Results 1 to 4 of 4

Thread: தாயை காதலிக்கிறேன்!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் selvaaa's Avatar
    Join Date
    10 Apr 2011
    Location
    படுகை
    Age
    42
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    14,874
    Downloads
    0
    Uploads
    0

    தாயை காதலிக்கிறேன்!

    ஆங்கில வார்த்தையான "love" என்ற ஒன்று வந்ததும் வந்தது... நீ காதலிக்கிறாயா எனக் கேட்டால்?

    உடனே !

    நான் என் தாயைக் காதலிக்கிறேன்
    தங்கையை காதலிக்கிறேன்
    நண்பனை காதலிக்கிறேன
    நாய்க் குட்டியை காதலிக்கிறேன்

    என அடிக்கிக் கொண்டே போக ஆரம்பித்துவிட்டனர்.

    ஆனால், எனக்கு ஒர் பலத்த சந்தேகம்!!!!!!!!!!

    நம் தமிழ் மொழியில் அவ்வாறு எங்கேனும்... தாயை/தங்கையை காதலிக்கிறேன் என்ற வார்த்தையை பழம் தமிழில் உபயோகப் படுத்தியிருக்கிறார்களா?

    love என்ற வார்த்தை அன்பையும் குறிக்கும். ஆகையால் "I love my mother" என்பது வேண்டும் என்றால் தவறில்லாமல் இருக்கலாம். ஆனால், காதலிக்கிறேன் என்பது சரியா?

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஆதியில் சொற்கள் கொண்ட வீச்சு பெரிது.

    பாதியில் அவை பொருந்திக்கொண்ட களங்கள் சிறியன..



    ஆதியில் நாற்றம் -= மணம். ( பொன்மலர் நாற்றமுடைத்து)

    துர்நாற்றம் - கெட்ட வாசம்.

    இப்போது இணையின் கூந்தல் நாற்றமுடைத்து எனச் சொன்னால்
    பூங்காற்று வீசக்கூடும் பூந்துடைப்பத்தால்..



    -----------------------------

    காமமும் அக்காலத்தில் அன்பு, விருப்பம் என்னும் பொருளில்..

    கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.

    இன்று அப்படி எழுதினால் வேறு பொருள் கொள்ளக்கூடும்.

    -------------------------------------------

    பக்தியும் காதல்தான் அக்காலத்தில்

    காதலாகிக் கனிந்து கண்ணீர் மல்கி.......


    இக்காலத்தில் அது ஒரு தனித்துவ அன்புறவின் தனிச்சொல்லாக பரிணமித்துவிட்டது.

    ----------------------------------------------------


    நேசிக்கிறேன் என்பது மட்டுமே இன்னும் பொதுவில் இருக்கிறது.

    அன்பிக்கிறேன், பாசிக்கிறேன் என மேலும் பொ(பு)துச்சொற்கள் தேவை??/!!!!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அழகான ஏற்புடைய விளக்கம். நன்றி இளசு அவர்களே...

    பூங்காற்று வீசக்கூடும் பூந்துடைப்பத்தால்....

    இவ்வரிகளை வாசித்து நீண்டுவிட்ட என் இதழ்களை இன்னும் நிலைக்குக் கொண்டுவரமுடியவில்லை என்னால்!

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் selvaaa's Avatar
    Join Date
    10 Apr 2011
    Location
    படுகை
    Age
    42
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    14,874
    Downloads
    0
    Uploads
    0
    பழந்தமிழ் கேட்டதனால் தான் என்னவோ!
    புரியாத பாட்டன் தமிழில் கூறிவிட்டீர் - இங்கு
    பாமரன் பாடு திண்டாட்டம்

    "பாடறியேன் படிப்பறியேன்
    பள்ளிக்கூடம் நான் அறியேன்" என்ற

    பாடல் தான் நினைவுக்கு வருகிறது!!!

    Last edited by selvaaa; 27-04-2011 at 05:01 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •