Page 3 of 11 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast
Results 25 to 36 of 125

Thread: இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லுமா?

                  
   
   
  1. #25
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    உலகக் கோப்பை கிரிக்கெட்: அணிகளின் பலம், பலவீனம்


    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம்வாய்ந்த அணிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் கணிக்கப்பட்டுள்ளன.


    அணியின் பலம், பலவீனம், சிறப்பு குறித்து ஓர் அலசல


    அவுஸ்திரேலியா
    பலம்: பேட்டிங்தான் ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய பலம். ஸ்டிரைக் ரேட்டில், அதாவது அதிகமாக ரன்களை எடுத்துக் குவிக்கும் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்த அணி. இளம் வீரர்கள் அதிகம் உள்ளது கூடுதல் பலம். எந்த சூழ்நிலையிலும் சமாளித்து விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் உண்டு.

    எதிரணிகளின் வியூகங்களை உடைத்து பேட்டிங்கில் சாதனை புரியும் ஷேன் வாட்சன் இந்த அணியின் மிகப்பெரிய பலம். மூன்றாவது முறையும் தொடர்ந்து உலகக் கோப்பையைப் பெற்றாக வேண்டும் என்கிற வெறியுடன் அவுஸ்திரேலிய அணி களமிறங்கும். கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், டேவிட் ஹஸ்லியும், கேமரோன் வொய்ட்டும் ரன்களைக் குவிப்பதில் சமர்த்தர்கள்.

    பலவீனம்: பந்து வீச்சு சிறப்பாக இல்லாதது பெரிய பலவீனம். பொலிங்கர் தவிர மற்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். ஆரம்பப் பந்து வீச்சில் சமர்த்தரான ஸ்விங்கர் ஷான் டெய்ட் தன்னுடைய வேகப்பந்து வீச்சால் எதிரணியினரைப் பயமுறுத்தக் கூடும் என்றாலும் ஸ்பின்னர்கள் இல்லாத குறை அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலவீனம். குறிப்பிட்டுக் கூறும்படியான சுழற்பந்து வீச்சாளர் அணியில் இல்லை. மூத்த வீரர்களான பாண்டிங், கிளார்க், பிரெட் லீ, வாட்சன் ஆகியோரின் ஆட்டத்தையே அணி பெருமளவில் சார்ந்துள்ளது.

    கடந்த 15 ஆண்டுகளில் களமிறக்கப்பட்ட மோசமான "உலகக் கோப்பை அவுஸ்திரேலிய அணி' இதுதான் என்பது விமர்சகர்களின் கணிப்பு.

    சிறப்பு: தொடர்ந்து 2 உலகக் கோப்பையை வென்றுள்ளதால் அவுஸ்திரேலிய அணிக்கு பொறுப்பு கூடியுள்ளது. முன்பு இருந்தது போல சிறப்பான அணியாக இல்லாவிட்டாலும் ஆட்டத்தைத் திசை திருப்பும் வெற்றி வீரர்கள் இருக்கின்றனர். இறுதிச் சுற்று வரை இந்த அணி முன்னேறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


    இந்தியா
    பலம்: தொடக்க, நடுவரிசை ஆட்டக்காரர் (1 முதல் 7 வரை) சிறந்த பேட்ஸ்மென்களாக உள்ளது இந்திய அணியின் மிகப்பெரிய பலம். ஸ்டிரைக் ரேட்டில் முதலிடத்தில் உள்ளது. பெüலிங் எக்கானமியில் இரண்டாவது இடத்தில் உள்ளது அனுபவம் வாய்ந்த வீரர்கள், பெரிய ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடி வரும் அணி.

    நெருக்கடியான சூழ்நிலையிலும் அணியை சிறப்பாக வழிநடத்தும் கேப்டன் தோனி ஆகியவை அணியின் பலம். சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கெளதம் கம்பீர் மூவரும் இந்திய அணியின் துடுப்பாட்டத்திற்கு மிகப்பெரிய பலம். விராட் கோலி நான்காவது ஆட்டக்காரராகவும், யுவராஜ் சிங் ஐந்தாவதாகவும், கேப்டன் தோனி ஆறாவதாகவும், யூசுப் பதான் ஏழாவதாகவும் ஒரு பலமான ரன்களை எடுக்கும் பேட்டிங் பட்டாளம் இந்திய அணியின் தனிச் சிறப்பாக கருதப்படுகிறது.

    பந்துவீச்சு என்று எடுத்துக் கொண்டாலும், வேகப்பந்துவீச்சில் ஜாகீர் கானின் திறமைக்கு முன் ஆரம்ப ஆட்டக்காரர்கள் பலரும் திணறாமல் இருக்க முடியாது. ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, அஸ்வின் ஆகிய மூவரும் சுழல்பந்து வீச்சில் சமர்த்தர்கள். கடந்த இரண்டாண்டுகளாக சாவ்லா களத்தில் இல்லை என்பது பலவீனம். இருந்தாலும் புதியவரவாக இருந்தாலும் களத்தில் தனது சுழல்பந்துவீச்சால் அசத்துகிறார் என்பது கண்கூடான உண்மை.

    பலவீனம்: மற்ற அணிகளை ஒப்பிடும் போது விரைவாக விக்கெட்டை வீழ்த்தும் பந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரும் குறை. வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்ததாதும் பலவீனம். ஹர்பஜன் சிங்கையும், அஸ்வினையும் நம்பித்தான் இந்திய அணியின் பந்துவீச்சு உள்ளது என்பது பலவீனம்.

    சிறப்பு: முந்தைய உலகக் கோப்பை அணியைக் காட்டிலும் பலமானதாக உள்ளது. பலமான பேட்டிங் வரிசை உள்ளதால் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ளது. தோனியின் அமைதியான, அரவணைப்பான கேப்டன்ஷிப் அணிக்கு பெரிய பிளஸ். அனைத்தும் சரியாக நடந்தால் விமர்சகர்கள் கணித்தபடி இறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேறும்.


    இலங்கை
    பலம்: பந்து வீச்சில் உலகின் நம்பர் 1 அணி. அதே போல எக்கானமி ரேட்டிலும் முதலிடம். அனுபவ வீரர்கள், வெற்றியை நோக்கி தொடக்கத்தில் இருந்தே முன்னேறுவது, உள்ளூர் சூழலில் விளையாடுவது ஆகியவை அணிக்கு பலம் சேர்க்கிறது.

    லசித் மலிங்காவும், முத்தையா முரளீதரனும் பந்துவீச்சுக்கு வலு சேர்ப்பவர்கள். இந்திய அணி எந்த அளவுக்கு பேட்டிங்கில் பலமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பந்துவீச்சில் பலமான அணி இலங்கை அணி. நுவன் குலசேகரா, ஏஞ்சலோ மேத்யூஸ் இருவரும் இந்தியத் துணைக்கண்டத்தின் ஆடுகளத்துக்கு ஏற்ப பந்துவீசும் ஆட்டக்காரர்கள். அதிகமாக பாராட்டப்படாவிட்டாலும் ரங்கனா ரெஹாத்தின் இடதுகைப் பந்துவீச்சு வெளியூர் அணிக்கு சவாலாக இருக்கக்கூடும்.

    பலவீனம்: தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள அணிகளில், பேட்டிங்கில் கடைசி இடத்தில் உள்ள அணி இலங்கை தான். நெருக்கடியான சூழலில் சிறப்பாக விளையாடத் திணறும் வீரர்கள். மோசமான ஸ்டிரைக் ரேட்.

    சிறப்பு: 1996-ம் ஆண்டுக்குப் பின்னர் 2007-ல் சிறப்பாக விளையாடியது இலங்கை. ஆனாலும் இப்போது மோசமாக விளையாடி வருவது அணிக்கு கடும் நெருக்குதலை அளித்துள்ளது. அரை இறுதி வரை முன்னேற வாய்ப்பு இருக்கிறது. முதல் சுற்றிலேயே வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


    இங்கிலாந்து
    பலம்: தனிப்பட்ட சில வீரர்கள் சிறப்பாக ஆடுவது அணியின் மிகப்பெரிய பலம். முக்கியமாக நடுவரிசையில் டிராட், பீட்டர்சன், பிராட், ஸ்வான் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவிக்கின்றனர். பந்து வீச்சும் சிறப்பாகவே உள்ளது. ஒருநாள் ஆட்டத்தை எப்படி ஆட வேண்டும் என்பதை தெரிந்து வைத்துள்ள அணி.

    பலவீனம்: ஸ்டிரைக் ரேட் குறிப்பிடும் வகையில் இல்லை. அணியின் கூட்டு முயற்சியாக இல்லாமல், ஒரு சில வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் மட்டுமே வெற்றி பெறுகிறது.

    சிறப்பு: டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடும் இந்த அணி, ஒரு நாள் போட்டிகளில் சோபிக்கத் தவறி வருகிறது. சில தனிப்பட்ட வீரர்களின் ஆட்டத்தைத் தவிர மற்றவர்களின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஒரு சில அணிகளுக்கு அதிர்ச்சித் தோல்விகளைத் தரக்கூடிய அணியாக இருக்கிறது இங்கிலாந்து. அதிர்ஷ்டம் இருந்தால் அரை இறுதி வரை முன்னேறும், அவ்வளவே.


    மேற்கிந்தியத் தீவுகள்
    பலம்: கெய்ல், பிராவோ, சந்தார்பால் ஆகியோர் அணியின் பலம். திடீர் அதிரடியால் வெற்றி பெறும் அணி.

    பலவீனம்: தரவரிசையில் 9-வது இடத்தில் பின்தங்கியுள்ளது. பேட்டிங், பந்து வீச்சும் இரண்டுமே தகராறு. எப்போது, எப்படி விளையாடிவார்கள் என்று யாருக்குமே தெரியாது.

    சிறப்பு: கோப்பையை வெல்ல 70 சதவீத வாய்ப்பு இந்த அணிக்கு இருப்பதாக முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் தெரிவித்துள்ளார். ஆனாலும் கால் இறுதி வரை முன்னேறுவதே சிரமம் என்பதுதான் விமர்சகர்களின் கருத்து.

    தென் ஆப்பிரிக்கா
    பலம்: தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவருவதும், வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருப்பதும் இந்த அணியின் முக்கிய பலம். தொடக்க பேட்ஸ்மேன்களும், நடுவில் களம் இறங்குபவர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எந்தச் சூழ்நிலையிலும் களம் இறங்கிச் சிறப்பாக விளையாடும் செல்லும் ஜேக்கஸ் காலிஸ், ஹஷிம் ஆம்லா வெற்றிகரமான கேப்டன் கிரேம் ஸ்மித் ஆகியோர் அணியை வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற்றுவார்கள்.

    பலவீனம்: நெருக்கடியான சூழ்நிலையில் காலிஸ் தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடுவது இல்லை. சராசரி என்ற நிலையில் உள்ள ஸ்டிரைக் ரேட், நடுவரிசை, பின்வரிசை வீரர்கள் நிலைத்து நின்று ஆடாதது, சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது, காலிஸையே பெருமளவில் சார்ந்திருப்பது ஆகியவை அணியின் பலவீனம்.

    சிறப்பு: வெல்வதற்கு சிறந்த, கடினமான அணி என்ற பெயரை பெற்றுள்ளது. இருந்த போதும் எதிரணி வலிமையானதாக இருந்தால் அதை எதிர்கொள்ளும் நிதானம் தென் ஆப்பிரிக்க அணிக்கு இல்லை என்பது பார்வையாளர்களின் கணிப்பு. நெருக்குதல் காரணமாக சில சமயங்களில் தோல்வி ஏற்படுகிறது. ஜாக்ஸ் காலிஸ் அணியின் நம்பிக்கை நாயகன். கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.


    நியூசிலாந்து
    பலம்: ஸ்டிரைக் ரேட், எகானமியில் 3-வது இடம். நெருக்கடியை சமாளித்து ஆடும் திறன். வலுவான பேட்டிங், தனிப்பட்ட முறையில் வீரர்கள் சிறப்பாக ஆடி வருவது இவையே இந்த அணியின் முக்கிய பலம்.

    பலவீனம்: பெரிய போட்டிகளிலோ, தொடர்களிலோ வெற்றி பெற்றதில்லை. இந்திய அணியைப் போன்றே இங்கும் விரைவில் விக்கெட்டை வீழ்ந்தும் பந்து வீச்சாளர்கள் இல்லை.

    சிறப்பு: சிறப்பாக விளையாடினால் மட்டுமே அரை இறுதி வரை முன்னேறலாம் என்று கணிக்கப்பட்டுள்ள அணி நியூஸிலாந்து. ஆனாலும் அணி சிறப்பாக இல்லாதது நியூஸிலாந்துக்கு பின்னடைவாக உள்ளது. சமீபத்திய தொடர்களில் ஏற்பட்ட படுதோல்விகள் அந்த அணிக்கு கடும் நெருக்குதலை அளித்துள்ளது.


    பாகிஸ்தான்
    பலம்: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள போதிலும், பந்து வீச்சு பலத்தில் 3-வது இடத்தில் உள்ளது. நெருக்கடியான சூழலில் சிறப்பாக விளையாடக் கூடிய அணிகளில் இதுவும் ஒன்று. சூதாட்ட சர்ச்சைக்குப்பின் கிடைத்துள்ள வெற்றிகளால் பெற்ற உத்வேகம் அணியின் முக்கிய பலம்.

    பலவீனம்: சிறப்பாக ஆடாத பேட்ஸ்மேன்கள். சராசரிக்கும் குறைவான ஸ்டிரைக் ரேட், கூட்டு முயற்சி...இப்படியாக, தொடர்ந்து சிறப்பாக ஆடமுடியாமல் தவிக்கும் அணி. முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களம் இறங்குவதால் நெருக்கடி.

    சிறப்பு: களத்தில் ஆக்ரோஷம் காட்டுவதில் பாகிஸ்தான் அணிக்கு நிகர் அதுவே. சொல்லும்படியான வீரர்கள் இல்லை. ஆனாலும் அணியின் பலவீனத்தால் கால் இறுதிக்கு மேல் முன்னேறாது என விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

    http://www.lankasrisports.com/view.p...DmA23024m40o42
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  2. #26
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    உலக கிண்ண கிரிக்கெட் : இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்


    உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் இன்று சனிக்கிழமை தொடங்குகிறது.


    முதல் ஆட்டத்தில் "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன. வங்கதேச தலைநகர் டாக்காவின் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்ளா மைதானத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. சொந்த மண்ணில் ஆடுவதால் ரசிகர்களின் ஆதரவு வங்கதேச அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். எனினும் பலம் மிக்க இந்திய அணியை வெல்வதென்பது அவ்வளவு சுலபமல்ல.

    இரு பயிற்சி ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் இந்திய அணி களம் இறங்குகிறது. சேவாக், சச்சின், கம்பீர், கோலி, தோனி, யுவராஜ் சிங், பதான் என இந்திய பேட்டிங் வரிசை முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவாக உள்ளது. பந்து வீச்சில் ஜாகீர்கான், ஹர்பஜன் சிங், முனாப் படேல், நெஹ்ரா, ஸ்ரீசாந்த் ஆகியோருடன் சிறப்பாக உள்ளது.

    வங்கதேச அணியில் கேப்டன் ஷாகிப்-அல்-ஹசன், முகமது அஷ்ரப்ஃவுல், தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால், விக்கெட் கீப்பர் ரஹிம் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடியவர்கள். வேகப்பந்து வீச்சில் மொர்டாசா, இளம் வீரர் ஹுசைன், சுழற்பந்து வீச்சில் ஷாகிப், அப்துல் ரசாக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    ஒருநாள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் ஷாகிப்-அல்-ஹசன் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் வங்கதேச அணிக்கு பலம் சேர்க்கும் விஷயம். பயிற்சி ஆட்டங்களைப் பொறுத்தவரை வங்கதேசம் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஆனால் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளது.

    உலகக் கோப்பைக்கு முன் நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடர்களில் வங்கதேசம் சிறப்பான வெற்றிகளைப் பெற்ற உற்சாகத்துடன் களம் இறங்குகிறது. எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது என்றே கூறலாம்.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  3. #27
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    இந்தியா - வங்கதேசம் இன்று

    இந்தியா 370 ரன் குவிப்பு: ஷேவாக் மற்றும் கோக்லி சதம்


    தொடக்க ஆட்டக்காரர்களாக சேவாக்கும், தெண்டுல்கரும் களம் இறங்கினர். இந்தியா 8.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்னை தொட்டது.

    சிறப்பாக விளையாடிய சச்சின் 28 ரன்னில் ரன் அவுட் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 69 ரன்னாக இருந்தது. அடுத்து சேவாக்குடன் கம்பீர் ஜோடி சேர்ந்தார்.

    சேவாக் சிறப்பாக விளையாடி 45 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரை சதம் அடித்தார். இந்தியா 14.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. கம்பீர் 33 ரன் எடுத்திருக்கும் போது அவுட் ஆனார். அப்போது இந்தியா 23.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன் எடுத்திருந்தது.

    அடுத்து 3 வது விக்கெட் ஜோடியாக சேவாக்குடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் வங்காளதேச பந்துவீச்சை விளாசி தள்ளினர். சேவாக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 94 பந்தில் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் சதம் அடித்தார்.

    அப்போது இந்தியா 31.2 ஓவரில் 200 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடி வந்த சேவாக் 175 ரன் குவித்து அவுட் ஆனார். அடுத்து யூசுப் பதான் களம் இறங்கினார்.

    வீராட் கோலியும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கடைசி பந்தில் யூசுப்பதான் அவுட் ஆனார். இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 370 ரன் குவித்தது. வீராட் கோலி 100 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.


    http://www.lankasrisports.com/view.p...DmA33024m40o42
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  4. #28
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    வங்காளதேசத்தை பழி தீர்த்த இந்தியா : சேவாக்கின் அதிரடியால் அதிர்ந்த மைதானம்


    இந்தியா- வங்காளதேசம் மோதும் முதல் போட்டி இன்று மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடந்தது. பூவா தலையா வென்ற வங்காளதேசம் களத்தடுப்பை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர், சேவாக், கம்பீர், வீரட் கோக்லி, யுவ்ராஜ் சிங், தோனி, யூசுப் பதான், ஹர்பஜன் சிங், ஸ்ரீசந்த், ஜாகீர்கான், முனாப் பட்டேல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    ரெய்னா சேர்க்கப்படவில்லை. 3 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்களாக சேவாக்கும், டெண்டுல்கரும் களம் இறங்கினர். முதல் ஓவரை சேவாக் சந்தித்தார். முதல் பந்திலே பவுண்டரியுடன் ரன் கணக்கைத் துவக்கினார். சேவாக்கும் டெண்டுல்கரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

    இந்தியா 8.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடிய சச்சின் 28 ரன்னில் ரன் அவுட் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 69 ரன்னாக இருந்தது. அடுத்து சேவாக்குடன் கம்பீர் ஜோடி சேர்ந்தார். சேவாக் சிறப்பாக விளையாடி 45 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 14.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. கம்பீர் 33 ரன் எடுத்திருக்கும் போது ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 23.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன் எடுத்திருந்தது.

    அடுத்து 3-வது விக்கெட் ஜோடியாக சேவாக்குடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் வங்காளதேச பந்துவீச்சை விளாசிதள்ளினர். சேவாக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 94 பந்தில் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் சதம் அடித்தார். அப்போது இந்தியா 31.2 ஓவரில் 200 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடி வந்த சேவாக் 175 ரன் குவித்து ஆட்டமிழந்ததார். அடுத்து யூசுப் பதான் களம் இறங்கினார். வீராட் கோலியும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கடைசி பந்தில் யூசுப்பதான் ஆட்டமிழந்தார்.

    இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 370 ரன் குவித்தது. வீராட் கோலி 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பின்னர் 371 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்காளதேசம் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம், கெய்ஸ் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஸ்ரீசந்த் வீசினார்.

    முதல் ஓவரில் 8 ரன் எடுக்கப்பட்டது. இண்டாவது ஓவரை ஜாகீர்கான் வீசினார். இதில் 5 ரன் எடுக்கப்பட்டது. ஸ்ரீசந்த் வீசிய 5 ஓவரில் வங்காளதேசம் 24 ரன் சேர்த்தது. 4.5 ஓவரில் 50 ரன்னை தொட்டது. அணியின் ஸ்கோர் 6.5 ஓவரில் 56 ரன்னாக இருக்கும்போது 34 ரன் எடுத்த கெய்ஸ் அவுட் ஆனார்.

    அவரைத் தொடர்ந்து 2 விக்கெட் ஜோடியாக தமிம் உடன் ஜுனைத் சித்திக்கு சேர்ந்தார்.

    இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். ஜீனைத் சித்திக் 37 ரன்கள் (52 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்சர்) எடுத்திருந்த நிலையில் ஹர்பஜன் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களம் இறங்கிய ஷாகிப், தம்மிம் இக்பாலுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார். தம்மிம் 70 ரன்கள் எடுத்திருந்த போது பட்டேல் பந்தில் யுவராஜ் சிங்கால் ஆபாரமாக கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டம் இழந்தார். 3 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை 32.1 ஒவரில் எடுத்தது.

    பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தமையினால் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா அணி 87 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.175 ரன் அடித்த வீரேந்திர சேவாக் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.








    http://www.lankasrisports.com/view.p...DmA33024m40o42
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  5. #29
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    பலமான (!) இந்திய அணி இன்று இங்கிலாந்து அணியினை எதிர்கொள்ளுகிறது, ஆஸஸ் தொடரில் வெற்றியீட்டினாலும் தொடர்ந்த ஒரு நாள் போட்டியில் மோசமாக அடிவாங்கிய கையுடன் உலகக் கோப்பைப் போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கின்றனர் இங்கிலாந்து அணியினர். பயிற்சிப் போட்டியி நெதர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியினர் திக்கித் திணறி வெற்றியீட்டியதும் மறக்க முடியாதது. ஆனாலும் Andrew Strauss தலமையிலான அணியினை அப்படியொன்றும் குறைத்து மதிப்பிட முடியாது தான். தேவையில்லாமல் மோசமான பந்துகளுக்கு மட்டையை நீட்டித் தேவையே இன்றி ஆட்டமிழக்கும் வழக்கமுடைய பீட்டர்சன் ஆரம்ப துடுப்பாட்டக் காரராக களம் இறங்குவது இங்கிலாந்து அணிக்கு பலமா, பலவீனமா என்பது இன்று தெரியும். சிறிய இடைவேளைக்கு பின் மீள களமிறங்கும் Stuart Broad (யூவி ஆறு ஆறு அடிக்க மாட்டாரில்லே) உம் சொற்ப கால இடைவேளையில் தன்னை நிரூபித்த Jonathan Trott உம் இங்கிலாந்து அணியில் இன்று கவனிக்கப்பட வேண்டியவர்களென நம்புகிறேன்.


    பிந்திக் கிடைத்த தகவல்கள்

    1. Stuart Broad சுகவீனம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டாராமிலே..!!
    2. நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #30
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இது எப்படியிருக்கு..... , இயக்குனர் பாலாவின் படப் பிடிப்பில் இருந்தவர்கள் எப்படியோ பெங்களூர் சின்னசுவாமி ஸ்டேடியத்துள் வந்திட்டாங்க போல...


    நன்றி - கிரிக்கின்ஃபோ.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    ஆஸ்திரேலியா இதுவரை ஆடிய ஆட்டங்களில் நன்றாகவே ஆடியிருக்கிறார்கள். அதேபோல் பாகிஸ்தானும் தன்னுடைய ஆட்டத்தை சிறப்பாகவே ஆடியிருக்கிறார்கள்.

    இங்கிலாந்துடன் மாட்சை டய் செய்தது இந்தியாவிற்கு ஒரு இழப்பே. யூடிஆர்எஸ் சொதப்பியதன்மூலம் இந்தியாவின் எதிர்ப்பு இன்னும் வலுவாகவே இருக்கும். யார் இதை சப்போர்ட் செய்து பேசினாலும் இந்தியா இந்த விஷயத்தை மீண்டும் கொண்டுவந்து இதை தடுத்துவிடும் என்றே நினைக்கிறேன்.

    அடுத்த இரண்டு வாரத்தில் இன்னும் சரியான நிலமை தெரியவரும் என்று எதிர்பார்க்கிறேன்.

  8. #32
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    ஆஸ்திரேலியா இதுவரை ஆடிய ஆட்டங்களில் நன்றாகவே ஆடியிருக்கிறார்கள். அதேபோல் பாகிஸ்தானும் தன்னுடைய ஆட்டத்தை சிறப்பாகவே ஆடியிருக்கிறார்கள்.

    இங்கிலாந்துடன் மாட்சை டய் செய்தது இந்தியாவிற்கு ஒரு இழப்பே. யூடிஆர்எஸ் சொதப்பியதன்மூலம் இந்தியாவின் எதிர்ப்பு இன்னும் வலுவாகவே இருக்கும். யார் இதை சப்போர்ட் செய்து பேசினாலும் இந்தியா இந்த விஷயத்தை மீண்டும் கொண்டுவந்து இதை தடுத்துவிடும் என்றே நினைக்கிறேன்.

    அடுத்த இரண்டு வாரத்தில் இன்னும் சரியான நிலமை தெரியவரும் என்று எதிர்பார்க்கிறேன்.
    அண்ணா, (இன்றைக்கு தினசரியில்,) உலகக்கோப்பையில் சூதாட்டம் நடந்திருப்பதாகக் ஐசிசி சந்தேகப்படுகிறதாம்... குறிப்பாக ஆஸி - ஜிம்பாப்வே, பாகிஸ்தான் - இலங்கை, இந்தியா - இங்கிலாந்து மேட்ச்களில்....

    ஷேன் வார்ன், மேட்ச் நடப்பதற்கு 7 மணி நேரம் முன்னர், “இந்த் போட்டி டையில் முடியும்” என்று கணித்திருக்கிறார்!!!
    --------------------------------
    எல் பி டபிள்யூ வை விடுங்க, ரெண்டு கேட்சே அண்ணன் தோனி காதில கேட்கலயாம்.. நான் மேட்சைப் பார்த்துட்டு இருக்கறப்ப, பேடுல பட்டு போயிருக்கும்னு நினைச்சேன். ஆனா பேட் அப்படின்னு இப்போத்தான் தெரிஞ்சது.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #33
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கட் வீரரே வேண்டியதற்கும் மேலாக ஊதியமாகக் கிடைக்கும் இந்தக் காலத்தில் இந்திய கிரிக்கட் வீரர்கள் வேண்டுமென்றே பணத்துக்காக அதுவும் ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி வாய்ப்பினை இழந்தார்கள் என்ற வாதத்தினை என்னால் ஏற்க முடியவில்லை.

    அதுவும் பாகிஸ்தானிய வீரர்களுக்கு அண்மையில் கிடைத்த தண்டனைக்கும் பிறகு அவ்வாறான சம்பவங்கள் இந்திய வீரர்களிடை நடக்குமென நான் நினைக்கவில்லை. ஐபிஎல் போன்ற பணம் கொழிக்கும் போட்டியில் விளையாடாத நாட்டு கிரிக்கட் வீரர்கள் பெட்டிங் போன்ற தவறான விடயங்களில் ஈடுபட வாய்ப்பிருக்கலாம், ஆனால் நன்றாக பணம் கொழிக்கும் இந்திய வீரர்கள் அவ்வாறான விடயங்களில் ஈடுபட வேண்டிய தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை.

    (பாகிஸ்தானிய அணித்தலைவர் அப்ரிடியின் ஆண்டு வருமானத்தை விட உலகக் கோப்பை அணியில் இல்லாத நம்ம ரோகித் சர்மாவின் ஆண்டு வருமானம் அதிகமாக இருக்குமென நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.)

    அத்துடன் இவ்வாறான விடயம் நடந்ததாலேயே இங்கிலாந்து போட்டியினை சமப்படுத்தியது என்று சொல்லி அருமையாக விளையாடிய இங்கிலாந்து அணியினரின் திறமையை நான் கொச்சைப் படுத்தவும் விரும்பவில்லை.
    Last edited by ஓவியன்; 02-03-2011 at 04:52 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #34
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இந்த செய்தியை வெளியிட்டது இலங்கையில் ஒளிபரப்பாகும் ITN. இது அரச தொலைக்காட்சி சேவையில் ஒன்று.

    அண்மையில் ராஜபக்ஷ விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டிகளில் மக்கள் எவரும் பார்வையிட வராததால் பாடசாலை மாணவர்களுக்கு KFC புரியாணி இலவசமாக வழங்கி வரவழைக்கப்பட்டனர். அத்துடன் பொதுமக்களும் இலவசமாக பார்வையிட திறந்துவிடப்பட்டது. இந்தமுறை பொதுமக்கள் யாரும் தங்கள் இசைக்கருவிகளை பாவிக்கக்கூடாது என்றும் சர்வதேச துடுப்பாட்ட சபை சொன்னாலும் இலங்கையில் அது தளர்த்தப்பட்டிருந்தது. இந்த போட்டிகளை ராஜபக்ஷ விளையாட்டு அரங்கில் நடத்துவது பற்றி அறிவித்திருந்தாலும் இடையில் தூரப்பிரச்சனைகளை கருத்தில் கொண்டு போட்டி நடத்துவது பற்றி கலந்தாலோசித்தார்கள். பின்னர் இலங்கை அதிபரின் தலையீட்டில் இது உறுதி செய்யப்பட்டது.

    கொழும்பிலிருந்து ஏறத்தாள 250 km தொலைவிலுள்ள இந்த விளையாட்டரங்கிற்கு கொழும்பு மற்றும் சுற்றுப்புற சூழலிலுள்ளவர்கள் அவ்வளவு தூரம் பயணம் செய்து திரும்புவது இலங்கையை பொறுத்தவரை பெரிதும் சாத்தியமல்ல. (ஏறத்தாள கதிர்காமம் சென்றுவருவது போன்று)
    ICC ற்கு ஏற்பட்ட நட்டத்தினை இலங்கை அதிபர் தனிப்பட்ட ரீதியில் சீர் செய்தாலும் சில சர்ச்சைகளை மழுப்ப இந்த செய்தியை விட்டிருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்ட இலங்கை வீரர்கள் மஹெல மற்றும் சமரவீர ஆகியோர் ஐதேக கட்சி ஆதரவாளர்கள். (கூட்டி கழிச்சு பார்த்தா................... )
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #35
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    கேள்வி: இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லுமா?
    பதில்: வெல்லாது

  12. #36
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by sarcharan View Post
    கேள்வி: இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லுமா?
    பதில்: வெல்லாது
    பதிலுக்கான உங்கள் விளக்கத்தையும் தந்தால் நன்றாக இருக்குமே..

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 3 of 11 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •