Results 1 to 4 of 4

Thread: மல்டிமீடியா

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0

    மல்டிமீடியா

    அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .

    இன்றைய கல்வி துறையில் மல்டீமீடியா கல்வி முக்கிய அங்கம் வகிக்கின்றது . இத்துறையானது மிகப் பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது . எனவே மாணவர்கள் இக் கல்வியை கற்க ஆர்வம் காட்டுகிறார்கள் .

    இத் துறையில் வேலை வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது . இதன் காரணமாக இந்த மல்டீமீடியா கல்வியை கற்று தரும் கல்வி நிறுவனங்கள் மிகப் பெரும் தொகையை கல்விக் கட்டணமாக வசூலிக்கிறது . இந்த கல்வி நிறுவனங்களை , யார் அணுகினாலும் , "மல்டீமீடியா கல்வியை பயின்றால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் "என்றே அவர்களிடம் ஆசை வார்த்தை கூறுகின்றன .

    என் சந்தேகம் என்னவெனில் ,உண்மையிலேயே மல்டீமீடியா கல்விக்கு தகுந்த வரவேற்ப்பும் , வேலை வாய்ப்பும் உள்ளதா ? இல்லை கல்வி நிறுவனங்கள் பொய்யாக இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி பணம் வசூலிக்கின்றனவா ?

    மல்டீமீடியா கல்வியின் உண்மை நிலை என்ன ? இதை படித்தால் தகுந்த சம்பளத்துடன் வேலை கிடைக்குமா ?

    விபரம் தெரிந்தவர்கள் கூறுங்கள் . நீங்கள் கூறும் தகவல் அனைவருக்கும் பயன் உள்ளதாக அமையும்

    மிக்க நன்றி
    யாவரும் வாழ்க வளமுடன்

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    நண்பர்களே , மல்டிமிடியா பற்றி தகவல்கள் யாருக்கும் தெரியாதா !?

    தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கப்பா
    யாவரும் வாழ்க வளமுடன்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    ஆத்மா,

    உங்கள் கேள்வி சரியானதே ஆனால் கண்ணோட்டத்தை மாற்றவேண்டும். இன்றைய இந்திய பொருளாதார நிலைமையிலும், உலக பொருளாதார நிலைமையிலும் எந்த ஒரு துறையையும் உறுதியிட்டு சொல்ல முடியாது.

    இது உங்களை தளர்த்தும் நோக்கத்தில் சொல்லவில்லை உண்மை என்பதால் சொல்கிறேன் தவறாக கொள்ள வேண்டாம்.

    இன்று மென்பொருள் துறை நன்கு வளர்ந்துவந்தாலும் வளர்ச்சி உள்ள அளவுக்கு போட்டியும் உண்டு. நீங்கள் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் ஆனால் அதில் நீங்கள் எந்த அளவுக்கு உங்களை வளர்த்துகொண்டு தனித்தன்மையாய் இருந்து அதை நிருபிக்றீர்களோ அதைப்பொருத்துதான் உங்கள் வேலை வாய்ப்பும் வருமானமும்.

    மல்டிமீடியாவை பொறுத்தவரை 2D, 3D, மாயா, போன்றவற்றில் நல்ல வாய்ப்புகள் உள்ளன இன்றைய சினிமாத்துறையில் மல்டிமீடியவுக்கு நல்ல வரவேர்ப்பு உண்டு. அதேபோல் வீடியோ கேம்ஸ் தயாரிப்பு நிறுவங்களும் இதையே முதன்மையாக செயல்படுத்துகின்றன. இன்னும் நன்கு விசாரித்து, நிதானமாக யோசித்து முடிவு செய்யவும்.

    நீங்கள் கூறுவதுபோல் சில கல்வி நிறுவங்களும், தனியார் பயிற்சி நிறுவங்களும் இதுபோல் மிகைப்படுத்தும் விளம்பரங்களை செய்வதுண்டு. அனைத்தையும் நம்பிவிட வேண்டாம்.
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    உள்ளதை உள்ளபடியே உணர்த்திய நண்பர் நிவாசுக்கு நன்றிகள் பல
    யாவரும் வாழ்க வளமுடன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •