Page 11 of 14 FirstFirst ... 7 8 9 10 11 12 13 14 LastLast
Results 121 to 132 of 158

Thread: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்..மாம்பூவும் தில்லைப்பூவும் சொல்வதென்ன..

                  
   
   
 1. #121
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  23 Dec 2009
  Posts
  1,465
  Post Thanks / Like
  iCash Credits
  54,479
  Downloads
  22
  Uploads
  0
  Quote Originally Posted by கலையரசி View Post
  குருகிலை என்பது அத்தியைக் குறிக்கிறது என்றறிந்து கொண்டேன். அக்காலத்திய மலர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் ஹேகாவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து நல்குக!

  தொடர்ந்து வரும் கலையரசி அக்கா தரும் பின்னூட்டங்கள் எனக்கு ஊக்க மருந்தாக்கும்.

  மிக்க நன்றி அக்கா
  நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

 2. #122
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  23 Dec 2009
  Posts
  1,465
  Post Thanks / Like
  iCash Credits
  54,479
  Downloads
  22
  Uploads
  0
  கோங்கம்


  கோங்கம் என்று சங்கப்பாடல் கூறும் மரத்தை இக்காலத்தில் கோங்கு (bombax gossypinum or Yellow Silk Cotton Cochlospermum religiosum) எனக் கூறுகின்றனர்.

  கோங்கிலவு என்ற மரத்தின் மலர்தான் கோங்கம். பொன்னை ஒத்த தோற்றம் கொண்ட அழகிய மலர்

  இள* மஞ்சளில் மொட்டுகளும், பளீரிடும் மஞ்சளில் மலர்களும் அடர் பச்சையில் இலைகளும், அதை தாங்கும் மெல்லிய கிளைகளும் மலர்கள் முற்றுகையில் வரும் வெளிர் பச்சை நிறப் பிஞ்சுகளுமாய் காண*ப்ப*டும்

  வறண்ட பிரதேசங்களில் வளரும் மரமாகையால் அடர்த்து, பரந்த கிளைகள் எல்லாம் இந்த மரத்திருக்கு இல்லை காய்கள் முதிர்ந்ததும் வெடித்து, விதைகள் காற்றில் பறந்து விழுகின்ற இடத்தில் துளிர்விடும்.

  விதைகள், பஞ்சால் சுற்றப்பட்டது போல தோற்றம் கொண்டவை காற்றில் பறக்க ஏதுவாக..... நீரூற்றி வளர்க்க வேண்டியதில்லை, தானாகவே வளரும்.

  கோங்கமரம் இக்காலத்தில் வீட்டுப்பொருள்கள் செய்யப் பயன்படுகிறது. இதனால் செய்யப்பட்ட பொருள்கள் இலேசாகவும், மழமழப்பாகவும், மஞ்சள்-நிறதிலும் இருக்கும்  கோங்கமரம், பூ, தாது பற்றிய சங்கநூல் செய்திகள்

  எலியின் காது கோங்கம் பூவின் மையப் பகுதி போல இருக்கும்
  கோங்க மலரைப் பதத்தோடு பறித்தெடுப்பர்
  கோங்கின் மகரந்தப் பொடிகளை மகளிர் மேனியில் பூசிக்கொள்வர். அதற்காக அவற்றைச் செம்பாலான செப்புகளில் சங்ககாலத்தில் விற்பனை செய்வர். செல்வர் அவற்றை சம அளவு பொன் கொடுத்து வாங்குவர்.
  கோங்க-மலரின் முகை மகளிர் முலைபோல் இருக்கும்.
  மதுரையை அடுத்த வையை ஆற்றுப் படுகையில் பாணர் முற்றத்தில் கோங்க மலர்கள் கொட்டிக்கிடக்கும்.
  கோங்கம்பூ குடை போலவும், மீன் போலவும் இருக்கும்.
  கோங்கின் அடிமரத்தில் செதில்கள் பொரிந்திருக்கும். பூ பொன்னிறத்தில் இருக்கும்.
  மரத்திலிருந்து கோங்கமலர் காம்பறுந்து விழுவது யானை ஓட்டுநர் வீசும் தீப்பந்தம் போல விழும்.
  கோங்கமரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும்.

  எரி நிற நீள் பிண்டி இணர் இனம் எல்லாம்
  வரி நிற நீள் வண்டர் பாட, புரி நிற நீள்
  பொன் அணிந்த, கோங்கம்; - புணர் முலையாய்! - பூந்தொடித் தோள்
  என் அணிந்த, ஈடு இல் பசப்பு?
  --கணிமேதாவியார் இயற்றிய
  திணைமாலை நூற்றைம்பது
  நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

 3. #123
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  137,135
  Downloads
  39
  Uploads
  0
  அறிந்திராத ஆச்சர்ய தகவல்கள். சிரமப்பட்டு தேடித் தரும் தங்கைக்கு நன்றிகள்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 4. Likes Hega liked this post
 5. #124
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
  Join Date
  03 Jun 2007
  Location
  புதுதில்லி
  Age
  56
  Posts
  2,017
  Post Thanks / Like
  iCash Credits
  16,852
  Downloads
  10
  Uploads
  0
  மலர்களின் வகைகளை அறிவதோடு அதன் நற்குணங்களையும் சிறப்புகளையும் நன்கு அறிய முடிகிறது. வாய்ப்பளித்த ஹேகாவுக்கு நன்றி.

 6. Likes Hega liked this post
 7. #125
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  23 Dec 2009
  Posts
  1,465
  Post Thanks / Like
  iCash Credits
  54,479
  Downloads
  22
  Uploads
  0
  போங்கம்


  [/IMG]
  போங்கம் குனி, குன்னி, மலை மஞ்சடை, மலமஞ்சடை, மலைமான்ஜடி, கல்மாணிக்கம் என பல பெயர்களில் அழைக்கபடும் இம்மரமானது மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக அதிக மழை பெறும், பசுமைமாறாக்காடுகளில் (கடல் மட்டத்திலிருந்து 800-1200 மீ. உயரமான மலைகளில்) மேற்கு தொடர்ச்சி மலைகளின் தெற்கு பகுதிகளில் காணப்படுகின்றன. தெற்கு சயாத்திரி மலைகளிலும் மற்றும் அரிதாக கூர்க் பகுதிகளில் (மத்திய சயாத்திரி) காணப்படுகின்றன.

  மரங்கள், 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது. மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, வழுவழுப்பானது. சிறிய நுனிக்கிளைகள் தட்டை அல்லது குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, உரோமங்களுடையது

  மலர்கள் பிங்க் நிறமானவை.

  கனி (அவரைப்போன்ற), நீள்வட்ட வடிவானது உப்பியவை, 12 X 6 செ.மீ. நீளமானது, நீட்சியுடையது, இதன் விதை சிவப்பு (ஸ்கார்லெட்) நிறமானது.
  Last edited by Hega; 13-07-2012 at 04:53 PM.
  நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

 8. Likes ஜானகி liked this post
 9. #126
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  23 Dec 2009
  Posts
  1,465
  Post Thanks / Like
  iCash Credits
  54,479
  Downloads
  22
  Uploads
  0
  திலகம்  மஞ்சாடிப் பூ மரவகையைச்சேர்ந்தது.

  மஞ்சாடி (Adenanthera pavonina) எனப்படுவது ஆசியா, அவுஸ்த்திரேலியா, தென்னமெரிக்கா, வட அமெரிக்கா என உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் ஒரு தாவர இனம் ஆகும். வெட்டுமரத் தேவைக்காகவே இது பெரிதும் பயன்படுகிறது எனினும் இதன் வலிமை குறைந்தவையாகும்.

  மஞ்சாடி மரம் மண்ணின் நைதரசன் அளவைச் சமப்படுத்துவதற்காகவே முதன்மையாக வளர்க்கப்படுகிறது. அத்துடன் விலங்குளின் உணவுக்காகவும் மருந்து மூலிகையாகவும் வீட்டுத் தோட்டங்களிலும் நகர்ப்புறங்களிலும் அழகுத் தாவரமாகவும் இது வளர்க்கப்படுகிறது. இத்தாவரத்தின் தரமான, அழகிய விதைகள் அவற்றின் அழகு காரணமாகவும் உணவுக்காகப் பயன்படுத்தப்படுவதாலும் இதன் பரவல் எளிதாகின்றது. மஞ்சாடியின் இளம் காய்களைக் குரங்குகள் போன்ற விலங்குகள் விரும்பியுண்கின்றன. பச்சையாக உள்ள மஞ்சாடி விதைகள் ஓரளவு நச்சுத் தன்மையுள்ளனவாக இருந்த போதிலும் அவற்றைச் சமைக்கும் போது அவற்றின் நச்சுத் தன்மை குறைந்து உண்ணத் தக்கனவாக மாறுகின்றன. மஞ்சாடி விதைகளே பழங்கால இந்தியாவிற் தங்கம் போன்ற பெறுமதி மிக்க மாழைகளை நிறுப்பதற்குப் பயன்பட்டன. மஞ்சாடி விதைகள் கழுத்தணிகள், கைம்மாலைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.

  இதன் பூக்கள் சற்று நீளமாயும் பூனை வால் போன்று கூந்தல் கொண்டும் அமைந்திருக்கும். கொட்டைகள் செந்நிறமாயும் பிரகாசமானவையாயும் இருக்கும். இதன் இளம் தளிர்கள் சமைத்து உண்ணத் தக்கவை. மஞ்சாடி மரத்தின் வைரப் பகுதி மிகவும் கடினத் தன்மை கூடியதாகும். அது தோணி செதுக்குவதிலும் மரத் தளபாடங்கள் செய்வதிலும் விறகுக்காகவும் பயன்படுகிறது.

  மஞ்சாடி மரமானது சவர்க்கார உற்பத்தியிற் பயன்படுத்தப்படுகிறது.இதன் மரப் பகுதியிலிருந்து உணவுக்காகப் பயன்படுத்தப்படும் செந்நிறச் சாயம் பெறப்படுகிறது.

  மஞ்சாடி விதைகளிலிருந்து பெறப்பட்ட சாறு வெகுவாக உட்கொள்ளச் செய்யப்பட்ட எலிகளும் சுண்டெலிகளும் உடலெரிவுக்கு எதிரான தன்மை கூடுவதை வெளிப்படுத்தியுள்ளன
  நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

 10. Likes கீதம் liked this post
 11. #127
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  23 Dec 2009
  Posts
  1,465
  Post Thanks / Like
  iCash Credits
  54,479
  Downloads
  22
  Uploads
  0
  போங்கம், திலகம் , குறுனறுங்கண்ணி போன்றமலர்களில் விதைகள் பார்க்கும்போது ஒன்றுபோல் இருந்தாலும் அவற்றிக்கிடையிலான் வேறுபாடுகளும் அதன் பெயர்களும் மாறுபடுவதை இங்கே கவனிக்கவும்.
  A. Erythrina caffra
  B. Erythrina sp.
  C. Ormosia monosperma
  D. Ormosia cruenta
  E. Rhynchosia sp.
  F. Rhynchosia precatoria
  G. Rhynchosia sp.
  H. Abrus precatorius
  I. Adenanthera pavonina
  J. Sophora secundiflora
  நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

 12. Likes ஜானகி, கீதம் liked this post
 13. #128
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  23 Dec 2009
  Posts
  1,465
  Post Thanks / Like
  iCash Credits
  54,479
  Downloads
  22
  Uploads
  0
  விதைகளுக்கிடையிலான மாறுபாடுகள் காண்க..  குறுநறுங்கண்ணி
  Abrus precatorius
  போங்கம்

  Ormosia travancorica Bedd
  Ormosia monosperma

  Erythrina sandwicensis

  திலகம்
  Adenanthera pavonina

  Last edited by Hega; 13-07-2012 at 06:34 PM.
  நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

 14. Likes ஜானகி, கீதம் liked this post
 15. #129
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  47
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  80,712
  Downloads
  21
  Uploads
  1
  மிகுந்த அர்ப்பணிப்புடன் அழகிய படங்களையும், தகவல்களையும் திரட்டி வெளியிடுவதற்கு நன்றி ஹேகா.

 16. Likes Hega liked this post
 17. #130
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  23 Dec 2009
  Posts
  1,465
  Post Thanks / Like
  iCash Credits
  54,479
  Downloads
  22
  Uploads
  0
  Quote Originally Posted by கீதம் View Post
  மிகுந்த அர்ப்பணிப்புடன் அழகிய படங்களையும், தகவல்களையும் திரட்டி வெளியிடுவதற்கு நன்றி ஹேகா.
  நன்றி கீதம் அக்கா.
  நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

 18. #131
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  23 Dec 2009
  Posts
  1,465
  Post Thanks / Like
  iCash Credits
  54,479
  Downloads
  22
  Uploads
  0
  பாதிரி  பாதிரி (Stereosperm suaveolens) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். 25 மீட்டர் உயரம் வரை வளரும் இதன் இலை, பூ, விதை, காய், வேர் ஆகிய அனைத்தும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன.

  காட்டுப் பெருவழிகளில் இம் மரம் மிகுதியாக வளர்ந்து நிற்கும். ""அந்தப் பாதிரி"", `காணப் பாதிரி' என்றெல்லாம் வழங்குவார். பாதிரிமலர் செம்மையானது. பஞ்சு போன்ற துய்யினை உடையது. அதன் இதழ்கள் மெல்லியதாக இருக்கும்.

  இளம் மஞ்சளாய் கொஞ்சம், அடர் மஞ்சளில் கொஞ்சம் எனக் கண்கவர் வண்ணக் கலவையில் மொட்டும், மலருமாய் இந்த மலர்கள் காணப்படும்.மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மலரும் பருவம் கொண்ட இந்த மரத்திற்கு அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி என நிறைய பெயர்கள் உண்டு இம்மலருக்கு. சரித்திரப் பெருமையும் உண்டு

  ஆற்றுத் துறையில் வேனில் காலத்தில் பாதிரி மலரும்.பாதிரி மரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும் பாதிரி மரத்தில் இலைகள் உதிர்ந்து பூக்கள் பூத்துக் குலுங்கும். இப்படிப் பூத்துக் குலுங்கும் ஓவியத்தை யாழ் என்னும் இசைக்கருவியின் வயிற்றுப்பகுதியில் வரைந்திருப்பார்கள்.

  • பாதிரி பருத்த அடிமரம் கொண்டது. அதன் பூ குருமயிர் போல் மலர்ந்திருக்கும். அதிரல், பாதிரி, நறுமணம் மிக்க மாரோடம் ஆகிய மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் தலையில் அணிந்துகொள்வர்
  • ஓவியர்களின் செந்நிறம் தோய்த்த தூரிகை போலப் பாதிரியின் தூய மலர் இருக்கும்.
  • பாதிரி மலர் பழுக்கக் காய்ச்சிய தகடு போல் எரிநிறம் கொண்டிருக்கும்.
  • பாதிரிச் சினை மொட்டுகளும் அழகாக இருக்கும் வளையாத பஞ்சிழை போல் துய் இருக்கும் தலைகளைக் கொண்டிருக்கும். காம்பு சிறிதாக வளைந்திருக்கும். அடிப்பூ கருத்திருக்கும்

   • இதன் வேர் - சிறுநீர் இலகுவாக வெளியேறப் பயன்படும், உடலுக்குக் குளிர்ச்சி தந்து பலமூட்டும்
   • இதன் காய் - அரைத்துத் தலையில் பற்றுப் போட்டால் ஒற்றைத் தலைவலி நிற்கும்
   • இதன் பூ - நசுக்கித் தேனுடன் கலந்து உண்டால் தொடர்ச்சியான விக்கல் நிற்கும்,
   • நீரிற் காய்ச்சிப் பருகினால் ஆண்மைக் குறைவு நீங்கும்.
  நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

 19. #132
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  23 Dec 2009
  Posts
  1,465
  Post Thanks / Like
  iCash Credits
  54,479
  Downloads
  22
  Uploads
  0
  செருந்தி  செருந்தி ஒரு வகைக்கோரை இனத்தை சார்ந்தது.மண஼ம் வீசுகின்ற செருந்திமலர், இளவேனிற் காலம் தொடங்கியவுடன் மலர்ந்து நிற்கும். மலர்கள் பொன்னிற வண்ணத்துடன் காட்சியளிக்கும்.

  இது நெட்டிக்கோரையெனவும், வாட்கோரையெனவும்,தண்டான்கோரையெனவும் அழைக்கப்படும்.
  செருந்திப்பூவை மக்ளீர்க்கு உவமையாக கூறிவர்

  நல்ல மஞ்சளில் இதழ்கள் செய்து, அதை அழகுற அருகருகே அடுக்கி வைத்தது போல மொட்டும் மலர்களும்
  கொத்துக் கொத்தாய் மலர்ந்திருக்கும்.

  செருந்தி பொய்கையில் புதர்புதராக வளரும்,பூக்கும். இதற்குக் கண்பு என்னும் கணுக்கள் உண்டு. களிறுகள் இதனை உண்டும் உழக்கியும் மாய்க்கும் செருந்தி நெய்தல் நிலத்தில் பொன் நிறத்தில் பூக்கும்.
  வயலில் கோரைப்புல் போலும்,உப்பங்கழிகளிலும் வளரும் இது பசுமையான தோகைகளைக் கொண்டது.
  கடற்கரை மணல்மேடுகளில் ஞாழல் பூவும் செருந்திப் பூவும் மணம் கமழும்.
  செருந்தி சூரியக் கதிர் போல் அரும்பிப் பொன் போல் கொத்தாகப் பூக்கும். இதனை மகளிர் தலையில் அணிந்துகொள்வர்.செருந்தியையும் நெய்தலையும் சேர்த்துக் கட்டி ஆடவர் மார்பில் மாலையாக அணிவர்.செருந்திப் பூவின் கால் செந்நிறம் கொண்டது.செருந்தி நெருக்கமான மொட்டுகளைக் கொண்டது.செருந்தி வண்டு அருந்தும் தேன் உள்ள மலர்.

  விஷேச வாசனை கிடையாது, இருப்பினும் இதன் விதைகளுக்கான அமைப்பு வித்தியாசமானது. சிறு குவளை போன்ற சிவப்பு நிற அமைப்பின் உள்ளே பொத்தி வைத்த முத்துகளாய் அழகிய விதைகள் காணப்படும்.விதைகள் முதலில் பச்சை நிறத்தில் இருக்கும், பின் முற்றுகையில் நல்ல கருப்பு வண்ணத்தில் மாறும்
  நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

Page 11 of 14 FirstFirst ... 7 8 9 10 11 12 13 14 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •