Results 1 to 4 of 4

Thread: ஒரு கைப்பிடி இரவு!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் ரசிகன்'s Avatar
    Join Date
    23 Apr 2008
    Location
    Birmingham , UK
    Age
    38
    Posts
    171
    Post Thanks / Like
    iCash Credits
    9,625
    Downloads
    0
    Uploads
    0

    Red face ஒரு கைப்பிடி இரவு!

    யுத்த களத்தின்
    புழுதியில் நசுக்கப்படுகிறது
    என் இரவுகள்!

    சுட்டெரிக்கும் நிலவில்
    பரிமாறப்படும் நிழலில்
    நீ நீயாக காட்சியளிப்பதில்லை எனக்கு!

    மந்திரக்காரியாகவே
    தந்திரங்களை முன் வைக்கிறாய்!
    சுவாரசியங்களை கவிதை எழுதுகிறாய்!
    நிர்வாணமாகிறது எனதறை!

    நிபந்தனையோடு
    கரையத் தொடங்குகிறாய்...
    வெற்றியில் பாதியும்
    தோல்வியில் பாதியும் எனக்கு!

    அச்சத்தின் வாடையோடு
    களமிறக்கப்படுகிறது
    கூர் தீட்டப்பட்ட வாளோடு புரவி!
    *
    ரசிகன்
    -------
    "என் மனித வாழ்வில் நிரந்தரம் என்று எதுவுமில்லை... உன் நினைவை தவிர!" - ரசிகன்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    கூர்தீட்டப்பட்ட வாளோடு புரவி...
    வாளேந்தப் போவது யாரோ...

    உணர்வுகளின் பெருக்கத்தில்
    குறுகிப் போகும் இரவு...

    இந்த இரவு குறுகிப்போனதற்கான
    உணர்வு புரியாமல் நான்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    வெற்றிதோல்வியில் சரிபாதி
    என்றானபின் வீண்யுத்தம் எதற்கு?
    சமரசமாகிவிடுங்களேன்,
    சாத்தானோடும், இரவுகளோடும்!

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் கலாசுரன்'s Avatar
    Join Date
    31 Jan 2011
    Posts
    115
    Post Thanks / Like
    iCash Credits
    9,960
    Downloads
    0
    Uploads
    0
    சுட்டெரிக்கும் நிலவில்
    பரிமாறப்படும் நிழலில்
    நீ நீயாக காட்சியளிப்பதில்லை எனக்கு!


    இந்த வரிகளில் பயணித்த எனக்கு பிரம்மிப்பே உருவானது ...!!!
    நல்ல சொல்லாடல்


    மந்திரக்காரியாகவே
    தந்திரங்களை முன் வைக்கிறாய்!
    சுவாரசியங்களை கவிதை எழுதுகிறாய்!
    நிர்வாணமாகிறது எனதறை!



    நிர்வாணமாக்கப்படும் கவிஞனின் அறை மிகுந்த ஒரு தாக்கத்தை தந்தது சதீஷ்...!

    இவ்வகை போர்களில் திருப்தி வரவே வராது தான் அதனால் அது தொடரட்டும்

    வாழ்த்துக்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •