Originally Posted by
கௌதமன்
சாம்பலிலிருந்து எழும்
ஃபீனிக்ஸ் பறவைகள் நாம்!
வெற்றி உற்சாகமூட்டும் ஆனால்
தோல்விதான் பாடங்களைத் தரும்
எவற்றையெல்லாம் தாண்டி
வந்திருக்கிறோம் எண்ணிப் பார்ப்போம்!
மறுக்கப்பட்டத் தொழில்நுட்பம்,
தடுக்கப்பட்ட உபகரணங்கள்,
பன்னாட்டுத் தடைகள்.
பணியென்று வந்துவிட்டால்
இரவு பகல் பார்த்திருப்போமா?
செய்யும்பணி தீரும்வரை
குடும்பத்தை நினைத்திருப்போமா?
இதுவும் கடந்து போகும்!
தோல்விதனைத் தோற்கடித்து
வெற்றிதனை பெறுவோம்; தோல்வி தரும்
பாடங்களை மறக்க மாட்டோம்,
என்றும் மனதில் வைப்போம்
மனம் தளராது
புதிய உத்வேகத்தோடு
பணியினைத் தொடர்வோம்
இந்தியாவைத் தலை நிமிரச் செய்வோம்!
Bookmarks