View Poll Results: கோப்பையை வெல்லப்போவது

Voters
17. You may not vote on this poll
  • இலங்கை

    4 23.53%
  • இந்தியா

    13 76.47%
Page 43 of 43 FirstFirst ... 33 39 40 41 42 43
Results 505 to 509 of 509

Thread: இலங்கைச்சிங்கங்கள் Vs இந்தியப்புலிகள் - Finally

                  
   
   
  1. #505
    Awaiting பண்பட்டவர் kay's Avatar
    Join Date
    02 Oct 2005
    Location
    Chennai
    Posts
    48
    Post Thanks / Like
    iCash Credits
    12,878
    Downloads
    13
    Uploads
    0

    Thumbs up

    இந்திய அணி முனைப்புடன் ஆடியது! வெற்றி பெற்றது! அனைவரும் கொண்ட்டாடுவோம்! சச்சின் டெண்டுல்கர் இந்தியக் கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாமல் உலகக் கிரிக்கெட்டுக்குக் கிடைத்த மாபெரும் நட்சத்திரம்! அவர் சதம் எடுத்தாலும் எடுக்க விட்டாலும் அவர் இந்திய அணிக்காக எப்போதும் முனைப்பாக ஆடுவார்! அதைத்தான் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்! மூட நம்பிக்கைகளை விடுத்து, முனைந்து ஆடி, இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டால் பாரம் நீங்கி வெற்றி பெறுவோம்! நமக்கு இருக்கும் முனைப்பு பிற அணிகளுக்கும் இருக்கும் என்பதையும் எப்போதும் நினைப்பில் வைக்க வேண்டும்! வெற்றியைக் கொண்டாடுவோம்! தலைக்கனம் பிடித்து அலையாமல் தொடர்ந்து நன்கு விளையாடுவோம்! இறுதியில் இது ஒரு நல்ல விளையாட்டு, போரல்ல என்பதை எப்போதும் நினைவில் வைத்திருப்போம்!
    வாழ்க வளமுடன்! என்றும் அன்புடன்!

  2. #506
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    தமிழ்மக்கள் ஏன் அடிவாங்கவேண்டும்? புரியவில்லை.
    மட்டுறுத்துனர்களே தயவுசெய்து இதை அகற்றவேண்டாம்

    உலகக் கோப்பை கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததனையடுத்து இலங்கையின் யாழ்.குடா மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

    சிறிலங்கா கிரிக்கற் அணி தோல்வியடைந்ததையடுத்து ஹற்றன் நகரில் தமிழ் தோட்டதொழிலாளர்கள் மீது சிங்கள குழு ஒன்று தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் காயமடைந்த தமிழர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சிறிலங்கா கிரிக்கட் அணி தோல்வியடைந்த உடன் கத்திகள் வாள்கள், தடிகளுடன் புறப்பட்ட சிங்களவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஏதும் அறியாத அப்பாவி தமிழ் தோட்டதொழிலாளர்கள் தங்களுடைய லயன்களுக்குள் ஓடி ஒளிந்த போதும் வீடுகளுக்குள் புகுந்தும் சிங்கள குழுக்கள் தாக்குதல் நடத்தியதாக மலையக மக்கள் தெரிவித்துள்ளனர்.

    இத்தாக்குதல் இரவு 10மணிமுதல் நள்ளிரவுக்கு பின்னரும் தொடர்ந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்த பின்னரே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் கத்திகள், பொல்லுகளுடன் காணப்பட்ட போதிலும் காவல்துறையினர் அவர்களை கைது செய்யவில்லை என்றும் மலையக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதேவேளை நேற்றிரவு யாழ் குடாநாட்டின் பல இடங்களில் வெள்ளைவானிலும் மோட்டார் சைக்கிளிலும் வந்தவர்கள் வீதிகளில் நின்ற பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் அவர்கள் வீடுகளுக்குள் அடைக்கலம் தேடி ஒடியபோது அங்கும் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து யாழ். குடாநாட்டில் பரவலாக சிலர் வெடி கொளுத்திக் கொண்டாடினர். யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி என பரவலாக கொண்டாட்டங்கள் இடம் பெற்றன. இதனைப் பொறுத்துக்கொள்ளாத இராணுவத்தினர் வெள்ளைவான் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்று வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    நேற்றிரவு பரவலாக இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இத் தாக்குதல்காரர்களிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மக்கள் சிதறியோடி அருகிலிருந்த வீடுகளில் அடைக்கலம் புகுந்து கொண்டதாகவும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களும் தாக்குதல்களுக்கு உள்ளானதாக வலம்புரி பத்திரிகை தெரிவித்துள்ளது.

  3. #507
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    சச்சின் சதமடித்த போட்டிகள் 48. வெற்றி 35. தோல்வி 13.

    தாமரையின் இந்த புள்ளிவிவரத்துக்கு பதிலாக,

    35 போட்டிகளில் வெற்றி பெற்றார்கள்......ஆனால் இந்த 35ல் எத்தனை வாழ்வா சாவா என்ற போராட்டமிருந்த போட்டிகள்.....எத்தனை....இலங்கையைப் போன்ற எல்லாவிதத்திலும் தகுதியான அணியை எதிர்கொண்ட போட்டிகள்......

    சச்சினை நான் எந்த விதத்திலும் குறை கூறவில்லை....அவரைப்போன்ற மிக மிக திறமையான வீரரைக் காண்பது கடினம். ஆனால்.....இந்திய அணி இக்கட்டான சூழலில் வெற்றி பெற வேண்டுமானால்....சச்சின் சதமடிக்கக்கூடாது என.....வழக்கமாகிவிட்டதே....அதனால்தான் அப்படி சொல்ல வேண்டியதாகிவிட்டது. அதுவும் சரியாகிவிட்டது.

    இந்தியா வெற்றி...http://www.tamilmantram.com/vb/newre...1057.இது அனைத்து சர்ச்சையையும் நீர்த்துவிடும்......நம்புகிறேன்.

    வாழ்த்துக்கள் டீம் இண்டியா.....!!!
    குற்றம் குறை சொல்லணும்னா முழுதாக ஆராய்ந்து கையில் விவரங்களை வச்சுகிட்டு குறைச் சொல்லணும்.

    புகழ்வதற்கு அப்படியாகப்பட்ட முழுமையான விவரங்கள் தேவையில்லை.

    ஆனாலும் சொல்றேன்

    http://www.espncricinfo.com/ci/engine/match/65757.html

    இது சார்ஜாவில் நடந்த மேட்ச் டெண்டுல்கள், சித்து இருவருமே செஞ்சுரி அடிச்சிருப்பாங்க.. (உடனே சால்ஜாப்பு வைப்பீங்களே.. அப்ப தெண்டுல்கரை நம்பி இந்தியா இல்லைன்னு)

    இதே மாதிரி சார்ஜாவில் நடந்த அடுத்தடுத்த மேட்சுகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதமடித்த டெஸர்ட் ஸ்டார்ம் பற்றி படிச்சிருக்க மாட்டீங்க

    http://www.espncricinfo.com/ci/engine/match/65774.html

    அடுத்ததா,

    இந்தியா எத்தனையோ போட்டிகளில் விளையாடி இருக்கு.

    http://www.espncricinfo.com/ci/engine/match/441828.html
    இதில பதான், தினேஷ் கார்த்திக், தோனி எல்லோருமே நல்லா அடிச்சிருக்காங்க.. சூப்பர் வெற்றி..

    http://www.espncricinfo.com/ci/engine/match/64631.html
    இதில் திராவிட் டெண்டுல்கர் சூப்பர் பேட்டிங்.. சூப்பர் வெற்றி

    http://www.espncricinfo.com/ci/engine/match/366627.html
    இதில் யுவராஜ் சிங் தோனி ரெய்னா நல்லா பேட்டிங் செய்திருக்காங்க. வெற்றி!!!

    http://www.espncricinfo.com/ci/engine/match/65257.html
    கங்கூலியோட சூப்பர் பார்டனர்ஷிப். வெற்றி.

    http://www.espncricinfo.com/ci/engine/match/66165.html
    Wills International Cup - 3rd quarter final
    திராவிட்/ ஜெடஜா கம்பெனியோட வெற்றி

    http://www.espncricinfo.com/ci/engine/match/65207.html
    ICC World Cup - 15th match, Group A
    திராவிட்டும் செஞ்சுரி.. இந்தியா வெற்றி

    http://stats.espncricinfo.com/ci/eng...g;view=innings

    இங்க போய் எல்லா சதங்களையும் பற்றித் தெரிந்து கொள்ளவும்.

    சச்சின் செஞ்சுரி அடிச்சா மற்றவர்கள் சரியாக விளையாடுவதில்ல என்று நீங்க சொன்னீங்க. ஜகதீசன் என்ன தெரியுமா சொல்றாரு..

    சச்சின் செஞ்சுரி அடிக்கலை. அதனாலதான் இந்தியா ஜெயிச்சது என்கிறார்.

    இரண்டிற்கும் மலைக்கும் மடுவிற்கான வித்தியாசம் இருக்கு. என் கேள்விகள் அந்த திசையை நோக்கியே இருக்கும்.

    மூட நம்பிக்கை என்பது கடவுளுக்கு உயிர்பலி கொடுப்பது மட்டுமல்ல. இதுவும்தான் என்று தெரியாதா?

    ஆதாரம் காட்டினால்தான் நம்புவேன் என்பது விதண்டாவாதம்.

    அப்புறம் ஜகதீசன் ஏன் என்னிடம் ஆதாரம் கேட்டார்? அவர்தானே ஆதாரம் கேட்டார். விதண்டாவாதம் செய்யவா? நான் தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

    மூட நம்பிக்கைகள் என்று தெரிந்தும் அதைப் பரப்புபவன் யார் என்று பெரியார் சொல்லி இருக்கிறார்
    . மன்றத்தில் அதை நான் சொல்ல விரும்பவில்லை.

    கண்ணால் காணமுடியாத கடவுளை நம்புகிறோம். நடக்காவிட்டாலும் ஜோஸியத்தை நம்புகிறோம். நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்கிறோம்.காக்கை கரைந்தால் விருந்து வரும்; பூனை குறுக்கே போனால் போகிற
    காரியம் வெற்றி பெறாது; தும்மினால் நம்மை யாரோ நினைத்துக் கொள்கிறார்கள்;குங்குமம் கீழே கொட்டினால் கெட்ட சகுனம், கோவில்மணி அடித்தால் நல்ல சகுனம் என்பவையெல்லாம் ஒரு நம்பிக்கைதான். நம் நாட்டில் வழிவழியாக மக்கள் பின்பற்றி வரும் நடைமுறைகள்.ஆதாரம் காட்டினால்தான் நம்புவேன் என்பது விதண்டாவாதம்.இறுதி ஆட்டத்தில் இந்தியா வெல்லவேண்டும் என்று பலர் கோவில்களில் பிராத்தனை செய்தார்கள்.அது ஒரு நம்பிக்கை.அதைத் தவறு என்று சொல்லமுடியாது.அதுபோல சச்சின் சதம் தோல்விக்கு வழிவகுக்கும் என்பது ஒரு நம்பிக்கை.அவ்வளவுதான்.இது தவறு என்றால் மேலே குறிப்பிட்ட அனைத்து நம்பிக்கைகளும் தவறுதான்.


    கடவுளையே கேள்வி கேட்கும் சுதந்திரமுள்ள இந்து மதம்... முதலில் அதை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். மூட நம்பிக்கைகள் மட்டும்தான் மதம் என்பது அல்ல.

    ஜாதகத்தை நம்புகிறோம் என்று சொல்கிறீர்கள். ஆனால் ஜோதிடம் கற்றுக் கொண்ட நன் சொன்னது, அதற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை. (உங்களுக்குத் தெரியுமா என்பதை நான் கேட்கமாட்டேன்) சகுனங்களில் நம்பிக்கை வைத்தல் மூட நம்பிக்கை என்று வலுக்கக் கூறுவேன். அது விதண்டாவாதமல்ல.

    இன்னுமொருமுறை சொல்வேன். ஒரு விஷயத்தைப் பற்றிய எதிரான கருத்துக்கள் சொல்லும் முன்பு அதைப் பற்றி நாம் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். சும்மா திட்டாதீங்க..

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17452

    நம்பிக்கைகள் பேசப்படுவதால்தான் உருவாகின்றன. மூட நம்பிக்கைகளை உருவாக்குவதுதான் வாழ்வின் இலட்சியம் என்றால் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நாங்க சாக்ரடீஸ் வழியில் செல்லணும்னு சிந்திக்கிறோம்.

    பல கேள்விகளை எங்களுக்குள்ளே கேட்டுகிட்டு பதில்களை ஆதாரத்துடன் தேடுகிறோம்.

    அதனால நம்பிக்கைகளை கேள்வி கேட்பது எங்களுடைய உடன் பிறந்த விஷயம். அவர்களிம் நம்பிக்கை என்று விட்டுப் போக.. சச்சின் ஆஸ்திரேலிய வீரரோ இங்கிலாந்து வீரரோ அல்ல. எங்க வீட்டுப் பிள்ளை...

    அடுத்ததாக பொறுப்புணர்வு பற்றிச் சொன்னீங்க. ஆனால் தோனி சொன்னதைக் கேட்டீங்களா? தோனி ஏன் யுவராஜிற்கு முன்னால் வந்தார்னு?

    இரண்டு ஆஃப் ஸ்பின்னர்கள். ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக இடது கை ஆட்டக்காரர்களுக்கு தடுமாற்றம் இருக்கும்.

    இரண்டாவது முரளிதரனின் பந்துவீச்சு. அதைப் பற்றி தோனி நன்கு அறிவார். அதனால் இது எனக்கான நேரம் என முடிவு செய்து களமிற்ங்கினார்.

    அவர் சதம் அடித்து அவுட்டான பிறகு பின்னால் விளையாடும் ஆட்டக்காரர்களுக்கு,மன இறுக்கம் தளர்ந்து பொறுப்பின்மை தலை தூக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.அந்தப்பொறுப்பின்மை பல தவறுகளுக்குவழி வகுக்கக்கூடும் என்பதே என் வாதம்.

    கழுத்தில் கட்டி வந்தால் கட்டியை அறுக்காதே.. கழுத்தை அறு என்கிற மாதிரி இருக்கு உங்கள் பேச்சு.

    இங்க மாற வேண்டியது மத்தவங்களா? சச்சினா? அப்போ சச்சின் 10 ரன்னுக்குள் அவுட் ஆகிற எல்லா மேட்சிலும் இந்தியா ஜெயிக்குதா?

    உதாரணமா

    http://www.espncricinfo.com/ci/engine/match/247476.html
    ICC World Cup - 20th match, Group B

    http://www.espncricinfo.com/ci/engine/match/65223.html
    ICC World Cup - 31st match, Super Sixes


    நல்லா விளையாடறதால மட்டும்தான் ஜெயிக்க முடியுமே தவிர மூடநம்பிக்கையுடன் நல்லா விளையாடாம இருந்தா ஜெயிக்க முடியாது.


    ஏன் சிவா.ஜி மேல பாயலைன்னு கேட்டீங்க. அவர் ஆதங்கமா சொன்னார். அது அவரோட ஆசை. நீங்க அதை நம்பிக்கையா சொல்றீங்க. அழற குழந்தையை சமாதானப் படுத்துவோம். அழும்பு பண்ணினா?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #508
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    அப்பாடா!!
    ஜெயிச்சாச்சு!!
    கப்பு நமக்காச்சு!!

    எப்படியோ 28 வருசங்களுக்கப்புறம் இந்தியாவின் கனவு பலிச்சாச்சு.

  5. #509
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    இதுக்கு மேலும் சச்சின் சதமடித்தால் இந்தியா தோற்கும் என்று சொன்னால்

    அது விதண்டா வாதண்டா வாதமகத்தான் இருக்கும்

    நாம் சில விசயங்களை நீண்டநாள் நம்பி விட்டால்
    அந்த நபிக்கையை உடைக்கும் உண்மையை
    அறிந்தால் ஏற்றுக்கொள்ள மனம் முனைவதில்லை.
    இது மனித இயல்புதான்,

    ஆனால் தெளிவான சான்றுகள் இருக்கும் பொழுதும் விடாப்படியாக இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்.

    இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது

    ஒரு காலத்தில் இந்திய அணியின் நம்பிக்கை என்றால் சச்சினைத் தவிர வேற யாரும் இருக்க முடியாது. நான் சொல்லுவது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்தான்.

    அனைவரது எதிர்பார்ப்பும் அவரது மீதுதான். நிறைய போட்டிகளில் அவர் சதமடித்து வெற்றிபெற்றிருந்தாலும். அவர் மீது மட்டுமே இருத்த கண்ணோட்டமும் எதிர்பர்ர்ப்பும் சச்சின் சதமடித்தும் தொல்வியடிந்து விட்டதே என்னும் தாகமும் மனதில் நின்றுவிட இதுபோல் ஒரு மாயை மக்கள் மனதில் நின்றுவிட நிலவுகிறது.

    இது ஒரு வகையான தாக்கம், சச்சின் மீது கொண்ட அலாதியான பற்றும் நம்பிக்கையும் மட்டுமே காரணம்.

    கவனம் இதி பின்னாளில் விளைவுகளையும் ஏர்ப்படுத்தலாம்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

Page 43 of 43 FirstFirst ... 33 39 40 41 42 43

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •