Results 1 to 10 of 10

Thread: 9 'சி' இருந்தால் நீங்களும் தலைவராகலாம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் அமீனுதீன்'s Avatar
    Join Date
    19 Dec 2009
    Location
    துபாய்
    Age
    56
    Posts
    181
    Post Thanks / Like
    iCash Credits
    16,346
    Downloads
    137
    Uploads
    6

    9 'சி' இருந்தால் நீங்களும் தலைவராகலாம்

    9 'சி' இருந்தால் நீங்களும் தலைவராகலாம்
    லீடர்ஷிப் (தலைமைக்குணம்) என்கிற வார்த்தையை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கிறோம்.

    பெரும்பாலான பொதுமக்களைப் பொறுத்தவரை, 'தலைவர்' என்பது ரொம்பப் பெரிய பதவி, பொறுப்பு, கௌரவம். மிகச் சிலர்மட்டும்மே அதற்குத் தகுதியானவர்கள், மற்றவர்கள் எல்லோரும் கீழே கை கட்டி நின்று வேடிக்கை பார்க்கவேண்டியதுதான் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அப்படியல்ல, எல்லோரிடமும் அந்த குணங்கள் இருக்கின்றன. அவற்றை வளர்த்தால் போதும்.

    ஒருவர் எப்படித் திடுதிப்பென்று தலைவராக முடியும்? அதற்கு தேவையான பண்புகளை எப்படி வளர்த்துக்கொள்வது?



    இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுவிதமாக 'வேர் ஹேவ் ஆல் தி லீடர்ஸ் கான்?' (Where Have All The Leaders Gone?') என்ற சுவாரஸ்யமான புத்தகம் வெளியாகியிருக்கிறது. இதை எழுதியிருப்பவர்கள், பிரபல மேலாண்மை நிபுணர், உலகப் புகழ்ப் பெற்ற எழுத்தாளர் லீ அயகோக்கா மற்றும் கேதரின் விட்னி.

    'அநாவசியமா தலைவர்களைத் தேடித் போய்க்கிட்டிருக்காதீங்க, கொஞ்சம் முயற்சி செஞ்சா நீங்களே தலைவராயிடலாம் என்கிறார்கள். இதற்கு 9 'சி' தேவை என்கிறார்கள். 9 'சி' என்றதும் நம்ம ஊர் ஸ்டைலில் 9 கோடி என்று நினைத்துவிட வேண்டாம். '9சி' என்பது 'சி' என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் ஒன்பது முக்கியமான குணங்களைக் குறிக்கிறது.

    1. Curiosity - ஆர்வம்
    ஒரு தலைவன் எந்தப் புது விஷயத்தையும் கற்றுக்கொள்கிற ஆர்வத்தோடு இருக்கவேண்டும். மற்றவர்கள் செம்மறி ஆடுகளைப்போல் ஒரே பாதையில் நடந்து சென்றால்கூட, நாம் மட்டும் சுற்றியுள்ள மற்ற பாதைகளைக் கண்காணிக்க வேண்டும், 'இந்த பக்கம் போனால் என்ன?' என்று யோசிக்க வேண்டும், அந்த ஆர்வம்தான் நமது முன்னேற்றத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது!

    2. Creativity - படைப்புத்திறன் / புதுமைச் சிந்தனை
    தலைவர்கள் யாரும் நடக்காத பாதையில் நடந்தால்மட்டும் போதாது, யாரும் செய்யாத ஒன்றைச் செய்கிற திறமையும் படைப்புணர்ச்சியும் வேண்டும். பிறர் கண்ணில் படாத விஷயங்கள் கூட, இவர்களுடைய மனக்கண்ணில் தோன்றவேண்டும், அரைத்த மாவையே அரைக்கிற குணம் பயன்படாது!

    3. Communication - தகவல் தொடர்பு
    ஒரு விஷயம் கவனித்தீர்களா? பெரிய தலைவர்கள் எல்லாம் பிரமாதமான பேச்சாளர்களாக இருப்பார்கள். அதற்காக நாம் மேடையேறி முழங்கவேண்டும் என்று அவசியம் இல்லை, நமது குடும்ப உறுப்பினர்கள், அலுவலகத் தோழர்கள், நமக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு எதையும் சரியானமுறையில் தெளிவாக விளக்கிச் சொல்லி அவர்களுடைய ஒத்துழைப்பை பெறுகிற திறன் வேண்டும்.

    4. Character - ஒழுக்கம்
    கையில் ஒரு பதவி, பொறுப்பு வந்துவிட்டால் நம் இஷ்டம்போல் தப்புச் செய்யலாம் என்று நினைப்பது மனித இயல்பு. ஆனால் தலைவர்கள் தப்பு செய்யக்கூடாது.

    5. Courage - தைரியம்
    சிலர் நன்கு வாய் கிழியப் பேசுவார்கள். ஆனால், செயல் என்று வந்துவிட்டால் ஒதுங்கி நிற்பார்கள். அவர்களால் எப்போது தலைவர்களாக முடியாது.

    6. Conviction - உறுதி
    ஒரு தலைவரின் பாதையில் ஏகப்பட்ட குருக்கிடல்கள் வரும். அப்போதெல்லாம் 'போதுமடா சாமி' என்று திரும்பிச் செல்லாமல் முன்னேறுபவர்கள்தாம் தலைவர்கள்.

    7. Charsima - ஈர்ப்பு / கவர்ச்சிகரமான ஆளுமை
    ஈர்ப்பு என்று சொல்வது வெறும் முக அழகுமட்டுமல்ல, அடுத்தவர்கள்மீது வெளிக்காட்டும் அக்கறை, அவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ளும் தன்மை, அன்பாகப் பேசும் விதம் போன்றவை எல்லாமாகச் சேர்த்து ஒரு தலைவரைத் தீர்மானிக்கிறது

    8. Competence - திறமை / தகுதி
    நாம் எந்தத் துறையில் இருக்கிறோமோ, அதுபற்றிய ஞானம் ஒரு தலைவருக்கு மிக அவசியம். அது தெரியாமல் மற்ற குணங்களை மட்டும் வைத்துத் தலைவர்களானவர்கள் ரொம்ப நாள் நீடித்து நிற்கமுடியாது.

    9. Common Sense - யதார்த்த அறிவு
    எப்பேர்பட்ட தலைவரும், அந்தரத்தில் கொடிகட்டமுடியாது. எத்தனை சிறப்பான லட்சியக் கனவுகளைக் கொண்டிருந்தாலும், எதார்த்தத்தைப் புரிந்து, தரையில் கால் பதித்து நிற்கிற தலைவர்கள்தான் மிகப் பெரிய வெற்றியடைகிறார்கள்.


    இந்த 9 சியில் உங்க ஸ்கோர் என்ன? எங்கெல்லாம் முன்னேற்றம் தேவைபடுகிறது? சட்டென்று ஒரு கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டுத் தயாராகிக்கொள்ளுங்கள், நீங்களும் தலைவராகலாம்.

    thanks to
    http://ularuvaayan.blogspot.com/2010/08/9.html


    முயற்சி உடையார் இகழ்சி அடையார்...

  2. #2
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    8,989
    Downloads
    5
    Uploads
    0
    9 சி என்றவுடன் அந்த 9 சி என நினைத்து திரியை பிரித்தால் - சபாஷ் அருமையான விளக்கம் தகவலுக்கு நன்றி -

    இந்த 9 சி யும் என்கிட்டே இருக்கே!? .....
    Last edited by உமாமீனா; 05-02-2011 at 10:24 AM.
    நன்றி...

    தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    மிகவும் அருமை! தலைவனாவதற்கு 9C ஐப் பட்டியல்இட்டுள்ளீர்கள்.அதில்
    ஒரு C விட்டுப்போயுள்ளது. அதுதான் வைட்டமின் C

    தலைவனாக வேண்டுமானால் அடி,உதைகளைத் தாங்கவேண்டிய அபாயம்
    உள்ளது.அதற்குத் தக்கவாறு எலும்புகள் உறுதியாக இருக்கவேண்டும்.
    அதற்குத் தேவை வைட்டமின் C

    ஆக ஒரு தலைவன் ஆவதற்கு 10 C அவசியம் தேவை.

  4. #4
    புதியவர்
    Join Date
    02 Nov 2010
    Location
    Tamilnadu
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    9,561
    Downloads
    0
    Uploads
    0
    தலைவனா இருப்பது சாதாரண விஷயம் இல்லை போலிருக்கே.... நல்ல பகிர்வு....

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    வளரும் உலகிற்கு தேவையான அதேநேரத்தில் வளருபவர்களுக்கு அவசியமான பதிவு .....மொத்தத்தில் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி....
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் அமீனுதீன்'s Avatar
    Join Date
    19 Dec 2009
    Location
    துபாய்
    Age
    56
    Posts
    181
    Post Thanks / Like
    iCash Credits
    16,346
    Downloads
    137
    Uploads
    6
    உண்மைதான்
    முயற்சி உடையார் இகழ்சி அடையார்...

  7. #7
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 May 2011
    Posts
    60
    Post Thanks / Like
    iCash Credits
    15,614
    Downloads
    1
    Uploads
    0
    நன்மை மிகுந்த பகிர்வு... பாராட்டுக்கள்

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,961
    Downloads
    6
    Uploads
    0
    அந்த 10 வது சி கால்சியம்.அது தானே எலும்புக்கு வலுவூட்டும்.அதைத்தான் ஜகதீசன்
    குறிப்பிட்டார் என எண்ணுகிறேன். மொத்தத்தில் இந்த 9 சி க்கு நன்றி

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    என்னிடம் இந்த ஒன்பது சியும் இருப்பதாக நான் நினைக்கிறேன் ஆனால் என்னால் முன்னேற முடியவில்லையே. ஏதோ உதைக்கிறது.

    துக்ளக் மாதிரி சரியான சமயங்களில் உபயோகப்படுத்தவில்லையோ நான்? இருக்கலாம்!!!

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,961
    Downloads
    6
    Uploads
    0
    ஒன்பது சி யு ம் நம்மிடம் உள்ளதை மற்றவர் அறியும் வண்ணம் நம் செய்கை இருந்தால் தான் அதற்கு பலன் கிடைக்கும்.சி இல்லாதவர்கள் கூட இருப்பதாக காட்டி பலன் பெற்றுள்ளார்கள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •