Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 52

Thread: சென்னை தொலைகாட்சியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர்கள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27

    சென்னை தொலைகாட்சியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர்கள்

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..

    ஒரே ஒரு சேனல் மட்டும் கிடைக்கப்பெற்ற நாட்கள் உங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம்.

    அதில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள், முக்கியமாக ஏழரை மணி செய்தி சுருக்கம், சிலந்தி வலை, பிரதித்துவனி, சித்திரப்பாவை, இரயில் ஸ்நேகம், செய்தி மலர், ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிக்கு முன்னால் வரும் பதினைந்து முதல் இருபது நிமிட விளம்பரங்கள், நரசுஸ் காபி விளம்பரம், இரவில் ஒரு பகல், ஃபிளைட் நம்பர் 172, சரஸ்வதியின் செல்வன், எட்டு நாற்பது செய்திகள் மற்றும் பல...


    அன்றைய தொலைக்காட்சி மீடியா பகட்டானதாக இல்லாதிருந்தது.

    சரி வாங்க! நாம இங்க செய்தி வாசிப்பாளர்கள் மேல கொஞ்சம் லைட் அடிப்போம்.

    அன்னிக்கி எல்லாம் பேப்பர்ல தான் செய்திகளை எழுதி தருவாங்க.. அதை நாம பாத்து படிக்கணும்.

    பேப்பரையும் பாக்கணும், கேமேராவையும் பாக்கணும். எ லிட்டில் டஃப் டாஸ்க் ஃபார் லேடீஸ் யூ நோ!

    முன்னாள் செய்தி வாசிப்பாளர்களது பட்டியலில் உள்ளவர்கள் இதோ கீழே:

    ஆண்கள்
    1.வரதராஜன்
    2. செந்தமிழ் அரசு
    3. இனியன்
    4. தமிழன்பன்
    5. நிஜந்தன்
    6. எச். இராமகிருஷ்ணன் (வானமே எல்லை படத்துல ஊனமான ஒரு பாத்திரத்தில் வருவாரே.. அவரு தான்).

    பெண்கள் (மேக் அப் முடிந்தவரை இடாத பெண் செய்தி வாசிப்பாளர்கள்):
    1. ஷோபனா ரவி
    2. சந்தியா ராஜகோபாலன்
    3. ஃபாத்திமா (பாபு)

    வாங்க கொஞ்சம் டீடேய்லா போவோம்..

    செந்தமிழ் அரசு:
    அண்ணன் நரசிம்மாராவுக்கு நண்பர் போல. சிரிகாவே மாட்டாரு.. உர்ருன்னு மூஞ்சிய சீரியஸா வெச்சுகிட்டே செய்தி வாசிப்பாரு

    வரதராஜன்:
    எஸ் வீ சேகர் நாடகதுல, சினிமால எல்லாம் நடிச்சவரு செய்தியும் வாசிப்பதில் கால வெச்சாரு..
    இவரு ஒரு தொலைக்காட்சி நாடகத்துல வேற
    நடிச்சாரு. பேரு தெரியலை ஆனா " சொல்லடி சிவசக்தி இன்னும் மௌனமென்ன.." அப்படின்னு ஒரு டைட்டில் சாங் வர்ற நாடகம்.

    தமிழன்பன்:
    இவரு பட்டிமன்றதுல எல்லாம் பேசுவாரு.. அந்த காலத்து ஜெமினி கணேசன் மாதிரி பென்சில்ல கொடு போட்ட மீசை வெச்சிருப்பாரு

    விடு கழுத... நமக்கு ஆம்பிளயள பத்தி என்ன பேச்சு, வாங்க
    பெண்களை பத்தி பேசலாம்...

    ஷோபனா ரவி:
    இந்த அம்மாவ மட்டும் ஒருத்தரும் மறக்க முடியாதப்பா...
    சாமி இன்னிக்கு ஷோபனா ரவி வரகூடதுப்பா என்று வேண்டும் கணவர்களும், இன்னிக்கி ஷோபனா என்ன புடவை கட்டிக்கொண்டு வருவாங்கன்னு ஆர்வமாய் வீட்டு பெண்மணிகளும் ஏங்க காரணமாய் இருந்த ஒரு பெண்மணி ஷோபனா ரவி

    போக்கிரி விஜய் ஸ்டைல அந்த காலத்துல செய்தி வாசிப்பு களத்துல ஃபாலோ பண்ணின அம்மிணி.

    இந்த அம்மினிக்கு ஒரு கொள்கை சார்வாள்:
    ஒரு தடவ கட்டுன புடவையை அடுத்த தடவ கட்ட மாட்டங்க..

    அநேகமா எல்லா இல்லத்தரசிகளும் சொன்ன ஒரு சொற்றொடர் இதுவா தான் இருக்கும். "இன்னிக்கு ஷோபனா ரவி என்ன புடவை கட்டி இருக்காங்கன்னு பாக்கணும்"

    ஷோபனா ரவி செய்தி வாசிப்பதை கேட்பார்களோ இல்லையோ, அவர் கட்டி இருக்கும் புடவை டிசைனை கண்டு கண்கள் பனிக்க "இந்த அம்மாவுக்கு மட்டும் புடவை டிசைன் எங்கிருந்து தான் கிடைக்குதோ" என்று ஒரு ஏக்க டயலாக் விடுவார்கள் இல்லத்தரசிகள்
    ஒரு வேளை சொந்தமா ஜவுளி கடை வெச்சிருக்காஙகளோ என்னவோ.. சிலர் இப்படி கூட சொன்னதுண்டு

    சந்தியா ராஜகோபாலன்:
    இனிய குரலில் செய்தி வாதிக்கும் இனிய குயில். கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் செய்தி வாசிக்கும் திறமை கொண்டவர்


    ஃபாத்திமா (பாபு):

    இந்த அம்மிணி செய்தி வாசிக்க வந்தாலே ஜாலி தான்... கண்ணா சிமிட்டி ஒரு சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க.. பல இளைஞர்கள் நெஞ்சை புடிச்சிபாங்க.
    பெயரில இருக்கே அந்த 'ஃ' அது ஆண்கள் இருதயத்துல ஒரு துளை போட்டுரும். சில சில்மிஷ சிரோன்மணிகள் ஃபாத்திமாவ ஆஅஹ்ஹ பாதிமானு படிப்பார்கள் பாக்கணுமே...
    (பக்கத்து வீடு அசோக் மாமா அப்படி தான் சொல்லுவாரு)

    பள்ளி பருவத்துல நாங்க எல்லாம் இந்த அம்மிணி சிரிக்கும்போது முகத்துல விழுற குழிய பத்தி பேசியது இன்னிக்கும் எனக்கு நினைவிருக்கு.

    ஒரு ஆங்கிள்ள இவங்கள பாத்தா நதியா மாதிரியே இருப்பாங்க..

    இந்த அம்மிணிய சித்திரப்பாவை நாடகத்துல வேற பாக்க ஒரு சான்சு கெடச்சுது. என் நண்பன் கிருபாசங்கர் அவன் வீட்டுல ட்யூஷன் போறேன்னு சொல்லீட்டு எங்க வீட்டுல அவனும் ரவியும் வந்து சித்திரப்பாவை நாடகம் பாக்க வந்துடுவாங்க.
    அப்புறம் இவுங்க தன்னோட கூட வேல பாக்குற பாபுவ காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு ஷாக் குடுத்தாங்க...

    அது நம்ம தல மணியா, சிவாஜி அண்ணா இவங்களுடைய நெஞ்சுல ஒரு வேல் பாச்சின செய்தியா இருந்தது என்பது கொசுறு தகவல்.. (அடிக்க வாராதீங்க!!!)
    Last edited by sarcharan; 28-06-2011 at 09:11 AM.

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இதுகளப்பார்த்தா உங்களுக்கு கிட்டத்தட்ட 70 வயசு இருக்கும் போல...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    உங்க பதிவால் பல ஆண்டி அங்கிள்கள் பத்தி தெரிஞ்சிகிட்டோம் சா.ரா தாத்தா!!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #4
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    இன்றுமுதல் நம்ம சா ரா
    சா ரா தாத்தா என்று அன்பாக அழைக்கபடுவார்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    இதுகளப்பார்த்தா உங்களுக்கு கிட்டத்தட்ட 70 வயசு இருக்கும் போல...
    எனக்கு வயசு 25 தான் ஆகுது

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by முரளிராஜா View Post
    இன்றுமுதல் நம்ம சா ரா
    சா ரா தாத்தா என்று அன்பாக அழைக்கபடுவார்
    லாரா தத்தா இவருக்குச் சொந்தமோ?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #7
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    லாரா தத்தா இவருக்குச் சொந்தமோ?
    சா ராவுக்கு வயசாயிடுச்சில அதனால மறந்திருப்பார்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    ஹைய் நம்ம ரா காங்குல லாரா தத்தா வராங்க...ஜாலி...

  9. #9
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by sarcharan View Post
    எனக்கு வயசு 25 தான் ஆகுது
    நல்ல நகைச்சுவை

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    உஙகளுக்கு எல்லாம் ஒண்ணு தெரியுமா? இந்த மன்றத்துலயே மிகவும் இளையவன் நான்தான்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by முரளிராஜா View Post
    இன்றுமுதல் நம்ம சா ரா
    சா ரா தாத்தா என்று அன்பாக அழைக்கபடுவார்
    நுணலும் தன் வாயால் கெடும்..

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by sarcharan View Post
    உஙகளுக்கு எல்லாம் ஒண்ணு தெரியுமா? இந்த மன்றத்துலயே மிகவும் இளையவன் நான்தான்.
    ஆமாம்.. ஆமாம் .. இன்னிக்கு தி ஹிண்டுல படிச்சேன்..

    சைட்டடுச்சு சைட்டடுச்சு பேசினதெல்லாம் பெத்தபெரிய வயசானவங்கள பத்தி, ஆனா இவரு மன்றத்திலையே ரொம்ப சின்னவராம்.........

    எப்பா இது உலகமகா பொய்யீடா சாமி...
    Last edited by ஆதி; 23-03-2011 at 07:30 AM.
    அன்புடன் ஆதி



Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •