Results 1 to 11 of 11

Thread: மை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    மை

    "மை"கள் எத்தனை "மை"களடி! அந்த
    "மை"களின் கதையைக் கேளடி நீ!

    கண்ணுக்கு அழகு கண்மை ஆகும்
    பெண்ணுக்கு அழகு தாய்மை ஆகும்
    மண்ணுக்கு அழகு வளமை ஆகும்
    விண்ணுக்கு அழகு வெறுமை ஆகும்.

    உலகிலுள்ள "மை"களில் சிறந்தது
    உண்மை என்கிற மெய்மை ஆகும்
    உள்ளம் என்னும் இல்லம் தினமும்
    உண்மை பேசத் தூய்மை ஆகும்.

    "மை"களில் கொடியது வறுமை என்று
    ஒளவைக் கிழவி அன்றே சொன்னாள்
    வறுமை என்னும் பேய்தனை ஓட்ட
    வாழ்க்கையில் உழைப்பு அவசியம் தேவை.

    ஆமையும் முயலும் ஓடிய போதில்
    ஆமை தோற்கும் என்றே எண்ண
    முயலும் தோற்று ஆமை வெல்ல
    முயலின் முயலாமை காரணம் ஆகும்.

    கண்டவர் வெறுக்கும் கருமை நிறமே
    கண்ணன் கொண்ட தனிநிறம் ஆகும்
    கறுத்தவர் எல்லாம் வெறுப்பவர் அல்ல
    சிவந்தவர் எல்லாம் சிறந்தவர் அல்ல.

    நன்மை தீமை என்பன எல்லாம்
    நம்மை நாடி வருவன அல்ல
    நன்மை செய்தால் நன்மை வருமே
    புன்மை செய்தால் தீமை வருமே

    பெண்மையும் ஆண்மையும் சமமெனப் பேசிடு
    பெண்மையும் தெய்வமும் ஒன்றெனப் பேசிடு
    உண்மையும் நேர்மையும் உள்ளத்தில் இருந்தால்
    உயர்வுகள் யாவும் உன்னிடம் சேரும்!

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    மை யை கருத்தாக,
    மையக் கருத்தாக
    வைத்த உங்கள் கவிதைக்கு
    பாராட்டுகள்!
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    உம் "மை" உரைத்த
    கவின்மிகு மெய்க்கு
    உம்மை வாழ்த்துகிறேன்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by நாகரா View Post
    உம் "மை" உரைத்த
    கவின்மிகு மெய்க்கு
    உம்மை வாழ்த்துகிறேன்
    தங்கள் வாழ்த்துக்கு நன்றி நாகரா அவர்களே!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by கௌதமன் View Post
    மை யை கருத்தாக,
    மையக் கருத்தாக
    வைத்த உங்கள் கவிதைக்கு
    பாராட்டுகள்!
    கெளதமரின் பாராட்டுக்கு நன்றி!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    அருமை...

    எளிமையில்....

    பெருமை !..'.பெரு.'..மை

    உண்மையும் தான் !

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    கண்ணுக்கு மை அழகு
    கவிதைக்குப் பொய் அழகென்பார்.
    இக்கவிதை இங்கே உண்மையால்
    அழகுபெற்று உயர்ந்துநிற்கிறது.
    பாராட்டுகள் ஐயா.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ’மை’ கொண்டு எழுதிய கவிதை அருமை.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by ஜானகி View Post
    அருமை...

    எளிமையில்....

    பெருமை !..'.பெரு.'..மை

    உண்மையும் தான் !
    தங்கள் பாராட்டுக்கு நன்றி ஜானகி!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    கண்ணுக்கு மை அழகு
    கவிதைக்குப் பொய் அழகென்பார்.
    இக்கவிதை இங்கே உண்மையால்
    அழகுபெற்று உயர்ந்துநிற்கிறது.
    பாராட்டுகள் ஐயா.
    பாராட்டுக்கு நன்றி கீதம்!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    ’மை’ கொண்டு எழுதிய கவிதை அருமை.
    நன்றி அமரன்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •