Results 1 to 8 of 8

Thread: எவ்வாறு இது சாத்தியம்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3

    எவ்வாறு இது சாத்தியம்

    நமது கணினி அறையில் நாம் பெரிதும் பயன் படுத்தும் குறுந்தகடு ஒரு சிலநேரங்களில் பாதிப்படைந்தால் நமக்கு சிரமம் அது போல் பாதிப்படைந்த பல குறுந்தகடுகள் ஒன்று சேர்ந்தால் அதனை அழிப்பது என்பது அதைவிட சிரமம் அது போல் சீரான மின்னோட்டம் கொடுக்கும் UPS யில் பயன் படுத்தும் மின்கலம் அதன் காலம் முடிந்ததும் பயன் படுவதில்லை ..இந்த இரண்டும் இன்றைய கணினி அறையில் நீக்க முடியாத குறைகளாக எனக்கு உள்ளது ..இதனை எவ்வாறு புவி மாசின்றி அழிப்பது அதன் செயல்முறைகள் யாரேனும் கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்....
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு நண்பரே,
    சுற்றுச்சூழல் குறித்த உங்கள் ஆர்வம் மெச்சத்தக்கது.
    மேலை நாடுகளில் ஓரளவிற்கு மறுசுழற்சி முறை பயன்பாட்டில் இருக்கிறது.
    http://www.recyclingcds.com/
    http://www.apc.com/recycle/index.cfm?isocountrycode=us

    நம் நாட்டில் எப்போது வரும் என்று கணிக்க முடியவில்லை.

    இயன்ற வரை குறுவட்டில் பதிவதை தவிர்ப்போம். நேரடியாக வன் தகட்டில் பதிவு செய்து நிறுவும் முறை புழக்கத்தில் இருப்பதை நாமும் கைக்கொள்ளலாம்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    நன்றி நண்பரே உங்கள் பதிவினில் உள்ள தளங்கள் போன்று நமது நாட்டினில் இருந்தால் மிகவும் நன்றாயிருக்கும் .இன்று நடக்கும் நிகழ்வுகளை காண்கையில் அரசு அவர்களை தற் காத்துகொள்வதர்க்கே நேரம் சரியாக உள்ளது .இதுபோன்று புவி மாசு என்று விரயம் செய்ய அவர்களுக்கு ஏது நேரம் ...நம்மால் இயன்ற வழிமுறைகள் இதனை மறுசுழற்சி அல்லது பாதுகாப்பான முறையில் அழிப்பது ஏதேனும் இருந்தால் நமக்கு மிகவும் உதவும் ..அதனை தெரிந்த நமது நண்பர்கள் கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3

    பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்!

    ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.
    கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே!
    தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.
    சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.
    நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

    • கேரி பேக்குகள்
    • காய்கறி கேரி பேக்குகள்
    • மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
    • பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
    • வீட்டு குப்பை பைகள்
    • வணிக குப்பை பைகள்
    • தொழிற்சாலை லைனர்கள்
    • மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

    மக்கிப் போவதற்கு ஆகும் காலம்

    • பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்
    • வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
    • பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
    • காகிதம் - 2-5 மாதங்கள்
    • கயிறு - 3-14 மாதங்கள்
    • ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
    • உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
    • டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
    • தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
    • நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
    • தகர கேன் - 50-100 ஆண்டுகள்
    • அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
    • பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
    • டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்
    • பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

    எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
    பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?
    சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை
    அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.
    (நன்றி- பயோடெக் பேக்ஸ் வெளியிட்ட அறிக்கை)
    இது போன்று தான் நாம் பயன்படுத்தும் குறுந்தகடு இதனை எவ்வாறு அழிப்பது உங்களால் இயன்ற தகவல்களை அழியுங்க நண்பர்களே ! இது இன்றைய புவியின் அச்சுறுத்தல் இதனை தவிர்க்க நாம் ஒன்றுபடுவது அவசியம்





    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சுற்றுச் சூழல் மீதான உங்கள் ஆர்வத்துக்கு என் வாழ்த்து.

    நாம் விரும்பும் மாற்றம் நம்மிலிருந்து பிறக்கிறது. முடிந்தவரைக்கும் நம் பழக்க வழக்கங்களை சூழல் மாசுறா வண்ணம் அமைத்துக்கொள்வோம்.

    நம் அன்றாடத்தில் நிறையச் செய்யலாம். ஒரு ஐந்து நிமிடம் மின் விளக்கை அணைத்து வைத்திருப்பது.. சார்ஜரை தேவை முடிந்ததும் கழற்றி வைப்பது என எத்தனையோ விசயங்கள்....

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    நல்ல விடயம்...

    இந்தவருட ஆரம்பத்திலிருந்து இத்தாலியில் புதிதாக ஒரு சட்டம் கட்டாயமாக அமுற்படுத்தப்பட்டேவிட்டது.

    அதன் முதற்கட்டமாக, மிகமுக்கிய வர்த்தக நிலையங்களெல்லாம்,
    பிளாஸ்டிக் பைகளை உக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளாக்கிவிட்டன.

    பிளாஸ்டிக் பைகளைப்போல, உக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகள் வலுமிக்கதாக இல்லாவிடினும்,
    சூழற்பாதுகாப்பை கருத்திற்கொண்டு மக்களும் அதற்குத் தம்மைப் பழக்கிக்கொண்டுவிட்டார்கள்.

    இது உலகெங்கும் பரவினாலே மிகப்பாதிப்பைத் தரும் பிளாஸ்டிக் பைகளை உலகில் இனியேனும் தள்ளிவச்சுடலாம்...
    நம்ம ஊரு நாட்டாமைங்க எப்பதான் புரிஞ்சு கொள்ளுவாங்களோ...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #7
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0
    இவற்றை வாங்கி மறுசுழற்சி செய்ய இந்தியாவிலும் சில நிறுவனங்கள் உண்டு...

    சென்னையிலேயே சிலர் உண்டு என்று அறிகிறேன்...
    விரைவில் விடை காண்போம்!!

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    Quote Originally Posted by AMARAN
    சுற்றுச் சூழல் மீதான உங்கள் ஆர்வத்துக்கு என் வாழ்த்து.

    நாம் விரும்பும் மாற்றம் நம்மிலிருந்து பிறக்கிறது. முடிந்தவரைக்கும் நம் பழக்க வழக்கங்களை சூழல் மாசுறா வண்ணம் அமைத்துக்கொள்வோம்.

    நம் அன்றாடத்தில் நிறையச் செய்யலாம். ஒரு ஐந்து நிமிடம் மின் விளக்கை அணைத்து வைத்திருப்பது.. சார்ஜரை தேவை முடிந்ததும் கழற்றி வைப்பது என எத்தனையோ விசயங்கள்....
    நன்றி அமரன் அவர்களே ! இன்றைய சுற்றுசூழல் மேம்படுவதற்கு இந்த சிறு தகவலும் உதவும் ..

    Quote Originally Posted by AGNI
    இத்தாலியில் புதிதாக ஒரு சட்டம் கட்டாயமாக அமுற்படுத்தப்பட்டேவிட்டது
    ஆம் உண்மை தான் அக்னி அவர்களே! தற்போது இந்த மாறுபாடு எங்களது நகரில் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது அவசியமான அதே நேரத்தில் பயன்பாடுள்ள இதுபோன்ற மாற்றம் கொஞ்சம் தாமதமாக தான் ஏற்பட்டுள்ளது ..இன்றைய சூழ்நிலையில் மிகபெரிய பிரச்சனை என்னவென்றால் பாலிதீன் கண்டறியப்பட்ட ஆண்டு முதல் இதுவரை பயன்படுத்திய பிளாஸ்டிக் எனும் நஞ்சுவின் பதிப்பு இன்னும் பூமியில் இருக்கிறது இதனை எவ்வாறு பூமிக்கு பாதிப்பின்றி பயன்படுத்துவது அல்லது அழிப்பது என்பது தான் ... மனிதன் ,விவசாயம் மற்றும் புவியில் ஏற்படுள்ள நீண்டகால பாதிப்பினை கூறும் இந்த கட்டுரை..



    பாலிதீன் பை சாம்பாரில் ஒளிந்திருக்கும் பயங்கரம் !


    ‘எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக்கடா’
    - இப்படித்தான் பாடியிருப்பார் பாரதி இப்போது நம்முடன் வாழ்ந்திருந்தால்! காய்கறி கடை, பூக்கடை, மளிகைக் கடை, ஜவுளிக்கடை, இறைச்சிக் கடை என எந்தக் கடையிலிருந்து திரும்பினாலும் கையில் தொங்குகின்றன ஆபத்தை ஒளித்து வைத்திருக்கும் அழகான பாலிதீன் பைகள்.
    அந்தப் பைகளுக்குள் பதுங்கி இருக்கும் ஆபத்துகள் பற்றி நெடுங்காலமாகவே அறிவியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் அலாரம் அடித்துக் கொண்டிருந்தாலும், இன்னொருபுறம் அதன் பயன்பாட்டை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறோம்.
    ‘பிளாஸ்டிக் பொருட்களின் தாறுமாறான பயன்பாட்டை மத்திய அரசால் தடை செய்ய முடியாது. மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும்தான் முடிவு செய்யவேண்டும்’ என்று மத்திய அரசுகூட சமீபத்தில் கைவிரித்துவிட்டது.
    ”இந்த விஷயத்தில், பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி யாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையேயான பேரங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் சூழ்ச்சிகள் அடங்கியிருக்கின்றன” என்று குமுறுகிறார்கள்… விவரமறிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
    இப்படி அக்கறையற்ற ஆட்சியாளர்கள் இருப்பதால்… மிக மோசமானதொரு நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது நம்முடைய எதிர்காலமும்… பூமிப்பந்தின் எதிர்காலமும்! இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது… முடிந்த அளவுக்கு நாமே பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வதுதான்.
    ‘அது அவ்வளவு அவசியமானதா…?’ என்று யோசிப்பவர்கள்… மேற்கொண்டு படியுங்கள்.
    "பயன்படுத்துவதற்கு எளிதானது என்றுதான் பிளாஸ்டிக்கை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஆனால், பயன்படுத்தி குப்பையில் வீசிய பிறகு அந்த பிளாஸ்டிக்
    என்னவாகிறது என்பது பற்றி யோசிக்க யாருக்கும் நேரமில்லை. விளைவு, பயங்கரவாத பிரச்னைக்கும் மேலாக… உலகையே அச்சுறுத்தும் பிரச்னையாக எழுந்துள்ளது பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் விஷயம்” என்று சொல்லும் ‘பசுமைத் தாயகம்’ அமைப்பைச் சேர்ந்த அருள்.
    "பிளாஸ்டிக் மற்ற குப்பைகளைப் போல மண்ணில் மட்கக் கூடியது அல்ல; மண்ணில் அது அப்படியே இருப்பதால், மழை நீர் நிலத்தடிக்குள் வடிந்து செல்ல முடியாமல், குறைந்த அளவு மழை பெய்தாலும் ‘வெள்ளம்… வெள்ளம்’ என்று சென்னை போலவே பல இடங்கள் அலறுகின்றன. ஆடு, மாடுகள் இந்த பிளாஸ்டிக்கை சாப்பிடுவதால், அதன் பாலில் கெமிக்கல் கலந்திருக்கிறது. அந்தப் பாலைத்தான் நாமும் குடித்துக் கொண்டு இருக்கிறோம். உச்சகட்ட கொடுமையாக தாய்ப்பாலிலும் இந்த கெமிக்கல் இருக்கிறது என்பது நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது.
    இந்த பிளாஸ்டிக்கை அதிக அளவு பயன்படுத்த ஆரம்பித்து 50 ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்குள் இது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் நிலத்தோடு நின்றுவிடவில்லை. கடல் வாழ் உயிரினங்களான வகை வகையான மீன்கள், சுறா, திமிங்கலம் மற்றும் கடல் தாவரங்களின் இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டுஇருக்கிறது. இந்த கடல்வாழ் உயிர்களை நம்பி பூமியில்
    இருப்பவர்கள் எத்தனை லட்சம் பேர்..?
    நம் சின்னச் சின்ன தேவைகளுக்காக பயன்படுத்தும் இந்தப் பிளாஸ்டிக், இப்படி நம் பூமிக்கு விளைவித்திருக்கும் ஆபத்து மிகப்பெரியது. இதன் பயன்பாட்டை உடனடியாக தடை செய்யவில்லையெனில், இப்போது நாம் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கும் நம் பூமி, ஒரு நாள் முழுவதுமாக முடிந்துவிடும்!” என்றார் சோகமாக.
    ஐந்திணை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் தமிழ்வேங்கை, "சில மாதங்களுக்கு முன் டெல்லியில் பல நூறு மாடுகள் இறந்தன; இறந்த அத்தனை மாடுகளின் வயிற்றிலும் பாலிதீன் பைகள் இருந்தன! கேட்பதற்கே எத்தனை அதிர்ச்சியாக இருக்கிறது? இந்தியாவில் உருவாகும் மருத்துவ – பிளாஸ்டிக் கழிவுகள் மற்ற உலக நாடுகளைவிட அதிகம். நாம் பயன்படுத்தும் ஒரு கேரி பேக், சூரிய ஒளியால் மட்குவதற்கு 300 வருடங்கள் ஆகும் என்றால், தினம் தினம் எத்தனை மீட்டர் அளவுள்ள இந்த விஷக் குப்பையை ‘ஜஸ்ட் லைக் தட்’ பயன்படுத்துகிறோம்? இதற்கு மாற்றாக சணல் பைகளை பயன்படுத்தலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள், விஞ்ஞானிகள். பல நூறு வருஷங்களாக இந்த சணல் பைகளை பயன்படுத்தும் முன்னோடி சமூகம் நம்முடையது. மீண்டும் அது நம் கைகளுக்கு வரவேண்டும்” என்று சொன்னார்.
    இந்த பிளாஸ்டிக்கால் ஏற்படும் நோய் அபாயங்கள் பற்றி விளக்கினார் சென்னை, மாநகராட்சி மருத்துவர் செல்வராஜ். "நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் பிஸ்பினால்-ஏ (Bisphenol -A) என்ற கெமிக்கல் இருக்கிறது. இதை அதிக அளவில் பயன்படுத்தும்போது ஆண், பெண் இருவருக்கும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. அதனால்தான் இன்று எங்கு பார்த்தாலும் செயற்கை வழி கர்ப்பங்கள் பெருகி வருகின்றன. அதுமட்டுமல்ல, 10, 11 வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்படைந்து விடுகிறா
    ர்கள். கேன்சர், ஒபிஸிட்டி, தைராய்டு கோளாறு என பல நோய்களுக்கும் வாசல்படியாக இருக்கிறது இந்த பிளாஸ்டிக் பயன்பாடு. அதனால்தான் மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேஷம், டெல்லி, ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்களில் டூரிஸ்ட் ஸ்பாட்டுகள், மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளார்கள்.
    ஆனால், இதெல்லாம் ஏதோ பக்கத்து கிரக செய்தி என நினைத்துக் கொண்டு… பிளாஸ்டிக் கப்பில் டீ குடிக்கிறோம். ஐஸ்கிரீம், தயிர், பால், எண்ணெய், அரிசி, பருப்பு என அனைத்தும் பிளாஸ்டிக் பேக்குகளில் வாங்குகிறோம். இதையெல்லாம்விடக் கொடுமை… சுடசுடச் சாப்பாடு, சாம்பார், சூப் என்று பாலிதீன் பைகளில் பேக் செய்து சாப்பிட்டு, தூக்கி எறிந்து விட்டு வருகிறோம். ஆனால், வயிற்றுக்குள் போன அந்த சாப்பாட்டுடன் கெமிக்கலும் சேர்ந்து போயிருக்கிறது என்பதை வசதியாக மறந்து விடுகிறோம்” என்று திகில் செய்தி சொன்ன டாக்டர்,
    ”இதற்கு மேலும் காசு கொடுத்து நோயை வாங்க வேண்டுமா என யோசியுங்கள் – ஒவ்வொரு முறையும் பாலிதீன் பேப்பர்களில் சாப்பிடும் போதும், டீ குடிக்கும் போதும்!” என்று பொறுப்புடன் எச்சரித்தார்.
    முடிவு உங்கள் கையில்!
    அவள் விகடன் – 21-05-2010
    Quote Originally Posted by aalunga
    இவற்றை வாங்கி மறுசுழற்சி செய்ய இந்தியாவிலும் சில நிறுவனங்கள் உண்டு...

    சென்னையிலேயே சிலர் உண்டு என்று அறிகிறேன்...

    அவ்வாறு உண்டெனில் அந்த நிறுவனங்கள் இருக்கும் இடங்கள் மற்றும் மறுசுழற்சி அதற்கான வழிமுறைகள் கூறினால் மிகவும் உதவும் ...
    Last edited by நாஞ்சில் த.க.ஜெய்; 14-02-2011 at 06:06 AM.
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •