Results 1 to 5 of 5

Thread: கணனியை வைரசிடமிருந்து காப்பாற்ற....

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    58,929
    Downloads
    22
    Uploads
    0

    கணனியை வைரசிடமிருந்து காப்பாற்ற....

    கணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்



    அனைவரின் கணினியிலும் எழும் பொதுவான மிக ஆபத்தான பிரச்சனை வைரஸின் தாக்கமே!...ஒரு சில நிமிடங்களில் நமது கணினியையே காலி செய்துவிடும்...பாடுபட்டு உழைத்த தகவல்கள், முக்கிய ஆவணங்கள், ஆப்ரேட்டிங் சிஸ்டம் என அனைத்தும் பாதிபடைந்து தங்கள் கணினி முழுவதும் முடக்கப்படும்.

    இதற்கு தீர்வுதான் என்ன....பொதுவாக வைரஸையை தங்கள் கணினியில் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...ஏனெனில் அது வந்து பின்பு அதை கட்டுப்படுத்துவதும், நீக்குவதும் மிக மிக கடினம். இவற்றை தீர்ப்பதற்கான இலகுவான பத்து வழிகள்..


    01. தங்கள் கணினியில் தாங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய ஒன்று ஓர் சிறந்த வைரஸ் தொகுப்பு மென்பொருளை நிறுவ வேண்டும். ஆன்டிவைரஸை நிறுவிட்டால் போதுமா! கணினியை வாரத்திற்கு ஒரு முறையாவது முழு வைரஸ் ஸ்கேன் செய்திட வேண்டும்.

    02. தங்களுக்கு வரும் இ-மெயில் ஒவ்வொன்றையும் ஸ்கேன் செய்ய மறந்து விடதிர்கள். தாங்கள் கணினிலியே இ-மெயில் மென்பொருள்களை பயன்படுத்தினால் கண்டிபாக ஸ்கேன் செய்ய வேண்டும். அதே மாறி தங்களுக்கு வரும் மெயில்களின் இணைந்து வரும் பைல்களை(ATTACHMENT FILES) கையாளுவதில் அதிக கவனம் தேவை.

    03. தங்கள் கணினியில் விண்டோஸ் தரும் FIREWALL யை தவிர்த்து வேறு சில சிறந்த FIREWALL பயன்படுத்துங்கள். ஏனெனில் விண்டோஸ் சிஸ்டம் தரும் FIREWALL அவ்வளவாக பாதுகாப்பு தருவதில்லை. உதரணமாக COMODO, ZONEALARAM போன்றவை.

    04. தங்கள் ஆன்டிவைரஸ் தொகுப்பை அதாவது மென்பொருளை கணினி இயங்கும் (START UP) போதே தானாக இயங்க்கும் படி அமைத்திடவும். மேலும் பூட் ஸ்கேன் செயல்படும் படி அமைத்து விடவும்.

    05. தங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் தொகுப்பை அடிக்கடி அடிக்கடி அப்டேட் (UPDATE) செய்யவும். தங்கள் நிறுவிய மென்பொருள் நிறுவிய தேதியின் நிலைமையும் பாதுகாப்பை மற்றும் பெற்றுயிருக்கும். அதன் பின்னர் பல சிறப்பு வசதிகளும், புதிய வைரஸ் தடுக்கும் திறனும் வெளியிடப்பட்டிருக்கும். தாங்கள் அப்கேர்ட் செய்வதில் புதிய திறனுடன் தங்கள் ஆண்டிவைரஸ் தொகுப்பு இயங்கும். இதனால் வைரஸ் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கும். ஆண்டி வைரஸ் தொகுப்பை அடிக்கடி அடிக்கடி அப்டேட் (UPDATE) செய்யவும்.

    06. இணையத் தளங்களில் பார்வையிடும் போது தோன்றும் பாப் அப் விண்டோக்களை கிளிக் செய்வதில் கவனம் கொள்ளுங்கள். மேலும் ஆன்லைன்யில் தங்கள் கணினியை ஸ்கேன் செய்யவா என சில அறிவிப்புகளை தாங்கள் கண்டுயிருக்கலாம், இதில் தாங்கள் கிளிக் செய்தால் போதும் தங்கள் கணினி ஸ்கேன் செய்வதும் போன்றும் வைரஸ்யிருப்பதும் போன்றும் தோன்றும். ஆனால் இங்கு தான் சில விசமிகளின் செயல் உள்ளது. இவ்வாறு தாங்கள் ஆன்லைன்யில் தங்கள் கணினியை ஸ்கேன் செய்யும் போது தங்கள் கணினிக்கு அவர்கள் வைரஸ், மால்வேர், டிரோஜன் போன்றவற்றை அனுப்பிவிடுகின்றன. இவ்வாறனவற்றை பெரும்பாலும் தவிர்க்க பாருங்கள்.

    07. இணையம் மூலம் பைல்களை பதிவிறக்கும் போது நம்பிக்கை வாய்ந்த தளங்களில் இருந்து மட்டும் பைல்களை பதிவிறக்கவும். அந்த தளமானது தங்கள் தளத்தில் வைரஸ் எதுவும் இல்லை என உறுதியளிப்பு தரப்பட்டுள்ளதா என அறியவும். மேலும் .EXE OR .COM போன்ற பைல்களை பதிவிறக்குவதில் அதிக கவனம் தேவை.

    08. அதே மாறி இலவசமாக கிடைக்கிறது என சந்தையில் கிடைக்கும் தகவல்களை பறிமாறிக் கொள்ளும் சாதனங்களை பயன்படுத்துவதில் கவனம் அதிகம் தேவை...இலவசமாக சிடிகளில் பதிந்து தரப்படும் மென்பொருட்கள், தகவல்களில் தான் அதிக வைரஸ்கள் இடம் பெறுகின்றன.

    09. தங்கள் நண்பர்கள் முலம் சிடிகளை பகிர்ந்துக் கொள்வதில் கவனம் தேவை. சிடிகளின் இருக்கும் வைரஸ்கள் அவ்வளவாக தங்களை அடையாளம் காட்டிவதில்லை..தங்கள் கணினியை ஒவ்வொரு முறையும் அணைக்கும் SHUTDOWN செய்யும் போதும்..சிடி டிரைகளில் இருந்து சிடிகளை நிக்கிவிடுங்கள். எனெனில் தாங்கள் கணினியை பூட் செய்யும் போது சிடிகளில் இருக்கும் வைரஸ் தங்கள் கணினியில் பாதிப்பை ஏற்ப்படுத்தகூடும்.

    10. REMOVEBLE DRIVEகளான பென்டிரைவ், மெமரிகார்டை போன்றவற்றை பயன்படுத்தும் முன்பு கவனம் தேவை..ஏனெனில் அதிகமாக வைரஸ்கள் REMOVEBLE DRIVEகள் போன்றவற்றால் தான் பரவுகின்றன. ஒவ்வொரு முறை தாங்கள் இந்த REMOVEBLE DRIVE பயன்படுத்தும் போதும் அதை ஸ்கேன் செய்யவும். REMOVEBLE DRIVE என தனி ஆண்டிவைரஸ் மென்பொருட்களை பயன்படுத்துங்கள்.


    http://www.lankasritechnology.com/vi...BnZ2e023F90602
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    10,041
    Downloads
    12
    Uploads
    0
    வைரஸ் தொல்லை பெரும்தொல்லைப்பா! வைரஸ் இல்லாத கணினி உலகம் இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்.

    நான் கேள்விப்பட்டேன், வைரஸ் ப்ரோக்ராம்களை எழுதுவதே இந்த வைரஸ் கொல்லி மென்பொருள் நிறுவனங்களும் தானாமே? உண்மையா?

    தகவலுக்கு நன்றி ஹேகா



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  3. #3
    புதியவர்
    Join Date
    02 Nov 2010
    Location
    Tamilnadu
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    8,621
    Downloads
    0
    Uploads
    0
    பயனுள்ள தகவல்கள்..... பகிர்வுக்கு நன்றி...

  4. #4
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    36
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    14,060
    Downloads
    136
    Uploads
    0

    நச்சுநிரல் இல்லாத கணிணி உலகம்

    Quote Originally Posted by மகாபிரபு View Post
    வைரஸ் தொல்லை பெரும்தொல்லைப்பா! வைரஸ் இல்லாத கணினி உலகம் இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்.

    நான் கேள்விப்பட்டேன், வைரஸ் ப்ரோக்ராம்களை எழுதுவதே இந்த வைரஸ் கொல்லி மென்பொருள் நிறுவனங்களும் தானாமே? உண்மையா?

    தகவலுக்கு நன்றி ஹேகா
    தகவலுக்கு நன்றி. ..

    எனினும், இதை விட எளிய வழி ஒன்று உண்டு....

    லினக்ஸ் பக்கம் மாறுங்கள்

    வாருங்கள்....

    நச்சுநிரல் இல்லாத கணிணி உலகம் (Virus Free Computer World) படைப்போம்..

    பி.கு: இது ஒரு யோசனை மட்டுமே..

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    26,944
    Downloads
    159
    Uploads
    0
    லினக்ஸ் பாதுகாப்பானது. காலத்தின் கட்டாயம் மாறுவார்கள் எல்லோரும்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •