புதுக்கட்சி புதுமையாக எதற்கோ புள்ளி வைப்பது புரிகின்றது...
தொடர்கோலமாகட்டும்...
புதுக்கட்சி புதுமையாக எதற்கோ புள்ளி வைப்பது புரிகின்றது...
தொடர்கோலமாகட்டும்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
கட்சியும் நல்லா இருக்கு கொள்கையும் நல்லா இருக்கு ஆனால் செய்படுத்த சொன்ன வழிகள் தான் டவுட்டா இருக்கு சீனா மடியில கைய வச்சா அவன் நேரடியா குண்டு போடுவான் பாக்கிஸ்தான் மடியில கைய வச்சா அவன் மறைமுகமா குண்டு வெடிக்க செய்வான் (ஏன் பங்களாதேஷ் ஷீரிலங்காவை விட்டுட்டீங்க)
நம்ம ஆளுகளுக்கு எப்பவுமே நம்ம ஆளுக மடியில தான் கையை வக்க தெரியுமே.
இடையிடையில் நல்ல கருத்துகளையும் சொல்லி வர்ரீங்க பாராட்டுகள்.
அதே சமயம் நீங்களே தொடர்ச்சியாக பின்னூட்டம் போடுவதை தவிர்த்துவிடுங்கள். மேலிரு ந்து கீழ வர ஸ்க்ரோல் செஞ்சு பாத்தீங்கனா நான் சொன்னதில் அர்த்தம் புரியும்.
கலக்குங்க எனக்கும் அப்பா அம்மா மகன் மகள் மனைவி அன்னன் தம்பி ஆக 10 பேர் இருக்கோம் அதனால் எங்களுக்கு அன்டார்ட்டிக்காவுலயாச்சும் 100 ஏக்கர் இலவசமா கொடுங்க கட்சி சந்தா எல்லாம் கடன் வச்சுக்கங்க என் பேரன் வ ந்து செட்டில் செஞ்சிடுவான்.
பயப்படாதீங்க ..தைரியமா சந்தாவை கெட்டுங்க...அப்புறம் எல்லாம் தானாக நடக்கும்
உங்களது கோரிக்கைக்கு இணங்க தொடரில் உள்ள எனது அனைத்து பதிவுகளையும் பார்த்தேன்.. நேற்று அதி அதி அதி காலை .03 Am -ல் பதிவு தொடங்கப்பட்டுள்ளது...பின்னர் தூங்கி எழுந்ததும் பார்த்தால் இரண்டு பின்னூட்டம்.. இது என் திரி அல்லவா, ஆகையால் இருவருக்கும் பதில் கொடுப்பது அல்லவா நியாயம்.
பின்னர் என் பணிக்கு சென்றுவிட்டு மதியம் வந்து எனது திரிக்கு தேவையான கருத்து எண்ணெய் ஊற்றினேன்.
மீண்டும் நடு இரவில் ஒருவரின் பின்னூட்டம் பார்த்தேன்... அவர்க்கும் பதிலிட்டு திரியை ஒளிர செய்தேன்.
அப்புறம் தூங்கியாற்று...
காலையில் 7. ** AM வந்ததும் திரிக்கு எண்ணெய் ஊற்ற வேண்டாமா? அதனையும் செய்தேன்....
பணிக்கு சென்றுவிட்டு மதியம் வந்து பார்த்தால்.. ஒர் பின்னூட்டம்.. அவருக்கும் உடனே பதில் கொடுப்பது தானே என் கடமை!
அட இன்று "சர்வதேச புவிநாள்" , இதை தெரிந்த பின்னரும்.. அதுவும் இவ் "புதுக் கட்சி"க்கு சம்பந்தமான நிகழ்வை பகிராவிட்டால் .. இந்த திரி தேவையே இல்லையே... ஆகையால் அதனையும் உடனே கட் செய்து போட்டேன்...
இது தவறா?
ஒருவர் நம்முடன் பேசும் பொழுது அவர்க்கு உடனே பதில் கொடுப்பது தவறா?
கடிதத்திற்கு பதில் கடிதம் கொடுப்பது தானே முறை?
பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் கொடுத்து பேசாவிட்டால் எதற்கு களம்? வலைப்பூ போதுமே?
எப்பாடி பத்து பேர் கிடைச்சிட்டாங்க... அது சரி சந்தா கெட்ட இவ்வளவு இ-பணம் வச்சிக்கிட்டு பேரனை கை காட்டுகிறாரே??????
இவர் பெரிய ***************![]()
அலங்கோலமாக்கிடாது, வேடிக்கை மட்டும் பார்க்கலாம் என்ற எண்ணம்தான்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
இக்கருத்தை என் களத்தில் கூட தொடராமல் இங்கு தொடர்கிறேன்... ஏன் தெரியுமா? இங்கு நூறு நிகர்நிலை உறுப்பினர்கள், அதுவும் என்னைவிட சிறப்பானர்கள் பலர் இருக்கின்றனர். ஆகையால், புள்ளி வைத்தால் கோடு போடுவார்கள், கோலம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம் என்று தான் தொடங்கினேன்.
ஆனால், என்னையே கசக்கி பிழிந்திடுவீர்கள் போலிருக்கிறதே!
பார்ரா....இங்கேயும் இலவசமா? இலவசம்னா..உறுப்பினர் சேருவான்கோன்னு அவ்வளவு நம்பிக்கையா? உன்னை சொல்லி குற்றமில்லை....காலம் செய்த கோலமடி...பொழைச்சி போங்க.... பார்க்கலாம்.... வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்.
நன்றி...
தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும்அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765
பின்னூட்டத்திற்க்கு பின்னூட்டன் போடுவதை நான் தவறு என்று சொல்லவில்லை. தொடர்ச்சியாக உங்க பதிப்புக்கு பிறகு அடுத்த பின்னூட்டம் வரும் வரை நீங்க போட வேன்டாம் என்று தான் சொன்னேன்.
உதாரனம் இத்திரியில் நீங்கள் அப்படி தொடர்ச்சியாக இடைவெளி இல்லாமல் பதித்தது.
4,5,6
8,9
11,12
15,16
இதை குறைத்து கொள்ளுங்கள் என்று சொல்கிறேன். ஒரே பதிப்பில் மு ந்தைய பின்னூட்டங்கள் அனைத்துக்கும் பதில் சொல்லி விடுங்கள் (மல்டி கோட் மூலம்)
ஒரு கட்சி ஆரம்பிச்சா கட்சிக்கு நிதி தொன்டர்கள் கொடுப்பது அந்த காலம் கட்சி நடத்தறவங்க தான் வாக்காளருக்கு பணம் கொடுக்கறது தான் இப்பத்த பேசன் காம்பிடீசன் சாஸ்தியாக இருக்குல்ல அடுத்த கட்சி ஆரம்பிக்கறதுகுள்ள நிலம் பட்டுவாடா செஞ்சுருங்க
நிலவில் ஒரு 20 ஏக்கர் ஒதுக்கி கொடுத்தா கூட போதும் ஹீலியம் எடுத்து 20 தலைமுறைக்கு சொத்து சேத்திக்கலாம்.
![]()
சிரிக்கனும் இலவசம் பார்த்து
சிந்திக்கனும் சந்தா கெட்டுவதற்கு
செயல்படனும் நிலத்தை அடைவதற்கு
சரிங்க வாத்தியாரே! ஆனால், இது கதையல்ல. கோலம் போட பதியப்படும் "புதிய கட்சி" யின் புள்ளிகள். ஆகையால், இத்திரி பின்னூட்டம் இல்லாவிட்டாலும் ... போதிய நேரத்தில் அடுத்த புள்ளியாய் புதிய பின்னுட்டம் இடப்படும். கொஞ்சம் பொறுத்துக்குங்க, இல்லைன்னா சொல்லிடுங்க!
அவங்க சம்பாதிக்க அவங்க முதலீடு பண்றாங்க! சரி. உங்க வாழ்க்கையை சம்பாதிக்கனும்னா, யாருங்க முதலீடு செய்யனும்?
மக்களை வாழவைக்க வேண்டும்! இன்றே நிலவுக்கு அனுப்பி கொலை செய்வது அல்ல!
நீயா வாழ்றதுக்கு இடத்தை தயார் படுத்திக்கோ அல்லது இயற்கை நம்மை வாழத் தகுதியற்றவனாய் மாற்றிவிடும்.
சிந்திக்க ஒர் சின்ன பகிர்வு:
உலகம் இதுவரை இரண்டு உலகப் போர்களை சந்தித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மன், இங்கிலாந்து உட்பட ஏராளமான நாடுகள், இந்தப் போர்களில் பங்கேற்றன. நிலத்திற்காகவும், அதிகார பலத்தை நிரூபிக்கவும் மட்டுமே இவை நடந்தன. 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த பின்னர், எந்த நாடுமே பெரிய அளவில் சண்டைக்கு தயாராகவில்லை. ஆனால் மூன்றாவதாக ஒரு உலகப் போர் ஏற்படப் போவதாக வரலாற்று ஆசிரியர்களும், நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுவும் உணவுக்காக போர் என்பது பெரிய கொடுமை. தங்கள் நாட்டில் ஏற்படும் உணவு பஞ்சத்தை தீர்ப்பதற்காக எல்லா நாடுகளும் இந்த யுத்தத்தில் ஈடுபடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒவ்வொரு நாடும் வளர்ச்சி அடைவதற்காக பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. தொழில் துறையில், பண பலத்தில் தன்னிறைவு பெருவது மட்டுமே வளர்ச்சி என்று நினைத்து, அதற்காக கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இதற்காக அவர்கள் முதலில் அழிப்பது விவசாய நிலத்தையும், இயற்கை வளங்களையும்தான். நாட்டின் வளர்ச்சிக்காக இன்று இயற்கையை அழிக்கும் நாடுகள், வரும் காலங்களில் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க உள்ளன. விவசாய நிலங்களின் அளவு குறையும்போது உணவு உற்பத்தியும் தானாகவே குறைந்து விடும். இதனால் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும். நவீன விவசாயம் மூலம் உற்பத்தியை பெருக்கினாலும், இயற்கைக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்படும். இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலைக்கு ஒரு கிலோ அரிசி விற்கப்படும். அதையும் கொடுக்க மக்கள் தயாராக இருந்தாலும் அரிசி கிடைக்காது. இந்த நிலை அரிசிக்கு மட்டுமல்ல, அனைத்து உணவுப் பொருட்களுக்கும்தான். இதுபோன்ற நிலை வரும்போது மக்கள் அனைவரிடமும் தங்கம் அதிகமாக இருக்கும். ஆனால் உணவுப் பொருட்கள் இருக்காது.
இப்போது மிகப்பெரிய பிரச்னைகளாக பேசப்படும் அணுசக்தி, எரிபொருள் போன்றவை அனைத்து நாடுகளிடமும் இருக்கும். ஆனால் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாது. இதை நம்புவதற்கு நமக்கு தயக்கம் ஏற்பட்டாலும், இந்த நிலை வரும் என்கின்றனர் நிபுணர்கள். அப்படி ஒரு நிலை ஏற்படும்போது உணவுக்காக பிற நாடுகளுடன் போரிட வேண்டிய கட்டாயத்திற்கு அரசாங்கம் தள்ளப்படும்.
தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கும் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளும், பெட்ரோல் போன்ற எரிபொருள் வளம் மிகுந்த அரபு நாடுகளும் 90 சதவீதத்துக்கும் அதிகமான உணவு பொருட்களை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கின்றன. இந்த நாடுகளில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்ய முடியாது. இயற்கையும் அதற்கு ஒத்துழைக்காது. உணவு பொருட்களை உற்பத்தி செய்த இந்தியா போன்ற விவசாய நாடுகளும் தற்போது தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறது. இதனால் விவசாயம் தடைபடும்போது, உற்பத்தி பாதிக்கப்பட்டு ஏற்றுமதியும் தடைபடும். இதனால் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வதை இந்த நாடுகள் நிறுத்தும்போது, இதனால் பாதிக்கப்படும் வளர்ந்த நாடுகள், இந்த நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும்.
இயற்கையாகவே உள்ள விவசாய நிலங்களை வறண்ட நிலமாக மாற்றுவதற்கு 2 வாரங்கள் போதும். ஆனால் வறண்ட நிலத்தை விவசாய நிலமாக மாற்றுவதற்கு பல ஆண்டுகள் உழைக்க வேண்டும். இதையும் வரும் காலங்களில் செய்ய முடியாத அளவிற்கு இயற்கை மாறி விடும். இதை உணராமல் விவசாய நிலங்களையும், வனங்களையும் இன்றைய தேவைக்காக அழித்து வருகிறோம்.
ஆசியா, ஆப்ரிக்காவில் அதிக பாதிப்பு
உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள், ஆசிய கண்டத்தில் வசிக்கின்றனர். உணவு தட்டுப்பாட்டால் அதிகம் பாதிக்கும் நாடுகளும் ஆசியாவில்தான் இருக்கும்.
ஆப்ரிக்காவில் 40 சதவீத விவசாய இடங்கள் முற்றிலும் காணாமல் போய்விட்டது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ஆப்ரிக்கா கண்டத்தில் 2025ம் ஆண்டில் 25 சதவீத மக்களுக்கு மட்டுமே உணவு பொருட்கள் கிடைக்கும் என்று கானா நாட்டில் உள்ள யூ.என்.யூ என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
மீண்டும் காலனி ஆதிக்கம்
வளர்ந்த நாடுகள், பிற நாடுகளில் நிலங்களை வாங்கி பயன்படுத்துவதால் மீண்டும் காலனி ஆதிக்கம் ஏற்படும் என ஜேக்யூ டயோப் என்ற வரலாற்று ஆசிரியர் எச்சரித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘‘தங்கள் நாடு வறுமையில் வாடும்போது, வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் மட்டும் உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும். இதனால் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டு உணவு பொருட்களை கைப்பற்றுவார்கள். இந்த பிரச்னை வளர்ந்து போரில் முடியும். பின்னர் வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு மக்களின் தேவைக்காக ஏழை விவசாய நாடுகளை ஆக்கிரமிக்கும் போரில் ஈடுபடும். வெளிநாடுகளில் லீசுக்கு இடங்களை வாங்கியுள்ள அரபு நாடுகள், அதற்கு பதிலாக பெட்ரோல், காஸ் போன்ற எரிபொருட்களைதான் கொடுக்கின்றனர். பண்டைய காலங்களில் வணிகம் செய்ய வந்த இங்கிலாந்து நாட்டினர், இதேபோல பண்டமாற்று முறையில்தான் நாட்டையே அடிமைப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக வங்கி எச்சரிக்கை
உணவுப் பொருட்கள் விலை ஆபத்தான அளவிற்கு உயர்ந்து வருகிறது. மளிகை பொருட்களுடன் காய்கறி விலைகளும் உயர்ந்து விட்டதால், கடந்த 7 மாதத்தில் மட்டும் வளரும் நாடுகளில் 4.4 கோடி பேர் வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இது கவலை அளிக்கும் செய்தி என்று உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜோலிக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலும் லீசுக்கு இடம்
அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் (ஆம்வே) இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நிலங்களை பல ஆண்டுகளுக்கு லீசுக்கு எடுத்துள்ளது. இங்கு விவசாயம் செய்து அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு சோப்பு, முக அழகு கிரீம், டூத் பேஸ்ட் மற்றும் வாசனை திரவியங்களை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்கிறது.
கருகிப்போன பூமி பந்து
1969ம் ஆண்டு நிலாவுக்கு சென்ற நீல்ஆம்ஸ்ட்ராங், நிலாவில் இருந்து பூமியை பார்க்கும்போது பச்சை நிற பந்துபோல தெரிகிறது என்றார். ஆனால் இப்போது விண்வெளிக்கு சென்று திரும்பியவர்கள், தீயில் கருகிப்போன பந்து மாதிரி பூமி தெரிகிறது என்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இயற்கையை வேகமாக அழித்து வருகின்றன.
வெளிநாட்டில் வாடகைக்கு விவசாய இடம்
சவுதிஅரேபியாவில் விவசாய நிலங்களே இல்லை என்பதால், ஆப்பிரிகா கண்டத்தில் உள்ள கென்யா என்ற ஏழை நாட்டில் பல லட்சம் ஹெக்டேர் நிலங்களை லீசுக்கு எடுத்துள்ளன. அங்கு விவசாயம் செய்து அதில் கிடைக்கும் உணவு பொருட்களை தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்கின்றன. ஆசியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் இடையில் உள்ள மடகாஸ்கர் தீவை தென்கொரியா லீசுக்கு எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டு, அதிலிருந்து பயோ ப்யூல் தயாரித்து தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்கின்றனர். உக்ரைனில் 2.5 லட்சம் ஹெக்டேர் நிலங்களை லிபியா லீசுக்கு எடுத்துள்ளது. இதேப்போல, சூடான், எத்தியோப்பியா, எகிப்து, கசகஸ்தான், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள விவசாய இடங்களை வெளிநாடுகளுக்கு லீசுக்கு கொடுத்துள்ளன. இதேப்போல பல அரபு நாடுகள் வெளிநாடுகளில் இடங்களை வாங்கி விவசாயம் செய்கின்றன. மேலும் பல நாடுகள் வெளிநாடுகளில் இடங்களை வாடகைக்கு பிடிக்க மிகப்பெரிய திட்டங்களை தயாரித்துள்ளன.
60 லட்சம் குழந்தைகள் பலி
அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய இரண்டும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு அடிப்படைக் காரணம். விலை 2 சதவீதம் கூடும்போது ஒவ்வொரு முறையும் ஒரு சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்படுகின்றனர் என்று யுனிசெப் அறிவித்துள்ளது. உணவு பொருட்களின் கடுமையான விலை உயர்வு, தட்டுப்பாடு மற்றும் வறுமையால் உலகில் ஆண்டுக்கு 60 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர். ஒரு நாளில் மட்டும் 17 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர். 80 கோடி பேர் சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ‘யுவான்’ என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்
இறைவனை பின் தொடர்ந்து செல்ல நினைத்தால் தெரிவது தெய்வம்
தெய்வம் உன்னை பின் தொடர்ந்து வர நினைத்தால் இல்லை இறைவன்
அவசியமான ஒரு பிரச்சினை புள்ளியிடப்பட்டிருக்கின்றது.
ஐரோப்பிய நாடுகளின் மிகச் சாதாரணமான குடும்பம் ஒன்றின் சாப்பாட்டு மேசையிலிருந்து வீணாக எறியப்படும் உணவுகளின் விலையில்,
ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் சில பல குடும்பங்கள் வயிறார உண்ண முடியுமே என நான் அங்கலாப்பதுண்டு.
ஆனால், இது தொடர்பான சங்கடங்களோ, விழிப்புணர்வுகளோ யாரிடமும் இருப்பதில்லை.
அடுத்து வரப்போகின்ற சந்ததிகளுக்கு நாம் விட்டுச் சில்லப்போகும் மிகப்பெரும் சீரழிவாக,
உணவு நெருக்கடி அமையும் என்பது வருந்தத்தக்க, தவிர்க்கவேண்டிய விடயமே.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அவசியமான ஒரு பிரச்சினை புள்ளியிடப்பட்டிருக்கின்றது.
ஐரோப்பிய நாடுகளின் மிகச் சாதாரணமான குடும்பம் ஒன்றின் சாப்பாட்டு மேசையிலிருந்து வீணாக எறியப்படும் உணவுகளின் விலையில்,
ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் சில பல குடும்பங்கள் வயிறார உண்ண முடியுமே என நான் அங்கலாப்பதுண்டு.
ஆனால், இது தொடர்பான சங்கடங்களோ, விழிப்புணர்வுகளோ யாரிடமும் இருப்பதில்லை.
அடுத்து வரப்போகின்ற சந்ததிகளுக்கு நாம் விட்டுச் சில்லப்போகும் மிகப்பெரும் சீரழிவாக,
உணவு நெருக்கடி அமையும் என்பது வருந்தத்தக்க, தவிர்க்கவேண்டிய விடயமே.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks