ஜர்னல் ஆஃப் கவர்ன்ட்மெண்ட் ஆடிட்’ என்ற இதழில், நான் அவ்விதழின் ஆசிரியனாக இருந்த காலத்தில் பதிவு செய்திருந்தேன். நல்ல வரவேற்பு. 40 கட்டுரைகளுக்கான வித்து அவை எனலாம். அவற்றை எடுத்துக்காட்டாக அமைத்து, தற்கால தணிக்கை முறைகளை ஒப்புமை செய்ய நினைத்தேன். ஆனால், மற்றொரு தகவல் முன்னுரிமை எடுத்துக் கொண்டது. எனவே, அந்த அறிவுரைகளில் ஒன்றை மட்டும் குறிப்பால் உணர்த்தி விட்டு, வந்த காரியத்தை சொல்கிறேன்.

  “இன்றைய வரவை நாளை கணக்கில் இடுவது குற்றமே.”

  வந்த காரியம்: ஒரு பிரபலம் உரைத்ததை தொகுக்கும் போது, அதை அன்னாரின் பேச்சு என்று பொருள் பட ‘…ஸ்பீக்’ என்பது வழக்கம். இந்தக் கட்டுரை, தற்கால ஆடிட்டர் ஜெனரல் மதிப்பிற்குரிய திரு.விநோத் ராய் அவர்கள் பிரசித்தி பெற்ற ‘அவுட்லுக்’ என்ற ஆங்கில இதழுக்கு அளித்த நேர் காணலின் சுருக்கம். எனவே ‘விநோத் ஸ்பீக்’ என்ற தலைப்பு.

  வினா: அ (அவுட்லுக்)/ விடை: வி: விநோத் ராய்.

  அ: சரமாரியாக உம்மீது தொடுக்கப்படும் கணைகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?
  வி: இது புது கேள்வி! எல்லோரும் ‘ஏன் இன்னார் இன்னார் மீது குறை காண்கிறீர். அடுத்த பலி யாரு?’ என்று தான் கேட்கிறார்கள். கணையேதும் இல்லையே!

  அ: அரசியலாரும், தனியார் நிறுவனத்தாரும், உமது காமன் வெல்த் விளையாட்டு, 2ஜி, கச்சா எண்ணெய் குற்றச்சாட்டுகளுக்குப் பின், உமது திறனுக்கு அப்பாற்பட்டு நீங்கள் இயங்குவதாக, பழிக்கிறார்களே?
  வி: தணிக்கையில் மூன்று விதம் -நிதியைக் கையாண்டது எப்படி?, ஆணைகளுக்கு உகந்த செயல்களா?, அரசு துறைகள் உருப்படியாக இயங்கியனவா? மூன்றாவது வகையை எமது பணியில் அடக்கம் என்று ஜூன் 2006லியே நிதி அமைச்சரகம் கூறியுள்ளது. நீங்கள் சொன்ன மூன்று தணிக்கைகளும் அதில் அடக்கம். பொது சொத்து, தனியார்-அரசு கூட்டுத் துறைகளில் பயன் படுத்தப்பட்டால், நாங்கள் வரத்தானே வேண்டும். ரிலையன்ஸ் கம்பெனியின் கருத்துக்களை நாங்கள் ஏற்கவில்லை என்கிறீர்கள். அமைச்சரகம் கேட்டுக் கொண்டவாறு தணிக்கை செய்தோம். ரிலையன்ஸ் ஆட்சேபித்தனர். வாஸ்தவம் தான். ஒப்பந்ததில் இது போடப் படவில்லை. மூன்று வருடங்கள் கேஸ் நடந்தது. சாதகமான தீர்ப்பு வந்த பின் தான், தணிக்கையே தொடங்கப்பட்டது. அமைச்சரகம் தான் அவர்களுடன் உரியதை பகிர்ந்து, விளக்கம் பெற்றுத் தரவேண்டும்.

  அ: கபில் சிபல் உமது ரிப்போர்ட்டை உதறி விட்டாரே! உங்கள் மீது உள்ள நம்பகத்துவம் பாதிக்கப்பட்டதா?
  வி: இல்லையே. அவர் அதை ‘சரியே’ என்றல்லவா சொல்லியிருக்கிறார். இரு விஷயங்களில் சம்மதம். ஒன்றில் சம்மதமில்லை. முறை கேடுகளைத் தான் சம்மதிப்பதால்தான், விசாரிக்க கமிஷன் அமைத்தார். நஷ்டத்தைப் பற்றித் தான் அவருடைய கஷ்டம். ஆடிட் ரிப்போர்ட்டே, இது விவாதத்துக்குரியது என்று சொல்கிறதே.

  அ: உமது அதிகாரிகள் மீது அரசியல்/ அதிகாரத்துவத்தின் தாக்கம் இருந்ததா?
  வி: லவலேசமும் இல்லை. நாங்கள் எங்கள் வழி செல்வதில் தடை ஏதும் இல்லை.

  அ: 2ஜி/ கச்சா எண்ணைய் ஆடிட் வரைவு ரிப்போர்ட்டுகள் கசிவு பற்றி, உங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்களே!
  வி: அதில் எமக்கு ஆதாயம் என்ன? எங்கள் ஆக்கத்தை அல்லவா அது தாக்குகிறது? நாடாளுமன்றத்தில் வைத்த பின் டிபுடி ஸீ.ஏ.ஜி. ஊடகங்களுடன் பேசுவார். அந்த மின்னலடிப்பதை விட்டு விட்டு, பிட் நோட்டீஸ் விடுவோமா, என்ன?

  அ: அரசுத் துறைகள் பல பட்டறை. இப்போது தனியாருடன் உடன்பாடுகள் வேறு. இதை எல்லாம் தணிக்கை செய்யும் திறன்/ வலிமை/ ஆற்றல் உம்மிடம் உள்ளதா?
  வி: ஆம். திறன் வேண்டும். ராணுவம்/ அணுசக்தி/ சுகாதாரம்/ கல்வி என அனைத்துத் துறைகளிலும். அதற்காகத் தான் அறிமுகக் கூட்டங்கள் - நுட்பங்கள் அறியும் பொருட்டு. எங்கள் வலிமையே, ஆற்றலும், திறனும், ஆக்கமும் மிகுந்தத் தணிக்கைப் படை எங்களிடம் இருப்பது தான். உலகளவில், முதல் மூன்று/ நான்கு இடங்களில் நாங்கள் இருக்கிறோம்.

  அ: இந்தக் கச்சா எண்ணைய் விவகாரத்தில், உமது திறனும், புரிதலும் சர்ச்சைக்கு உள்ளாயினவே?
  வி: எமது துறையின் 14 அதிகாரிகள் மேற்கு ஆசியாவில் இதே ஆய்வுப் பணியில் உள்ளனர். இந்தத் தணிக்கை செய்தவரும் கூட வளைகுடா பிராந்தியத்தில் இதேப் பணியை நான்கு வருடங்களுக்கும் மேல் திறம்படச் செய்தவர். எங்கள் அதிகாரிகளை நேரில் சந்திப்பவர்களுக்கு, எங்களின் ஆழ்ந்த புரிதலின் பேரில் செய்யும் பணியின் ஆற்றல் புரியும்.

  அ: ஆடிட் ரிப்போர்ட்களின் மீதான நடவடிக்கைகள் பற்றி?
  வி: ஒரு கால கட்டத்தில் அவற்றை யாரும் மதித்தது இல்லை. எங்கள் ரிப்போர்ட்டுகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு விளக்கம் வருவது இல்லை என்று, பிரதமர் முன்னிலையில் சொல்லி இருக்கிறேன். இப்போது பரவாயில்லை. ராணுவ அமைச்சரகமும், சுற்றுச் சூழல் அமைச்சரகமும் வழி முறைகளை மாற்றிக் கொண்டது, எனக்கு மகிழ்ச்சியே.

  அ: சட்ட அமைச்சர் மொய்லி அவர்கள், நீங்கள் ‘வருமுன் காப்போனாக’ இயங்குவது இல்லை என்கிறார். ஆடிட் விதிகளை மாற்றினால் உதவுமோ?
  வி: நாங்கள் கேட்ட வரங்கள் மூன்று: ஆடிட் தாமதம் ஏன்? நாங்கள் விளக்கம் கேட்டால், ஒரு நாளில்/ ஒரு மாதத்தில்/ ஆறு மாதங்களில் அதைத் தரலாம். தராமலும் இருக்கலாம்! தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ளது போல், 30 நாட்களில் பதில் போதும். அது வரம் ஒன்று.
  ஆடிட் ரிப்போர்ட்டை ஜனாதிபதி/ கவர்னரிடம் சமர்ப்பிக்கிறோம், அரசியல் சாசனத்தின் 151 வது சரத்துப் படி. அது மன்றத்தில் வைக்கப்பட வேண்டும். இப்போது அமைச்சரகத்திடமே கொடுக்கின்றோம். அவர்கள் இஷ்டப்படி ஒரு மாதம்/ ஆறு மாதம்/ ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறார்கள். இதை மாற்றி, குறிப்பிட்ட கெடு வைக்க வேண்டும் என்று கேட்கிறோம். அது வரம் இரண்டு.
  மூன்றாவதாக, 1971க்குப் பிறகு பஞ்சாயத்து, அரசு-தனியார் கூட்டணி, தன்னார்வக் குழுக்களின் பங்கு எல்லாம் வந்து விட்டன. அவற்றை ஆடிட் செய்வது பற்றி ஒரு தெளிவு வேண்டுமல்லவா! அதை தான் கேட்கிறோம். அது வரம் மூன்று.

  அ: எத்தனை ஆடிட் ரிப்போர்ட்டுகள் நாடாளுமன்றத்தின் முன் வைக்கப் படவில்லை?
  வி: எல்லாமே வைத்தாகி விட்டது. ஆனால், என்னே தாமதம்! – ஒரு வருடம் கூட! அன்றைய அரசுக்கு இஷ்டமில்லை என்றால். இந்தத் தாமதத் தந்திரம் மத்திய அரசில் இருப்பதை விட மாநிலங்களில் அதிகம். மஹாராஷ்டிராவில் ஒன்று, மெட்ரோ பற்றி ஒன்று – ஒரு வருடத்திற்கும் மேல் தாமதம்.

  அ: உமது ஆடிட் ரிப்போர்ட்கள் எந்த அளவுக்கு இறுதி நிலை வரை…?
  வி: பத்து/ஆறு வருடங்களுக்கு முன்னால் படு மோசம். முதற்கண்ணாக, தாமதம்: மக்களுக்கு ஆர்வமிருக்கவில்லை. கணக்கு வழங்கும் முறையும் சரியாக இல்லை. இப்போது படாபட். கணக்கு வழக்கு நிலைப்பாடு வந்து தானே ஆகவேண்டும்.

  அ: உமக்கு தோட்டக் கலையில் ஆர்வம் என்று கேள்வி. உமக்கா அல்லது உமது மனைவிக்கா?
  வி: நான் தான் மாலி: தோட்டக்காரன்.வீட்டில் அவள் ராணி; வெளி உலகில் என் ராஜ்யம். ஏதோ இயற்கைக்கு உகந்த காய்கறி கொடுத்தால் என் கடமை ஒவர்!

  இது அவுட்லுக் இதழில் வந்த நேர் காணலின் தமிழ் சுருக்கம். தமிழாக்கமும், சுருக்கமும் நான் செய்தது. பொறுப்பு எனது. ஆங்கிலத்தில் வந்துள்ள மூலக் கட்டுரையின் காப்புரிமை அவுட்லுக் இதழுக்கே. நமது நன்றி அவர்களுக்கு உரித்ததாகுக. தமிழாக்கத்திற்கு அனுமதி கொடுத்ததிற்கும் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.

  ஒரு நற்செய்தி. இனி ஆடிட் ரிப்போர்ட் பற்றி மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பிரசுரங்கள் வரப் போவதாக செய்திகள் வருகின்றன.

  ஒரு சுவாரசியமானச் செய்தி: திரு. தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்து விட்டார்!

  தொடரும்....

 11. #47
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  19,600
  Downloads
  62
  Uploads
  3
  தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை: 16

  இன்னம்பூரான்


  சமஷ்டி ஆராதனை
  2011 ஜூலை மாதம் 13ம் தேதி அன்று, வரலாறு காணாத வகையில் ஒரு சமஷ்டி ஆராதனை நடந்தது. கச்சா எண்ணெய் கசியுதோ இல்லையோ, அது சம்பந்தமான வரைவு தணிக்கை அறிக்கை கசிந்து விட்டது என்று சொல்லி ஊடகங்கள் புகுந்து விளையாடின. கச்சா எண்ணெய் அமைச்சரகம் கச்சை கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்க முடியவில்லை. இக்கட்டான நிலை. ஒரு கோர்ட் கதை ஞாபகம் வரது. புருசன் அடிக்கிறான் என்று விவாகரத்து கேஸ். இவனோட வக்கீல் பெரிய கை. பலமா சாட்சி வைத்திருக்கிறார். அவளோட வக்கீல் ப்ராக்டிகல். இவனை சாட்சிக் கூண்டில் நிற்க வைத்து, சத்திய பிரமாணம் வாங்கி, கேட்கிறார், ‘நீங்கள் மனைவியை அடிப்பதை எப்போது நிறுத்தினீர்கள்?’ இருதலை கொள்ளி நிலை. என்ன பதில் சொன்னாலும் மாட்டிப்பான். அதுதான் இந்த அமைச்சரகம் நிலைமை. ஆடிட் பண்ணுங்கோ என்று வினயமாக கேட்டதும் இவர்கள். ஆகஸ்ட் 2010லேருந்து பதில் சரியாக கொடுக்காமல் இழுத்து அடிப்பதும் இவர்கள். ஆடிட்டர் ஜெனெரல் திட்ட வட்டமாக சொல்லி விட்டார், கசிவுக்கு அவருடைய துறை காரணமில்லை என்று, பொருத்தமாக. போதாக்குறைக்கு, ஸீ.பீ.ஐ. விரட்டுகிறது. பிரதமரிடம் போய் பதிலளிக்க அவகாசம் கேட்கிறார்கள். அதைக் கொடுத்தால், ஆடிட் ரிப்போர்ட் நாடாளுமன்றத்துக்கு வரத் தாமதம் ஆகும். திரு.முரளி மனோகர் ஜோஷியின் பொதுக் கணக்குக் குழுவின் தலைமை காலாவதி ஆகி விட்டால், தண்டன கட்டலாம் என்று பார்க்கிறார்களா என்று விசாரிக்கிறார்கள். இதற்கு நடுவில் ரிலையன்ஸ் என்னென்னமோ சொல்லிப் பார்த்தது; ஆனால் எடுபடவில்லை.

  இந்த சூழ்நிலையில், 2011, ஜூலை மாதம் 13ம் தேதி அன்று, ஒரு சமஷ்டி ஆராதனை. ரிலையன்ஸ், கைர்ன் இந்தியா, பிரிட்டிஷ் காஸ் என்ற தனியார் கூட்டாளிகளும், அரசின் இத்துறைத் தலைவரும் ஆடிட்டர் ஜெனரலைக் கண்டு பேசினர். பக்கம், பக்கமாக, பதில்கள் பல அளித்தனர்.

  பாயிண்ட்ஸ்:
  ரிலையன்ஸ் கண்டுபிடிப்பு செலவுகளை $2.4 பில்லியன் டாலர்களிலிருந்து, $8.8 பில்லியன் டாலர்களாக ஏற்றியதின் பின்னணி; உலகளவில் ஒப்பிட்டால், நாங்கள் அதிகப்படியாக கேட்கவில்லை எனலாம் என்ற பொத்தாம் படை பதில், ரிலையன்ஸிடமிருந்து, என்று ஊடகச் செய்தி. ரிலையன்ஸ் தகவல் கொடுக்கவில்லை, ஊடகத்துக்கு. அந்த கம்பெனி அதிகாரி பீ.எம்.எஸ். பிரசாத் ஒரு 250 பக்க விளக்கம் அளித்தாராம்.

  பிரிட்டிஷ் காஸ், இங்கிலாந்து கம்பெனி. அவங்களுக்கு தணிக்கை விதிகள் தெரியும். எனவே, ‘ஆடிட்டின் பரிசுத்தம் அறிவோம்.’ என்று சாக்கிரதையாக பேசியுள்ளார், அந்த கம்பெனியின் அதிகாரி வால்டர் சிம்ஸன்.

  கைர்ன் கம்பெனியின் அதிகாரி இந்தர்ஜித் பானர்ஜி அரை மணி நேரம் விளக்கம் அளித்தாராம்.

  தலைமை தணிக்கை அதிகாரியை தனித்து பார்த்து, அரசு அதிகாரி திரு.எஸ்.கே. ஸ்ரீவத்ஸவா, 200 பக்கமுள்ள விடைத் தாள் கொடுத்தாராம்.

  அவர் ஆடிட் ஊகங்கள் தவறு என்றும், செலவுகள் நடந்த பிறகு, உள்ளது உள்ளபடி செய்யப்போவதால், அரசுக்கு நஷ்டமாகாது என்றாராம். (எனக்கு, இது புரியவில்லை.)

  ரிலையன்ஸ் கம்பெனிக்காரங்க, நாங்கள் ஏமாற்றமாட்டோம் என்றார்களாம்.

  ஒரு செயல் நடக்கும் முன் தோராயமாக நாங்கள் சொன்னதை, செயல் நடந்தபின் கிடைத்தத் தகவல் அடிப்படையில் ஆய்வு செய்யலமா என்றார்களாம். இது என்னுடைய சொல்லாக்கம். அவர்கள் இதையே எப்படி சொன்னர்களோ?

  மடியிலே கை போடறமாதிரி, ஆடிட் டிப்பார்ட்மண்ட், செயல்களை திறானாய்வு செய்வது (performance auditing), எல்லை மீறிய செயல் என்றார்களாம். அடேங்கப்பா!

  ஒரு நுட்பம் நோக்கவேண்டும். ரிலையன்ஸ் ஆறு மாதங்கள் எட்டு அதிகாரிகள் எங்களை ஆடிட் செய்தனர் என்றனராம். இந்த பதில்களை அப்போது கொடுத்தார்களா, தெரியவில்லை.

  ஆக மொத்தம், தாமதமாக வந்த இந்த 500 பக்க பதில்களை ஆராய்ந்து ஆடிட் ரிப்போர்ட் பார்லிமெண்ட்டுக்கு வர இரண்டு மாதங்கள் ஆகலாம். வரப் போகும் சபையில் அது தாக்கலாவது துர்லபமே.

  சமஷ்டி ஆராதனை என்று பெயரிட்டதற்குக் காரணம், ‘ ஆடிட்டை தூர விலக்கி வைப்பவர்கள், சமஷ்டியாக ஆராதனைக்கு வந்தது. அதுவும் முதல் தடவையாக.

  என்ன நடக்கிறது பார்க்கலாம்.நால்வர் அளித்த பதில்களும் கசியத் தொடங்கி விட்டன, பூஜை வேளையில் கரடி புகுந்தாற் போல். ‘கசிவு’ மன்னர்கள் யாவர்?”

  தொடரும்....

 12. #48
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  19,600
  Downloads
  62
  Uploads
  3
  தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை: 17

  இன்னம்பூரான்


  இது நிசமா? ஒழுங்கா?
  தற்காலம் இந்தியாவின் தனியார் துறை வலிமை மிகுந்தது. லட்சக் கணக்கான கோடிகள் ரூபாய் புழக்கத்தில். மெகா திட்டங்களில் தனியார் துறை – அரசு கூட்டமைப்புகள். இவற்றை தணிக்கை செய்வது யார்? அவர்களின் வழி முறைகள் யாவை? முறை கேடுகள் உண்டா? இந்த விசயங்களை ஓரளவு புரிந்து கொள்வது நலம். அதுவும், பங்குச் சந்தையில் நடுத்தர மக்கள் வாங்கி, விற்பது அதிகரிக்கும் சூழ்நிலையில். ஒரு சிறிய அறிமுகம்.

  ‘ஆடிட்டர்’ என்ற காரணப் பெயர் தனியார்-துறை தணிக்கை செய்வோருக்கு இருப்பதை பலர் அறிவர். அவர்கள் இதற்கு என்ற சார்ட்டட் அக்கெளண்டண்ட் அமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும். பரிட்சைகள் பலவற்றில் தேர்வு பெற்று அமைப்பின் சம்மதம் பெற வேண்டும். இத் தொழிலுக்கு ஒளி மயமான எதிர்காலம் இருக்கிறது. பள்ளிப் படிப்புடன், இதையும் தொடங்கலாம். இது ஒரு புறமிருக்க…

  கம்பெனி ஆடிட் வழி முறைகளின் தாரக மந்திரம் ஒரு வினா, ‘இது நிசமா? இது ஒழுங்கா?’ கம்பெனிகள் தங்கள் வரவு செலவுகளை பதிப்பது போதாது. தமது தலையீடு இல்லாத வகையில் ஒரு சார்ட்டட் அக்கெளண்டண்ட் மூலம் தணிக்கை செய்ய வைத்து, அவர்களின் அறிவிக்கையையும் இணைக்க வேண்டும். இது சட்டம்.
  பெரும்பாலும், அத்தகைய அறிவிக்கை, ‘இந்த கம்பெனியின் உள் கட்டுப்பாடு திருப்திகரம். எங்கள் வினாக்களுக்கு விடை கிடைத்தது. மேலும் சொல்வதற்கில்லை.’ என்று ரத்ன சுருக்கமாக இருக்கும். ஏதாவது சின்ன ஆடிட் கமெண்ட் இருந்தால் கூட சிக்கல். கேள்விப் பட்டிருப்பீர்கள், ‘ இந்த கம்பெனி கணக்கு வழக்கு (பாலென்ஸ் ஷீட்) காண்பிப்பதை விட மறைக்கும் விஷயங்கள் தான் சுவாரசியம்.’ என்று. இத்தருணத்தில் கேட்க வேண்டிய கேள்வி, ‘இது நிசமா? ஒழுங்கா?’.

  ஒரு ஐஸ்க்ரீம் கம்பெனி ப்ளாட்டிங்க் பேப்பர் எக்கச்சக்கமாக வாங்கிய வண்ணம்! யாராவது இது எதுக்கு என்று கேட்கப் போகிறார்களே, என்று ‘ஆபீஸ் ஸ்டேஷனரியில்’ சேர்த்து விட்டார்கள்: நிஜமும் சொல்லவில்லை. ஒழுங்கும் இல்லை. ஏனென்றால், அதை வாங்கியது, கலப்படத்திற்கு!

  ஒரு மேனேஜிங் டைரக்டர் தபால் தலை சேகரம் செய்பவர். கணிசமான செலவு. கம்பெனி தபால் போக்கு வரத்து செலவில், வருடக் கணக்கில் போட்டு வருகிறார்கள். சொன்னது நிஜம். செய்தது ஒழுங்கீனம்.

  இந்த கம்பெனி சேர்மன் பலே கில்லாடி. அப்பன் செத்துட்டான். சவ அடக்கப் பெட்டியை ‘பாக்கிங்க் கேஸ்’ என்று கம்பெனி கணக்கிலே சேத்துட்டான்!

  நிஜமும் சொல்லவில்லை. ஒழுங்கும் இல்லை. சொல்லப் போனால், முழு பொய். மட்டமான அட்டூழியம், அசிங்கம்.

  இந்த மூன்று ஒழுங்கீனங்களையும், பாலென்ஸ் ஷீட்டில் மறைப்பது எளிது. கம்பெனி ஆடிட்டர் என்ன செய்ய இயலும்? தொழிற் புரட்சி வந்த பின் தான் முதன் முதலாக, இங்கிலாந்திலேயே தனியார் துறை வலுத்தது. கவனமாக, ஆடிட் செய்ய ‘நிஜமா? ஒழுங்கா?’ விதிமுறை வகுக்கப்ட்டது. துல்லியமாக வரவு செலவை பரிசீலனை செய்வதை விட ஆதாரமுள்ள ஆடிட் அபிப்ராயம் முக்கியம் என்ற கருத்து. அமெரிக்காவில், எடுத்த எடுப்பில் கோர்ட்டுக்குப் போகிறார்கள் என்பதால், கறாராக தணிக்கை செய்ய வேண்டியிருந்தது. இந்தியாவில் கலப்படம்; தவிர ஆவணங்களுக்கும், முரண் தவிர்த்தலுக்கும் (avoiding conflict of interest) முக்கியத்வம் குறைவு என்ற தோற்றம்.

  சில நிகழ்வுகளைக் காண்போம்.

  இந்தியாவில் சத்யம் அமைப்பும், ஆடிட்டர்களின் அசிரத்தையும், கூடா நட்பும், வெளிச்சத்தில் வந்தன. என்ரான், வோர்ல்ட்.காம் என்ற மாபெரும் நிறுவனங்கள் வீழ்ந்த பின் தான், பொய்க் கணக்கும், அதற்கு ஆடிட்டர்கள் துணை போனதும் வெளிச்சத்தக்கு வந்தன, அமெரிக்காவில்.

  இங்கிலாந்தில் ஒரு பழங் கதை. ராணுவத்திற்கு தளவாடங்கள் உற்பத்தி செய்த ஒரு குடும்ப நிறுவனம் ஒப்பந்தத்திற்கு மேல் ஆதாயம் பார்த்ததாக, ஆடிட்டர் ஜெனெரல் கூற, அந்த குடும்ப நிறுவனத்தின் பேச்சு எடுபடவில்லை. மிகுந்த பிரயாசையுடன், அவர்கள் கோர்ட்டில் நிரூபித்தது: ஒப்பந்தத்திற்கு மேல் ஆதாயம் பார்த்தது உண்மை. ஆனால், குடும்பம் காலணா எடுத்துக் கொள்ளவில்லை. ஆதாயத்திற்கு மேல் தளவாட ஆய்வுக்கு செலவு செய்ததால், கம்பெனிக்கும், குடும்பத்திற்கும் பெரு நஷ்டம். அந்த அளவுக்கு ராணுவத்திற்க்கு ஆதாயம். அதாவது கணக்கு வழக்கு துல்லியமாக உண்மை கூறாவிடினும், நடத்தை ஒழுங்கு.

  சிக்கலான சான்றுகள் அளிக்கக் காரணம், பின்னணியையும், பிரச்னையையும் குறிப்பால் உணர்த்தவே. இந்தியாவில் இப்போது பெரிய பிரச்னை யாதெனில், தனியார் துறையிடம், உண்மையான, ஒழுங்கு சம்பந்தமான தகவல்களையும், கணக்கு வழக்குகளையும் பெறுவது. அரசை கேட்பது போல், செலவினங்களின் நியாயத்தைக் கேட்பது. இக்காலம், பங்குச் சந்தையில் உலா வரும் கம்பெனிகளில் பெரும்பாலானவையின் உண்மை முதலாளிகள், பரவலான முதலீட்டார்களே. அவர்களின் காவலன் யார்?

  இந்த பத்தியில் தணிக்கை, தணிக்கை என்று படித்து, படித்து, வாசகர்கள் சலித்துப் போய் விட்டதாகத் தோற்றம். இனி, தொல்லை தருவதாக இல்லை. ஒரு ஆடிட் ரிப்போர்ட் வரும் தருணம். அதை படிக்க பலர் விரும்பலாம். உரிய வேளையில், அதைப் பற்றி ஒரு இடுகை. அநேகமாக, அது தான் இறுதி பத்தி. இனி, யாராவது வினா எழுப்பினால் விடை.

  தொடரும்....

Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •