Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 34

Thread: சோறு போடுமா தமிழ்?

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2

    சோறு போடுமா தமிழ்?

    நன்றி: திருத்தமிழ் வலைத்தளம்

    தமிழ் சோறு போடுமா? இப்போதெல்லாம் இப்படி வினவுவது தமிழரில் பலருக்குப் புது மரபாகி விட்டது.

    தங்களை முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கின்ற சிலர், தங்களின் 'முன்போக்கை' வெளிப்படுத்தும் முயற்சியில், வாயினிக்க எழுப்பும் வழக்கமான வினா இது. இவர்கள் சோறு உண்பது மட்டுமே வாழ்க்கை என்றும், எது சோறு போடுமென்று தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்வதுதான் வெற்றிக்கு வழி என்றும் கருதுபவர்கள்.

    இன்னும் கொஞ்சம் நாளில் இவர்கள், சமயம் சோறு போடுமா? பண்பாடு சோறு போடுமா? உண்மை சோறு போடுமா? ஒழுக்கம் சோறு போடுமா? என்று வரிசையாக வினாக்களை எழுப்பி இவற்றுள் எதுவுமே சோறு போடாது என்றும், எனவே இவையெல்லாம் தேவையில்லை என்றும் கூறத் தொடங்கினாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

    இந்தச் சோற்றுப் பட்டாளத்தை நோக்கி நாமும் சில வினாக்களை எழுப்பலாம்.

    1.தமிழ் என்பது மொழி. மொழியின் முதற்பயன் நம் கருத்தைப் புரிந்து கொள்ளுமாறு வெளிப்படுத்தவும் பிறர் கருத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவும் கருவியாக இருப்பது. இந்தப் பணியைச் சரியாகவும் திறம்படவும் செய்வதில் வேறு எந்த மொழியையும் விடத் தமிழ் தாழ்ந்ததன்று.

    2.இன்று அனைத்துலக மொழியாக முதனிலை பெற்றுள்ள ஆங்கிலத்தையும் மிஞ்சிய கருத்துக் தெளிவு கொண்டது தமிழ். எடுத்துக் காட்டுகள் எத்தனையோ உள. ஆங்கில வாக்கியத்தில் "யூ" (You) என்னும் சொல் ஒருவரைக் குறிக்கிறதா பலரைக் குறிக்கிறதா என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் ஆங்கிலத்தில் ஒருவருக்கும் பலருக்கும் அந்த ஒரே சொல்தான் பயனீட்டில் உண்டு. தமிழில் நீ என்றும் நீங்கள் என்றும் தனித்தனி சொல் உண்டு. அ•றிணையான 'அவை'க்கும் உயர்திணையான 'அவர்'களுக்கும் ஆங்கிலத்தில் 'தேய்' (They) என்னும் ஒரே சொல்தான். மாமாவும் 'அங்கிள்'தான் சிற்றப்பாவும் 'அங்கிள்'தான். அத்தையும் 'ஆண்டி'தான். சிற்றன்னையும் 'ஆண்டி'தான்.

    3.மலேசியாவில் நடந்த முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் மறைந்த பேராசிரியர் தனிநாயக அடிகள் ஒரு வினா எழுப்பினார். "நீ உன் தந்தைக்கு எத்தனையாவது பிள்ளை?" என்றும் வினாவை ஆங்கிலத்தில் ஒரே வாக்கியத்தில் கூற இயலுமா என்றார். இன்று வரை முடியும் என்று யாரும் முன்வந்து விளக்கக் காணோம்.

    4.இன்றைய அறிவியலுக்குத் தேவையான பல சொற்கள் தமிழில் இல்லையே என அலுத்துக் கொள்கிறார்கள் சிலர். அன்றைய அறிவியல் ஆக்கங்களுக்கான சொற்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டும் முன்னரே இருந்தனவா என்ன? ஆய்வுகளும் கண்டு பிடிப்புகளும் ஆங்கிலத்திலேயே செய்யப்படுவதால் அவற்றுக்கான புதிய சொற்களும் அதிலேயே உருவாக்கப்படுகின்றன.

    5.பாதிக்குமேல் பிறமொழிச் சொற்களை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஆங்கிலத்தில் புதிய சொற்களை உருவாக்க முடியும்போது தன்காலிலேயே நிற்கவல்ல தமிழில் அதைச் செய்ய முடியும். அப்படிச் செய்யாமலிருப்பது தமிழரின் குறையே அன்றித் தமிழின் குறையன்று.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  2. Likes Mano.G. liked this post
  3. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    தமிழ் சோறு போடுமா? என நாக்கில் நரம்பில்லாமல் பேசுபவர்கள், தமிழுக்கு உள்ள தனித்தன்மைகளை அறிவார்களா?


    1.மொழியின் மற்றொரு பயன் அம்மொழியில் உள்ள நூல்களிலிருந்து கிடைப்பது. தமிழ் நூல்களில் இல்லாத படிப்பறிவுச் செல்வமும் பண்பாட்டு வளமும் வேறெம் மொழியில் உள்ளன? உயர்ந்த வாழ்க்கைக்கு உரிய நெறியும் அதன்படி ஒழுகும் முறைகளும் தமிழ் இலக்கியங்களிலும் அறிவு நூல்களிலும் கிடைக்குமளவுக்கு வேறெங்குக் கிடைக்கும்?

    2.திருக்குறள் போன்ற அறிவு நூல் மனித வாழ்க்கையில் எத்துணைப் பெரும்பயனை உருவாக்கவல்லது! 99 மலர்களைப் பெயர்கூறி அடையாளம் காட்டும் கபிலரின் குறிஞ்சிப் பாட்டுப் போலொரு பழம் பாடல் தமிழிலன்றி வேறெம் மொழியில் உள்ளது? விவேக சிந்தாமணியின் விவேகம் கண்டால் வியக்காதவர் யார்?

    3.தமிழின் சொல்வளம் என்பது வெறும் சொற்களின் எண்ணிக்கையா? அ•து ஓர் பழம் பெரும் இனத்தின் பல்லாயிரம் ஆண்டுப் பட்டறிவுப் பெட்டகம் அன்றோ!

    4.பூ என்னும் ஒரு பொருளுக்கு அரும்பு, வீ, போது, முறுக்கு, மொட்டு, அலர், மலர் என அதன் ஒவ்வொரு பெயர் கொண்ட மொழி உலகில் எத்தனை உண்டு? கல்வியை முறையாகத் தமிழில் தொடங்கும் குழந்தை, பூ என்னும் ஒரு பொருளைத் தெரிந்து கொள்ளும்போதே அதன் பல நிலைகளையும் அவற்றுக்கான சொற்களையும் சேர்த்தே தெரிந்து கொள்கிறது! இப்படி ஒன்றை அறியும்போதே அதைப் பலவாகப் பகுத்தும் ஆய்ந்தும் பார்க்கப் பழகும் குழந்தையின் பகுத்தறியும் ஆய்வாற்றலும் எத்தகையதாக இருக்கும் எனச் சொல்லவும் வேண்டுமோ!

    5.இதனால் அன்றோ தமிழர்கள் குறிப்பாகத் தமிழ் பயின்றவர்கள், அறிவியலிலும் கணிதத்திலும் அரும்திறம் பெற்றிலங்குகின்றனர்! உலகெங்கும் தலைசிறந்த மருத்துவர்களாகவும் கணினித் துறை வல்லுநர்களாகவும் திகழ்கின்றனர்.

    6.ஒரு பழம் 75 காசு. 46 பழங்கள் எவ்வளவு என்றால், மற்றவர்கள் தாளில் எழுதிப் பெருக்கிக் கொண்டிருக்கிற அல்லது கணக்கியைத் (கல்குலேட்டரைத்) தேடிக் கொண்டிருக்கிற நேரத்தில், பெரிய அளவில் கல்வி இஆல்லாத, ஆனால் தமிழ் பயின்ற முதியவர்கள் "நாமுக்கா மூணு, அற முக்கா நாலரை ஆக முப்பத்து நாலு வெள்ளி ஐம்பது காசு (34.50)" என்று பட்டென்று கூறி விடுகின்றனரே! இந்தத் திறம் எங்கிருந்து கிடைத்தது. தமிழ் பயின்றதால் வந்த தனித்திறம் அன்றோ இது.

    7.மொழியின் இன்னொரு பயன் அதன் இலக்கணத்தாலும் மொழி மரபாலும் உருவாகும் மனப்போக்கு, உறவினரை, மை வைபு (my wife), மை சன் (my son) என்னுடைய மனைவி, என்னுடைய மகன் என்று குறிப்பது ஆங்கிலத்திலும் மற்ற பல மொழிகளிலும் மரபாக இருக்கிறது. தமிழ் இலக்கணமோ, உறவினர்கள் உடைமைப் பொருள்கள் அல்லர்; அவர்களை எனக்கு மனைவி, எனக்கு மகன் என்று முறைப்பொருளில்தான் குறிப்பிட வேண்டும். "உடைய" என்னும் சொல்லைக் கொண்டு உடைமைப் பொருளாகக் குறிக்கக் கூடாது என்கிறது.

    8.தமிழ் இலக்கணம் தருக்க முறையிலானது. அறிவியல் அடிப்படையிலானது; எனவே அதைக் கற்பவன் பகுத்தறிவுத் திறம் பெறுகிறான். எதையும் முறையாகச் சிந்திக்கின்ற, செய்கின்ற ஆற்றல் பெறுகிறான். தமிழின் பொருளிலக்கணம் இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கையைக் கற்பிக்கிறது. யாப்பிலக்கணம் கற்பவன் இசையறிவும் கற்பனை வளமும் பெறுகிறான். தமிழ் இலக்கியங்கள் பல்துறை சார்ந்த அறிவைக் கற்பவனுக்கு வழங்குகின்றன.

    9.பொதுவாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாகப் பயில்பவன், பகுத்தறிவுக் கூர்மை அடைகிறான். பண்பாடு கொண்டவனாகிறான். இசை, கணிதம், அறிவியல், மருத்துவம், ஆன்மிகம் என மனித வாழ்க்கைக்குத் தேவையான எண்ணற்ற துறைகளில் அடிப்படை அறிவு பெறுகிறான்.

    10.தமிழ் இனியது; மெல்லியது. அதுபோலவே தமிழை முறையாகப் பயின்றோர் இனிமையான, மென்மையான, மேன்மையான இயல்புகள் கொண்ட பண்பாளர்களாக விளங்குபவர் என்பது கண்ணெதிரே எண்ணற்ற சான்றுகள் கொண்ட உண்மையன்றோ! இப்படி மொழியால் ஏற்படக்கூடிய பயன்கள் அனைத்தையும் செம்மையாகவும் சிறப்பாகவும் வழங்கி வருவதன்றோ; தமிழ், மொழி, மொழியால் விளையக்கூடிய பயன்களைத்தான் விளைக்கும்.

    அதை விடுத்து, அது சோறுபோடுமா என்று குருட்டு வினாத் தொடுப்பவர்களை என்னவென்று சொல்வது? கண் பார்த்தற்குரியது. செவி கேட்டற்குரியது. கண்ணால் கேட்க முடியுமா என்று வினவுவதும் தமிழ் சோறு போடுமா என்று கேட்பதும் ஒரே தன்மையிலான பேதைமையன்றோ!
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  4. Likes Mano.G. liked this post
  5. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    சோற்றுத் தமிழர்கள் சோற்று மொழியைத் தேடிக்கொள்ளட்டும். சோறு போடும் மொழியை மட்டும் கற்றவன் நன்றாகச் சோறு உண்ணலாம். ஆனால் அவன் யார்? அவன் அடையாளம் என்ன? அவன் பண்பாடு எது? பாரம்பரியம் யாது?

    அவன் மொழியால் அடிமை, பண்பாட்டால் அடிமை. ஏனெனில், மொழி இனத்தின் உயிர், மொழி வாழ்ந்தாலே பண்பாடு வாழும், மொழியும் பண்பாடும் சமுதாயத்தின் இரண்டு கண்கள். ஒன்று போனால் அரைக்குருடு. இரண்டும் இழந்தால் முழுக்குருடு. முழுக்குருடனை யாரும் எதுவும் செய்யலாம். இத்தகையவன் உரிமை பெற்ற நாட்டில் வாழ்ந்தால்கூட அடிமைக்குச் சமமானவனே என்பதில் ஐயமேது?

    குறுகிய காலத்தில் பல துறைகளில் பெரு முன்னேற்றம் அடைந்திருக்கும் சப்பானியர் தம் மொழி சோறு போடுமா என்று வினவவில்லை. நம் நாட்டில் எல்லா வகையிலும் உயர்ந்து நிற்கும் சீன மக்கள் தம்மொழி சோறு போடுமா என்று கேட்கவில்லை. இவர்கள் தங்கள் மொழிக்குத் தாங்களே சோறு போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு வலிமையூட்டி வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால், தமிழரில் பலரோ தம் தனிக்குணச் சிறப்பால், தாயை காக்கக் கூலி கேட்பார்போல, இன்று தமிழிடத்தில் சோறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    தமிழால் சோறு உண்பவர்களிலேயே பலருக்குத் தமிழின்பால் அன்பில்லை, மதிப்பில்லை, நன்றி கூட இல்லை; சோற்றுக்காகத் தமிழையே விற்கவும் துணிந்து விடுகிறார்கள். இந்த நிலையில் எல்லோருக்கும் சோறு போட்டால் இருக்கும் தமிழாவது இருக்குமா?

    தமிழுக்காகவே தமிழ் வேண்டுவோர் தமிழுக்குப் போதும். சோற்றுக்காகவே மொழி வேண்டுவோர் சோறு போடும் மொழியே சொந்தமென்று போகட்டுமே!

    தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  6. Likes Mano.G. liked this post
  7. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    சோறு போடுமே தமிழ்.
    அதன் மேல் சேறு வீசாத வரை போடும்.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  8. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    Quote Originally Posted by கௌதமன் View Post

    ஆனால், தமிழரில் பலரோ தம் தனிக்குணச் சிறப்பால், தாயை காக்கக் கூலி கேட்பார்போல, இன்று தமிழிடத்தில் சோறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    தமிழால் சோறு உண்பவர்களிலேயே பலருக்குத் தமிழின்பால் அன்பில்லை, மதிப்பில்லை, நன்றி கூட இல்லை; சோற்றுக்காகத் தமிழையே விற்கவும் துணிந்து விடுகிறார்கள். இந்த நிலையில் எல்லோருக்கும் சோறு போட்டால் இருக்கும் தமிழாவது இருக்குமா?

    தமிழுக்காகவே தமிழ் வேண்டுவோர் தமிழுக்குப் போதும். சோற்றுக்காகவே மொழி வேண்டுவோர் சோறு போடும் மொழியே சொந்தமென்று போகட்டுமே!
    உங்கள் ஆதங்கம் புரிகிறது. கட்டுவதற்கு கோவணத்துணியும் இல்லாமல் தமிழை மட்டும் கையிலெடுத்து, இன்றைக்கு கோடானுகோடிஸ்வரர்கள். ஆனால் தமிழ் மட்டும் இன்றும் நிர்வாணமாகவே உள்ளது.
    தமிழ் சோறு போடுமா?
    சோறு போடுமா தெரியாது ஆனால் உயிரை பறிக்கும். தமிழ் மீனவன் என்பதால் அநியாயமாய் உயிரையிழந்த அந்த தமிழனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்
    தொப்பிகள் அளவென்பதற்காக யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளமுடியும்.
    தமிழை வாழ வைக்க உங்களை போன்றோர் தேவை. எங்கள் பாதங்களும் உங்கள் பாதச்சுவடுகள் பற்றித் தொடரும்

    வேதனையுடன் வியாசன்
    Last edited by ஆதி; 17-01-2011 at 01:54 PM.

  9. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    "தமிழ் சோறு போடுமா? என்று கேட்காதே!தமிழுக்கு நீ என்ன சோறு
    போட்டாய்?" என்று அவர்களைப் பார்த்துக் கேட்கவேண்டும்.

  10. #7
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0
    முற்போக்குச் சிந்தனையாளர்களே.....
    ஆங்கிலம் மட்டும் சோறு போடுமா?

    அப்படி சொல்பவர்கள் ஆங்கில இலக்கியம் மட்டும் படிக்க வேண்டியது தானே!!
    ஒரு தமிழ் வார்த்தை கூட இல்லாமல் பேச வேண்டியது தானே?

    ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் !
    கணிதம், அறிவியல், வணிகம்- இவற்றில் எதையும் கற்காமல் வெறும் ஆங்கில அறிவு கொண்டு உயர்ந்தவர்கள் எண்ணிகையை விரல் விட்டு எண்ணி விடலாம்..

    தமிழ் சோறு போடுமா?

    என் கேள்வி:
    ஏன் போட வேண்டும்?

    சோறு வேண்டுமானால் என்ன வேண்டும்?
    முக்கியமாக அரிசி வேண்டும் .. அதைப் பெற குறைந்தபட்சம் 1 ரூபாய் வேண்டும்...
    அத்துடன் அதைப் பெற பங்கீட்டு அட்டை (Ration Card) வைத்து இருக்க வேண்டும்.
    அந்த அட்டையைப் பெற அரசுக்கு தக்க ஆவணங்களுடன் விண்ணப்பித்து இருக்க வேண்டும்!!

    ஒரு கிலோ அரிசிக்கே இவ்வளவு தேவை என்றால், சோறுக்கு...
    தண்ணீர், பானை, அடுப்பு, எரிபொருள்.. இன்னும் பல..

    இவற்றைப் பெற உதவுவது எது?
    உழைப்பு..

    உழைப்பை நம்பாமல் இவற்றைப் பெற முடியுமா?
    மொழியை மட்டும் கற்றவர்கள் முன்னேற முடியாது..
    மொழியுடன் உழைக்க ஒரு தொழிலையும் கற்க வேண்டும்..

    கற்றால் மட்டும் போதுமா? அதைத் திறம்பட பயன்படுத்த வேண்டும்...
    அப்போது தன் பலன் கிடைக்கும்!!

    இதோ வள்ளுவர் வாக்கு:
    "பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
    ஆள்வினை இன்மை பழி
    "

    இதை விடுத்து , "தமிழ் சோறு போடுமா? குழம்பு வைக்குமா?" என்று கேட்பது அறிவீனம்..
    அதைக் கேட்பவன் ஒரு முட்டாள்..

    மொழியின் நோக்கம்
    அனைவரையும் இருத்தி அன்னதானம் வழங்குவது அன்று...
    அனைவருக்கும் தன் எண்ணத்தை வெளிப்படுத்துவதே!!

    பி.கு:
    உழைப்பை மட்டும் கொண்டு சோறு வைக்க முடியாது..
    பொருட்களைப் பெற பிறரிடம் என்ன தேவை என்று எடுத்து உரைக்க வேண்டும்..
    அதற்குத் தேவை மொழி!!


    "உழவனிடம் உலக மொழி பேசினால் வீட்டில் உலை வைக்க முடியாது"

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  11. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    படித்தப் படிப்பு எதுவுமே சோறு போடுவதில்லை..........................

    உழைப்புதான் சோறு போடுகிறது அல்லது சோம்பேறித்தனம் சோறு போடுகிறது(தமிழ்நாட்டில் மட்டும்)

    இதில் தமிழை மட்டும் ஏனுங்க குறை சொல்றீங்க?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #9
    இனியவர் பண்பட்டவர் உதயசூரியன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Posts
    786
    Post Thanks / Like
    iCash Credits
    13,558
    Downloads
    1
    Uploads
    0
    சோறு போட்டால் தான் தமிழ் என்றால்.. அப்படி சொல்பவன் தமிழனே அல்ல..

    தமிழுக்கு சோறு போடுவது தான் ஒவ்வொரு தமிழனின் கடமை..

    மொழியை பெற்றெடுத்தது நாம்

    நாம் தான் வளர்க்கனும்


    கவுதமினின் பதிவுகள் அருமை

    வாழ்த்துக்கள்
    வாழ்க தமிழ்
    சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
    மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்
    !!!


    நல்ல சினிமாவை பார்க்கணுமா...???

  13. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    எதற்காக தமிழ் மொழியைப் படிக்கவேண்டும்? ஆங்கில அறிவு மட்டும் இருந்தால் போதுமே! என்ற எண்ணம் கொண்ட தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இளைஞர்கள் எண்ணிப்பார்க்க வேண்டியே, என் கருத்துகளுக்கு உடன்பாடாகவிருந்த பதிவை வேறொரு தளத்திலிருந்து இங்கு பதித்தேன். தனிப்பட்ட அரசியல் மாச்சரியங்களையோ, விமர்சனங்களையோ வெளிப்படுத்த இத்திரி பதியப்படவில்லை என்பதைத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

    இன்றைய காலகட்டத்தில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு சமூகம் அளிக்கும் மரியாதை என்ன? மருத்துவ கல்லூரியில் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைத்த தமிழ் வழியில் படித்த மாணவன் ஆங்கில வழியில் படித்த மாணவர்களுடனும், ஆங்கில வழியான பாடத்திட்டங்களுடனும் பொருந்த முடியாமல் படிப்பை ஆரம்ப நிலையிலேயே கைவிடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்ற அவலநிலைக்கு என்ன காரணம். நிச்சயம் அரசியல் மட்டும் காரணம் அல்ல. ஆரம்பக்கல்வி தாய்மொழியிலேயே அமைய வேண்டும் என்று ஆணையிடுகின்ற அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவது பெற்றோர்களாகிய பொதுமக்களே. இந்த மனநிலையை எப்படி மாற்றுவது.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  14. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    தமிழ் அவசியம் கற்க வேண்டும். நேற்றைய தலைமுறையும் நாளைய தலைமுறையும் இணைவது மொழியால். தாய் மொழியை மறக்கலாகாது. தொழிலுக்காகவோ பிற லாபத்திற்காகவோ தாய்மொழி கற்பது தவறு.

    ஆனால் தொழிலுக்காக தாய்மொழியல்லாமல் பிற மொழியை கற்பதில் தவறில்லை.
    Last edited by leomohan; 18-01-2011 at 01:15 PM.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  15. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    Quote Originally Posted by leomohan View Post
    தொழிலுக்காக தாய்மொழியல்லாமல் பிற மொழியை கற்பதில் தவறில்லை.
    தொழிலுக்காக மட்டுமல்ல பிற மொழியின் சுவையை அறியவும், இலக்கியத்தை ரசிக்கவும், பண்பாடு மற்றும் கலாசாரத்தை அறிந்துக் கொள்வத்ற்கும் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஒருவர் படிக்கலாம்.

    பன்மொழியறிவு என்பது வீட்டின் பலகணி போன்றது. பலகணி எண்ணிக்கை கூடும்தோறும் கூடும்தோறும் வீட்டுக்கு காற்றும் வெளிச்சமும் அதிகம் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லவே இல்லை. ஆனால் தாய்மொழி என்பது வீட்டின் தலைவாசல் போன்றது. தலைவாசலை மூடிவிட்டு ஒரு வீடு (சமுதாயம்) பலகணி வழி புழங்க முடியாது.

    உங்கள் வீட்டுக்கு வாசல் வேண்டுமா? அல்லது பலகணி போதுமா? சிந்திப்போம்!
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •