Results 1 to 7 of 7

Thread: NHM-இல் என்ன செட்டிங் செய்து கொள்ள வேண்டும்?

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    புதியவர்
    Join Date
    31 Jan 2006
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    8,973
    Downloads
    0
    Uploads
    0

    NHM-இல் என்ன செட்டிங் செய்து கொள்ள வேண்டும்?

    TAM, TAB, TSCII, Bamini, Unicode ஆகிய எழுத்துக் குடும்பத்திற்கு என்.எச்.எம்.இல் என்ன செட்டிங் செய்து கொண்டால் ஒழுங்காக டைப் செய்ய முடியும் என்று என்னால் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மேற் கூறப்பட்ட செட்டிங்கில் என்ன வகை தமிழ் எழுத்துரு குடும்பங்கள் சரியாக இயங்குகின்றன என்று தெரியவில்லை.


    1. ACES-(NAME)
    2. APT-Sangam (No.siries)
    3. BRH-Tamil (NAME)
    4. ELCOT-(NAME)
    5. GIST-TMOT(NAME)
    6. INDOWB-Tamil-(NAME)
    7. KS_
    8. LT-Graphics
    9. LT-TM-______
    10. LTTAM(NAME)
    11. SM-Tamil-(No. siries)
    12. SUNDRAM (No. siries)
    13. Tamil-(No. siries)
    14. Tamil-(NAME)
    15. TAMIL-(NAME)
    16. TAML(NAME)
    17. TM-(NAME)
    18. TM-TT(NAME)
    19. TML (NAME)


    இவ்வகை எழுத்துருக் குடும்பங்கள் என் கணினியில் இருக்கின்றன. ஆனால் என்.என்.எம்.இல் என்ன செட்டிங் செய்து கொண்டால் இவ்வகை எழுத்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் விளக்கவும்.

    நன்றி

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு நண்பரே,

    நீங்கள் என்.ஹெச். எம் செட்டிங்கில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை! எந்த முறையில் தமிழில் தட்டச்ச விரும்புகிறீர்களோ அந்த முறைமையை மட்டும் உங்கள் ஆங்கில தட்டச்சுக்கு மாறான தேர்வாக கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

    மைக்ரோசாஃப்ட் வேர்ட் அல்லது நோட்பேடை திறந்து கொள்ளுங்கள். என்.ஹெச். எம். ரைட்டரை முடுக்கி விடுங்கள். மேலே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எழுத்துருக்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான தமிழ் தட்டச்சு முறைமையில் தட்டச்சு செய்து பாருங்கள். கணினித்திரையில் எழுத்துக்கள் வரும் முறையைக்கொண்டு நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு எழுத்துருவையும் ஒன்றன் பின் ஒன்றாக நீங்கள் கையாண்டு எந்த தட்டச்சு முறைமையில் அமைந்திருக்கிறது என்பதை நீங்கள் கண்டு கொள்ளலாம்.

    1. நீங்கள் என்ன வகையில் தட்டச்சு செய்கிறீர்களோ அந்த வகை எழுத்துருக்களைத் தவிர்த்து மற்ற தமிழ் எழுத்துருக்களை கணினியில் இருந்து நீக்கி விடுங்கள். அது கணினி சற்று மேம்பட்ட வகையில் பணி செய்ய உதவும்.

    2. உங்கள் வினாவில் இருக்கும் பல எழுத்துருக்களை நீங்கள் சரிவர குறிப்பிடவில்லை. தமிழ் என்ற பெயரில் மட்டுமே நான்கு எழுத்துருக்களை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்! அதை வைத்து நம்மால் தேடுவது கடினம். சரியான பெயரைக் கொண்டு ஒவ்வொரு எழுத்துருவையும் தனியே கூகிளில் தேடிப்பாருங்கள். விடை கிட்டும்.

  3. #3
    புதியவர்
    Join Date
    31 Jan 2006
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    8,973
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    அன்பு நண்பரே,

    நீங்கள் என்.ஹெச். எம் செட்டிங்கில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை! எந்த முறையில் தமிழில் தட்டச்ச விரும்புகிறீர்களோ அந்த முறைமையை மட்டும் உங்கள் ஆங்கில தட்டச்சுக்கு மாறான தேர்வாக கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

    மைக்ரோசாஃப்ட் வேர்ட் அல்லது நோட்பேடை திறந்து கொள்ளுங்கள். என்.ஹெச். எம். ரைட்டரை முடுக்கி விடுங்கள். மேலே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எழுத்துருக்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான தமிழ் தட்டச்சு முறைமையில் தட்டச்சு செய்து பாருங்கள். கணினித்திரையில் எழுத்துக்கள் வரும் முறையைக்கொண்டு நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு எழுத்துருவையும் ஒன்றன் பின் ஒன்றாக நீங்கள் கையாண்டு எந்த தட்டச்சு முறைமையில் அமைந்திருக்கிறது என்பதை நீங்கள் கண்டு கொள்ளலாம்.
    இந்த பரிசோதனையை மேற்கொண்டு விட்டேன். TAB, TAM, TSC, TSCII, Bamini, Unicode ஆகிய எழுத்துருக்களை செம்மையாகப் பயன்படுத்த முடிகிறது. 1 முதல் 19 வரை பட்டியலில் குறிக்கப்பட்டுள்ள எழுத்துருக்களை மட்டும் பயன்படுத்த முடியவில்லை. மேலும் என்.எச்.எம்-இல் வழங்கப்பட்ட Diacratic, Shreelippi, Vanavil, Softview என்ற அணுசரனைக்கு ஏற்ற தமிழ் எழுத்துரு என்ன என்பதை அறியமுடியவில்லை

    Quote Originally Posted by பாரதி View Post
    1. நீங்கள் என்ன வகையில் தட்டச்சு செய்கிறீர்களோ அந்த வகை எழுத்துருக்களைத் தவிர்த்து மற்ற தமிழ் எழுத்துருக்களை கணினியில் இருந்து நீக்கி விடுங்கள். அது கணினி சற்று மேம்பட்ட வகையில் பணி செய்ய உதவும்.
    தட்டச்சுப் பயன்பாட்டோடு என்னுடைய hobby முடிந்து விடுவதில்லை. இணையத்தில் காணக்கிடைக்கின்ற எல்லா தமிழ் எழுத்துருக்களையும் எல்லா கோணங்களிலும் பரிசோதித்து எனது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று (பேர்)ஆசைப் படுகிறேன். அதனால்தான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துருக்களை எனது கணினியில் சேமித்து வைத்திருக்கிறேன். என் கணினி அதனால் திணறுகிறது என்பதை அறிவேன்.

    மேலும் LT-TM- (Indoweb) எழுத்துருக்களை என்.எச்.எம்-அல் டைப்செய்ய முடியவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். எனது தீராத முயற்சி சமீபத்தில் பயன்தந்தது. உதாரணமாக ஏதாவது ஓர் உரையை இந்த எழுத்துருக்களில் காண விரும்பினால், முதலில் யுனிகோர்ட் முதலான மற்ற ஏழுத்துருக்களில் டைப்செய்து பின்னர் இன்டோவெப் எழுத்துருக்களுளுக்கு மாற்றிக் கொள்வேன். இந்த எழுத்துரு மாற்றி மென்பொருளை 4Shared தளத்தில் அதிசயமாகக் கண்டு பிடித்து விட்டேன்.

    Quote Originally Posted by பாரதி View Post
    2. உங்கள் வினாவில் இருக்கும் பல எழுத்துருக்களை நீங்கள் சரிவர குறிப்பிடவில்லை. தமிழ் என்ற பெயரில் மட்டுமே நான்கு எழுத்துருக்களை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்! அதை வைத்து நம்மால் தேடுவது கடினம். சரியான பெயரைக் கொண்டு ஒவ்வொரு எழுத்துருவையும் தனியே கூகிளில் தேடிப்பாருங்கள். விடை கிட்டும்.
    நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் அப்பட்டியலைத் தொகுப்பாகத் தந்தேன். உதாரணமாக, SM-Tamil-(No. Series) என்றிருந்தால், SM-Tamil-01 என்று எடுத்துக் கொள்ளலாம். அதே போல், TM-(NAME) என்று எழுதியிருந்தால், TM-Akila என்று எடுத்துக் கொள்ளலாம். மலேசியாவில் வாழும் எங்களுக்கு இந்தியாவில் நடைபெறும் கணினி தொழில் நுட்ப வளர்ச்சி முழுமையாக அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. உங்கள் நாட்டில் இது தொடர்பாக மேலதிக விபரம் தரமுடியும் என்று நம்புகிறேன்.

    மேலும், தமிழ் எழுத்துருக்கள் தொடர்பான முழுமையான விளக்கக் கட்டுரைகளை எங்கும் காண முடியவில்லை. உதாரணமாக, இந்தியாவில் எந்ததெந்த கணினி நிறுவனங்கள் என்னென்ன தமிழ் மென்பொருள்களை வழங்குகின்றன, அவை பயன்படுத்தும் எழுத்துரு குடும்பம் எதைச் சார்ந்தது, என்னென்ன எழுத்துருக்கள் அவை விநியோகிக்கின்றன, எழுத்துரு மாற்றி (converter) வசதி இருக்கிறதா, சுயேச்சையாக இயக்கலாமா, மற்ற செயலிகளில் இயக்கலாமா போன்ற விபரங்களை ஒரு சேரத் தரும் தளங்களை நான் இன்னும் அறியவில்லை. அப்படி இருந்தால் தயவு செய்து தாருங்கள்.

    நன்றி.

  4. #4
    புதியவர்
    Join Date
    20 Jan 2011
    Posts
    4
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    யூனிகோட் எழுத்துருக்கள் போட்டோஷாப்பிலும் கோரல் ட்ராவிலும் வரவில்லை.உதவவும்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by sun View Post
    யூனிகோட் எழுத்துருக்கள் போட்டோஷாப்பிலும் கோரல் ட்ராவிலும் வரவில்லை.உதவவும்
    இதே பிரச்சனை தான் எனக்கும் உதவ்வும்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #6
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அதற்கு உங்களிடம் unicode supported font இருக்க வேண்டும். NHM மூலம் பதிவதற்கு முன்னர் Arial Unicode MS, Latha போன்ற எழுத்துக்களை தெரிந்துவிட்டு photoshop இல் முயலுங்கள். நிச்சயம் இயலும்.

    இவை இரண்டும் windows உடன் வருபவை. . மேலதிக ஒருங்குக்குறி எழுத்துருக்கள் தேவைப்பட்டால் மேல் இங்கே அழுத்துங்கள்.

    நன்றி அழகி இணையம்.

    ஆதவா கமுக்கமாக இருப்பார். அடிச்சுப்பறிச்சு தகவல் வாங்குவது உங்க பொறுப்பு...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #7
    புதியவர்
    Join Date
    31 Jan 2006
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    8,973
    Downloads
    0
    Uploads
    0
    யுனிகோர்ட் எழுத்துரு குடும்பங்களை நிச்சயமாக அடோபி மென்பொருள் குடும்பங்களில் பயன்படுத்த முடியாது. கோரல் ட்ராவிலும் இந்தப் பிரச்சனை ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கிறல்லை. எனவே, TAM, TAB, TSC, TSCII, Bamini, Indoveb போன்ற எழுத்துரு குடும்பங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யுங்கள். பெரும்பாலும் இதனைப் பயன்படுத்துகிறவர்கள் தங்கள் கோபை இறுதி வடிவமாக JPEG அல்லது மற்ற பட வடிவத்திற்கு மாறிய பிறகுதான் நண்பர்களுக்கு/அச்சகத்திற்கு மின்னஞ்சலில் அனுப்புவார்கள். எனவே, எந்த எழுத்துரு மறுமுனை கணினியில் இருக்கின்றன என்று கவலைப்படத் தேவையில்லை.

    உண்மையில் இந்தப் பிரச்சனை மென்பொருள் வடிவமைப்பு நிறுவனத்தைச் சார்ந்த பிரச்சனை ஆகும். யுனிகோட் தமிழ் எழுத்துகளின் கோளாறு ஆகாது. அடோபி மற்றும் கோரல் குடும்பங்கள் இன்னும் 8 பிட் எழுத்துருக்களை மற்றும் அணுசரிக்கக் கூடியவையாக இருக்கின்றன. அவை இன்னும் 16 பிட் எழுத்துரு பரிணாமத்திற்குத் தங்களை மேம்படுத்திக் கொள்ளவில்லை. யுனிகோட் எழுத்தரு குடும்பங்கள் 16 பிட் எழுத்துருக்கள் ஆகும். 8வது பிட்டுக்கு மேல் அவைகளால் எழுத்துருக்களை அடையாளம் காண முடியாது. எனவே, உங்கள் கணினியில் இவ்வெழுத்துகள் கட்டங்களாக (அ. பெட்டிகளாகத்) தோன்றும்.

    இந்த விளக்கம் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். மேலதிக விளக்கம் வேண்டுமென்றால் எழுதுங்கள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •