Results 1 to 6 of 6

Thread: வளரும் செயற்கை உயிர் தகரும் கடவுள்

                  
   
   
 1. #1
  இளம் புயல் பண்பட்டவர் dhilipramki's Avatar
  Join Date
  18 Dec 2010
  Location
  தஞ்சாவூர்
  Posts
  252
  Post Thanks / Like
  iCash Credits
  8,952
  Downloads
  0
  Uploads
  0

  Exclamation வளரும் செயற்கை உயிர் தகரும் கடவுள்

  வளரும் செயற்கை உயிர் தகரும் கடவுள்

  **எச்சரிக்கை**முற்போக்கு சிந்தனை பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்கவேண்டாம் தோழர்களே**


  லகில் வெறும் ஆன்மீக நம்பிக்கையின் பாற்பட்ட, ஆதாரமற்ற சிந்தனைகளை உடைத்து அறிவியல் வரலாற்றில் புதுப்புது பக்கங்கள் கடந்த காலங்களில் உருவாகி வந்துள்ளன. அத்தியாயம் படைத்திட்ட அந்த அறிவியல் கண்டுபிடிப்புகளின் தாக்கங்கள் பல தரப்-பட்டவை, அவை அன்றாட நிகழ்ச்சிகளை, பழக்க வழக்கங்-களை பயனற்றவை ஆக்கிவிடும். சில கண்டுபிடிப்புகள் மனித சமுதாயத்தையே உலுக்கிப்போடும் வலிமை வாய்ந்தவை. அத்தகைய உலுக்கிப்போட்ட _ -கடந்த கால கண்டுபிடிப்பு. சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு மனித இனம் என்பது சிறு உயிரினங்-களிலிருந்து படிப்படியான பரிணாம வளர்ச்சி இன்றைய நிலையாகும். இதற்கு அடுத்தாற்போல கடவுள் படைப்புத் தத்துவத்தையே புரட்டிப் போடுகின்ற அளவில் செயற்கை முறையில் உயிர்செல் உருவாக்கப்பட்ட செய்தியும் அந்த செல் இனப்பெருக்கம் செய்துள்ள முறையும் மாபெரும் பிரமிப்பை உருவாக்கியுள்ளன.

  அமெரிக்காவில் ஜே. கிரெய்க் வெண்டர் ஆராய்ச்சி நிறுவனத்தினைச் சார்ந்த அறிவியலாளர்களின் அரும் பணியால் செயற்கையாக உயிர் செல்கள் உருவாக்கப்-பட்டுள்ளன. இதுவரை செயற்கையில் உயிரினங்களை ஒத்த திண்மையுடன் கூடிய வடிவங்கள் உருவாக்கப்-பட்டிருந்-தாலும், அந்த வடிவங்களில் மனிதனால் உயிரை உருவாக்க முடியவில்லை. அமெரிக்க அறிவியலாளர்கள் உருவாக்கிய செயற்கை செல்களில் உயிர் உருவாக்கப்பட்டுள்ளது. உயிர்உருவாக்கப்பட்டதன் அடையாளமாக செயற்கையாக அமைக்கப்பட்ட செல்கள் இனப் பெருக்கம் செய்து, ஒன்று பலவாகி உள்ள அதிசயம் நடைபெற்றுள்ளது. ஆன்மிகவாதி-கள் நினைக்க மறுத்த ஒரு செயலை, பகுத்தறிவாளர்கள் முடிக்க நினைத்த செயலை இப்பொழுது அமெரிக்க நாட்டு அறிவியலாளர்-கள் நிறைவேற்றி அறிவியல் வரலாற்றில் புத்தாக்கப் பக்கத்தை எழுதத் தொடங்கி விட்டனர். மானிடம் முழுவதற்கும் பொது-வான இந்த அறிவியல் உண்மையை வெளிக் கொணர்ந்த அறிவிய-லாளர்-கள் குழாமில் இந்திய வம்சாவளியினைச் சார்ந்தோர், மூவர் இருப்பது பெருமையினையும் மகிழ்ச்சியினையும் தரவல்லது.

  கடவுள் உயிர் கொடுத்தார் எனும் நம்பிக்கையினைத் தவிடு பொடி ஆக்கியுள்ள செயற்கை உயிர் செல் உருவாக்கப்பட்ட செய்தியினை நாடெங்கும் ஊரெங்கும், வீதியெங்கும் பிரச்சாரம் செய்து மனித இனத்திற்கு பகுத்தறிவின் மேன்மையினை, அறிவியலின் ஆக்கத்தினை புரிய வைத்திட வேண்டும் ஒத்த அமைப்புகளும் இந்த அரிய, அவசியப் பணியில் அக்கறை காட்ட வேண்டும்.

  கடவுள் படைப்பு நம்பிக்கைத் தகர்ப்பின் முழு வெற்றிக் காலம் நெருங்கிவிட்டது. அறிவியல் ஆக்கத்தின் முழு வீச்சு வெளிப்பட்டு விட்டது. கடந்த காலத்தில் அறிவியல் கண்டு-பிடிப்புகள் பற்றி குறை செல்லப்பட்டன. காலம்-தான் கண்டுபிடிப்புகள் என மனித இனத்திற்கு நிறைவுகள் பலவற்றைத் தரவல்லவை நிரூபித்-துள்ளது. இப்பொழுது கண்டுபிடிக்கப்-பட்டுள்ள செயற்கை உயிர் செல் உருவாக்கமும் எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. பகுத்தறி-வின் துணை கொண்டு மானிட மேம்பாட்டிற்கு அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆட்படுத்திக் கொள்வதில்தான் மனிதரின் அறிவுடைமை அடங்கியுள்ளது. அறிவியல் வளரட்டும்! பகுத்தறிவுப் பயன்பாடு பெருகட்டும்!

  மானிடம் மேலும் தழைக்கட்டும்!

  உங்கள் மனதை புண்படுத்தவில்லை என்று நினைக்கிறேன் ! நன்றி!!

 2. #2
  இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
  Join Date
  06 Oct 2010
  Posts
  989
  Post Thanks / Like
  iCash Credits
  6,299
  Downloads
  5
  Uploads
  0
  வெங்காயம் வெங்காயம்.....??? நினைப்புதான் வந்தது
  நன்றி...

  தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
  http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765

 3. #3
  இளம் புயல் பண்பட்டவர் dhilipramki's Avatar
  Join Date
  18 Dec 2010
  Location
  தஞ்சாவூர்
  Posts
  252
  Post Thanks / Like
  iCash Credits
  8,952
  Downloads
  0
  Uploads
  0
  வெங்காயம் - உறிக்க உறிக்க ஒன்றும் இல்லை...!!!! அது தானே ??
  நினைத்தது சரியே

 4. #4
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
  Join Date
  31 Oct 2007
  Posts
  6,826
  Post Thanks / Like
  iCash Credits
  79,444
  Downloads
  57
  Uploads
  0
  இந்த கட்டுரை இத்தளத்தில் உள்ளதே திலீப்!

  http://www.unmaionline.com/2010/june...ஹ்ப்

  படைப்பு உங்களுடையதல்லாதபட்சத்தில் அதை படித்ததில் பிடித்ததில் பகுதியில் பதிய வேண்டும்..

  உங்கள் சொந்தப்படைப்புகளை பதிய முயற்சியுங்கள், வெட்டி ஒட்டாதீர்கள்...
  Last edited by ஆதி; 06-02-2011 at 08:38 AM.
  அன்புடன் ஆதி 5. #5
  இளம் புயல் பண்பட்டவர் dhilipramki's Avatar
  Join Date
  18 Dec 2010
  Location
  தஞ்சாவூர்
  Posts
  252
  Post Thanks / Like
  iCash Credits
  8,952
  Downloads
  0
  Uploads
  0
  வெட்டி ஒட்டவில்லை (cut & paste ) என்பதை செய்வதை நான் விரும்பாதவன், மற்றும் உண்மை, புதிய தலைமுறை போன்ற வார மற்றும் மாத இதழ்களுக்கு அறிவியல் தொடர்களை அய்யா குமரேசன் அவர்களின் தலைமயில் எழுதும் குழுவில் உள்ளேன் என்பதையும் மற்றும் இந்த செய்தி உண்மைக்கு கடந்த வருடம் எழுதியவை என்பதையும் உங்கள் கவனத்துக்கு கொடுக்கிறேன்.

  plagiarism - பிறர் உழைப்பை எடுப்பவன் அல்ல என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

  அதை போல் "ஆமைக் கோபுரத்தின் மேல் உலகம்" என்பதும் உண்மை இதழில் வந்ததே
  http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25743
  ஆனால் அது என் படைப்பு என்பதை மரியாதையுடன் தெரிவித்து கொள்கிறேன். நன்றி

 6. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,828
  Post Thanks / Like
  iCash Credits
  31,982
  Downloads
  183
  Uploads
  12
  இந்தக் கட்டுரையை இன்றுதான் படித்தேன். எதையும் தலைப்புச் செய்திகளை மட்டுமே படிக்காமல் ஆழமாகப் படிக்கும் எண்ணமுடைய எனக்கு இப்படி ஒரு செய்தியை ஆழமாக வாசிக்க வேண்டும் என ஆவல். எனவே அதை எப்படி நடத்தினார்கள் எனப் படிக்க ஆவலில் தேடினேன்.

  இதைப் பற்றி இதை நடத்திக் காட்டிய டாக்டர் வெண்டர் பி.பி,சிக்கு அளித்த பேட்டியை படித்தேன். அவர் தனது முறையை விவரித்து இருந்தார்.

  1. முதலில் ஒரு பாக்டீரியாவின் குரோமோ சோம்களை எடுத்துக் கொண்டனர்.
  2. அதன் டி.என்.ஏ வரிசையை ஆராய்ந்து அதை சிந்தஸைஸ் மெசினுக்கு கொடுத்தார்கள். சிந்தசைஸ் மெசின் அந்த டி.என்.ஏ வரிசைக்கேற்ப ஒரு ஜீனை அதற்குண்டான வேதிப்பொருட்களைக் கொண்டு உண்டாக்கியது.
  3. இதை இன்னொரு உயிருள்ள செல்லில் புகுத்தினார்கள்.
  4. அந்த உயிருள்ள செல்லில் அது பல்கிப் பெருகியது. அந்த பாக்டீரியா குணங்க்கள் கொண்ட செல்கள் உண்டாகின.

  in the area of synthetic biology, a "living" artificial cell has been defined as a completely synthetically made cell that can capture energy, maintain ion gradients, contain macromolecules as well as store information and have the ability to mutate.[4] Such a cell is not technically feasible yet, but a variation of an artificial cell has been created in which a completely synthetic genome was introduced to genomically emptied host cells.[5] Although not completely artificial because the cytoplasmic components as well as the membrane from the host cell are kept, the engineered cell is under control of a man-made genome and is able to replicate.

  இது எப்படின்னா நாங்க புளிப்பு மாங்கா மரத்தில அந்த காலத்தில் இனிப்பு மாங்கா மரத்து கிளையை ஒடித்து ஒட்டவச்சி சாணி வச்சி கட்டிடுவோம். அது ஒட்டிகிட்டு வளர ஆரம்பித்து வளர்ந்து இனிப்பு மாங்கா தரும். அதையே ஜேம்ஸ் கேமரூன் ஸ்டைலில் அறிவியல் மூலமா செஞ்ச்சிருக்காங்க. ஒரே ஒரு விஷயம் என்னன்னா ஜீனை சிந்தஸைஸ் பண்ணினது. இது செய்ய முடியும் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம். இந்த ஜீன் உயிர் பெற ஒரு உயிருள்ள செல் அவசியம் என்பதை கட்டுரையாளர் கவனிக்கவே இல்லை. ஏன்னா உள்ள என்ன இருக்குன்னு அவர் படிக்கலை.

  ஜீன் என்பது நான்கு வித வேதிப்பொருட்கள் கொண்டது. (adenine (A), guanine (G), cytosine (C) and thymine (T). இந்த வேதிப்பொருட்கள் பிணைக்கும் வரிசைக் கிரமமே இந்த சிந்தசைஸரால் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வரிசைக் கிரமத்தை ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார்களே தவிர நிர்ணயிக்கவில்லை. அதே சமயம் இந்த வேதிப் பொருட்களின் மூலப்பொருட்கள் எது என்று பார்த்தால் அவையும் அமினோ அமிலங்கள் புரதங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுபவையே ஆகும்.

  ஆக இதில் உயிரும் உண்டாக்கப்படவில்லை. புரதமும் உண்டாக்கப்படவில்லை. இது வெறும் ஆரம்பம்தான். இன்னும் நிறைய இருக்கிறது.

  கடைசியாக இந்த வரியையும் படித்து விடவும்.

  A Venter spokesperson has declined to confirm any breakthrough

  அறிவியலை அறைகுறையாக தெரிந்துகொண்டு கண்ணை மூடிக் கொண்டு கேட்டதையெல்லாம் நம்புவதும் மூட நம்பிக்கைதான்.
  Last edited by தாமரை; 03-01-2014 at 11:52 AM.
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 7. Likes arun karthik liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •