Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 25

Thread: அன்றும்....இன்றும்..:பாகம்:3

                  
   
   
 1. #1
  இளம் புயல் பண்பட்டவர் ராஜாராம்'s Avatar
  Join Date
  27 Jan 2011
  Location
  மயிலாடுதுறை
  Posts
  366
  Post Thanks / Like
  iCash Credits
  3,945
  Downloads
  0
  Uploads
  0

  அன்றும்....இன்றும்..:பாகம்:3


  நிகழ்கால நிகழ்வுகள்.:
  இன்று நடப்பவை........
  2011.............


  இரவு 12மணியை நெறுங்கிக் கொண்டு இருந்தது,,
  ராஜாவின் செல்ஃபோன் செல்லமாய் சினுங்கியது...
  தூக்கக் கலக்கத்தோடு,எடுத்துக் காதோடு அணைத்தபடி..

  "ஹலோ....',என்றான்,

  "நான்தான்.. ஷோபா பேசுறேன்...",மறுமுனையில் ஷோபாவின் குரல்,

  "சொல்லு ஷோபா...என்ன இந்தநேரத்தில்?என்ன விஷயம்?",
  என்றான் ராஜா.

  "உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கனும்...",

  "...இந்த நேரத்தில என்ன சந்தேகம்?...கேளு",என்றான் தூக்க கலக்கம் கலையாமல்.
  "என்னையா ரொம்ப புடிக்குமா?ஓரளவு புடிக்குமா?",என்றபடி,அவளது முதல் கேள்வி தொடங்கியது,

  "இப்போதைக்கு பிடிக்கும்....கல்யாணத்துக்கு பிறகு ரொம்ப பிடிக்கலாம்..",
  என்று அவன் கூறியதும்,

  "உங்களுக்கு கேர்ல் பிரண்ட்ஸ் இருக்காங்களா...?",
  அடுத்தக் கேள்வி அவளிடமிருந்து வந்தது,

  "நிறையா உண்டு...எல்லாருமே இண்டர்நெட் பிரண்ட்ஸ்தான்...
  யாரையும் சந்திச்சு பேசுனது இல்லை...
  அவர்கள் எல்லாருமே நல்ல பிரண்ட்ஸ்தான்",,
  என்றவன்,

  "என்ன ஷோபா ராத்திரி நேரத்திலக் கூட
  இப்படி கேள்வியாக் கேட்கிறே..",
  என அலுத்துக் கொண்டான்..

  "சுஜாதாவைத் தவிற வேற யாரையும் லவ் பன்னிருக்கிங்களா?",
  அவளிடம் இருந்து அடுத்தக் கேள்வி வந்ததும்,

  "பிளஸ்2 படிக்கும்போது அமுதான்னு ஒருப்பொண்ணு
  என்னை லவ் பன்றதா சொல்லி லவ் லெட்டர் தந்துச்சு....
  அறியாதா வயசு அது ..உண்மையான காதல் என்றால் என்னவென்றே தெரியாமல் பழகினோம்...
  அப்புறம் படிப்பு முடிந்ததும் 2பேருமே பிரிஞ்சிட்டோம்...
  அதைப் பற்றிக் கவலையும் படவில்லை..",
  என்ற ராஜா,

  "ஓகே...ஷோபா, எனக்கு தூக்கம் வருது தூங்கலாமா?",
  என்று பரிதாபமாய்க் கேட்டான்..

  "என்னையக் கல்யாணம் பன்னிக்கிட்ட பிறகும்,
  இப்ப உள்ளதுபோல நிறைய அன்போட இருப்பிங்களா?",
  என்றவளின் கேள்வியில் ஒருவித எதிர்ப்பார்ப்பு இருந்தது..

  "ம்ம்ம்,,,..கண்டிப்பா..இருப்பேன்..",
  என்றான்.

  "நெஜமா?:",
  அவள் உறுதியாகக் கேட்க,

  "ஐயோ...நெஜமாத்தான் சொல்றேன்....நீ முதலில் போயி தூங்கும்மா..",
  என்று அவன் கூற'

  "ஓகே,,..குட்நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்..",
  என்று ஒருவழியாக போன்னின் தொடர்ப்பைத் துண்டித்தாள்..

  "உன்பேரை சொல்லும்போதே,
  உள் நெஞ்சில் கொண்டாட்டம்.......
  உன்னோடு வாழத்தானே..உயிர் வாழும் போராட்டம்...
  நீ இல்லை என்றால் என்னாவேன்..
  நெறுப்போடே வெந்தே மண்ணாவேன்....",
  என்ற பாடல் வரிகள் நிகழ்வுளில் நிஜமானது.....  இறந்தகால நினைவுகள்:..
  அன்று.........நடந்தது
  2001...........


  ராஜா:-"சுஜா என்கூட ஒரு இடத்துக்கு நீ வரனும்.."
  கூறுயதும்,
  "எங்கே என்று சொல்லுங்க..",
  என்றாள் சுஜா..

  "நகைக்கடைக்கு...",

  "நகைகடைக்கா?ஏன்?",
  என்று ராஜாவிடம் கேட்டாள் சுஜா,

  "முதல் மாசம் சம்பளம் வாங்கிட்டேன்..
  அம்மா அப்பாக்கு துணி எடுத்தேன்...
  அக்கா அண்ணன்னுக்கு பணம் வெச்சுக் கொடுத்தேன்...
  உனக்கு....கொலுசு ஒன்னு வாங்கித் தரனும்னு ஆசை,,,,அதான் நகைக்கடைக்கு போகனும்..",
  என்று அவன் கூறியதும்,

  "வீட்டில் உள்ளவங்களுக்கு செஞ்சிங்களே...அதுவே போதும்,,
  எனக்கு எதும் வேணாம்....காசைக் கண்டபடி செலவு பன்னாதீங்க...",
  முட்டுக்கட்டையாக அவளிடம் இருந்து பதில் வந்தது..

  "நீ இப்ப வந்தே ஆகனும்...",
  பிடிவாதமாய் அடம்பிடித்தான் ராஜா..

  (சிறிது நேரத்தில் இருவரும்...மயிலாடுதுறை நகைக்கடையை அடைந்தனர்...)

  பிரம்மாண்டம்மான அந்த நகைக் கடையில்,

  "அந்த மோதிரத்தை எடுங்க...",
  என்று ராஜா கைக்காட்ட,
  கண்ணாடிக்குள் இருந்த ஒரு பவழக்கல் வைத்த தங்க மோதிரத்தை எடுத்தார் நகைக்கடை ஊழியர்,

  "இது பவழமோதிரம் சார்....2800ரூபாய்.,,",
  என்றபடி ராஜாவிடம் அதைக் காட்டினார்.

  "கொலுசு வாங்கனும்னு சொல்லிட்டு...தங்கத்தில் மோதிரம் வாங்கப்போறிங்களே...
  எனக்கு இதெல்லாம் பிடிக்கவே இல்லை...நான் போறேன்",
  என்று கோவமாக கடையை விட்டு வெளியேற முயற்சித்த, சுஜாவை இழுத்த ராஜா,

  "ஏய்,..சும்மா...அசிங்கம் பன்னாதே...
  நீ வேளியப் போய்யிட்டால், அப்பறம் என்னைய நீ மறக்கவேண்டி வரும்",
  என்று அவளை தடுத்து நிறுத்தினான்.

  "சொல்றதை கேட்கவேமாட்டிங்களா?",
  என்று செல்லமாக சினுங்கினாள்..

  அவன் பிடிவாதமாய் ,அந்த மோதிரத்தை அவளுக்கு வாங்கியப்பின் .இருவரும் கடையை விட்டு வெளியேறினர்..

  (மாலை மணி8 ஆகி இருந்தது..
  மயிலாடுதுறை...வதானேஷ்வரர் கோயிலில்...
  சுஜாவின் விரல்களில்
  அந்த அழகிய மோதிரத்தை போட்டுவிடத் தயார் ஆனான் ராஜா )

  அதை அருகில் இருந்துக் கவனித்த ஒரு முதியவர்...
  நிரைத்த தலையுடன்,
  கிழிந்த ஆடைகளுடன் அவர்கள் அருகே வந்து,

  "பவழ மோதிரமா?",
  என்று தொய்ந்தக் குரலில் கேட்க.,

  "ஆமாம்...பவழமோதிரம் தான்...
  இவள்தான் நான் கட்டிக்கப் போற பொண்னு..",
  என பெருமை அடித்துக் கொண்டான் ராஜா.

  "பிறந்த ராசியை வைத்துத்தான் பவழ மோதிரம்...போடனும் தம்பி...இதுல விளையாட்டுத்தனம் பன்னாதிங்க",
  என்றுக் கூறிவிட்டு,மெல்ல நகர்ந்தார்..

  "என்னங்க இப்படி சொல்றாரு?எனக்கு பயமா இருக்கு",
  என்றாள் சுஜா,

  "லூஸூ,...அந்த ஆளு மெண்டல்மாதிரி சொல்றான்னா,,,
  நீயும் பயப்படுகிறாயே?
  இந்தக் காலத்தில...அதும் படிச்ச நாமே இதையெல்லாம் நம்பினா...
  கேவலம்..',
  என்று அவளை சமாதானம் செய்துவிட்டு,
  மோதிரத்தை அவள் விரல்கலில் அணிவித்தான்..

  அவளது அழகிய விரல்களில் அந்தப் பவழமோதிரம்....அழகாய் ஜொலித்தது...

  "கட்டித் தங்கம் வெட்டியெத்டுது...
  காதல் என்னும் சாறுப் பிழிந்து..
  தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா...
  அவள் தளதளவென்று ததும்பி நிற்கும்....
  பருவமடா.........",
  பழையப்பாடல் வரிகள்...உயிரோவியமாக அரங்கேறின..
  ..
  Last edited by ராஜாராம்; 23-02-2011 at 03:05 PM.
  ரயில்லு நின்னா காட்பாடி...
  உயிரு நின்னா டெட்பாடி...


  :மன்றம்வருதல் பெரிதன்று வந்தப்பின் மன்றமக்களை
  மொக்கை போட்டுக் கொல்வதே பெரிது....
  "

 2. #2
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  48
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  96,476
  Downloads
  21
  Uploads
  1
  கதை, வசனம், ஃப்ளாஷ் பேக், (தமிழில் என்னன்னு யாராச்சும் சொல்லுங்களேன்) பொருத்தமான இடங்களில் பொருத்தமான பாடல்கள் என்று ஒரு திரைப்படமே கண்முன் ஓடிக்கொண்டிருக்கிறது. பாராட்டுகள் ராஜாராம்.

  எனக்கு ஒரு சந்தேகம்: இந்தப் படத்தின் முன்கதைச் சுருக்கத்தை முன்னாடியே மன்றத்தில் படிச்சமாதிரி இருக்கு. நான் நினைக்கிறது சரிதானா?

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
  Join Date
  18 Mar 2010
  Location
  தாய்த்தமிழ்நாடு
  Posts
  2,949
  Post Thanks / Like
  iCash Credits
  14,396
  Downloads
  47
  Uploads
  2
  இருபுறமும் காதல் தளும்புகிறது

  தொடரட்டும் ராஜாராம்

  மிக அழகு
  த.நிவாஸ்
  வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

 4. #4
  இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
  Join Date
  06 Oct 2010
  Posts
  989
  Post Thanks / Like
  iCash Credits
  3,819
  Downloads
  5
  Uploads
  0
  போட்டு தாக்கு.....ஆவி பறக்குது......செம சூடு.....
  நன்றி...

  தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
  http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765

 5. #5
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  45,159
  Downloads
  78
  Uploads
  2
  அதுக்குள்ளே அடுத்ததா.. நல்லா போகுதுங்க உங்க "கதை"

 6. #6
  இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
  Join Date
  30 Nov 2010
  Location
  மயிலாடுதுறை
  Posts
  800
  Post Thanks / Like
  iCash Credits
  4,211
  Downloads
  3
  Uploads
  0
  Quote Originally Posted by கீதம் View Post
  கதை, வசனம், ஃப்ளாஷ் பேக், (தமிழில் என்னன்னு யாராச்சும் சொல்லுங்களேன்) பொருத்தமான இடங்களில் பொருத்தமான பாடல்கள் என்று ஒரு திரைப்படமே கண்முன் ஓடிக்கொண்டிருக்கிறது. பாராட்டுகள் ராஜாராம்.

  எனக்கு ஒரு சந்தேகம்: இந்தப் படத்தின் முன்கதைச் சுருக்கத்தை முன்னாடியே மன்றத்தில் படிச்சமாதிரி இருக்கு. நான் நினைக்கிறது சரிதானா?
  அதேதான் கீதம் அவர்களே
  கதையோட கதாநாயகன் யாருன்னு கூட உங்களுக்கு புரிஞ்சிருக்குமே.

 7. #7
  இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
  Join Date
  30 Nov 2010
  Location
  மயிலாடுதுறை
  Posts
  800
  Post Thanks / Like
  iCash Credits
  4,211
  Downloads
  3
  Uploads
  0
  ராரா கதையோட முடிவுக்காகத்தான் ஆவலோட காத்திருக்கேன்.
  (முடிவு சொதப்பலா இல்லாம இருந்தா சரி)

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
  Join Date
  20 Dec 2005
  Location
  மும்பை
  Posts
  3,551
  Post Thanks / Like
  iCash Credits
  32,906
  Downloads
  288
  Uploads
  27
  Quote Originally Posted by ராஜாராம் View Post
  "உங்களுக்கு கேர்ல் பிரண்ட்ஸ் இருக்காங்களா...?",
  அடுத்தக் கேள்வி அவளிடமிருந்து வந்தது,

  "நிறையா உண்டு...எல்லாருமே இண்டர்நெட் பிரண்ட்ஸ்தான்...


  "பிளஸ்2 படிக்கும்போது அமுதான்னு ஒருப்பொண்ணு
  என்னை லவ் பன்றதா சொல்லி லவ் லெட்டர் தந்துச்சு....
  அறியாதா வயசு அது ..உண்மையான காதல் என்றால் என்னவென்றே தெரியாமல் பழகினோம்...
  அப்புறம் படிப்பு முடிந்ததும் 2பேருமே பிரிஞ்சிட்டோம்...
  அதைப் பற்றிக் கவலையும் படவில்லை..",
  என்ற ராஜா,

  " தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா...
  அவள் தளதளவென்று ததும்பி நிற்கும்....
  பருவமடா.........",
  ....

  ராசாவின் முழுப்பெயர் ராசா ராம்

  மு ரா யுவர் கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 9. #9
  இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
  Join Date
  30 Nov 2010
  Location
  மயிலாடுதுறை
  Posts
  800
  Post Thanks / Like
  iCash Credits
  4,211
  Downloads
  3
  Uploads
  0
  நோ கமெண்ட்ஸ்

 10. #10
  இளம் புயல் பண்பட்டவர் ராஜாராம்'s Avatar
  Join Date
  27 Jan 2011
  Location
  மயிலாடுதுறை
  Posts
  366
  Post Thanks / Like
  iCash Credits
  3,945
  Downloads
  0
  Uploads
  0
  Quote Originally Posted by கீதம் View Post

  எனக்கு ஒரு சந்தேகம்: இந்தப் படத்தின் முன்கதைச் சுருக்கத்தை முன்னாடியே மன்றத்தில் படிச்சமாதிரி இருக்கு. நான் நினைக்கிறது சரிதானா?
  நன்றி கீதம் அவர்களே,,
  இக்கதையின் முன்பகுதி நீங்கள் மன்றத்தில் படித்த கதையின் வடிவமே.அது பல தவறுகளுடன் பிரசுரம் ஆகி இருந்தது.அந்தப் படைப்பாளி சொல்ல நினத்ததையே ,நான் தெளிவாக கூறியிருக்கிறேன்.
  ரயில்லு நின்னா காட்பாடி...
  உயிரு நின்னா டெட்பாடி...


  :மன்றம்வருதல் பெரிதன்று வந்தப்பின் மன்றமக்களை
  மொக்கை போட்டுக் கொல்வதே பெரிது....
  "

 11. #11
  இளம் புயல் பண்பட்டவர் ராஜாராம்'s Avatar
  Join Date
  27 Jan 2011
  Location
  மயிலாடுதுறை
  Posts
  366
  Post Thanks / Like
  iCash Credits
  3,945
  Downloads
  0
  Uploads
  0
  நன்றி.,
  நிவாஸ் அவர்கள்ளுக்கும்,
  மதி அவர்களுக்கும்,
  கீதம் அவர்களுக்கும்,
  சாரா(சரண்)அவர்களுக்கும்,
  உமாமீனா அவர்களுக்கும்,
  மற்றும் நம் மன்றத்தின் அணைத்து நண்பர்களுக்கும்
  ரயில்லு நின்னா காட்பாடி...
  உயிரு நின்னா டெட்பாடி...


  :மன்றம்வருதல் பெரிதன்று வந்தப்பின் மன்றமக்களை
  மொக்கை போட்டுக் கொல்வதே பெரிது....
  "

 12. #12
  இளம் புயல் பண்பட்டவர் ராஜாராம்'s Avatar
  Join Date
  27 Jan 2011
  Location
  மயிலாடுதுறை
  Posts
  366
  Post Thanks / Like
  iCash Credits
  3,945
  Downloads
  0
  Uploads
  0
  Quote Originally Posted by sarcharan View Post
  ராசாவின் முழுப்பெயர் ராசா ராம்

  மு ரா யுவர் கமெண்ட்ஸ் ப்ளீஸ்
  இதற்கு,நோ கமெண்ட்ஸ் என்றுசொல்லி
  முரளிராசா என்ன்னையக் காப்பாத்திடியே..,,,,
  ரயில்லு நின்னா காட்பாடி...
  உயிரு நின்னா டெட்பாடி...


  :மன்றம்வருதல் பெரிதன்று வந்தப்பின் மன்றமக்களை
  மொக்கை போட்டுக் கொல்வதே பெரிது....
  "

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •