Results 1 to 4 of 4

Thread: உன் கண்ணீரின் கடைசிச்சொட்டு

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    23,649
    Downloads
    55
    Uploads
    0

    உன் கண்ணீரின் கடைசிச்சொட்டு

    இருள்வெளியில் வீழ்ந்து கிடக்கும்

    என் கண்ணீரின் ஒவ்வொரு துளியிலும்

    மிதந்து கொண்டிருக்கும் உன் முகம்

    எனக்குள் ஒரு பிரளயத்தை நிகழ்த்துகிறது..



    நமக்கான அன்பின் அனைத்து திசைகளும்

    நிரந்தரமாக மூடப்பட்ட பின்

    எல்லா இரவுகளிலும் யாருமறியா மெல்லிய விசும்பலுடன்

    என் கண்ணீரை துடைத்துக்கொள்கிறேன்..



    வெளவால்கள் இரையும் ஒரு இருண்ட வனாந்தரத்தில்

    இரத்தம் தோய்ந்து இறந்து கிடக்கும்

    ஒரு வெண்புறாவாய்

    நம் காதலை உருக்குலையச்செய்தது

    எந்த சாத்தானின் சாபம்..?



    மறைந்தாலும்மறையாத சூரிய ஒளிபோல

    உன் நினைவுகள் என் ஒவ்வொரு அணுவிலும்

    சிலுவையாய் அறையப்பட்டிருப்பது கண்டு

    துயரத்தில் சிக்குண்ட மனசு தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து வலிக்கிறது..



    இத்தனை புலம்பலையும் மொத்தமாய் தின்றுதீர்த்தது

    என் கண்பார்த்து நீ அழுத உன் கண்ணீரின் கடைசிச்சொட்டு..



    - நிந்தவூர் ஷிப்லி -
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    51
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    100,706
    Downloads
    21
    Uploads
    1
    கண்ணீரின் கடைசி சொட்டு எதுவென்பதை
    அக்கண்களே அறியாநிலையில்
    அடுத்தவர் அதை அறுதியிட்டுரைப்பது
    எத்தனை சதவீத சாத்தியம்?
    காயங்களின் புலம்பல் வரிகள்
    இங்கு கண்ணீர்க்கோடுகளாய்
    பரஸ்பரம் கையெழுத்திட்டு
    வேதனை வெளிப்படுத்துவது அற்புதம்.

    பாராட்டுகள் ஷிப்லி அவர்களே.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    54,191
    Downloads
    114
    Uploads
    0
    நல்லாருக்குங்க....
    வாழ்த்துக்கள்...!
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் சுடர்விழி's Avatar
    Join Date
    26 Aug 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    473
    Post Thanks / Like
    iCash Credits
    20,338
    Downloads
    1
    Uploads
    0
    வலி உணர்த்தும் வரிகள்..
    “இத்தனை புலம்பலையும் மொத்தமாய் தின்றுதீர்த்தது

    என் கண்பார்த்து நீ அழுத உன் கண்ணீரின் கடைசிச்சொட்டு..”
    பாராட்டுக்கள் ஷிப்லி அவர்களே !!
    வல்லமை தாராயோ -இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே!![

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •