Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 28

Thread: சூர்யாவும் நானும்

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    சூர்யாவும் நானும்

    பென்சிலை எப்படிப் பிடிப்பது
    என்றும் அறிந்திராத வயதில்
    அநேக சித்திரம் வரைந்து
    அடிக்கடி என்முன் நீட்டுவான்,
    என்ன இது கண்டுபிடியென்றொரு
    புதிரையும் முன்வைத்து.

    கொக்கிபோல் துவங்கியிருந்த
    ஒரு கிறுக்கல் பந்திலிருந்து
    கோணல்மாணலாய் இழுக்கப்பட்ட
    சில கோடுகளைக்கொண்டு
    ஏதேனும் ஒரு மிருகமாய் கற்பனை செய்தேன்.

    தூக்கிய தும்பிக்கையுடன் யானையோ…
    கழுத்துநீண்ட ஒட்டகசிவிங்கியோ…
    கட்டாயமாய் இரண்டில் ஒன்று என்றேன்.
    அவன் விரித்த விழிகளுடன் என்னைப் பார்த்து
    அம்மா! இது நம் வீட்டு நாற்காலி என்றான்.

    அடுத்தடுத்த முறைகளிலும்
    அவன் உருவகித்தவற்றை
    அடையாளங்காண இயலாமல்
    முகம் சோரவைத்தேன்.

    நீயே சொல்லடா என்றால்
    நீதான் கண்டுபிடிக்கணும் என்று
    நித்தமும் போராட்டம்.

    பழகப்பழக அவன் பாஷை புரிந்தது.
    அவன் வரையும் கோடுகளுக்கும்…
    வளைவுகளுக்கும்… ஏன், புள்ளிகளுக்கும்
    அர்த்தம் கண்டுபிடித்துவைத்தேன்.

    அவனுடைய ஓவியங்களை மேயும்
    என் கண்களையே பார்த்திருப்பவனின்
    கண்களை மகிழ்ச்சியில் மின்னச்செய்தேன்.

    அவனுடைய உலகத்தின் சன்னலுக்குள்
    அவ்வப்போது எட்டிப்பார்த்ததன் விளைவாய்
    சிலந்திமனிதனையும், வெளவால் மனிதனையும்,
    ஏலியன்களையும் பென்டென்னின் தசாவதாரங்களையும்,
    இரும்புமனிதனையும், இன்னும் சில பிரபலங்களையும்
    எளிதில் இனங்கண்டு இன்ப அதிர்ச்சி அளித்தேன்.

    இப்போதும் வரைகிறான்.
    யாரென்று கேட்டு அதே விளையாட்டை
    இன்னமும் தொடர்கிறான்.

    அவன் சொல்லும்வரை
    கோஸ்ட் ரைடர்களையோ...
    ஸ்கேர் க்ரோக்களையோ...
    டேர்டெவில்களையோ...
    சிவப்பு மண்டையோட்டுக்காரனைப்பற்றியோ..
    உண்மையிலேயே எனக்கு
    எதுவும் தெரிந்திருக்கவில்லை.
    வில்லன்களுக்கும் விசிறியானவனை
    விசித்திரமாய்ப் பார்த்து வியக்கிறேன்.

    அவன் உலகத்துடனான என் பந்தம்
    எப்போது கட்டவிழ்ந்தது என்ற
    விவரம் தெரியாமல் விழிக்கிறேன்.
    வளர்ச்சி விகிதத்தில் அவனைவிடவும்
    வெகுவாய்ப் பின்தங்கிவிட்டேன் என்ற
    உண்மை எனக்கு உறைக்க...
    எவ்விதத் தயக்கமுமின்றி என் அறியாமையை
    அவனிடம் ஒத்துக்கொள்கிறேன்.

    அதை ஏற்பதில் மட்டும்
    அவனுக்கேன் இத்தனைத் தயக்கம்?

    எதுவும் பேசாமல் முகம் சுருங்கி
    என்னைவிட்டு விலகிச் செல்பவனைக் கண்டு
    சோர்ந்தாலும்.... தேற்றிக்கொள்கிறேன்.

    இனி அவனுடைய ஓவியநாயகர்களின்
    பிரஸ்தாபங்களைப் பகிர்ந்துகொள்ள
    நண்பர்கள் உதவுவார்கள்…


    ******
    சூர்யாவின் ஓவியநாயகர்கள் இங்கே...
    Last edited by கீதம்; 26-03-2011 at 12:07 AM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2


    இதைத்தான் "தலைமுறை இடைவெளி" என்பார்கள்,

    குழந்தைகளை புரிந்துகொள்ள நாமும் குழந்தையாய் மாறினாலொழிய இயலாத காரியம். அவர்களின் என்னோட்டமும், ஆர்வமும், கற்பனையும் முதிந்தவர்களை விட அசுரவேகத்தில் பயணிக்கும், அதற்க்கு நாம் ஈடுகொடுப்பது கொஞ்சம் கடினம்தான். அவர்கள் உலகமே வேறு, ஒருமுறை அதனை விட்டு வந்து விட்டால் பிறகு நுழைவது மிகக் கடினம்.

    கவிதை மிக அருமை

    இதுபோல் எனது அம்மாவையும் நான் பாடாய் படுத்தியதை சொல்வார்கள்
    நீங்கள் பரவாயில்லை அவர்கள் பள்ளி பக்கமே போகாதவர்கள், நினைத்துப் பாருங்கள் அவர்களின் நிலைமையை
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  3. #3
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    அருமை
    உங்க மகன் அவன் அப்பாவை போல புத்திசாலி போல
    நல்லவேளை உங்களை மாதிரி இல்ல

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Nivas.T View Post


    இதைத்தான் "தலைமுறை இடைவெளி" என்பார்கள்,

    குழந்தைகளை புரிந்துகொள்ள நாமும் குழந்தையாய் மாறினாலொழிய இயலாத காரியம். அவர்களின் என்னோட்டமும், ஆர்வமும், கற்பனையும் முதிந்தவர்களை விட அசுரவேகத்தில் பயணிக்கும், அதற்க்கு நாம் ஈடுகொடுப்பது கொஞ்சம் கடினம்தான். அவர்கள் உலகமே வேறு, ஒருமுறை அதனை விட்டு வந்து விட்டால் பிறகு நுழைவது மிகக் கடினம்.

    கவிதை மிக அருமை

    இதுபோல் எனது அம்மாவையும் நான் பாடாய் படுத்தியதை சொல்வார்கள்
    நீங்கள் பரவாயில்லை அவர்கள் பள்ளி பக்கமே போகாதவர்கள், நினைத்துப் பாருங்கள் அவர்களின் நிலைமையை
    நன்றி நிவாஸ்.பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள் என்பதை நம்மால் கிரகிக்கவே முடிவதில்லை. எவ்வளவு பெரியவர்களானால் என்ன? பெற்றோரின் கண்களுக்கு அவர்கள் எப்பொழுதும் குழந்தைகள்தானே.

    உங்கள் அம்மா மிகவும் பொறுமைசாலிதான். அவர்களைப் பாராட்டவேண்டும்.

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by முரளிராஜா View Post
    அருமை
    உங்க மகன் அவன் அப்பாவை போல புத்திசாலி போல
    நல்லவேளை உங்களை மாதிரி இல்ல
    ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்.

    நானும் பெரிதுவக்கிறேன்.

    உண்மையை மறைக்கவேண்டிய அவசியம் இல்லை, கரும் எழுத்துகளாலேயே குறிப்பிடலாம். நன்றி முரளிராஜா.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவமும் ஒரு பாடத்துடன் தான் வருகிறது...அதனைப் புரிந்துகொள்பவன் புத்திசாலி.....நீங்களும் தான் !

    ஓட்டப் பந்தய வாழ்வில் பல ருசிகளைத் தவறவிட்டோமோ என்றுகூட சிலசமயம் ஏக்கமாக இருக்கிறது...

    நீங்கள் கற்ற பாடங்களைத் தொடர்ந்து எழுதிவரவும்...பலருக்கும் பயனாகலாம் !

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    கவிதை அருமை கீதம் அவர்களே ...காலத்திற்கேற்ற மாற்றம் ...இந்த மாற்றம் அவசியமானது ..மாற்றத்திற்கேற்றவாறு நம்மை மாற்றி கொள்வது என்றும் மகிழ்வாக வைத்திருக்க உதவும்...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    இக்கவி என் ஏளனம் ஒன்றை எனக்குணர்த்துகிறது...
    கணினியிலிருந்து வருவேன் அதனோடு...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #9
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    சூர்யாவின் உலகத்தை நீங்கள் திறந்து வைத்த ஜன்னல் வழியாக நாங்களும் எட்டி பார்த்துக் கொண்டோம் . உங்கள் கவிதைகளைப் படித்து மெல்ல மெல்ல நான் கவிதை புரிந்து கொண்ட மாதிரிதான் உங்கள் நிலையும் போல.
    உங்கள் வவிதைகள் ஒவ்வொன்றிலும் ஒரு கதையை உணர்கிறேன். தேடலுக்கான தேவையை உணர்கிறேன்.
    வாழ்த்துக்கள் கீதம்.. உங்களுக்கும், சூர்யாவுக்கும்.
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ஜானகி View Post
    வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவமும் ஒரு பாடத்துடன் தான் வருகிறது...அதனைப் புரிந்துகொள்பவன் புத்திசாலி.....நீங்களும் தான் !

    ஓட்டப் பந்தய வாழ்வில் பல ருசிகளைத் தவறவிட்டோமோ என்றுகூட சிலசமயம் ஏக்கமாக இருக்கிறது...

    நீங்கள் கற்ற பாடங்களைத் தொடர்ந்து எழுதிவரவும்...பலருக்கும் பயனாகலாம் !
    மிகவும் நன்றி ஜானகி அவர்களே. பாடம் கற்றேனா என்பது தெரியவில்லை. வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டேன், போகிற வழியெல்லாம் கவிதைகளை இறைத்துக்கொண்டு.

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by t.jai View Post
    கவிதை அருமை கீதம் அவர்களே ...காலத்திற்கேற்ற மாற்றம் ...இந்த மாற்றம் அவசியமானது ..மாற்றத்திற்கேற்றவாறு நம்மை மாற்றி கொள்வது என்றும் மகிழ்வாக வைத்திருக்க உதவும்...
    உண்மைதான். காலத்துக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும். பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி ஜெய்.

  12. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by அக்னி View Post
    இக்கவி என் ஏளனம் ஒன்றை எனக்குணர்த்துகிறது...
    கணினியிலிருந்து வருவேன் அதனோடு...
    காத்திருக்கிறேன்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •