Results 1 to 10 of 10

Thread: Pen Drive

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0

    Pen Drive

    நண்பர்களே ,

    pen drive வாங்க எண்ணியுள்ளேன் .

    pen drive ஐ வாங்கும் முன் அதில் கவனிக்க வேண்டிய சிறப்பு அம்சங்கள் யாவை ?

    எந்த கம்பெனி pen drive சிறந்தது ?

    என்ன விலையாகும் ?

    இக்கேள்விகளுக்கு விடை தாருங்கள் . எனக்கும் , மற்ற பல நண்பர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் உங்களது தகவல்கள் .

    நன்றி
    யாவரும் வாழ்க வளமுடன்

  2. #2
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0


    நண்பரே பொதுவாக கடைகளில்
    1 ஜீபி முதல் 32 ஜீபி வரை கொள்ளளவு கொண்ட
    பென்ட்ரைவ் புழக்கத்தில் உள்ளது. அதற்கேற்றார்போல விலையும் மாறுபடும்..
    tanscend கம்பெனி நன்றாக உள்ளது.
    இதன் 4ஜீபி யின் விலை 300 ரூபாய்.(உத்தேசமாக)
    8 ஜீபீயின் விலை 700 ரூபாய்க்குள்.
    நீங்கள் 8 ஜீபியை தாண்டி அதிக கொள்ளளவு கொண்ட பென்டிரைவ் தேவைபடுமாயின் அதற்கு பதிலாக external harddisk வாங்குவதே சிறந்தது.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    தற்போது அலைபேசிகளில் பயன்படுத்தும் நினைவகம் இதனை கூட பென் டிரைவ் வாக மேலும் அலைபேசி யுலும் பயன்படுத்தலாம் இதன் தற்போதைய விலை மிகவும் குறைவு 50 ற்குள்ளாகதான் ...
    வாங்கிய பொருளுக்குத் தரும் ரசீதை பத்திரமாக வைக்கவும்.
    பென் டிரைவ் விற்பனையில் Kingston,HP,transcend,sandisk,verbatim,moserbear போன்றவை முன்னணியில் உள்ளவை.
    பென் டிரைவ் வாங்கும் போது குறைந்தபட்சம் உத்தரவாதம்(warantee ) உள்ளதாக வாங்கவும் ...
    பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் இணையத் தளத்தில்,வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய பென் டிரைவ் /ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை பதிவு செய்ய வசதிகள் வழங்கியுள்ளன. குறிப்பாக இதை சொல்லுவதின் காரணம், iomega ஹார்ட் டிஸ்க் பொதுவாக ஒரு வருட வாரண்டி மட்டுமே. ஆனால் நீங்கள் அவர்கள் இணையத் தளத்தில் பதிவு செய்தால் மூன்று வருட வாரண்டி கிட்டும் .
    இது மட்டுமில்லாது, நீங்கள் வாங்கும் பென் டிரைவ் போலியா என்பதையும் அவர்களது இணையத் தளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். பென் டிரைவ் மார்க்கெட்டில் நிறைய போலிகள் உலவுகின்றன.
    பென் டிரைவ்,எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் இவற்றின் மேல்புறத்தை முடிந்தவரை கீறல் விழாதவாறு பார்த்துக் கொள்ளவும். பெரும்பாலான சமயத்தில் கீறல் விழுந்த பென் டிரைவ்கள் ரிப்பேர் செய்து தரப்படுவது இல்லை. அவை வாரண்டி விதிமுறைகளில் வராது.


    சில நிறுவனங்களின் கஸ்டமர் கேர் எண்களை பகிர்ந்துக் கொள்கிறேன். உங்களுக்கு உபயோகமாக இருக்கும் .


    seagate - 1-800-425-4535
    iomega - 1-800-425-9888
    beetel - 1-800-10-23456
    Gigabyte- 1-800-425-4945
    Lacie - 1-800-425-3969

    போர்டபிள் ஹர்ட் டிஸ்க் கூட தற்போது பல்வேறு அளவில் வருகிறது ..இதில் தங்களுக்கு எந்த அளவிற்கு நினைவகம் உள்ள பென் டிரைவ் அல்லது போர்டபிள் ஹர்ட் டிஸ்க் தேவை என்பதை முடிவு செய்து அதற்கு ஏற்றாற்போல் வாங்கவும் ..இன்று 64 GB வரை பென் டிரைவ்கள் கிடைக்கின்றன. இதை கொண்டு செல்வது எளிது. உங்கள் பேன்ட் பாக்கெட் இல்லை ஷர்ட்டில் போட்டு கொண்டு வந்து விடலாம். எக்ஸ்டெர்னல்(போர்டபிள்) ஹார்ட் டிஸ்க்களை விட விலை குறைவுதான்.seagate,transcend,iomega,buffalo,western digital,lacie போன்றவை எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் ஆகும்.
    இருந்தாலும், நீங்கள் நிறுவனத்தின் நேரடி சர்விஸ் சென்டர் எங்குள்ளது, அதற்கு கஸ்டமர் கேர் எண் உள்ளதா என்று விசாரித்து கொள்ளவும். நேரடியாக சர்விஸ் சென்டரில் சென்று மாற்றுவதே சிறந்தது. ஒரு சில நிறுவனங்கள் உங்கள் வீட்டில் வந்து கூட ரிப்பேர் ஆன எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்குகளை பெற்று சென்று பிறகு சர்விஸ் செய்த ஹார்ட் டிஸ்க்கை கொரியரில் அனுப்பி வைக்கின்றனர். எனவே நீங்க அலைய வேண்டிய அவசியம் இருக்காது.
    நினைவில் கொள்ளவேண்டிய விஷயம் ஒன்று. இன்றைய பொருளாதார சூழலில் பெரும்பாலான நிறுவனங்கள் உங்கள் பென் ட்ரைவோ இல்லை எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கோ பழுதடைந்தால் புதிய பொருள் தருவது இல்லை, நீங்கள் கொடுத்த பொருளையே சர்விஸ் செய்து கொடுப்பார். இன்னும் சில நிறுவனங்கள் வேறு ஒரு ஹார்ட் டிஸ்க்கோ இல்லை பென் ட்ரைவோ தருவார்கள். ஆனால் அதன் மேல் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப் பட்டிருக்கும் "refurbished product". இதன் அர்த்தம் இது சர்விஸ் செய்யப் பட்ட பொருள் என்பதே
    நீங்கள் வேலை நிமித்தம் வெளிநாடு செல்பவராக இருந்தால் வாங்கும் பொருளுக்கு இண்டர்நேசனல் வாரண்டி உள்ளதா என்பதை தெளிவுப் படுத்திக் கொள்ளவும். இன்று பெரும்பாலான நிறுவனங்கள் இத்தகைய வசதி தருவது இல்லை.

    எந்த நிறுவனமும் பென் ட்ரைவுக்கும்/ஹார்ட் டிஸ்க்கிற்கும் மட்டுமே வாரண்டி அளிக்கும். அதில் நீங்கள் வைக்கும் டேட்டாவிற்கு இல்லை. உங்கள் பொருள் பழுதடைந்தால் அதை மட்டுமே மாற்றியோ இல்லை சரி செய்தோ தருவர். நீங்கள் அதில் வைத்த டேட்டா காலி. டேட்டா திரும்ப எடுப்பது என்பது தனி வேலை. அதை எந்த நிறுவனமும் இலவசமாக செய்வது இல்லை. அதற்கென்று தனி நிறுவனங்கள் உள்ளன. அவற்றையே நீங்கள் நாட வேண்டும். எனவே எக்ஸ்டெர்னல் மீடியா எனப்படும் இவற்றில் வைக்கப்படும் டேட்டாவின் ஒரு பேக் அப் உங்கள் கணிணியில் இருக்கட்டும். இந்த மாதிரி தருணங்களில் அது உபயோகப் படும்.

    அதே போல் எத்தனை நாட்களில் ரிப்பேறோ இல்லை மாற்றியோ தருவார்கள் என்பதையும் அந்த நிறுவனத்தின் கால் சென்டருக்கு போன் செய்து உறுதி படுத்திக் கொள்ளுங்கள். கடையில் விற்பனைக்காக உடனடியாக மாற்றி தரப்படும் என்று பொய் சொல்ல வாய்ப்புண்டு.

    இவ்வாறு நீங்கள் அனைத்து விஷயங்களையும் தெளிவு செய்து கொண்டு பின்பு வாங்கவேண்டும். விலை கம்மியாக உள்ளதே என்று சரியாக சர்விஸ் இல்லாத நிறவனத்தின் பொருட்களை வாங்கி பின் அவஸ்தை பட வேண்டாம்.


    நன்றி :lksthoughts Blog
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    சுருக்கமான , தெளிவான பதில் உரைத்த
    திரு .முரளிராஜா அவர்களுக்கும் ,

    மிகுந்த அக்கறையுடன் பொறுமையாக விரிவாக பதில் உரைத்த
    திரு . ஜெய் அவர்களுக்கும்

    எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    நண்பர்களே , போலி pen drive ஐ கண்டறிய ஏதேனும் வழிமுறை உள்ளதா ?
    யாவரும் வாழ்க வளமுடன்

  5. #5
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    விரிவான விளக்கம் அளித்த நண்பர் ஜெய் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
    தங்கள் விளக்கம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    ஒரு வருட வாரண்டி மட்டுமே. ஆனால் நீங்கள் அவர்கள் இணையத் தளத்தில் பதிவு செய்தால் மூன்று வருட வாரண்டி கிட்டும் .
    இது மட்டுமில்லாது, நீங்கள் வாங்கும் பென் டிரைவ் போலியா என்பதையும் அவர்களது இணையத் தளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.வாங்கிய பொருளுக்குத் தரும் ரசீதை பத்திரமாக வைக்கவும்.
    இவ்விரு வழிமுறைகளை தொடர்ந்தால் போலிகளை கண்டறியலாம் .ஒருவேளை அது போலி இனி அதனை மாற்றிகொள்வது உங்கள் சாமர்த்தியம்...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    நன்றி திரு .ஜெய் அவர்களே,

    போலி இனி அதனை மாற்றிகொள்வது உங்கள் சாமர்த்தியம்...
    அது பகீரத பிரயத்தனமாயிற்றே !

    வாங்குவதற்கு முன்பே போலியை கண்டறிந்து அதை தவிர்க்க முடியாதா ? நண்பரே
    யாவரும் வாழ்க வளமுடன்

  8. #8
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    8,989
    Downloads
    5
    Uploads
    0
    விளக்கமான தகவலுக்கு நன்றி


    Quote Originally Posted by முரளிராஜா View Post
    நீங்கள் 8 ஜீபியை தாண்டி அதிக கொள்ளளவு கொண்ட பென்டிரைவ் தேவைபடுமாயின் அதற்கு பதிலாக external harddisk வாங்குவதே சிறந்தது.
    சரியாக சொன்னிர்கள் - நானும் அப்படிதான் வைத்துளேன்
    நன்றி...

    தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    வாங்குவதற்கு முன்பே போலியை கண்டறிந்து அதை தவிர்க்க முடியாதா ? நண்பரே
    ஆத்மா அவர்களே !பெரும்பாலும் நீங்கள் வாங்கும் பென் டிரைவ் ஆனது ஒருவேளை போலியாக இருப்பின் அவர்கள் அதற்க்கான ரசீது தரமாட்டார்கள் ஒருவேளை அவ்வாறு தந்தாலும் பென் டிரைவ் பெயரில் அல்லது அதன் வடிவமைப்பில் ஏதேனும் சிறிது மாற்றம் இருக்கும்.முக்கியமாக ஒரு சீரியல் நம்பர் வாங்குவது உண்மையான பென் டிரைவ் எனில் இருக்கும் . இதன் மூலம் அதனை கண்டறியலாம் ..உங்களுக்காக ஒரு தகவல் இதோ

    போலி 'பென் டிரைவ்' விற்ற வட மாநில ஆசாமி கைது
    நவம்பர் 10,2009,00:00 IST



    சேலம்: போலி "பென் டிரைவ்'களை, மலிவு விலையில் விற்பனை செய்த வடமாநில வாலிபரை, போலீசார் கைது செய்தனர். சேலம் ஜங்ஷன் மெயின் ரோடு பகுதி கம்ப்யூட்டர் சென்டருக்கு, நேற்று மதியம் வடமாநில வாலிபர் ஒருவர் வந்தார். உரிமையாளரிடம், நிறைய "பென் டிரைவ்'களைக் காண்பித்தார்.


    அவை அனைத்தும் சீன தயாரிப்பு என்றும், 32 ஜி.பி., மெமரி கொண்டவை என்றும் தெரிவித்தார். ஒரிஜினல் "பென் டிரைவ்' விலை 1,200 ரூபாய் என்றும், கம்பெனி விளம்பரத்திற்காக வெறும் 350 ரூபாய்க்கு அவற்றைத் தருவதாக கூறினார். அதை சோதித்து பார்த்தபோது, பைல்கள் சரியாகப் பதியவில்லை. சந்தேகமடைந்த உரிமையாளர், சேலம் ஐ.டி., அசோசியேஷன் தலைவருக்குத் தகவல் கொடுத்தார். அவர் பரிசோதித்ததில், "பென் டிரைவ்' அனைத்தும் போலி என தெரிந்தது.


    "டுபாக்கூர்' ஆசாமி கூறியதாவது: என் பெயர் சலீம் (24). உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் எனது சொந்த ஊர். எனது தந்தை பேர் ஷம்சத். டில்லியில் உள்ள சாந்தினி சவுக் பகுதியில், மிக பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளை ஒரிஜினல் போலவே போலியாக உருவாக்கும் நிறுவனங்களிடமிருந்து, பொருட்களை வாங்கி, தமிழகத்தில், மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் விற்பனைசெய்வோம். ஒருமுறை சென்ற ஏரியாவுக்கு மீண்டும் போக மாட்டோம்.

    நேற்று காலை, கோயம்புத்தூரில் இருந்து, ரயிலில் டிக்கெட் எடுக்காமலேயே சேலம் வந்தேன். சேலத்தில் மட்டும் 30 "பென் டிரைவ்'களை விற்பனை செய்தேன். நான் விற்ற போலி "பென் டிரைவ்'களை இயக்க முயற்சி செய்தால், கம்ப்யூட்டர் பழுதடைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார். சலீமை, பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர். அவருடன் வந்துள்ள கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நன்றி: தின மலர்

    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    மிகப் பொறுமையுடன் , சிறப்பான விளக்கம் அளித்த திரு .ஜெய் அவர்களுக்கு நன்றிகள் பல
    யாவரும் வாழ்க வளமுடன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •