Results 1 to 7 of 7

Thread: என் காதல்???

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    8,989
    Downloads
    5
    Uploads
    0

    என் காதல்???

    இரவின் நீளம் எல்லாம்
    தனிமையோடு தான் போகிறது...

    ஒவ்வொரு முறையும் ...
    உன் நினைவுகளை தொடும்போது
    வண்ணத்துபூச்சி சிறகின்றி துடிக்கும்
    வேதனை எனக்குள்..!!

    அறுந்துவிட்ட பட்டம்
    கையில் அகப்படாமலே போகிறது

    என் கண்ணீரின் துளியில்
    உன் இதயம் துடிக்குமானால்
    நரம்புகளை கூட அறுத்துவிடுகிறேன்

    சொல்லாமல் வரும் மரணமும்
    சத்தம் இல்லாமல் சாகடிக்கும்
    காதலும் ஒன்றுதான்...

    இரண்டிலும் இதயத்தின்
    துடிப்பு
    யாருக்கும் தெரிவதில்லை!!

    மீள முடியாத வேதனை
    மறக்க முடியாத பாதைகள்
    மனம் கனமாய் போகிறது...

    மௌனம் மட்டுமே வார்த்தை...
    புல்லாங்குழல் கூட இசையில்
    கண்ணீர் சிந்தும் .........



    ஆனால் என் காதல்???


    நன்றி மாணவன்
    நன்றி...

    தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765

  2. #2
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    'சொல்லாமல் வரும் மரணமும்
    சத்தம் இல்லாமல் சாகடிக்கும்
    காதலும் ஒன்றுதான்...'

    நல்ல ஒப்புமை. ஆனால் சொல்லாமல் வீழ்வதைவிட, சொல்லிச்சாவதே மேல். சொல்லிவிடுங்கள்.
    பாராட்டுகள்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    காதலின் ஏக்கம் கவிதையில் தெரிகிறது! பாராட்டுக்கள் உ.மீ. அவர்களே!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    இம் நல்ல கவிதை

    காதல் வலியில் ஒரு கவிதை
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    இரு கையில்
    ஒரு கை மட்டும் ஆட்ட..
    இப்படியான வலிகளே மிஞ்சும்..

    ஒவ்வொரு முறையும் ...
    உன் நினைவுகளை தொடும்போது
    வண்ணத்துபூச்சி சிறகின்றி துடிக்கும்
    வேதனை எனக்குள்..!!
    நல்ல ஒப்புமை..

    எஞ்சியிருக்கும் வாழ்க்கையின் நீளம்..
    காதலின் வலியைப் போக்கும்..

    நினைக்க ஒரு மனமும்,
    மறக்க ஒரு மனமும் இருந்து விட்டால் எத்தனை வலி குறையும். இல்லையா??

    இதயம் புரியாதவரை விடுங்கள்.. - காலம்
    பதியம் செய்யும் நபரைப் கை பிடியுங்கள்..
    இதயம் தந்து இல்வாழ்க்கை நடத்துங்கள்..

    காதல் உங்கள் கையில் அப்போது பட்டாம்பூச்சியின் மினுமினுப்பை அள்ளித் தெளிக்கும்.

    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    இனியவர்
    Join Date
    09 Dec 2009
    Posts
    654
    Post Thanks / Like
    iCash Credits
    13,791
    Downloads
    3
    Uploads
    0
    நீ என்னை காதலிப்பதாகச் சொன்னால்,
    வானவீதியில், விளக்குகளாக
    நட்சத்திரத்தை தொங்க விடுவேன் ,



    நீ என்னை காதலிப்பதாகச் சொன்னால்,
    மின்மினி பூச்சிகளில் மின்சாரம் சேகரித்து ,
    அமாவாசையிலும் நிலவுக்கு வெளிச்சம் கொடுப்பேன் ..

    நீ என்னை காதலிப்பதாகச் சொன்னால்,
    உன் வீட்டு முற்றத்தில் நீ கோலமிடுவதற்கு ஏதுவாக,
    கார்மேகத்தை அழைத்து வந்து ,
    மழை பொழிய செய்வேன் ....


    நீ என்னை காதலிப்பதாகச் சொன்னால்,
    குளித்து முடித்த உன் கூந்தலின் ஈரத்தை உலர்த்த ,
    தென் மேற்கு பருவக்காற்றை ,நீ இருக்கும் வீதியிலே ,
    திசை திருப்பி விடுவேன் ...


    நீ என்னை காதலிப்பதாகச் சொன்னால்,
    உன் பாதத்தில் பட்ட கால் தூசிகளை ,
    இதுவரை பிறந்த உலக அழகிகளின் உருவங்களாக எண்ணுவேன் ..


    நீ என்னை காதலிப்பதாகச் சொன்னால்
    மலையை பெயர்த்தெடுத்து ,
    ஆழி பேரலையும் உன்னை தாக்காதவாறு
    உன்னை சுற்றி அரண் போல வீடு கட்டுவேன் ,

  7. #7
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    8,989
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by muthuvel View Post
    நீ என்னை காதலிப்பதாகச் சொன்னால்,
    வானவீதியில், விளக்குகளாக
    நட்சத்திரத்தை தொங்க விடுவேன்

    இன்னும் வேறு என்ன எல்லாம் செய்வீங்கலோ?
    நன்றி...

    தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •