நாம் அறிந்த செய்திகளை மன்றவாசிகளுக்கும் அறியக்கொடுக்க இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

நமது மன்றம் ஒரு செய்திதளம் அல்ல. எனவே இங்கே பதியப்படும் செய்திகளில் ஊளைச்சதை தேவை இல்லை. செய்திகள் துளிகளாக இருந்தால் போதும்.

எடுதுக்காட்டாக...

“விஜய்காந்த் விருதகிரியில் போட்டி” என்ற தலைப்பின் கீழ் விலாவாரியாக எழுதி இருப்பார்கள். அந்த விலாவாரிகள் நமக்குத் தேவை இல்லை. தலைப்பாகிய விலாவரியே போதும்.

எனவே செய்திகளை அறியத் தர விரும்புவோர் “செய்திதுளிகள்” என்ற பொதுத் தலைப்பிலோ, ஆதனின் செய்திதுளிகள், ஆதவக் கதிர்ச் செய்திகள், அமரனின் செய்திதுளிகள் போன்ற பிரத்தியேகமான திரியிலோ தொடர்ந்து தரலாம்.

இப்படித் துளியாகத் தருவதுக்கு எதுக்கு செய்திச்சோலை எனத் தனிப்பிரிவு..?!

செய்திகளைப் படித்து விட்டு தமது நடையில் எழுதி எழுத்துவன்மையை மேம்படுத்த விரும்புவோருக்கு..

தேர்தல் முடிவுகள் போன்ற விளக்கமாக, விபரமாகத் தந்தே தீர வேண்டும் என்ற கட்டாயச் செய்திகளைப் பகிர்வதுக்கு..

புரிதலுடன் நடப்போம்.