Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 13 to 24 of 50

Thread: விருமாண்டி செய்திகள்.

                  
   
   
  1. #13
    Banned பண்பட்டவர்
    Join Date
    17 Feb 2007
    Location
    இந்தியா
    Posts
    208
    Post Thanks / Like
    iCash Credits
    9,441
    Downloads
    0
    Uploads
    0
    நடிகர் வடிவேலு பண்ணை வீடு மீது தாக்குதல்



    சென்னையை அடுத்த படப்பை அருகே நடிகர் வடிவேலுவின் பண்ணை வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.



    படப்பையை அடுத்த புஷ்பகிரி பகுதியில் நடிகர் வடிவேலுவுக்கு மாமர தோப்புடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இங்கு வேலு என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.



    வேலு தனது குடும்பத்துடன் இந்த தோப்பில் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வடிவேலுவின் பண்ணைக்கு வந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், காவலாளி வேலுவிடம் வடிவேலுவின் தொலைபேசி எண்ணைக் கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு அவர், தொலைபேசி எண் தெரியாது என்று கூறியுள்ளார்.



    உடனே மர்ம நபர்கள் வேலுவுடைய செல்போனைப் பிடுங்கி அதில் வடிவேலுவின் நம்பர் இருக்கிறதா என பார்த்தனராம். அதில் நடிகர் வடிவேலுவின் எண் இல்லாததால் செல்போனை
    அவரிடம் கொடுத்த மர்ம நபர்கள், வீட்டின் 6 கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். மேலும் வரும் சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்துவிடவேண்டும் என்றும் இல்லையென்றால் நாங்களே ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என்றும் மிரட்டிச் சென்றுள்ளனர்.



    இதையடுத்து காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Exclamation

    Quote Originally Posted by virumaandi View Post

    நடிகர் வடிவேலு பண்ணை வீடு மீது தாக்குதல்


    காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    பரவாயில்லையே , காவல் துறை செயல்படுகிறதே ............ சென்ற ஆட்சியில் புகார் கொடுக்க சென்றவர்கள் வெறும் கையோடுதான் திரும்புவார்கள் . கொடுக்கும் கேசை எடுத்தால்தானே ...... பரவாயில்லை ஆட்சிமாற்றத்தில் ஒரு நல்ல மாறுதல் தெரிகிறது ............
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  3. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இப்போதிருக்கும் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் தனது சிப்பாயை(வடிவேல் ) பலிகொடுத்து எதிரணியின் மந்திரியை வெட்ட முயல்வது போன்று ஏன் அந்த அணியினரே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு தவறான தகவல்களை பரப்ப கூடாது?...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  4. #16
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13


    நன்றி http://1.bp.blogspot.com/

    நல்லா ஒத்துப்போகுதெல்லே...................
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    மாத சம்பளம் வாங்குபவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை என்னைப் போன்ற சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு கடந்தகால கொடுங்கோல் ஆட்சியாளர்களால் / அவர்களது குடும்பக்கிளைகளால் / அவர்களது கைத்தடிகளால்.. இழைக்கப்பட்ட கொடுமைகள்! நேரில் சந்தித்தால் நிறைய பட்டியலிடுவேன்.. ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கே சொல்கிறேன். திடுதிப்பென்று ஒருநாள் மதுரையில் இருந்து போன்.. “அண்னன் தான் உங்ககிட்ட பேசச்சொன்னார். நீங்க என்ன பண்றிங்கன்னா.. உடனே ஒரு இருபது லட்ச ரூபாய மதுரை ஐ.என்.ஜி.வைஸ்யா பேங்க்ல ஃபிக்சட் டெபாசிட் பண்ணிடுங்க.. என்ன புரியுதா?” என்று மிரட்டியது ஒரு கைத்தடி! நான் பத்திரிகையாளன் என்ற பின்புலமெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. நிர்வாண தேசத்தில் கோவணம் கட்டிக்கொண்டிருப்பது ஆபத்தாயிற்றே! பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து - கொடுக்க வேண்டியதைக் கொடுத்துத்தான் - செய்து கொண்டிடுக்கும் தொழிலைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டாக வேண்டும்! அப்படி ஒருமுறை பார்க்க நேர்ந்தபோது மொபைல் நம்பரை வாங்கிக் குறித்துக் கொண்டார்கள். அண்ணன் அ’னா சொன்னார்.. சு’னா சொன்னார் என அடிக்கடி பேசலானார்கள்! ஃபிக்சட் டெபாசிட் மேட்டர் என்னடா விவரம் என விசாரித்தால்.. ஐ.என்.ஜி.வைஸ்யா வங்கியின் மதுரை கிளைக்கு ஒரே மாதத்தில் 30 கோடி ரூபாய் டெபாசிட் வாங்கித் தருவதாக அண்ணன் அ’னா உறுதிகூறி, அதற்கான கமிஷன் தொகையாக பல கோடி ரூபாயை முன்கூட்டியே வாங்கிக்கொண்டாராம்! உள்ளூரில் தொழில் செய்யும் எல்லோரையும் அதட்டி - உருட்டி - மிரட்டியே அந்த 30 கோடி ரூபாயை டெபாசிட் பண்ண வைத்தார்கள். கடனை உடனை வாங்கி ஃபிக்சட் டெபாசிட் செய்தார்கள் அப்பாவிகள் பலரும். அந்த அளவுக்கு அராஜகம் தலைவிரித்து ஆட்டம் ஆடிய மதுரையில் உதிக்காத சூரியன் ஒரு சீட்டைக்கூட பிடிக்காமல் மண்ணைக் கவ்வியது என்போன்ற சொந்தத் தொழில் செய்பவர்களுக்கெல்லாம் தவுசன்வாலா பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டிய சந்தோஷம். தி.மு.க. மீண்டும் ஆறாவது முறையாக ஆட்சிக்கு வரவேண்டும் என அடம்பிடித்துக் குரல் கொடுத்த - ப்ரஃபைல் படத்திலேயே உதய சூரியனைப் போட்டுக்கொண்டு வடம் பிடித்த இணைய நண்பர்களுக்கெல்லாம் அன்போடு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான்யா தெரியும்! இந்தமுறையும் அவனுக ஆட்சிக்கு வந்திருந்தானுங்கன்னா தமிழ் நாட்டை அந்த ஆண்டவானால மட்டுமில்லை.. எவனாலயும் காப்பாத்தியிருக்க முடியாது!

    நன்றி : டி.செல்வம், திருநெல்வேலி. தினமலர்.காம்,

    இது நான் கேள்விப்படும் பல அராஜகங்களில் ஒன்று... இதற்கு முன்னர் கேள்விப்பட்டதும், பார்த்ததும் எல்லாமே உண்மையாக இருக்க, இதுவும் கட்டுக்கதையாக இருக்க வாய்ப்பில்லை!!! நடந்திருக்கு சார்....
    Last edited by ஆதவா; 18-05-2011 at 07:54 AM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #18
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நிச்சயமா நடந்திருக்கு ஆதவா...என் கதையே அதற்கு ஆதாரம்...நான் விரிவாகப் பிறகு உண்மைச் சம்பவங்களில் சொல்கிறேன். அங்கு உண்மையை மட்டுமே சொல்ல முடியுமென்பதால்.....
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அடடே... தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தானா.. இது நாள் வரை இது தெரியாமப் போச்சே..

  8. #20
    Banned பண்பட்டவர்
    Join Date
    17 Feb 2007
    Location
    இந்தியா
    Posts
    208
    Post Thanks / Like
    iCash Credits
    9,441
    Downloads
    0
    Uploads
    0
    மு.க.அழகிரி
    திருமண மண்டபம் மீது தாக்குதல்








    மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான ‘’தயா’’ திருமண மண்டபம் மீது நேற்று நள்ளிரவில் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.



    மண்டபத்தின் காவலாளி ஓடிவந்து துரத்தியுள்ளார். ‘’நாங்க அதிமுக காரங்கடா...உங்கள சும்மா

    விடமாட்டோம்டா...’’ என்று சத்தம்போட்டு ஓடியதாக காவலாளி கூறியுள்ளார்.




    நடிகர் வடிவேலு வீடு தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், அழகிரியின் திருமண மண்டபமும் தாக்கப்பட்டுள்ளது. மேலும், அழகிரியின் ஆதரவாளர்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடந்து வருகிறது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதுரை திமுக பிரமுகர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த தாக்குதல் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

  9. #21
    Banned பண்பட்டவர்
    Join Date
    17 Feb 2007
    Location
    இந்தியா
    Posts
    208
    Post Thanks / Like
    iCash Credits
    9,441
    Downloads
    0
    Uploads
    0
    அழகிரி ஆதரவாளர் பொட்டுசுரேஷ் வீடு மீது தாக்குதல்



    மதுரையில் முக்கிய திமுக பிரமுகரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு நெருக்கமானவருமான சுரேஷ் பாபு என்கிற பொட்டு சுரேஷ் வீடு மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.




    அதிமுக தரப்பினர்தான் இந்த தாக்குதல் நடத்தியது என்று அழகிரியிடம் முறையிட்டுள்ளார் பொட்டு சுரேஷ். நடிகர் வடிவேலு வீடு மற்றும் பண்ணை வீடு மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வேளையில் பொட்டு சுரேஷ் வீடு மீது தாக்குதல் நடந்துள்ளதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    பொட்டு சுரேஷை தொடர்ந்து மதுரையில் மற்ற திமுக பிரமுகர்கள் வீடு மீதும் தாக்குதல் தொடரலாம் என்பதால் அவர்களின் வீடுகளில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

  10. #22
    Banned பண்பட்டவர்
    Join Date
    17 Feb 2007
    Location
    இந்தியா
    Posts
    208
    Post Thanks / Like
    iCash Credits
    9,441
    Downloads
    0
    Uploads
    0

    தலைமைச் செயலகத்தை ஜார்ஜ் கோட்டைக்கு இடமாற்றம் செய்ய தடை விதிக்குமாறு ஐகோர்ட்டில் வழக்கு

    *தலைமைச் செயலகத்தை ஜார்ஜ் கோட்டைக்கு இடமாற்றம் செய்ய தடை விதிக்குமாறு
    ஐகோர்ட்டில் வழக்கு*



    புதிய தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து ஜார்ஜ்
    கோட்டைக்கு இடமாற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு
    தொடரப்பட்டுள்ளது.


    சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில்
    கூறப்பட்டு இருப்பதாவது:


    சென்னையில் 1640ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.
    300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோட்டைதான் அதிகார மையமாக செயல்பட்டு வருகிறது.
    பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இந்த கோட்டை, அரசு அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு
    வருகிறது.


    அரசுக்கு தேவையான முக்கிய அலுவலகங்கள் அனைத்தையும் இந்த கோட்டைக்குள் கொண்டு
    வரமுடியவில்லை என்பதால் ராணிமேரி கல்லூரி அமைந்துள்ள இடத்தில் அனைத்து
    வசதிகளையும் கொண்ட புதிய தலைமை செயலகத்தை கட்ட முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த
    ஆட்சியில் முடிவு செய்தார்.


    இதுசம்பந்தமாக சட்டசபை விதி 110 ன் கீழ் சட்டசபையில் அறிவிப்பை அவர்
    வெளியிட்டார். 110 ம் விதியின் கீழ் வெளியிடப்பட்டதால் அந்த அறிவிப்பை பற்றி
    யாரும் விவாதிக்க முடியாது.


    ஜார்ஜ் கோட்டையில் அரசு அலுவலகங்கள் இயங்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையை
    பராமரிப்பதற்கே கோடிக்கணக்கில் செலவிட வேண்டியதிருப்பதாலும், அங்கு போதிய
    இடவசதிகள் மற்றும் நவீன வசதிகள் இல்லை என்பதாலும் தலைமைச் செயலகம் இடமாற்றம்
    செய்யப்படுவதாக காரணம் கூறப்பட்டது.


    இந்த நிலையில் 2006ம் ஆண்டு புதிய ஆட்சி அமைந்தது. சரியான வசதிகளைக் கொண்ட
    தலைமைச் செயலகத்தை அமைப்பதற்காக ஓமந்தூர் அரசினர் தோட்டத்தை அந்த அரசு தேர்வு
    செய்தது. இதற்காக அந்த பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த கலைவாணர் அரங்கம்
    இடிக்கப்பட்டது.


    ஆங்கிலேய கவர்னர் கன்னிமாரா பிரபு 1890 ம் ஆண்டு தொடங்கி வைத்த 118 ஆண்டுகள்
    பழைய கட்டிடத்தில் இயங்கும், சென்னையிலேயே முதல் போலீஸ் நிலையமான
    திருவல்லிக்கேணி போலீஸ் நிலையமும் அகற்றப்பட்டது.


    அந்த இடத்தில் ரூ.450 கோடிக்கு மதிப்பிடப்பட்டு, ரூ.1,100 கோடி செலவில் புதிய
    தலைமைச் செயலகம் கட்டி முடிக்கப்பட்டது. பிரமாண்டமான விழாவில் திறந்து
    வைக்கப்பட்ட அந்த கட்டிடத்தில் தலைமைச் செயலகம் மட்டுமல்ல, சட்டசபையும்
    இயங்குகிறது,


    இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதைத்
    தொடர்ந்து, தலைமைச் செயலகத்தை மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கான
    நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இதற்காக கோட்டை புதுப்பிக்கப்படுவதாகவும்
    பத்திரிகைகளில் செய்திகள், படங்கள் வெளியாகியுள்ளன.


    ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை இயங்கி வந்த இடத்தில், பழைய அரசால் நூலகம்
    அமைக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்தையும் மாற்றுவதற்கான நடவடிக்கைகள்
    எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் புத்தகங்கள் பாழாகின்றன. செய்திகளைப்
    பார்க்கும்போது, புதிய தலைமைச் செயலகத்தை அப்படியே கைவிடுவதற்கு இந்த அரசு
    முடிவெடுத்திருப்பது தெரிகிறது.


    இது சட்டவிரோதமான, அங்கீகாரமற்ற, பொதுமக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கையாகும்.
    பல கோடி பணத்தை போட்டு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை அப்படியே விட்டுவிடுவது
    சரியான செயல்பாடு அல்ல.


    தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வதற்காக இந்த தேர்தல் நடத்தப்படவில்லை. அதை
    இடமாற்றம் செய்வதுபற்றி தமிழக அரசு முடிவெடுக்கவில்லை. தலைமைச் செயலகத்தை
    இடமாற்றம் செய்வதற்கு யார் அதிகாரம் அளித்தது? என்பதை தலைமைச் செயலாளர்,
    பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோர் விளக்க வேண்டும்.


    புதிய தலைமைச் செயலகத்தில் செயல்படுவது சரிதான் என்று அரசு எடுத்திருந்த
    முடிவு, திடீரென்று மாறுவதற்கு என்ன காரணம் என்பதற்கும் அதிகாரிகள் விளக்கம்
    அளிக்க வேண்டும்.


    எனவே இந்த மனு மீதான விசாரணை முடியும்வரை, புதிய தலைமை செயலகத்தையும்,
    சட்டசபையையும் ஜார்ஜ் கோட்டைக்கு இடமாற்றம் செய்யத் தடை விதிக்க வேண்டும்.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  11. #23
    Banned பண்பட்டவர்
    Join Date
    17 Feb 2007
    Location
    இந்தியா
    Posts
    208
    Post Thanks / Like
    iCash Credits
    9,441
    Downloads
    0
    Uploads
    0

    திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி புத்தகங்களை அழிக்க உத்தரவிட்டதாக தகவல்?

    திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி புத்தகங்களை அழிக்க உத்தரவிட்டதாக தகவல்?







    முந்தைய திமுக அரசு மாணவர்கள் நலன் கருதி கொண்டுவந்த சமச்சீர் கல்வி புத்தகங்களை அழிக்க அதிமுக அரசு உத்தரவிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் புதிய புத்தகங்கள் கிடைக்க தாமதம் ஆகும் என்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அத்துடன் பலகோடி ரூபாய் அரசு பணம் வீணடிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.



    திமுக அரசு கடந்த ஆண்டு 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்த கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வந்தது. இணையதளங்களிலும் புத்தகங்கள் வெளியாகி உள்ளன.



    இந்நிலையில் திடீரென சில பகுதிகளில் சமச்சீர் கல்வி புத்தக விநியோகத்தை நிறுத்துமாறு அரசிடமிருந்து வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் செம்மொழி மாநாடு மற்றும் முதல் அமைச்சராக இருந்த கலைஞரின் வாழ்க்கை வரலாறு ஆகியவை இருப்பதால், இதை நீக்குவதற்கு உத்தவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



    ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை அழிக்கவும் உத்தரவு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் புதிய புத்தகங்கள் கிடைக்க தாமதம் ஆகும் என்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.



    பல லட்ச ரூபாய் செலவழித்து தமிழக அரசு தயாரித்த புத்தகங்கள் அழிக்கப்படுவதால் அரசுப் பணம் வீணக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  12. #24
    Banned பண்பட்டவர்
    Join Date
    17 Feb 2007
    Location
    இந்தியா
    Posts
    208
    Post Thanks / Like
    iCash Credits
    9,441
    Downloads
    0
    Uploads
    0

    மு.க.அழகிரி திருமண மண்டபம் மீது தாக்குதல்

    மு.க.அழகிரி திருமண மண்டபம் மீது தாக்குதல்








    மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான ‘’தயா’’ திருமண மண்டபம் மீது நேற்று நள்ளிரவில் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.



    மண்டபத்தின் காவலாளி ஓடிவந்து துரத்தியுள்ளார். ‘’நாங்க அதிமுக காரங்கடா...உங்கள சும்மா

    விடமாட்டோம்டா...’’ என்று சத்தம்போட்டு ஓடியதாக காவலாளி கூறியுள்ளார்.




    நடிகர் வடிவேலு வீடு தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், அழகிரியின் திருமண மண்டபமும் தாக்கப்பட்டுள்ளது. மேலும், அழகிரியின் ஆதரவாளர்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடந்து வருகிறது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதுரை திமுக பிரமுகர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த தாக்குதல் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •