Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 37

Thread: யாரையும் காதலிக்காததில் இருக்கும் சுதந்திரம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0

    யாரையும் காதலிக்காததில் இருக்கும் சுதந்திரம்

    யாரையும் காதலிக்காமல் இருப்பதில்
    இருக்கும் சுதந்திரம்
    இருப்பதில்லை
    யாரையும் காதலிப்பதில்

    உனக்கு பிடித்தமானவருக்கெல்லாம்
    பாடும் வாழ்த்தட்டை ஒன்றையும்
    ஸாக்குலெட்ஸ் சிலவும்
    பரிசு பொம்மைகளும் வாங்கித்தரலாம்
    உன்னை பிடித்தவர்களிடமிருந்தும்
    இவற்றை நீ எதிர்ப்பார்க்கலாம்..


    மீனுடனான தொட்டியொன்றை அளித்து
    என்மேல் இவ்வாறே மேய்க்கின்றன
    உன்கண்கள் எனலாம்

    உன் செவ்விதழை மேலும் சிவப்பாக்கும்
    இந்த லிப்ஸ்டிக் என்றாலும்
    எனக்கு மிகப் பிரியமானது
    உன் சாதாரண இதழ்களே என கவிதை சொல்லலாம்

    உனக்கு தோன்றும் போது விருப்பமான ஒருத்தரை
    அழைத்து காற்று முழுக்க
    அரட்டை நப்பு விரிய அலைபேசலாம்
    டேட்டிங் என்று ரெஸ்டாரண்ட் சென்று
    ஐஸ்க்ரீம் உண்டு
    பிணைந்து கொண்டு திரும்பி வரலாம்

    இதழலைபாயும் நீள்முத்தத்தை,
    நெருக்கமான தழுவலை
    மோகப்பதம் மிதமாய் பரப்பும் பேச்சுக்களை
    ஒன்றுகூடி ஒருமிக்கும் காமத்தை
    யாதொரு தருணத்திலும்
    யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்..

    என்றாலும்
    உன்னால் இயல்வதில்லை
    யாரையும் காதலிக்காமலிருக்க
    தீர்மானமாய் வேண்டுகிறாய்
    நிச்சயமாய் உன்னை காதலிக்கும் ஒருத்தரை..
    Last edited by ஆதி; 16-02-2011 at 06:36 AM.
    அன்புடன் ஆதி



  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    கவிதை அருமை..சார்..

  3. #3
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    நன்றாக உள்ளது கவிதை. வாழ்த்துக்கள்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    காதலை இன்னொரு கோணத்திலிருந்து உங்கள் பார்வை
    அருமை ஆதன்

    இப்போ காதலிக்கலாம்னு சொல்றீங்களா? இல்ல வேண்டாம்னு சொல்றீங்களா?
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  5. #5
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    8,989
    Downloads
    5
    Uploads
    0
    உங்கள் பார்வை..... கவிதை......அருமை
    நன்றி...

    தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ஹாஹா... அந்த கடைசி பத்தி.. !!

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இனிமையான கவிதை நண்பரே!அதிலும் இறுதி நான்கு வரிகள் ஒரு கவிதையின் அழகு ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    காதலிக்காதல்!
    இவ்வார்த்தையில்
    காதல் உண்டு,
    காதலி உண்டு,
    காதலனுக்கு மட்டும்
    இடமொன்று இல்லை.
    அதனால் கவலையும் இல்லை,
    சுற்றுகிறானே சுதந்திரமாக!

    காதலிக்காதலின் வரிகளை
    கவனமாய்ப் பார்,
    காதலி காதலி என்று
    கதறுவதைக் கேள்!

    இன்னுமென்ன தயக்கம்?
    காதலி இனிதே!
    இனிதே காதலி!

  9. #9
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    காதல் செய்யச் சொல்கிறீர்களா? இல்லை காதலிக்காமல் இருக்கவேண்டாம் என்று சொல்கிறீர்களா?..கவிதை நன்று.

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    பின்னூட்டிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

    நேரியதாய் மையத்தை நோக்கி நகர்ந்து பயணிக்கும் கவிதைகள், மையத்திலிருந்து புரப்பட்டு மீண்டும் மையத்துக்குள்ளேயே முடியும் வட்டக்கவிதைகள், வாசகன் வாசிக்க வாசிக்க வார்த்தை வார்த்தையாய் வாசகனோடு இணைந்து மையகருத்தும் நகர்ந்திருக்கும் கவிதைகள், முன்னுக்குப்பின் வரிகளை மாற்றிப்போட்டு வாசகனை மையத்தை தேடவிடும் கவிதைகள் என்ற வகைகளில், எதிர்முனையில் இருந்து மையத்துக்கு நகர்ந்து வரும் கவிதையொன்றை எழுத முயன்ற முயற்சியே இக்கவிதை..

    காதலிப்பது/காதலிக்கப்படுவது எவ்வளவு சுகமானதென்று எத்தனையோ கவிதைகள் உள்ளன, ஆனால் காதலிக்காததில் உள்ள வசதியை, கட்டுப்பாடின்மையை பற்றி பேசி கவிதையை காதலில் கொணர்ந்து முடித்து, இவ்வளவு இருந்து நாம் ஒருவரை காதலிக்கவும், நம்மை ஒருவர் காதலிக்கவுமே விரும்புகிறோம். காரணம், காதல் என்பது நுண்மீதமுமில்லாமல் நம்மை ஒப்படைத்து, நாம் காதலிப்பரை எந்த கேள்வியும் கேளாமல், எந்த உடன்படிக்கையையும் ஏற்படுத்தி தருவிக்க கூறாமல், எந்த நம்பிக்கையில் அடையாளத்தையும் கோராமல், எவ்வெதிர்ப்பார்ப்புமின்றி முழுமுற்றாய் சரணடைதல். அந்த ஒரு சரணடைதலின் தருணத்துக்காக நாம் காத்திருக்கிறோம், எந்த ஒரு சுதந்திரத்தையும் இழக்க தயாராக இருக்கிறோம், எவ்விதமான அடிமைத்தனத்தையும் ஏற்க துடிக்கிறோம், தன்கௌரவத்தை நாம் காதலில் கடைப்பிடிப்பதில்லை, எவ்வளவு தூரமும், எந்த விடயங்களையும் விட்டுக் கொடுக்கிறோம்..

    இந்த காதலை செய்யாமலும்/கோராமலும்/எதிர்ப்பார்க்காமலும்/வேண்டாமலும் இருத்தல் நமக்கு சுலபமில்லாதது..

    ஆதலால் காதல் செய் என்பதே கவிதையின் சாரம்...
    அன்புடன் ஆதி



  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    காதலை ஒதுக்கிவிட்டு
    வாழ்வை முடித்துவிட முடியாது...

    காதல் என்பது,
    தவறாகப் பார்க்கப்பட காலம்தொட்டுக்,
    காதல்
    தவறாமற் சந்ததிகடத்தப்பட்டுக்
    கொண்டுதான் இருக்கின்றது.

    முதல் மனிதனுக்குக் காதல் வந்திருந்திருக்குமா
    என்பது தெரியவில்லை...
    ஆனால்
    கடைசி மனிதனுக்குக் காதல் வந்தேயாகும்.
    காதல் வரவில்லை என்றானால்,
    அதுதான்
    உலகத்தின்
    கடைசி...

    கடைசிப்பத்தி மிகவும் கவர்ந்தது.

    பாராட்டு ஆதன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    யாரையும் காதலிக்காமல்
    அப்படின்னு தலைப்பை வச்சிட்டு
    எல்லோரையும் காதலிக்கறதில இருக்கிற வசதிகளை
    பட்டியலிட்டு
    சுயநலக் காதலைத்தான்
    மனசு விரும்புதுன்னு சொல்லீட்டீங்களே ஆதன்..

    ஆ!! தன் காதல்...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •