Results 1 to 11 of 11

Thread: முற்றுப் பெறாத தேடல்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Jan 2010
    Location
    சிங்கப்பூர்
    Posts
    234
    Post Thanks / Like
    iCash Credits
    31,891
    Downloads
    21
    Uploads
    0

    முற்றுப் பெறாத தேடல்

    கடவுளா? பரம்பொருளா?
    தெய்வமா? பேருண்மையா?
    சிவமா? கண்ணனா?

    பூஜையறையில் இருக்கும்
    மூவெட்டு உருவங்களா?
    இருளா? ஒளியா?
    வேகமா? பொறுமையா?
    காற்றா? தீயா?
    அண்டவெளியா?
    ஆகாயமா?
    கடலா? நிலமா?
    அன்பா? கருணையா?
    காதலா?
    எது நீ?

    எங்கும் நிறைந்திருப்பது
    உண்மையென்றால்
    ஏன் என் கண்களை
    ஏமாற்றும்
    இந்த வித்தை உனக்கு

    படைப்பின் காரணமே
    உன் இருப்பை
    பறையறைய
    இருக்கவே இருக்கிறது
    கோடி உருவங்களில்
    உன் படைப்புகள்

    சுற்றிக்கொண்டிருக்கிறது பூமி
    சுட்டுக்கொண்டிருக்கிறது சூரியன்
    சுகமாய் வீசிக்கொண்டிருக்கிறது
    என்றென்றும் தென்றல்


    என்னேரமும் துளைத்து
    துண்டாடும் என் கேள்விகள்...

    பதில்லில்லா மௌனமே
    உனக்கு எப்போதும்...

    என் நேரமின்மையும்
    இடைவெளியில்லா
    வேலைகளும் - எனை
    உன்னிடமிருந்து பிரித்து
    வைப்பதாயில்லை
    கொழுந்து விட்டெரியும்
    நெருப்பாய் எரிந்து
    கொண்டிருக்கிறது
    தேடல்

    சில நேரம் உணர்கிறேன்
    உன் இருப்பை
    ஆனாலும் அறிவுக்கு
    புரியவில்லை

    நேரத்தின் நீட்சியாகவும்
    சுருக்கமாகவும்
    உன் பிரும்மாண்டத்தை
    ரசித்தபடி நான்...

    தனக்கு தானே கேள்விகளும்
    பதில் சமாதனங்களும்
    பின் சமரசங்களும்
    செய்து கொண்டபடியே
    தொடர்கிறது
    கிடைக்கும் வரை நிறுத்தாத
    சங்கல்பத்துடன்
    என் முற்றுப்பெறாத தேடல்..
    வாழ்க வளமுடன்
    என் தமிழ்ச்சோலை...

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    முகம் காணா என்னையும் ரசிக்க வைத்தது..
    இந்த முற்றுப் பெறாத தேடல்...
    கவிதை அருமை..

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Jan 2010
    Location
    சிங்கப்பூர்
    Posts
    234
    Post Thanks / Like
    iCash Credits
    31,891
    Downloads
    21
    Uploads
    0
    நன்றி பிரேம்!
    வாழ்க வளமுடன்
    என் தமிழ்ச்சோலை...

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    எனது தேடலும் முற்றுபெற வில்லை

    நல்ல கவிதை

    பாராட்டுகள்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    தாமரை அவர்கள் சொன்னது போல, கேள்விக்குறியின் அடியில்... முற்றுப் புள்ளி.... !

    எங்கும் பரந்துகிடக்கும் பரம்பொருளை,[ குனிந்து] உள்நோக்குப் பார்வையால், நமக்குள்ளேயே கண்டுகொண்டு, புரிந்துகொண்டால்....நீ, நான், அது, என்ற வேறுபாடு மறைந்து, கேள்விகள் முற்றுப் புள்ளிகளாகுமாம்....

    அதுதான் எப்போது என்று தெரியவில்லை....அதற்கும் அவனருள் வேண்டுவோம்....

    தேடலின் தொடக்கமாவது புரிகிறதே....

  6. #6
    புதியவர்
    Join Date
    29 Dec 2010
    Posts
    17
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    வாழ்த்து

    அருமை! அருமை! நண்பரே! தங்கள் கவிதையை இரு கரம் கூப்பி வணக்குகிறேன்.
    வசந்த் ஹரி

  7. #7
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    தேடித்தேடி அலுத்துவிட்ட வேதனையும், இன்னும் தேடும் விடாமுயற்சியும், உண்மை அறியவா இல்லை உங்களை அறியவா?
    மிக நன்று.

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Jan 2010
    Location
    சிங்கப்பூர்
    Posts
    234
    Post Thanks / Like
    iCash Credits
    31,891
    Downloads
    21
    Uploads
    0
    Quote Originally Posted by Nivas.T View Post
    எனது தேடலும் முற்றுபெற வில்லை

    நல்ல கவிதை

    பாராட்டுகள்
    நன்றி Nivas.T!
    வாழ்க வளமுடன்
    என் தமிழ்ச்சோலை...

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Jan 2010
    Location
    சிங்கப்பூர்
    Posts
    234
    Post Thanks / Like
    iCash Credits
    31,891
    Downloads
    21
    Uploads
    0
    Quote Originally Posted by ஜானகி View Post
    தாமரை அவர்கள் சொன்னது போல, கேள்விக்குறியின் அடியில்... முற்றுப் புள்ளி.... !

    எங்கும் பரந்துகிடக்கும் பரம்பொருளை,[ குனிந்து] உள்நோக்குப் பார்வையால், நமக்குள்ளேயே கண்டுகொண்டு, புரிந்துகொண்டால்....நீ, நான், அது, என்ற வேறுபாடு மறைந்து, கேள்விகள் முற்றுப் புள்ளிகளாகுமாம்....

    அதுதான் எப்போது என்று தெரியவில்லை....அதற்கும் அவனருள் வேண்டுவோம்....

    தேடலின் தொடக்கமாவது புரிகிறதே....
    நன்றி ஜானகி!
    வாழ்க வளமுடன்
    என் தமிழ்ச்சோலை...

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Jan 2010
    Location
    சிங்கப்பூர்
    Posts
    234
    Post Thanks / Like
    iCash Credits
    31,891
    Downloads
    21
    Uploads
    0
    Quote Originally Posted by vasanth30 View Post
    அருமை! அருமை! நண்பரே! தங்கள் கவிதையை இரு கரம் கூப்பி வணக்குகிறேன்.
    நன்றி vasanth30!!
    வாழ்க வளமுடன்
    என் தமிழ்ச்சோலை...

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Jan 2010
    Location
    சிங்கப்பூர்
    Posts
    234
    Post Thanks / Like
    iCash Credits
    31,891
    Downloads
    21
    Uploads
    0
    Quote Originally Posted by dellas View Post
    தேடித்தேடி அலுத்துவிட்ட வேதனையும், இன்னும் தேடும் விடாமுயற்சியும், உண்மை அறியவா இல்லை உங்களை அறியவா?
    மிக நன்று.
    என்னவென்றே தெரியாமல் தேடுகிறேன். எல்லோரும் பிரம்மிக்கும் வகையில் பல வேலைகளை இழுத்து போட்டுக்கொண்டு திறம்பட செய்தாலும், எதுவோ ஒன்றை செய்யாமலிருப்பது போன்ற பிரமை இன்னும் இருக்கிறது! வாழ்வின் பொருளைத்தேடுகிறேன். அது வாழ்வை எந்த விதத்திலும் முன்னேற்றாது என்ற பதில் சமீபத்தில் கிடைத்தது.!
    வாழ்க வளமுடன்
    என் தமிழ்ச்சோலை...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •