Results 1 to 7 of 7

Thread: மனம் திறந்து உங்களோடு (சித்திரை2011)

                  
   
   
 1. #1
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  40
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  299,500
  Downloads
  151
  Uploads
  9

  மனம் திறந்து உங்களோடு (சித்திரை2011)

  இனியவர்களே!

  எப்போதும் சல சல என சங்கீதம் பாடி ஓடிக்கொண்டிருக்கும் மன்றம் கொஞ்ச நாட்களாக சலசலப்பைக் கண்டுள்ளது. அதனைத் தவிர்க்கும் பொருட்டு உங்களுடன் மனம் திறந்து...

  எல்லா வகைப் பறவைகளும் களிக்கும் இடமாக இருக்க வேண்டும் என்பதே மன்றத்தின் விருப்பம். அதே நேரம் தனித்தன்மையுடன் திகழவேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளது நமது மன்றம்.

  அந்த வகையில் மன்றம் ஒரு பல்பொருள் வழங்கியாக மிளிர வேண்டும் எனும் நல் நோக்கத்துடன் இணையத்தில் சேகரித்ததை மன்றத்துடன் பகிர்வோரை மன்றம் மகிழ்ச்சியுடன் உற்சாகப்படுத்துகிறது.

  அவ்வெண்ணம் அழகியல் கலந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்போரை மன்றம் மகிழ்ச்சியுடன் மெச்சுகிறது.

  நகலெடுத்துப் பதிதல்...

  வெட்டி ஒட்டுதல்...

  இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.

  நகலெடுத்தல் என்றால் ஈயடிச்சான் காப்பி்.

  வெட்டி ஒட்டல் அப்படி அல்ல.

  பெரிய மரங்களிலிருந்து ஒரு சிறு கிளையை வெட்டி வேறிடத்தில் நாடுவதைப் போன்றது வெட்டும் ஒட்டும் பதிவு.

  விதையை எடுத்து மனதில் பதியன் போட்டு நிலத்தில் விதைப்பதைப் போன்றது ஒட்டும் பதிவு.

  ஒட்டுமரங்களைப் போன்றும் இருக்கலாம் ஒட்டும் பதிவு.

  இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மன்ற மக்களின் கருத்தாடல்களைக் கவனித்ததில் மன்றம் அனுமதிக்காத எதனையும் எவரும் செய்யவில்லை என்பது புலனாகிறது.

  ஒட்டுப் பதிவுகள் பற்றிய தெளிவின்மை பலரைப் பிடித்திருப்பது தெளிவாகிறது.

  தெளிவுகளைக் கொடுக்க வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு. அதனை மன்றப் பிரிவுகள் வாரியாகச் செய்யத் துவங்கியுள்ளோம்.

  ஒவ்வொரு மன்றப் பிரிவிலும் எப்படியான பதிவுகள் இடப்பட்டல் வேண்டும் என்ற வரையறை கொடுக்கப்படும். அனைவரும் அதனைக் கடைப்பிடிப்போம்.

  தவறுகள் காணுமிடத்து தவறாமல் உணர்த்துவோம்.

  நன்றி.

 2. #2
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  173,726
  Downloads
  39
  Uploads
  0
  அவசியமான நேரத்தில் அவசியமான அறிவுறுத்தல்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
  Join Date
  18 Mar 2010
  Location
  தாய்த்தமிழ்நாடு
  Posts
  2,949
  Post Thanks / Like
  iCash Credits
  15,795
  Downloads
  47
  Uploads
  2
  நிச்சயமாக
  த.நிவாஸ்
  வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

 4. #4
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  41
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  65,965
  Downloads
  100
  Uploads
  0
  புரிதல் தரும் பதிவு. அவசியமான பதிவு.

  மன்றத்தின் தனித்துவம்தான் மன்றத்தின் வளர்ச்சிக்கான உந்துதல்...

  தனித்துவம் பேணுவோம்.
  புரிதல்களுடன் ஒன்றென வளர்வோம்.., மன்ற வளர்ச்சியுடன்...

  அண்மைக் காலங்களில் எனது பதிவுகள், எவருக்கேனும் சங்கடம் தந்திருந்தால்,
  இப்பதிவினூடாக வெளிப்படையாக மன்னிப்பைக் கோருகின்றேன்..,
  எப்போதுமே யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலோ,
  வேறெந்தக் காழ்ப்புணர்ச்சியாலோ நான் எந்தப் பதிவையும் இடவில்லை என்று உறுதியுடன் கூறி...

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

 5. #5
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  08 Nov 2010
  Location
  நாகர்கோயில்
  Posts
  1,859
  Post Thanks / Like
  iCash Credits
  36,185
  Downloads
  146
  Uploads
  3
  சரியான நேரத்தில் இன்றைய குழப்பநிலையில் தேவைப்படும் அவசியமான தகவல்...நிச்சயமாக தொடர்வோம் மன்றத்தின் அறிவுறுத்தல் படி....
  என்றும் அன்புடன்
  நாஞ்சில் த.க.ஜெய்

  ..................................................................................
  வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
  சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
  ...................................................................................

 6. #6
  புதியவர் மீனா's Avatar
  Join Date
  01 Jan 2009
  Posts
  12
  Post Thanks / Like
  iCash Credits
  5,044
  Downloads
  0
  Uploads
  0
  சரியான நேரத்தில் சரியான அறிவுறுத்தல் நிச்சயமாக தொடர்வோம்

 7. #7
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
  Join Date
  04 Sep 2009
  Posts
  1,295
  Post Thanks / Like
  iCash Credits
  27,514
  Downloads
  0
  Uploads
  0
  கட்டுப்ப்டுகிறேன்.
  சொ.ஞா.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •