ராமும், வேணுகோபாலும் வெளியே காத்திருந்தார்கள். இரண்டு பேரும் நண்பர்கள். இரண்டு பேரும் ஒரே வேலைக்கு விண்ணப்பித்து இருந்தார்கள். எழுத்துத்தேர்வும் முடிந்தது. வந்திருந்தவர்களில் இவர்கள் இரண்டு பேரை மட்டும் தான் காத்திருக்க சொன்னார்கள். மற்றவர்களை அனுப்பி விட்டார்கள்.

மேலாளர் இருவரையும் அறையின் உள்ளே அழைத்தார். இரண்டு பேரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் ஒரே ஒரு கேள்விகளுக்குத்தான் தவறாக பதிலளித்துள்ளீர்கள். ஆனால் வேணுகோபால் தான் இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்றார்.

இரண்டு பேரும் ஒரே மதிப்பெண்கள், ஒரே ஒரு கேள்விக்குத்தான் தவறாகப் பதிலளித்திருக்கிறோம் என்றால் எப்படி வேணுகோபால் மட்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார் என்றான் ராமு.

வேணுகோபால் 3-ஆவது கேள்விக்குப் பதிலாக தெரியவில்லை என்று பதிலளித்து உள்ளார். நீங்களும் அதே 3-ஆவது கேள்விக்குப் பதிலாக எனக்கும் தெரியவில்லை என்று பதிலளித்துள்ளீர்கள் என்றார் மேலாளர்.