காத்திருந்த கனவு - இன்று
கலைந்து விட்ட உணர்வு..
தோல்வி கண்டு துவளா - பல
நெஞ்சமுண்டு காணீர்.
வெற்றி தரும் செருக்கை
தோல்வி வந்து செதுக்கும்
தோல்வி தரும் பாடம்
வெற்றி பாதை அமைக்கும்
சோர்விலா தோழர்கள்
மகேந்திரகிரியில் உண்டு
தோல்வி மீண்டும் அவர்களை
உறங்க விடாமல் செய்யும்
உறக்கமிலா இரவுகள்
அடுத்து ஒரு தோல்வியை
கொடுத்திடாமல் செய்யணும் - அதுக்கு
தகப்பன் சாமி உதவனும்.....
__________________
Bookmarks